Malgudi Days
R.K.Narayan
Indian Thought publications
photo courtesy/To buy: Flipkart
எவ்வளவோ புத்தகங்கள் படிக்க வரிசைக் கட்டி நிற்கும்போது, எப்போதோ
படித்த புத்தகங்களை மீண்டும் பார்க்கும்போது, அவற்றை மீண்டும் படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவதுண்டு. ஆர்.கே. நாராயண் எழுதிய ”மால்குடி
டேஸ்” அவற்றுள் ஒன்று. ஆம்னிபஸ்ஸில் ஆர்.கே.நாராயண் வாரம்
கொண்டாடப்பட்டபோது, அவரின் புத்தகத்தைப் பற்றி எழுதத் தவறிவிட்டேன்.
அதற்குப் பரிகாரமாக இந்த வாரம் “மால்குடி டேஸ்.
இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் மால்குடி என்ற ஊர்
ஒரு கற்பனை, இதை உலகின் எந்த பகுதியோடும், இந்த மக்களை எங்கு
இருப்பவர்களுடனும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் ஆர்.
கே. நாராயண். இந்த விஷயத்தில் எனக்கு மாற்று கருத்து உண்டு, அதை கடைசியில்
சொல்கிறேன்.
