ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இவர் எழுதிய The Sea என்ற நாவல் விமரிசக அங்கீகாரமும் புக்கர் போன்ற பரிசுகளும் பெற்ற ஒன்று. இது தமிழில் ஜி. குப்புசாமி அவர்களால் 'கடல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பிரசுரம். இந்த தமிழாக்கத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு பரிந்துரைக்கிறார் : "புக்கர் பரிசு பெற்ற நாவலான ஜான் பான்வில்லின் 'கடல்' தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இந்த நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி குப்புசாமி."
தேர்ந்த இலக்கியவாதியாகக் கொண்டாடப்படும் ஜான் பான்வில் தமிழக இலக்கியவாதிகளுக்கு ஒவ்வாத ஒரு இழிசெயலும் செய்கிறார் - பெஞ்சமின் ப்ளாக் என்ற பெயரில் துப்பறியும் நாவல் எழுதுகிறார் இவர். இவையும் விமரிசக அங்கீகாரம் பெற்றுவிட்ட காரணத்தாலோ என்னவோ, "பெஞ்சமின் ப்ளாக்காக ஜான் பான்வில் எழுதிய" புத்தகம் என்று முன்னட்டையில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு இவரது 'The Lemur' என்ற துப்பறியும் நாவலை விற்பனை செய்கிறார்கள். கொண்டை தெரிந்தபின்னும் என்ன வேஷம், கலைத்து விடலாமே, என்று நாமானால் சொல்வோம், ஆனால் இதில் ஒரு வணிக உத்தி இருக்கிறது : பெஞ்சமின் ப்ளாக்கை அறிந்தவர்களுக்கு அவரது இயற்பெயர் ஜான் பான்வில் என்பது ஒரு பொருட்டாக இருக்கப் போவதில்லை, ஜான் பான்வில் என்ற இலக்கியவாதி அப்படி என்னதான் பெஞ்சமின் ப்ளாக்காக எழுதியிருக்கிறார் என்று தீவிர இலக்கிய வாசகர்கள் சிலர் இதை ரகசியமாகப் படிக்கக்கூடும். எப்படியும் லாபம்தான்.
இந்த நாவலின் கதைச் சுருக்கத்தை முன் அட்டையின் உட்பக்க ஃப்ளாப்பில் உள்ளபடி சொல்கிறேன் - புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லிவிட்டதை பதிவில் சேர்ப்பதை தப்பு சொல்ல முடியாது. அப்படியும் அடாவடியாக தப்பு சொல்பவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.
"'வில்லியம் 'பிக் பில்' முல்லோலாண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோடி கோடியாக சம்பாதித்தவர். சிஐஏவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் இப்போது தன் மகள் லூசியின் துணையோடு முல்லோலாண்ட் அறக்கட்டளையின் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வில்சன் க்ளீவர் என்ற துப்பறியும் பத்திரிக்கையாளர் தனக்கு எதிரான உண்மைகளை அம்பலப்படுத்தும் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதத் திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியும் முல்லோலாண்ட், தன் மகளின் கணவன், ஜான் கிளாஸ்ஸிடம் தன் அதிகாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை எழுதும் பணியை ஒப்படைக்கிறார்.
"ஆனால் கிளாஸ்ஸின் இளம் ஆய்வாளன் கிளாஸ்ஸையே பிளாக்மெயில் செய்கிறான், இதனால் கிளாஸ் விதிர்விதிர்த்துப் போகிறார். தன் ரகசியங்களும் முல்லோலாண்டின் ரகசியங்களும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறார், அவனை பணிநீக்கம் செய்கிறார். ஆனால் சீக்கிரமே, 'லெமூர்' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் அந்த ஆய்வாளன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை நியூயார்க் நகர காவல்துறை மூலம் அறிகிறார்.
"அமைதியை விலைக்கு வாங்க முடியாது - நியூயார்க்கின் பணக்கார குடும்பங்களில் ஒன்றானாலும்கூட இது சாத்தியமில்லை. அதிரடி ரகசியங்களால் துளைக்கப்பட்ட லெமூர் ஒரு அற்புதமான சமகால த்ரில்லர், இதில் பெஞ்சமின் ப்ளாக் தன் ஆட்டத்தின் உச்சத்தில் இருப்பதை நாம் காண்கிறோம்"
புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். புத்தகத்தை வாசித்தவர்கள் முந்தைய பத்தியின் கடைசி வாக்கியத்தை நீக்க வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே, இது விமரிசக தளமல்ல, வாசக தளம் என்பதால் அந்த மாதிரியான ஆட்சேபணைகளுக்கு இங்கே இடமில்லை.