A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

30 Apr 2013

தென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன்


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கோல் என வேண்டா 
நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் 
தலையாலே தான்தருத லால்
-ஔவையார்


இப்போதைய எங்கள் வீட்டின் பக்கத்து மனையில் வளர்ந்திருந்த ஆறு தென்னை மரங்கள் சென்ற மாதம் வேரோடு சாய்க்கப்பட்டன. புதிதாக அங்கே வீடு முளைக்கிறது. தென்னையின் இன்மை எங்கள் வீட்டிற்குக் கூடுதலாக வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறது. எங்கள் வீட்டு பால்கனியும், சுவர்களும் சித்திரை வெயிலை கனஜோராக வாங்கிக் கொள்கின்றன. 

பக்கத்து வீட்டில் ஐம்பது பேருக்கு கனஜோராய் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

காரணம்? கடைசியில் சொல்கிறேனே!

2010’ல் எங்கள் அபார்ட்மெண்ட் கட்டத் துவங்கியபோது அக்கம்பக்கத்தினரைக் கொஞ்சம் கடுப்பேற்றி விட்டுத்தான் கட்டிட வேலைகளை ஆரம்பித்தோம். தனி வீடுகள் மட்டுமே நிறைந்த பகுதியான இங்கே முதல் அபார்ட்மெண்ட் எங்களுடையது. அபார்ட்மெண்ட் கல்ச்சர் என்பது தங்கள் பகுதியில் புகுவதை அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ? நாங்கள் கட்டத் துவங்கிய பின் கடந்த இரண்டு வருடகாலத்தில் மேலும் ஒருடசன் அபார்ட்மெண்ட்டுகள் எங்கள் பகுதியில் முளைத்துவிட்டது தனி விஷயம். 

“தென்னை மரத்தை விட ஒசரமா வீடு கட்டறேன் பேர்வழின்னு நம்ம வீட்டு தென்னைமரத்துத் தலையையெல்லாம் நறுக்குவாங்க”, பின்பக்க பக்கவாட்டுத் தனிவீடர்கள் எங்களை எதிர்த்ததற்கான தனிக்காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் எங்கள் முதல்/இரண்டாம் மாடிகளைப் பதம் பார்த்த தென்னந்தலைகளை நறுக்கத் தலைப்பட்டது.

சாலையோர இளநீர்க் கடைகளில் ஸ்ட்ராவை ‘சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என உறிந்தவாறே, “என்னண்ணே! பொள்ளாச்சியா? பாண்டியா?” என்ற கேள்வி கேட்கும் எல்லாந்தெரிந்த ஏகாம்பரம் நாம்.

 “தென்னையப் பெத்தா இளநீரு! பிள்ளையப் பெத்தா கண்ணீரு” என்று அர்த்தம் புரியாத ஒரு வயதில் சிறுதிருட்டு செய்து மாட்டிக் கொண்ட ஒரு பிள்ளையைப் பெற்ற தகப்பன் ஒருத்தருக்குச் சமாதானம் சொன்னதோடு சரி. மற்றபடி, தென்னையின் மகத்துவம் நமக்குப் பெரிசாய் ஒன்றும் தெரியாது. இத்தனைக்கும் மாதவரத்தில் வசித்தபோது ஓங்கி வளர்ந்த அரைடஜன் தென்னை மரங்கள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு ஐந்து வருடம் குடியிருந்ததும் உண்டு. 

பக்கத்து வீட்டில் தென்னை மரங்களை வெட்டிய அசுபயோக அசுப மாதத்தில் நம் புத்தகக் கூடையில் வழக்கம்போல் தூங்கிக்கிடந்த ”தென்னை வளர்ப்பு” குறித்த இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.

முனைவர் அரு.சோலையப்பன் இயற்கை விவசாயத் துறையில் வல்லுனர். விவசாயம் குறித்து நிறைய புத்தகங்கள் படைத்துள்ளார்.  இவரது “விவசாயக் களஞ்சியம்” எனும் நூல் 1984’ஆம் வருடத்தின் ”தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு” பெற்றது. இவர் செங்கை நகரில் வசிப்பவர். ’கரிம விவசாயக் கட்டமைப்பு” நிறுவனத்தின் தலைவர். இயற்கை விவசாயம் குறித்த மாதாந்திரக் கூட்டங்களை செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாதந்தோறும் நடத்தி வருகிறார்.

என்னைப் போன்ற சாமானியனுக்குத் தெரிந்த தென்னை வளர்ப்பு என்பது சந்தையில் சென்று தென்னை நாற்று ஒன்றை வாங்கி வந்து, குழி தோண்டி, அதிலே அதைப் புதைத்து, எருவிட்டு, நீர்விட்டு, வளர்த்து, அவ்வப்போது பூச்சிக்கொல்லிகளை உபயோகித்து, மரம் வளர்ந்ததும் தேங்காய்களைப் பறித்துக் கொள்வது.  

வீட்டிற்கு வேடிக்கையாய் வளர்த்துக் கொள்ளும் தென்னைக்கு இது சரிதான். வீட்டுக்கு நிழலாச்சு, சட்னிக்கு தேங்காயுமாச்சு, வீட்டுல தேங்காய் முளைக்கல்லியா, கடையில வாங்கிக்கிட்டாப் போச்சு என்று சமாதானமடையும் கோஷ்டி நாம்.

“தென்னை வளர்ப்பு” என்ற இந்தப் புத்தகம் தென்னை வளர்ப்பினை ஒரு விவசாய நோக்குடன் செய்பவர்களுக்கு முக்கிய வழிகாட்டி. சரி, அது எதுக்கு சென்னை போன்ற நகரத்தில் வசிக்கும் நமக்கெல்லாம் தேவை?

தென்னை வளர்ப்பை யார் வேண்டுமானாலும் ஒரு வணிக நோக்கில் தொடங்கலாம் என்பதுதான் பதில். என்ன, அதன் பலன் கிடைக்க வருடங்கள் பலவாகும். எனினும் ஒரு நீண்டகால வைப்புநிதி போல இதனை முயற்சி செய்யலாம் என்றே தோன்றுகிறது. வைப்பு நிதி போல போட்டுவிட்டு மறந்துவிடுதல் அல்ல. ஆரம்பத்தில் நல்ல உழைப்பும் தேவை.

நம் நாட்டில் தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், மகாராஷ்டிரத்திலும் தென்னை வளர்க்கின்றோம் நாம். இருந்தும் தென்னைப் பொருட்களைப் பொருத்தவரையில் நம் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யும் நிலைமையே இன்னமும் இருக்கின்றதாம். ஆக, தென்னை வளர்ப்பினில் தேவையற்ற பண்டத்தினை நாம் உற்பத்தி செய்யப்போவதில்லை.

சரி, புத்தகத்திலிருந்து சில சுவாரசிய பத்திகள்:

தென்னையின் ஒரு இலை என்பது அதன் ஒற்றை ஓலை அல்ல. ஓலையுடன் சேர்ந்த ஒட்டுமொத்த மட்டையுமேதான்.
பன்னாடை என்ற சொல் தென்னையிலிருந்தே வந்திருக்கிறது. மட்டையையும் தென்னையின் தண்டினையும் இணைக்கும் “கோணித் துணி நெசவு செய்தாற்போல்” தோற்றத்தில் இருக்கும் பகுதியே பன்னாடை. ஆனால், இந்தச் சொல்லை ஏன் திட்டுவதற்குப் பயன்படுத்துகிறோம்? <உபயம்: பிரகாஷ்ராஜ் - கல்கி திரைப்படம் >
செந்தில் கவுண்டமணியிடம், “அண்ணே! இது என்ன?”, “தேங்கா”, “இதுக்கு முன்ன?” “அங்ங்ங்ங்ங்”, என்பார் கவுண்டமணி. அந்த நகைச்சுவையின் லாஜிக்கே தப்பு என்பது நம் எல்லோருக்கும் புரியும். தேங்காய்க்கு முன் இளநீர் என்பது சிம்பிளான பதில் இல்லையா?
தேங்காய் என்பது காய் அல்ல பழமாம். இளநீரே தென்னையின் காய். தேங்காய் என்று நாம் அழைப்பதை தென்னம்பழம் என்றே அழைக்க வேண்டுமாம். என்ன, பழத்தை நாம் தின்பதில்லை அதன் கொட்டையைத் தின்கிறோம்.
பொதுவாக தென்னைக்குக் கிளைகள் கிடையாது எனினும், சிலவகை அபூர்வத் தென்னை வகைகளில் கிளை உண்டாம்.
தென்னையில் நெட்டை, குட்டை என்று இருவகைகள் உண்டு. நெட்டை அறுபது அடிவரை வளரும். குட்டை இருபது அடிக்கு மேல் போவதில்லை. நெட்டை மரம் நட்ட பன்னிரண்டாம் வருடம்தான் காய்க்கத் துவங்கும். குட்டை நான்காம் வருடமே காய்க்கத் துவங்கிவிடும். குட்டையின் வாழ்க்கை முப்பது வருடகாலம். நெட்டை நூறுவருடங்கள் வாழும். நெட்டைக்கே விவசாயிகளிடையே மவுசு அதிகம். காரணம், நெட்டையின் தேங்காய்களும் கொப்பரைகளுமே தரத்தில் உயர்ந்தவை.
 
பன்னாடை

புத்தகத்தில் விதைக்காய் தேர்வு குறித்த பக்கங்களை தென்னை வளர்க்க விரும்புபவர்கள் எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டும்:

தென்னை உற்பத்தியின் வெற்றிக்கான முக்கிய பங்கு அதன் விதைக்காய் தேர்வில்தான் இருக்கிறது.
நன்றாக முற்றிய தேங்காயை நெற்று என்பார்கள். இந்த நெற்றுகள்தான் நல்ல விதைகள் ஆக முடியும்.
அதிக வயதாகாத மரங்களிலிருந்து நெற்றுக்காய்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது.
நெற்று மரத்திலேயே முற்றுதல் நலம். ஆனால், முற்றிய நெற்று தானாக தரையில் வீழ்ந்ததாக இருக்கக்கூடாது.

“நாற்றங்கால்” - இந்த வார்த்தை நினைவிருக்கிறதா? வீடும் வயலும், வயலும் வாழ்வும் போன்ற ரேடியோ, டிவி நிகழ்ச்சிகளைக் கேட்ட, பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாயிருக்கலாம். நெற்றிலிருந்து செடியை முளைவிடச் செய்யும் வேலை இது எனலாம். இந்த ப்ராஸசுக்குப் பிறகே கன்று நடுதல்.

நாற்றங்கால் பொதுவாக முழுநேர விவசாயிகளுக்கும் தென்னங்கன்று விற்கும் நோக்குடன் இருப்பவர்களுக்காக. வீட்டில் தென்னை வளர்ப்பவர்கள் யாரும் இதை முயற்சிப்பார்கள் எனத் தோன்றவில்லை. சொல்வதற்கில்லை, தென்னைக்குப் பெயர் போன கேரள நாட்டில் இதுவும் நடக்கலாம்.


இதுவரை நான் சொன்னது புத்தகத்தின் முதற்பாதிதான். தென்னங்கன்றுகளை நடுதல் அடுத்த வேலை. நட்டதைப் பராமரித்தல், உரமிடுதல், நீர்பாய்ச்சி வளர்த்தல், பூச்சித் தாக்குதல்களிலிருந்து காத்தல், அறுவடை என புத்தகத்தின் மறுபாதி. அவற்றைச் சுருக்கமாக வாசிப்பதைவிட, தென்னை வளர்க்க விரும்புபவர்கள் அருணோதயம் பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை வாங்கி அவசியம் அந்த மறுபாதியை வாசித்துப் பயன்பெறுவீர்.

உச்சிமுதல் பாதம் வரை பயன்தரும் மரம் என வாழைமரத்தைக் கூறுவார்கள். தென்னையின் பயன்களைப் படித்தால் தென்னை என்பது பயன் விஷயத்தில் வாழைக்குப் பெரியப்பா எனத் தெரிகிறது. ஓலை, பதநீர், கள், இளநீர், தேங்காய், கொப்பரை, பன்னாடை, நார், மட்டை (இன்னமும் இன்னமும்) என தென்னையில் எல்லாமுமே பயன் தருவன. 

வேறு மரக்கன்றுகளுக்கு இல்லாத பெருமை தென்னைக்கு உண்டு. தென்னங்கன்றினை தென்னம்பிள்ளை என்று அழைக்கிறோம். காரணம் தென்னை என்பது நம் பாரம்பரியத்தில் ஒரு குடும்ப அங்கமாகக் கருதப்படுகிறது. 

பிள்ளைக்கு நிகரான தென்னையை அகற்ற நேர்ந்ததால்தான், அதற்குப் பரிகாரமாக ஐம்பது பேருக்குப் போஜனம் பரிமாறினர் எங்கள் பக்கத்து வீட்டில்.

தென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன். பக்கங்கள்: 104, விலை ரூ. 25/- (2005 பதிப்பு), அருணோதயம் பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை-14 (Ph:  044- 28132791)

29 Apr 2013

என் சுயசரிதை - பம்மல் சம்பந்தம்

சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்

தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த துவக்கப் பத்திகள் என்று ஒரு தொகுப்பு இருக்குமென்றால், அதில் பம்மல் சம்பந்தம் எழுதிய 'என் சுயசரிதை'யின் முதல் இரண்டு பத்திகளும் இடம்பெற வலுவாகப் பரிந்துரைப்பேன்.
என் இளம் பருவ சரித்திரம்

"பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞானசம்பந்தம் 1873ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1ந் தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந் தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்" என்று என் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.

பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம். அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும் அவன் ஒரு நாள் இறக்கவேண்டுமென்பதாம். ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இறந்ததைப் பற்றியும் மற்றவர்கள் பின்கூறவேண்டுமல்லவா?


இவ்வளவுதான். இந்த இரண்டே பத்திகள்தான் முதல் அத்தியாயம். தன் சுயசரிதையை எழுத முற்படும்போது பிறப்பும் இறப்புமே நிச்சயம், ஆனால் அதைப் பிறரே கூற வேண்டும் என்று சொல்லி தான் தன் வாழ்வைப் பற்றி சொல்வதத்தனையையும் சந்தேகத்தின் நிழலில் இருத்தும் பம்மல் சம்பந்தம் இதை எழுதிய ஒரு காரணத்தாலேயே நம் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிறார். தமிழ் இங்கு ஒரு உச்சத்தை அனாயசமாகத் தொட்டிருக்கிறது.

28 Apr 2013

Brave New World- Aldous Huxley

Brave New World
Aldous Huxley
A Novel
Photo Courtesy/To Buy:Flipkart

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனம் குறித்த விவாதத்தின்போது, அல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய “பிரேவ் நியூ வேர்ல்ட்” அதே காலகட்டத்தில் வெளிவந்த Dystopian நாவல், அதையும் முடிந்தால் படிக்கவும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் வழக்கமாகச் செல்லும் வாடகை நூலகத்தில் இந்தப் புத்தகம் இல்லை எனச் சொல்லி விட்டார்கள். இன்னொரு வாடகை நூலகத்தில் உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர்களிடம் சொல்லி இந்த புத்தகத்தை தருவித்துக் கொண்டேன். 
 
 
 

27 Apr 2013

பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்

இந்திய வரலாறு சுவாரசியமானது. அது பற்றி நமக்குத் தெரிந்த விஷயங்களைவிட அது எதுவும் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி  சுவாரசியமானது. ஆம்னிபஸ் தளத்தின் முன்நூறாவது பதிவாக, "இந்தியன் ஆவது எப்படி?" என்ற நூலை ஆம்னிபஸ் தளத்தில் நமக்கு அறிமுகப்படுத்தி கௌரவித்தார் திரு பத்ரி சேஷாத்ரி அவர்கள். அதைப் படித்துவிட்டு  அ.கா. பெருமாள் எழுதியுள்ள "பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்" என்ற சிறு நூலை வாசிக்கும்போது எது நம் வரலாறு ஏன் அது மறக்கப்பட்டது என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன. எதற்கும் விடையில்லை.

பவன் கே வர்மாவின் புத்தகத்துக்கு பத்ரி சேஷாத்ரி தன் தளத்திலும் ஒரு அறிமுகம் செய்திருக்கிறார் - இந்தியன் ஆவது எப்படி?  அதில் உள்ள ஒரு முக்கியமான பத்தியை அடுத்து வருவது இது -
 
ராஜராஜன் என்ற அரசன் இருந்து தஞ்சை பெரிய கோவில் என்ற மாபெரும் படைப்பை உருவாக்கியதையும், அசோகர் என்ற பேரரசர் தன் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எண்ணற்ற தூண்களைக் கட்டித் தன் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததையும், பல்லவர்கள் மாமல்லபுரம் என்ற மாபெரும் சிற்ப நகரை நிர்மாணித்திருந்ததையும், உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியங்கள் அடங்கிய அஜந்தா குகைகளையும் மீள்கண்டெடுத்து நமக்குத் தந்தது பிரிட்டிஷாரே.

இவ்வளவையும் பிரிட்டிஷ்காரர்கள் கண்டுபிடித்துக் கொடுத்தது ஒரு பெரிய விஷயம்தான் என்றாலும், இதை எல்லாம் எப்படி நம்மால் தொலைக்க முடிந்தது என்ற யோசித்தால் அது அதைவிடப் பெரிய விஷயமாக இருக்கிறது. வடிவேலுவின் கிணறு களவு போன கம்ப்ளெயிண்ட்டைவிட சிக்கலான பிரச்சினை இது. பிரிட்டிஷ்காரர்கள், முகலாயர்கள், ஆரியர்கள் என்று ஏறத்தாழ நினைவு தெரிந்த காலம்தொட்டு காலனியாதிக்கத்தில் இருக்கும் இந்திய துணைக்கண்டத்தின் சாபக்கேடு இது என்று திட்டலாம், ஆனால் அதில் ஒவ்வொரு தரப்புக்கும் சில அசௌகரியங்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் திட்டுபவர்கள் முகலாய ஆட்சியை காலனிய ஆட்சி என்று சொல்ல மாட்டார்கள். முகலாயர்களைத் திட்டுபவர்கள் ஆரிய வந்தேறிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு சமயம் இந்த மாதிரி கலவையான வரலாறு இருப்பதால்தான் நமக்கு எதுவுமே முக்கியமாக இல்லாமல் எல்லாவற்றையும் நாளது தேதி வரை தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ என்னவோ.

இல்லாவிட்டால் இந்த இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில்கூட இப்படியெல்லாமும் வேறெங்காவது நடக்குமா?

கத்தி இன்றி சுத்தி இன்றி ஒரு ஆலயத்தை எப்படி வீழ்த்துவது!
குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்
என்ன கொடுமை இது ?
 
ஆட்சி செய்ய வந்த வெள்ளைக்காரர்கள் நம் வரலாற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்ததாக பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்றால், சுதந்திர இந்தியா அதை அழித்து ப்ளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறது.

26 Apr 2013

அசுரகணம் – க.நா.சுப்ரமண்யம்


அசுரகணம், க.நா.சு-வின் மற்றுமொரு பரிசோதனை முயற்சி. நினைவோடை உத்தியைக் கொண்டு எழுதியிருக்கிறார். நினைவோடை உத்தியென்றால் நினைவுக்கு வருவது லா.ச.ராவும் அபிதாவும். இந்த உத்தியில் க.நா.சாவுக்கும் லா.ச.ராவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. லா.ச.ரா, தனக்குத் தானே பேசிக் கொள்வது மாதிரியிருக்கும்; சிந்தனைகள் எல்லாம் மனம் தனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இருக்கும். ஆனால், க.நா.சுவின் நடை, மனத்தை இரண்டாகப் பிரித்து ஒருமனம் மற்றொன்றிடம் பேசுவது போல இருக்கிறது. மனத்தில் எழும் சிந்தனைகளை அப்படியே எழுதிப்போன மாதிரி. லா.ச.ராவுக்கு முன்னால் யாருமே இருக்கமாட்டார்கள்; க.நா.சுவுக்கு முன்னால் அவர் இருப்பார்; நாம் இருப்போம் என்றும் சொல்லலாம். 

25 Apr 2013

Different Seasons - Stephen King

சில மாதங்களுக்கு முன் ஸ்டீபன் கிங் எழுதிய Different Seasons புத்தகத்தைப் படித்தேன். கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் ஸ்டீபன் கிங் பற்றி சொல்லியிருந்தும் நான் படிக்கவில்லை. பின்னர் ஏதோ ஒரு சிறுகதை தொகுப்பில் அவரது கதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அது ஒரு பேய் கதை போலவோ ஒரு மீயியல்புவாதக் (paranormal) கதையாகத் தெரிந்தது. அப்புறம் அவரது சில கதைகளை அவ்வப்போது படித்து வந்திருந்தாலும் ஸ்டீபன் கிங் எனத் தேடிப் பார்த்துபடித்ததில்லை.
 
சில வருடங்களுக்கு முன் The Shining படம் பார்த்துவிட்டு நாவலைப் படித்தபின் ஸ்டீபன் கிங் எனும் சுவாரஸ்யமானக் கதை சொல்லியிடம் சிக்கிக்கொண்டேன்.
 
 







 

24 Apr 2013

Veronika Decides to Die - Paulo Coelho

சிறப்பு பதிவர் : Shanthi

தற்கொலை - "க்ளாஸ் டெஸ்ட்" முதல் "காதல் தோல்வி" வரை ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்கையில் எப்போதாவது ஒருமுறையேனும் தற்கொலையை பற்றி தீவிரமாய் யோசித்திருப்போம் நாம் அனைவருமே. அப்படி ஒரு இளம்பெண் சலிப்பின் காரணமாக தற்கொலைக்குத் துணிந்து, பின் காப்பாற்றப்பட்டு மனநல மருத்துவமையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு அவள் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் பற்றிய நாவல்- "Veronika decides to Die". நாவலாசிரியர் Paulo Coelho. கிட்டத்தட்ட 200 பக்கங்கள், மிக எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு .

23 Apr 2013

தாம்பத்யம் ஒரு சங்கீதம் - ஸ்வாமி தேஜோமயானந்தா

நன்றி: ஃபேஸ்புக்கில் இதைப் பகிர்ந்த நண்பருக்கு...

அமெரிக்காவில் ஜூலை 2009’ல் சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் நடைபெற்ற Marriage - a melody எனும் செமினாரின் நிகழ்வுகள் மற்றும் அந்த செமினாரில் கலந்து கொண்டவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பினை சின்மயா மிஷன் இந்தப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த செமினாரில் கலந்து கொண்டவர்கள் கல்யாணம் ஆன புதிதில் இருந்தவர்கள் அல்லது கல்யாணம் பண்ணிக் கொள்ள இருந்தவர்கள் என்று அறிகிறேன். இந்நேரம் தங்கள் நான்கு வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த அந்தத் தம்பதியினர் மேரேஜ் எனும் மெலடியை ரசித்து ருசித்துப் பரவச நிலையை அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

22 Apr 2013

இந்தியன் ஆவது எப்படி? - பவன் கே. வர்மா


சிறப்புப் பதிவர்: பத்ரி சேஷாத்ரி (@bseshadri)


சமீப காலங்களின் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் இது ஒன்று. பவன் வர்மாவின் கருத்துகள் அனைத்துடனும் நான் ஒத்துப்போகவில்லை. ஆனால் அவருடனான உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறேன்.

பிற நாடுகளால் அடிமையாக்கப்பட்டு, காலனியாக இருந்து, பின்னர் விடுதலை அடையும் நாடுகள், ஒருவித உளவியல் சிக்கலுக்கு ஆளாகும். நம்மை ஆண்டவர்கள் மீது பயம், அதே சமயம் அவர்கள் நம்மை நடத்திய விதம் காரணமாக அவர்கள் மீது வெறுப்பு, அவர்களுடைய திறன் மீதான மரியாதை,அவர்களுடைய கலாசாரத்தை உயர்ந்தது என்று நினைத்து அதன் மீதான ஆசை, நம்முடைய கலாசாரம் தாழ்ந்தது என்ற எண்ணம், அதே நேரம் நம் கலாசாரத்தில் தொன்மையான, மதிக்கத்தக்க அம்சம் ஏதேனும் இருந்ததா என்றதொரு தேடல், இப்படிப் பலப்பல எண்ணங்கள் நம்மை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். காலனி ஆதிக்கத்தில் வாழ்ந்திராத பிற நாட்டவருக்கோ, இந்தச் சுமைகள் ஏதும் இருக்கா.

21 Apr 2013

Genius: The Life and Science of Richard Feynman - James Gleick

பதிவர்: ரவி நடராஜன்

எத்தனையோ வாழ்க்கை வரலாறுகள் படிக்கிறோம். நம்முடைய ரசனைக்கேற்ப இருக்கும் சில வாழ்க்கை வரலாறுகள் நீண்ட காலம் நம் நினைவை விட்டு அகலுவதில்லை. அபப்டிப்பட்ட பெளதிக விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இங்கு சற்று அலசுவோம். பெளதிக விஞ்ஞானி என்றவுடன் ஏராளமான சமன்பாடுகள் மற்றும் புரியாத விஷயங்கள் இருக்குமோ என்று பயப்பட வேண்டாம்.

சில வருடங்கள் முன் படித்த இப்புத்தகத்தின் சில பகுதிகள் இன்னும் ஏன் நினைவில் இருக்கின்றன என்பதை யோசித்தேன். நான்கு முக்கிய விஷயங்கள் காரணம் என்று தோன்றுகிறது. 

எழுத்தாளர் இந்த விஞ்ஞானி ஏன் ஒரு ஜீனியஸ் என்பதற்கு சில அத்தியாயங்கள் ஒதுக்கி, மிக அழகாக விளக்கியுள்ளார் என்பது ஒன்று. அடுத்தபடியாக, இந்த விஞ்ஞானியின் பொழுதுபோக்கு மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய மிக அழகிய விஷயங்களை சுவாரசியமாகத் தொகுத்து வழங்கியுள்ளார். மூன்றாவதாக, இவரது சாதனைகள் என்ன, அவற்றை எப்படி சாதித்தார், அதில் போட்டிகளை எப்படி சமாளித்தார் என்பதையும் விளக்கியுள்ளார். தன் துறை ஆராய்ச்சி தவிர இந்த விஞ்ஞானியின் மற்ற பங்களிப்புகளையும் அழகாக விவரித்துள்ளார்.

நாம் இன்று விமர்சிக்கப் போகும் புத்தகம் James Gleick எழுதிய Genius: The Life and Science of Richard Feynman





20 Apr 2013

ஸ்ரீரங்கத்துக் கதைகள்- சுஜாதா


ஸ்ரீரங்கத்துக் கதைகள்
சுஜாதா
உயிர்மை
Photo Courtesy/To buy:NHM


ஆம்னிபஸ்சில் மறுபடியும் சுஜாதா எழுதின புத்தகம். 

போன வாரம் ரொம்ப உக்கிரமான வாரம் - வெயில் பற்றிச் சொல்லவில்லை. என்னுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், அதிலும் இருத்தல் பற்றிய கேள்விகள். இத்தனைக்கும் என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான தேவைகள் எல்லாம் நிறைவேறியுள்ளன. ஆங்காங்கே சின்னச்சின்னதாய்  நிறைய தோல்விகள், ஏமாற்றங்கள். எல்லாம் என்னுடைய முடிவுகள், என்னுடைய தவறுகள். இது அவ்வபோது எழும் Existential crisisதான். சென்ற வாரம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. 

வருடபிறப்புக்கு ஊருக்கு செல்லும்போது, இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்தேன். இந்த சுயபுராணத்துக்கும் புத்தகத்திற்க்கும் இருக்கும் ஒரே தொடர்ப்பு சொந்த ஊர் நினைவுகள். அதுவும் சின்ன வயதில் இருக்கும்போது இருந்ததுபோல் இல்லாமல் இப்போது வேகமாகவே மாறி வரும் ஊர்.  நம் ஊர் நம்மிலிருந்து அந்நியப்படும்போது நாமும் எங்கோ அழிந்துக் கொண்டே வருகிறோம் என்கிற பயமும் அதிகமாகி விடுகிறது.





19 Apr 2013

ஹோமியோபதி எனும் மக்கள் மருத்துவத்தின் முதன்மை நூல்கள்



ஹோமியோபதி மருத்துவத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஈ. பி. நாஷ் வியாசர் மாதிரி என்று சொல்லலாம். அவரது Leaders in Homeopathic Therapeutics பாரதம் மாதிரி ( கென்ட்டின் லெக்சர்ஸ் சற்றே விரிவான பிரம்மசூத்ர பாஷ்யம் என்று சொல்வது உள்நகை). எளிய இந்துக்களின் சமயம் ராமாயணம், மகாபாரதம் என்று துவங்குவதுபோல் சாமானியர்களின்  ஹோமியோபதி அறிவு  ஆலன்ஸ் கீநோட்ஸ் மற்றும் நாஷ் லீடர்ஸ் என்ற இந்த இரு நூல்களில் துவங்குகிறது, பலருக்கு இதிலேயே எல்லாம் முடிந்தும் விடுகிறது. பாட்டிகள் கைவைத்தியத்திலும் பேரன்கள் பாட்டிகளிலும் நம்பிக்கை இழந்துவிட்ட இந்நாட்களில் மக்கள் மருத்துவத்துக்கு இவ்விரண்டு புத்தகங்களே போதும், தவறில்லை. என்றாலும் என் அனுபவத்தில்  நாஷின் ரீஜனல் லீடர்ஸையும் ஒரு அவசிய நூலாகப் பரிந்துரைப்பேன்.

18 Apr 2013

PHYSICAL DIAGNOSIS - RUSTOM JAL VAKIL & ASPI F. GOLWALLA


கோனார் நோட்ஸ், டைகர் மேக்ஸ் கைடு என பாட நூல்களுக்கும் துணை நூல்களுக்கும் அறிமுகமும் விமர்சனமும் எழுத தொடங்கினால் தமிழகத்தில் ஆளாளுக்கு விமர்சகர் ஆகி விடலாம்தான். நேரமின்மையோ வாராவாரம் தொடர்ந்து எழுதியாக வேண்டிய கடமையுணர்வோ மட்டும் அல்ல, இப்புத்தகத்தை பற்றி எழுத வேறு சில காரணங்களும் எனக்குண்டு. 


அறிவியல் பாட நூல்கள் இருவகை - கறாரான அறிவியல் நடையில் கடினமான மொழியில் அதிக அளவில் எழுதப்படும் நூல்கள் முதல் வகை. இந்தியாவைப் பொருத்தவரை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதும் நான்கைந்து அசலான துறை நூல்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்திகளை பிய்த்துப் போட்டு நம்மூர் அறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி எனும் நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கும் கலவைகளே இவ்வகை நூல்களில் பெரும்பாலானவை. மருத்துவத்திலும் பொறியியலிலும் மலிந்திருக்கும் மூன்றாம்தர நூல்கள் பெரும்பாலும் இப்படி உருவானவையே. எழுத்து நடையில் உள்ள வேற்றுமைகள் நமக்குத் தெளிவாகவே இவையெல்லாம் பத்து நூல்களின் கொத்து பரோட்டா என்பதைக் காட்டிவிடும். 

17 Apr 2013

மென்கலைகள் - என்.சொக்கன்

மென்கலைகள்
என்.சொக்கன்
பக்கங்கள்: 134
விலை: ரூ.90
மதி நிலையம்

Communication Skills அல்லது personality development என்பது போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு நூலகங்களிலும் பற்பல புத்தகங்கள் இருக்கும். அது சரி, இதையெல்லாம் எவன் படிப்பான்? செம போர் என்ற நண்பரிடம் நான் கேட்ட கேள்வி - அப்படின்னா இதெல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும்னு அர்த்தம். உங்க தகவல் தொடர்பு மிகவும் அருமையா இருக்குன்னு பொருள். வீட்டிலும், அலுவலகத்திலும் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லே? உங்க வேலைகளை நீங்க சரியான நேரத்தில் முடித்து, உங்க imageஐ நல்லபடியா வைத்திருக்கிறீர்களா? என்று வரிசையா பல கேள்விகளைக் கேட்டதும், ஆள் அவுட். அப்படி இல்லே, அங்கங்கே சில இடைவெளிகள் இருக்கத்தான் செய்யுது என்றவரிடம், அதுக்குத்தான் இன்னும் இதே போல் புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்றேன்.

16 Apr 2013

நினைவோடை: பிரமிள் - சுந்தர ராமசாமி

தன்னுடன் பழகிய பல கலைஞர்களைப் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை எழுதியுள்ளார். பிரமிள் மீது இன்றுவரை நீடித்திருக்கும் கவர்ச்சி, அவரது வித்தியாசமான குணாதிசயங்களைப் பற்றிப் படித்துள்ளதால் இந்த புத்தகத்தை வாங்கினேன்.
 
மாறாத பழக்க வழக்கங்களும், தடம் புரளாத மன சஞ்சலங்களும் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. கலைஞர்கள் அவ்வகையினரில் தனித்துவமானவர்கள். பல சமயங்களில் இத்தகைய குணமே அவர்களது அடையாளமாகவும், மக்கள் மறக்காததாகவும் ஆகிவிடுகிறது. கலை என்பதே விசித்திரத்தின் பெட்டகம் எனும் கூற்று அதற்கு ஏதோ ஒரு பூடகமான அர்த்தத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதுதான் உண்மை. கலை என்பது இதுதான் எனும் வரையறை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை வெளியாகிறது. ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வெவ்வேறு வரையரைகள் கொடுக்கப்படுகின்றன. பெளதிகத்தின் theory of everything என்பதை முடிவு செய்ய விஞ்ஞானிகள் துடிப்பது போல, எதையாவது சொல்லி இது தான் கலை என நிர்ணயித்துவிட முடியாதா என காலங்காலமாய் முயற்சி நடந்துவருகிறது.
 
இதுவரை கலைக்குதான் வெற்றி.
 
 
 
 
குருவாகவும், ஆண்டவனாகவும் மாறிவிடும் கலைஞர்கள் இருந்தாலும் கூட, கலைஞர்களும் மனிதர்கள் தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தீவிரமான மனநிலையில் உயிரைக் கொடுத்து போராடும் குணம் கொண்ட போராளிகள். அவர்களே தப்பிக்க நினைத்தாலும், கலை அவர்களை விடாது. தத்தளிக்கும் லெளகீக வாழ்வில், நாகராஜன் போல, புதுமைப்பித்தன் போல, கலைஞர்களாக வாழ்ந்து வருபவர்கள். மழை வருமுன் மண்வாசத்தைக் கைப்பற்றும் வேட்கை. எதற்காகவோ தீவிரமாக அடித்துக்கொள்வது போலத் தோன்றி பெரும் வில்லனாகக் கூட சித்தரிக்கப்படுபவர்கள்.
 

15 Apr 2013

Zona - A Book About a Film About a Journey to a Room, Geoff Dyer

சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்

நல்ல உரைநடை கொடுக்கும் சந்தோஷமே தனி. Geoff Dyer என்பார் எழுதிய "Zona - A Book About a Film About a Journey to a Room" என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். Tarkovsky என்ற மேதை இயக்கிய Stalker என்ற திரைப்படத்தைப் பற்றிய புத்தகம் இது. 162 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் 142 ஷாட்டுகள்தான் என்பது விசேஷம். படம் செம மொக்கையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறில்லை.

பணம் போட்டவர்கள் படத்தின் ப்ரிவ்யூ பார்த்துவிட்டு, "படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கலாமே, அதிலும் படத்தின் ஆரம்பத்திலாவது...." என்று அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னபோது தார்கோவ்ஸ்கி கோபத்தில் பொங்கி விட்டாராம் - படத்தின் ஆரம்பம் இன்னும் மெதுவாகவும் மொக்கையாகவும் இருந்திருக்க வேண்டும், அப்போதுதான் தெரியாமல் தியேட்டருக்கு வந்தவர்களுக்கு ஆக்சன் ஆரம்பிப்பதற்குள் ஓடிப் போக நேரமிருக்கும், என்றார் அந்த மேதை.

அதற்கு பணம் போட்டவர்களில் ஒருத்தர், "படம் பார்ப்பவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்றுதான் சொல்ல வந்தேன்..." என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்ததை, "ஆடியன்ஸைப் பற்றி எவனுக்குக் கவலை? எனக்கு இரண்டே பேர்தான் முக்கியம். Bresson and Bergman. இதை நீ பைப்பில் நிரப்பி புகைத்துப் பார்" என்று வெட்டிவிட்டாராம்.

அதெல்லாம் வேறு கதை. நல்ல உரைநடை என்று சொன்னனே, இது ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது:

He's one of those barmen who has the knack of imbuing the simplest task with grudge, making it feel like one of the labours of a minimum-wage Hercules.

இதைப் படித்தபின் எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஆட்கள் தென்படுகிறார்கள். இதுவரை எப்படி இவர்களை கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது.


14 Apr 2013

வாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்



எனக்கு இருநூறு அறுநூறு பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட சிறிய சிறிய நாவல்கள் நூறு நூற்றிருபது பக்கங்களுக்கு அதிகம் போகாமல் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி. நூறு பக்கங்களில் சொல்ல முடியாத விஷயம் எதையும் இலக்கியாசிரியன் ஐநூறு பக்கங்களில் சொல்லிவிட முடியாது என்பது என் நினைப்பு. இது நாவல்களில் கருத்தாழமும் கட்டுக்கோப்பும் கனமும் சிறப்பாகவே வரக்கூடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். –க.நா.சு

என்னுடைய விருப்பம் அளவில் பெரிய நாவல்களே. ஆனாலும், க.நா.சு சொல்வது போல், குறைவான பக்கங்களிலும் ஒரு பெரிய நாவலின் அம்சங்களைக் கொண்டு வந்துவிட முடியும். முடியும் என்பதற்கு சாட்சி, வாழ்ந்தவர் கெட்டால், வாடிவாசல் போன்ற சிறிய நாவல்கள். விட்டால் ஆதவனுடைய குறுநாவல்களையும் இதில் சேர்த்துக் கொள்வேன்; விடமாட்டார்கள். இந்த நாவல்களை ‘சற்றே பெரிய சிறுகதைகள்’ என்று சொல்லவே முடியாது என்பது என் துணிபு. க.நா.சுவின் பரிசோதனை முயற்சிகளில்  இந்நாவல் ஒன்றாக இருந்திருக்கலாம். 

13 Apr 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

சில புத்தகங்களுக்கு ஆம்னிபஸ்சில் விமர்சன அறிமுகம் எழுதாமல் ஆம்னிபஸ்சை நாங்கள் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாது என நினைத்துக் கொள்வேன். பெரும் இலக்கியங்களெல்லாம் இல்லை அவை. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனை நெருக்கமாகத் தொட்ட சில புத்தகங்கள். தொட்டால் தொடரும், கரையெல்லாம் செண்பகப்பூ, சிலநேரங்களில் சில மனிதர்கள் மற்றும் இன்னபிற. பொன்னியின் செல்வனையும் அடிக்கடி நினைப்பதுண்டு. May be, பொன்னியின் செல்வனுக்கு ஆம்னிபஸ் ஒரு வாரம் முழுக்க ஒதுக்கவேண்டியிருக்கலாம். பார்ப்போம்.

சரி, இன்றைய புத்தகத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட ஒரு வீம்புக்குத்தான் இந்தப் புத்தகத்தை மறுவாசிப்பிற்குக் கையில் எடுத்தேன். பலவருடங்களுக்கு முன் படித்தது.

வீம்பு? அதைப் பின்பு பார்ப்போம்.



12 Apr 2013

High Adventure - Edmund Hillary

இமாலய சாதனை எனப் பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். இந்தியாவின் முதல் ஓட்டெடுப்பை நேரு இமாலய சாதனை என்றார்.  ஒத்துழையாமை இயக்கத்தை நாடளவில் செயல்படுத்தி சில உயிரிழப்புகளை சந்தித்த போது, காந்தி தனது முடிவை இமாலயத் தவறு எனச் சொன்னார். இப்படி இமாலய சாதனைகளும், தவறுகளும் மண்டிக்கிடக்க, நமக்கெல்லாம் தினமும் ஒரு புத்தகத்தைப் பற்றி ஆம்னிபஸ்ஸில் எழுதிவிட்டாலே இமாலய சாதனை தான். இன்றைக்கு எழுதப்போகும் புத்தகம் நிஜமான இமாலய சாதனை குறித்தது.


11 Apr 2013

இந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித்திரன்


 வாசித்து விமர்சனங்கள் எழுதுவது ஒருவகை எனில் விமர்சனம் மூலம் படைப்பை அணுகுவது மற்றொரு வகை. தேர்ந்த விமர்சகன் முதலில்  சிறந்த வாசகன். சாளரத்து துளைகள் வழியாக வழிந்தோடும் ஒளி கீற்றுகளை கண்டுணர்ந்து அதன் பல்வேறு சாத்தியக் கூறுகளை விளக்குகிறான்.  விமர்சகன் தான் பயணித்த வழிதடத்தையும் அங்கு தான் கண்டு ரசித்து அனுபவித்த இடங்களையும் வாசகனுக்காக அடையாளக் குறி இட்டு விட்டுச் செல்கிறான். வாசகன் அவ்வழித்தடத்தில் பயணித்து விமர்சகன் ரசித்ததை ரசிக்கிறான், ஒரு தேர்ந்த வாசகன் அத்துடன் நின்றுவிடுவதில்லை, எவர் கண்ணுக்கும் புலப்படாத ஏதோ ஒன்றை தேடியே வாசகன் பயணிக்கிறான். எவர் காலும் மண்ணில் பதிந்திடாத கண்ணி நிலம் தேடியலைந்த மனிதனைப்போல் பேர் உவகை கொள்கிறான். அப்படி அவன் கண்டடைவதை அடையாளப் படுத்துகிறான், விமர்சன மரபை உயிர்ப்புடன் நீட்டித்து வைக்கிறான்.  



10 Apr 2013

அணு - என்.ராமதுரை

அணு
என்.ராமதுரை
பக்கங்கள்: 164
விலை: ரூ.115
கிழக்கு பதிப்பகம்.

சில வருடங்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு தலைப்பு - கூடங்குளம். அணு மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகக் கட்டப்படும் இந்த உலையின் நன்மைகளை விளக்கி பட்டியலிடும் ஒரு சாரார் இருக்கையில், இத்தகைய உலையினால் ஏற்படும் செலவுகள், உலகில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் விளையக்கூடிய தீமைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு சாராரும் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் அணு’வைப் பற்றிய இந்தப் புத்தகம் சொல்வது என்ன? அணுமின்சாரம் நல்லதா? கெட்டதா? என்பதில் ஆசிரியர் எந்தப்பக்கத்தின் சார்பாக பேசுகிறார்? இதெல்லாம் விட அணு என்றால் என்ன? இதற்கெல்லாம் விடை இந்தப் புத்தகத்தில் உள்ளது.

9 Apr 2013

The Elegance of the Hedgehog - Muriel Burbery

The Elegance of Hedgehog
 
நான் கல்லூரியில் படித்த நாட்களில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்காக சில பிரத்யேகத் தலைப்புகளில் மாலை வகுப்புகள் நடக்கும். சொல்லப்போனால் வகுப்பில் கற்றுக்கொள்வதை விட மாலை ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கும்போது நிறைய புரிந்தது போலிருந்தது. ரெண்டு மாதங்கள் மேலை தத்துவம் பற்றிய வகுப்பில் சேர்ந்திருந்தேன். பசி முற்றிய மாலை வேளையில் நமது இருப்பின் அர்த்தம் என்ன என தர்க்க ரீதியாகப் பேசிப்பார்ப்பது சங்கடம் அளிக்கும் என்றாலும்  ஏதோ ஒன்று ஈர்த்தது. 'வேலைக்காகாத' விவாதங்கள் எனப் பலரும் அபிப்ராயப்பட்டாலும், நம்மை உணரக் கூடிய தருணங்கள் இவ்விவாதங்களில் உண்டு.
 
தத்துவ விவாதங்களில் முதல் கேள்வி முக்கியமானது. நாம் பார்க்கும் உலகுக்கும், நமது மூளையில் உணரும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு  பற்றிய கேள்வி. நம்மைச் சுற்றி இருக்கும் மேஜை, நாற்காலி, கரும்பலகை எல்லாமே பருப்பொருட்களால் ஆனவை. ஆனால் நமது மூளை அவற்றை உணர்வுகளாகப் பதிந்து புரிந்துகொள்கிறது. இதையே தலைகீழாகப் பார்த்தால் - நமது மூளையை நம்ப வைத்தால் போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம் காலியாக இருந்தாலும் கவலை இல்லை. டிஸ்னி லேண்டில் இருப்பது போன்ற பிம்பத்தை சமையலறையில் இருக்கும்போது உருவாக்கிவிடலாம்.
 


நாம் அனைவரும் 'மேட்ரிக்ஸ்' படத்தைப் பார்த்திருப்போம். அதில் திடுமென ஹெலிகாப்டர் ஓட்டவும், கராத்தே பயிற்சி செய்யவும், காதலிக்கவும் மூளையில் பயிற்சிகளை தரவிறக்கம் செய்வார்கள். அது போல நமது மூளைக்கும் - உடம்புக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதுதான் தத்துவத்தின் முதல் படி. நமது இருப்பை நிர்ணயிப்பதும் இந்த புரிதலில்தான் உள்ளது.
 

8 Apr 2013

Zen - Images, Texts and Teachings, edited by Miriam Levering and Lucien Stryk

ஒரு காலத்தில், என் இருபதுகளின் ஆரம்பங்களில், எக்கச்சக்கமான ஜென் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இருத்தல் குறித்த கொதிப்பான அந்த நாட்களில் ஒரு நாள் இரவின் கனவில் ஜென் குரு ஒருவர் காட்சியளித்து, "Am I absurd or profound?" என்று ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டு, துரிதமான மூன்று ட்ரம் பீட்களில் என் கவனத்தைச் சின்முத்திரையிட்ட தன் இடக்கரத்தின்பால் ஈர்த்து ஞானத்தை வழங்கினார். அதன்பின் என் நாட்கள் இன்னும் கொதிப்பாயின. வழக்கமாகக் காப்பி குடித்ததும் வாசிக்கும் ஹிந்து பேப்பரில் "இந்த இடம் எந்த இடம்?" என்ற கேள்வியை திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தேன். குமிழ் மண்டை கொண்ட சின்னஞ்சிறு பச்சை மனிதர்கள் எவரும் "ஆத்துக்குப் போலாம் வாடா கண்ணு!" என்று என்னை அழைத்துச் செல்ல அண்டவெளியிலிருந்து வருகை தரவில்லை. ஐந்தரை மணிக்கே தண்ணீர் வரிசையில் குடத்தைப் போட்டு இடம் பிடித்து பம்ப் அடிப்பது, ஏழரை மணிக்குள் ரயில் பிடிப்பது, முதல் மூன்று தேதிகளில் மளிகை சாமான் பில்லை செட்டில் செய்வது, ரேஷன் கடையில் அரிசி வந்திருக்கிறதா என்று பார்ப்பது என்பது மாதிரியான அன்றாட கவலைகள் என் இருத்தலியல் கொதிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தன.

இன்றைக்குக் கொஞ்ச நாட்களாக ஜிமெயில் சாட்டில் ஒரு நண்பர் பச்சை விளக்கைப் பொருத்திக் கொண்டு "Do Something" என்று எப்போதும் ஆணையிட்டிருப்பதைக் காண்கிறேன். கொந்தளிப்பெல்லாம் அடங்கி சமர்த்தாக அலுவலகம் போய் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என்னைப் பார்க்கும்போது, "இதென்னடா மரவட்டை வாழ்க்கை!" என்று அப்போது அமெரிக்கா சென்றிருந்த என் அத்தானுக்கும் அதுபோல் தோன்றியிருக்க வேண்டும். கர்ம சிரத்தையாக Miriam Levering and Lucien Stryk தொகுத்த "Zen - Images, Texts and Teachings" என்ற இந்த காபி டேபிள் புத்தகத்தை வாங்கி வந்து அதில், "Do Something! Anything!" என்று செவ்வெழுத்துகளில் எழுதி பரிசளித்தான் அவன். அழுகையைக் காட்டிக் கொள்ளாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். வழக்கமான ஜென் புதிர்கள் ஹைக்கூகள் காமெடி கதைகள் போக அவ்வளவு அருமையான புகைப்படங்கள் இதில் இருப்பது தனிச் சிறப்பு. 


7 Apr 2013

The Race for a New Game Machine - David Shippy and Mickey Phipps


சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் 



இன்று வழக்கமாக வீடுதோறும் நாம் பார்க்கும் காட்சி இது: முதியவர்கள் டிவி சீரியல்களில் உருகிக் கொண்டிருக்கையில், இளைஞர்(ஞி)கள் தங்களுடைய அறைகளில் படிப்பு/ வேலை/ தூக்கம் தவிர்த்த நேரத்தை கணினி விளையாட்டுகளில் களிக்கிறார்கள். குழந்தைகள் வெளியே விளையாடாமல் இளவயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு கணினியுடன் சஞ்சலிக்கிறார்கள் என்று முதியவர்கள் கவலைப்படுகிறார்கள். நடுத்தர குடும்பங்கள் எங்கும் நாம் சாதாரணமாக பார்க்கும் காட்சி இது.

அட, புத்தக விமர்சனம் என்று பார்த்தால் ஏதோ சமூக கட்டுரையைப் படிக்க வேண்டியிருக்குமோ என்று நீங்கள் கவலைப்படுவது புரிகிறது. இன்றைய இளைய தலைமுறையை இப்படிச் சுண்டி இழுக்கும் எலெக்ட்ரானிக் விளையாட்டு எந்திரங்களை உருவாக்கியவர்களைப் பற்றிய புத்தகத்தைத்தான் இன்று அறிமுகப்படுத்திக் கொள்ளப் போகிறோம். 

6 Apr 2013

Life Of Pi -Yann Martel

Life of Pi
A Novel
Yann Martel

Photo Courtesy/To Buy:Flipkart

ஒரு எழுத்தாளர். இரண்டு நாவல்கள், சில சிறுகதைகள் எழுதியவர். அவருடைய கடைசி நாவல் படு தோல்வி. அவர் இந்தியாவுக்கு வருகிறார். வேறொரு நாவல் எழுத முயற்சி செய்கிறார். அதுவும் தோல்வியில் முடியவே, இந்தியாவில் கொஞ்சம் சுற்றுப்பயணம் செய்கிறார். திடீரென ஞானோதயம் வருகிறது, இந்த நாவலை எழுதி முடிக்கிறார். அது உலகம் முழுக்க புகழ் பெறுகிறது, திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்து நான்கு ஆஸ்கர் பரிசுகளையும் பெறுகிறது. அவர்தான் யான் மர்டேல், இந்த நாவலின் ஆசிரியர்.


எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. அது என்ன இந்த வெள்ளைகாரர்கள் எல்லாம் கடவுள் பற்றி புரிய வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வருகிறார்கள்? அவர்கள் மதம் புரியவில்லை, அதில் தேவைப்பட்ட விஷயம் இல்லை என்றால், ஹிந்து மதத்தில் மட்டும் கிடைத்து விடுமா? அதுவும் தீவிர தோல்வியில் இருக்கிற இந்த மாதிரி எழுத்தாளர்கள் வருகிறார்கள். இந்தியாவை வைத்து, இல்லை இந்தியாவில் ஒரு துளியை நாவலில் நுழைத்துக் கொண்டு நாவல் எழுதிவிட வேண்டியது, உடனே உலகில் இது புரியாது தவிக்கிற இலக்கிய விமர்சகர்கள் எல்லாம் இதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு புகழ வேண்டியது. ஒகே, இந்த நாவல் அவ்வளவு மோசம் கிடையாது. உண்மையாக சொன்னால் நாவலின் இரண்டாம் பகுதி Pretty Brilliant. 



நாவலில் மொத்தம் மூன்று பகுதிகள். சுருக்கமாகப் பார்த்தால் “பை படேல்” தனது பெற்றோருடன் புதுச்சேரியில் வாழ்கிறான், அவனது தந்தை ஒரு மிருககாட்சி சாலை வைத்திருக்கிறார். அதை விற்றுவிட்டு கனடா செல்லும்போது, அவன் பயணம் செய்யும் கப்பல் கவிழ்ந்து விடுகிறது. “பை படேல்” ஒரு பெங்கால் புலி, கழுதைப்புலி, வரிக்குதிரை, ஒராங்குடான், இவற்றுடன் ஒரூ படகில் தப்பிக்கிறார்.  வரிக்குதிரை மற்றும் ஒராங்குடானை கழுதைப்புலி கொன்று விடுகிறது. அதை பெங்கால் புலி கொன்று விடுகிறது. புலியுடன் 227 நாட்கள் அந்த படகில் வாழ்ந்து மெக்ஸிகோவில் கரை சேர்கிறார்.

இந்த நாவலுக்கு கூகுளில் தேடினால் ஏகப்பட்ட விமர்சனம் மற்றும் இதன் முடிவை பற்றி பலவித கருத்துகள் கிடைக்கும் என்பதால், எனக்கு இந்த நாவல் படிக்கும்போது தோன்றிய எண்ணங்களை மட்டும் இங்கே எழுத விரும்புகிறேன். அதாவது இந்த நாவலின் மறைபொருள் பற்றியோ, நாவலின் முடிவை பற்றியோ நான் எழுதப் போவதில்லை. இந்த நாவல் மொத்தமும் படித்த பிறகும் நிறைய புரியவில்லை. கொஞ்சம் கூகுள், கொஞ்சம் பைராகி குருவின் கருத்துகள் படித்தபின், புத்தகத்தின் சில பகுதிகளை மீண்டும் வாசித்தபோது கொஞ்சம் புரிதல் உண்டானது. 

இந்த நாவலின் முக்கியமான பகுதிதான் ஆசிரியருக்கு முதலில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் பூ வைச்சு, பொட்டு வைச்சு, பாண்ட், சட்டை எல்லாம் இந்த ஒன்றாம் பகுதியில் செய்திருக்கிறார். அது ரொம்ப அமெச்சூர்தனமாக இருக்கிறது. அதாவது முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் கொஞ்சம்கூட ஒட்டவில்லை. இதையெல்லாம்விட திடீரென ஆசிரியர் இந்திய சாதிய அமைப்பை நக்கல் செய்கிறார். பை படேலின் தந்தை ஜூவை விற்று விட முடிவு செய்ய, திருவனந்தபுரத்தில் இருக்கும் ஜூ ஒன்று பிராமண பசு இருந்தால் எங்களுக்கு கொடுங்கள் என்று பை படேலின் தந்தையிடம் கேட்கிற மாதிரி ஒரு வரி. இந்தியாவைப் பற்றி நிறைய படிப்பதாலும், இங்கே சில காலம் வாழ்வதாலும், இந்தியாவைப் பற்றி தங்களுக்கு நல்ல புரிதல் உண்டு என்று நினைக்கும் இந்த மாதிரி எழுத்தாளர்களைக் கண்டிக்காமல் வெளிநாட்டுக்காரர்கள் அவார்ட் கொடுத்துவிட்ட காரணத்தாலேயே இதிலுள்ள இது போன்ற சொதப்பல்களைச் சுட்டிக் காட்டாத நம்மூர் இலக்கியவாதிகளுக்குக் கடும் கண்டனங்கள்.

இந்த நாவலின் முக்கிய பகுதியான இரண்டாவது பகுதியையும், மிக சின்ன பகுதியான மூன்றாவது பகுதியையும் ஒன்றாகப் பார்த்தால் புரிதல் கொஞ்சம் எளிதாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் பை படேல் மெக்ஸிகோவில் கரை சேர்ந்தவுடன் அவனை ஜப்பானிய நாட்டு ஆயுள் காப்பீட்டு கழகத்தினர் இருவர் பேட்டி காண்கிறார்கள், அவர்களிடம் இந்த கதையைச் சொல்லும்போது அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதன்பின் இந்தகதையில் மிருகங்களுக்கு பதில் மனிதரகளை வைத்துச் சொல்கிறான். இந்த நாவலை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். அது அவரவர் நம்பிக்கை மற்றும் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைப் பொருத்தது. 

இரண்டாம் பகுதியில் நிறைய விஷயங்களை, அதாவது கடல், மிருகம் இவற்றை வார்த்தைகளால் வர்ணித்திருக்கிறார். அது ஓரளவுக்கு மேல் என்னுடைய கற்பனையை வற்றச் செய்துவிட்டது. எ-கா அந்த ரோஜா பூ சிகப்பு நிறத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். உங்கள் மனதில் இப்போது இது பற்றி எத்தனை விதமான ரோஜா பூக்கள் இருக்கும். நான் சிந்தித்த மாதிரி யாருமே சிந்தித்து இருக்க மாட்டீர்கள். நான் சொல்ல விரும்புவது இதுதான் - மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு காட்சிபூர்வமாக நாவல் இருக்கிறது, அது நாவலின் வலிமை என்று நீங்கள் வாதிட்டால், அது உங்களின் விருப்பம், என்னை அது பொறுமை இழக்கவே செய்கிறது. காட்சிபூர்வமாக விவரிக்க சினிமா உள்ளது.

மொத்தமாகப் பார்க்கும்போது, சில இடங்களில் மிக அழகாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது, இதை மறுக்கவே முடியாது. ஆனால் அதைத் தாண்டி முன்னால் சொன்ன விஷயங்கள் நாவலை வலிமை இழக்க செய்கின்றன.



5 Apr 2013

ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்




சிறப்புப் பதிவர் : P. சங்கர்.

நான் ஏற்கனவே இலவசக் கொத்தனார் அவர்களின் வெண்பா நூலினை படித்துள்ளேன். மிகவும் நுட்பமான தகவல்களையும், விளக்குவதற்குச் சிரமமான சேதிகளையும், எளிய தமிழில் புரியும்படி விளக்குவதில் அந்நூல் ஒரு நன்னூல். அதனால் "சா(ஜா)லியா தமிழ் இலக்கணம்" என்ற  இந்நூலினை கையில் எடுக்கையில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடனேயே  எடுத்தேன். என் எதிர்பார்ப்பினை இந்நூல் நிறைவு செய்ததா என்றால், பல மடங்கு அதிகமாகவே நிறைவு செய்துள்ளது எனலாம்.

தமிழ் இலக்கணம் என்பது, அரசாங்க விருது பெரும் கலைத் திரைப்படங்களைப் போல மிகவும் வறண்ட தலைப்பாகும். என் பள்ளிக்காலங்களில் நான் இலக்கணம் படித்தபோது, அதற்கென பரிந்துரைக்கப் பட்ட பாட நூல்கள் இலக்கணத்தை கற்பித்ததை விட அதன் மேல் ஓர் (இங்கு நுண்ணரசியல் ஒளிந்துள்ளது) அருவருப்பையே அதிகம் ஏற்படுத்தின. இலக்கணத்தை அறிந்து கொள்ள நான் பெரும்பாலும் பாடல்களை (இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் முதலியன) மனனம் செய்து கொள்வேன்,  ஆசிரியர்களின் விளக்கத்தைப் படிப்பதை இயன்றவரை தவிர்த்து விடுவேன். ஏனெனில் அவை பெரும்பாலும் கண் அராவும். ஆனால் இந்நூல் மிகவும் அற்புதமாக எளிய தமிழில் இந்த விதிகளை விளக்குகின்றது. இந்நூல் என் பள்ளிக்காலத்தில் கிடைத்திருந்தால் மிக மிக உறுதுணையாக இருந்திருக்கும்.

இந்நூல் ஓராண்டு + சில மாதங்கள் முன்பே கிடைத்திருந்தால், என் திருமணத்தின் தாம்பூலப் பையில் இதையும் ஒரு பரிசாக இணைத்திருந்திருப்பேன். அநேகமாக என் பள்ளிக்கு இந்நூலை ஒரு நூறு எண்ணிக்கை வாங்கி அளித்தாலும் அளிப்பேன் என்று நினைக்கிறேன். இந்நூலைப் படிக்கும்போது ஓர் எட்டாம் வகுப்பு மாணவன் மன நிலையிலேயே படித்தேன். இது இன்னும் அனுபவித்து படிக்க ஏதுவாக இருந்தது.

தமிழ் இலக்கணத்தில் நீ என்னபடித்தாய் என்று என்னிடம் யாராவது கேட்டால், என்னென்ன தலைப்புகள் தோன்றுமோ அத்தனையையும் இந்நூல் விளக்கி இருக்கிறது. இவ்வளவு சிறிய நூலுக்குள் இடக்கரடக்கல், குழூஉக்குறி போன்றவையும் கூட விளக்கப்பட்டுள்ளன. ழகர, ணகர, ரகர வேற்றுமைகள் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் பயன்படுத்தப் படும் சொற்களின் அட்டவணை, இந்த வேற்றுமைகளை வைத்து விளக்கப்பட்டுள்ளது. இது தமிழில் எழுதப் படிக்க சிரமப்படும் எந்த மாணவருக்கும் உறுதியாக உதவும்.

இந்நூலில் இருந்திருக்கலாம் என்று கருதிய ஒன்று, தொல்காப்பியப் பாடல்களை கடைசியில் ஒரு அட்டவணையாகக் கொடுத்திருந்திருக்கலாம். இந்நூலின் ஆசிரியரோடு நான் முரண்படும் ஒரேயொரு இடம் "வாழ்த்துக்கள் என்பது தவறு" என்பது. இதில் நான் எதிர்க்கட்சி, பிழை இல்லை என்று கருதுகிறேன். அதே சமயம், "வாழ்த்துகள்" என்றே நான் எழுதுகிறேன் ஆனால் வலி மிகுபவர்களைத் தவறென்று சொல்ல மாட்டேன்.

உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரிந்தால், நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது. நான் தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத் தலைவரானால், மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, மிதிவண்டி என்று பணத்தை வாரியிறைப்பதற்கு பதிலாக இந்நூலை கண்டிப்பாக இலவசமாகக் கொடுத்திருப்பேன். தமிழ் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கு இத்தகைய நடைமுறைத் தமிழ் நூல்கள் அவசியம் தேவை. நீங்களும் வாங்கிப் படியுங்கள், உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்.

இணையத்தில் வாங்க: கிழக்கு பதிப்பகம்.

***



4 Apr 2013

மருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்டே – தமிழில். டாக்டர்.ஜீவானந்தம்





இன்றைக்கு இந்திய மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது அவர்களுக்கு இந்திய மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை, நவீன மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை என்பதே. நவீன மருத்துவத்தின் எல்லையும் இந்திய மருத்துவத்தின் எல்லையும் வேறானவை. நவீன மருத்துவம் கைகழுவிய நோயாளிகளே பெரும்பாலும் இந்திய மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள். நம்பிக்கை நீர்த்து தீராத பிணியிலிருந்து மீண்டெழ முடியும் என தங்கள் இறுதி நம்பிக்கையாக இந்திய மருத்துவத்தை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியை பார்க்கும் போதும் என் மனம் கலக்கமடையும். உண்மை நிலையை சொல்வது அவர்களின் நம்பிக்கையை அழிப்பதாகும், போலி வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட முடியாது. பெரும் மனப்போராட்டம் தான். நான் உண்மை நிலையை விளக்குவதையே எனது வழிமுறையாக கொண்டிருந்தேன், அண்மைய காலம் வரை. 

டாக்டர் பி.எம் ஹெக்டே 

3 Apr 2013

திருப்புமுனைகள் - என்.சொக்கன்

திருப்புமுனைகள் 
என்.சொக்கன் 
பக்கங்கள் : 280
விலை: ரூ.160
மதி நிலைய வெளியீடு 

சாலைகளில் திருப்பங்கள் வரும் முன்னர், இடது, வலது அல்லது கொண்டை ஊசி வளைவு  வரப்போகிறது என்று அறிவிப்புப் பலகை வைத்து எச்சரிக்கை செய்வார்கள். வாழ்க்கையில் அப்படி கிடையாது. அப்படிப்பட்ட திருப்புமுனை வந்து சென்றபின்னரே அது பற்றி நமக்குத் தெரியவரும். (சில நேரங்களில் அது தெரியாமலேயேகூட போகலாம்).  அதை  நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நம் திறமை இருக்கிறது.

2 Apr 2013

குற்றியலுலகம் - பா.ராகவன்

”நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக் கொள்கிறார்கள்”
சென்ற புத்தகவிழாவில் நண்பர் அப்புவின் புத்தகத்தைப் பொறுக்கப் போனவன் மதி நிலையத்தில் “குற்றியலுலகம்” புத்தகத்தைப் புரட்டினதும் கண்ணில் பட்ட முதல் ட்வீட் இது. 

தலையைப் வலப்பக்கவாட்டில் சாய்த்து வலக்கண்ணை மூடி வான் நோக்கியவாறே என் அலமாரியில் ரொப்பி வைத்திருக்கும் படிக்காத பல புத்தகங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ”ஹார்ட் டிஸ்கை என்னா பாரா சார், நான் அலமாரியையும் ரொப்பி வெச்சிருக்கேனே!”. இந்த பாவத்தை எதைச் செஞ்சு சரிகட்ட என்ற யோசனையில்.... ஒரே வழிதான் இருக்கு. இந்த புத்தகத்தையும் வாங்கி அலமாரில அடுக்கிடுவோம் என்று அந்த சின்னஞ்சிறு புத்தகத்தையும் அள்ளிக் கொண்டென்.

நானறிந்த வரையில் தாங்கள் போட்ட ட்வீட்டுகளின் தொகுப்பைப் புத்தகமாக வெளியிட்டவர்கள் மூவர். முதலில் பேயோன் 1000 வெளியிட்டார் பேயோன். அடுத்தது பா.ராகவனின் இந்தப் புத்தகம், மூன்றாவதாக நம் அன்பர் வேதாளம் ஈ’புத்தகமாக வெளியிட்ட இனியவை 140. பாராவும் பேயோனும் ஒருத்தரே என்ற ஊரறிந்த ரகசியம் நிஜம் என்றால் இப்படிப் புத்தகங்களை வெளியிட்டவர்கள் இருவர் எனலாம் :)

இந்தப் புத்தகங்களுக்கான வாசகர் வட்டம் எப்படியிருக்கும், அதை எப்படி அனுமானித்து தைரியமாக இவ்வகைப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமே. ட்விட்டரைத் தெரியாதவர்களுக்கு புதுவகையிலான ‘கண்டெண்ட்’ கொண்ட இந்த வகைப் புத்தகம் எவ்வகையில் சுவாரசியம் ஏற்படுத்தும் என்பது முதற்கேள்வி. ட்விட்டர் நன்கு பரிச்சயம் உள்ளவர் ஒருத்தர் தான் முன்னமே படித்த ட்வீட்ட்டைப் புத்தக வடிவில் வாங்கிப் படிப்பாரா என்பது அடுத்த கேள்வி. பாரா போல பிரபல எழுத்தாளர் என்றால், “அட, நம்ம ரைட்டர் எதோ புச்சா ஏதிருக்காருபா”, என்று சிலப்பலர் வாங்கலாம். எனவே, எனிவே.... இப்படிப்பட்ட ஒரு புத்தகம் வெளியிட்டமைக்கே மனதார பாராட்டிக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினால், அடடா! அடடா! நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா என்று நிறைய ட்வீட்கள். சரியாத்தேன் புத்தகத்தை வாங்கியிருக்கோம்.


ழுத்து என்பது கை பழகிய நுட்பம் எனினும் ட்விட்டரில் நூற்று நாற்பதில் தான் சொல்ல வந்ததை ‘நச்’ என்று சொல்வது பெரிய சவால்தான் என்று பாரா முன்னுரையில் குறிப்பிடுகிறார். சொக்கனும் இதை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் எங்கோ இதைப் படித்தேன்: ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளரிடம் கேட்டார்களாம் - “நீங்கள் எழுதுவது எல்லாமுமே எப்படி சுவாரசியம் நிறைந்ததாக இருக்கிறது?”, என்று. “படிக்கையில் ஆயாசம் ஏற்படுத்தும் அனைத்தையும் வெட்டிவிட்டே ஒரு பதிவை / புத்தகத்தை நான் வெளியிடுகிறேன்”, என்றாராம் அவர். படிக்க ரொம்பவும் சாதாரணமாகத் தெரிந்தாலும் அந்த எழுத்தாளர் சொன்னது எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய விஷயம்.

”நாப்பது வார்த்தை மொதல்ல எழுதுங்க. அதுலருந்து பிடிவாதமா பன்னண்டு வார்த்தையை எடுத்துடுங்க. உங்க மெயில் எவ்ளோ க்ரிஸ்ப்பா இருக்குன்னு அப்போதான் புரியும்”, என்று இதையேதான் அலுவலக நண்பர் குமரகுருவும் அலுவலக மடல்களை வரையும்போது சொல்லுவார்.

”இங்கே இணையத்தில் நான் காணும் பல சீரியஸான இலக்கிய விவாதங்கள் எல்லாம் ஆதித்யா சேனலில் வெளியிடப்படுவதற்கான அத்தனைத் தகுதிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளவையாகத் தெரிகின்றன”

இப்படி எழுதினால் 165 character என்று தலையில் தட்டுகிறது ட்விட்டர். ”இங்கே”,  “அத்தனை”, “முழுமையாக” ஆகிய வார்த்தைகளை நீக்கினாலும் 140’ல் அடங்கிவிட மாட்டேன் என்கிறது. 

பல இணைய இலக்கிய விவாதங்கள் ஆதித்யா சேனலில் வெளியிடத் தகுதி வாய்ந்தவையாக உள்ளன
என்று அதை உருமாற்றினால் 120’;லேயே அடங்கிவிடுகிறது. அதைத்தான் தன் ட்வீட்கள் நெடுக செய்திருக்கிறார் பாரா. தேவையற்ற வார்த்தைகளை வெட்டினால் கச்சிதமாகச் சொல்ல வந்தது மாத்திரம் எப்படி அழகாக வந்து விழுகிறது பாருங்கள். 

பாராவின் ட்வீட்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நம் ஒவ்வொருவரையும் தொடுகிறது; ஏதேனும் ரசனை சார்ந்தோ அல்லது ஒரு வலியைப் பகிர்வதன் வாயிலாகவோ. உதாரணமாக வெவ்வேறு மனப்பகிர்வுகள் இரண்டினை இந்தப் புத்தகத்தில் அடுத்தடுத்து காணமுடிகிறது:

ஆழ யோசித்தால் புற்றுநோய் மட்டுமே கடவுளையும் விஞ்ஞானத்தையும் சேர்த்து தோற்கடித்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது
இட்லி உப்புமாவின் ருசி ஏன் இட்லியிலோ உப்புமாவிலோ இருப்பதில்லை?

அங்கங்கே நிறைய பொறுத்துக் கொள்ளத்தக்க மொக்கைகளும் உண்டு. சில ட்வீட்கள் ஜென் வகைபோல, நமக்குப் புரிவதில்லை. குறையொன்றுமில்லை பாட்டின் பேரில் என்ன கோபமோ பாராவுக்கு, இசை தவிர்த்து அதில் ஏதுமில்லை என்கிறார் (நான் தப்பாய்ப் படித்தேனோ?). எம்.எஸ்’சும், ராஜாஜியும் பாடலில் தெரியவில்லை என்கிறாரா? நமக்குப் புரியலை.

மற்றபடி சினிமா, இலக்கிய, அரசியல், கிரிக்கெட் என்று ஆல்-ரவுண்ட் ட்வீட்கள் புத்தகம் முழுதும் உண்டு. பீச் ஸ்டேஷனில் கையிலெடுத்தால் தாம்பரம் வருமுன் இரண்டுமுறைகள் வாசித்துவிடத்தக்க வகையில் புத்தகத்தின் சைஸும், சுவாரஸ்யமும்.


குற்றியலுலகம் | பா.ராகவன் | மதி நிலையம் | 80 பக்கங்கள் | ரூ.40/- 
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: கிழக்கு


Related Posts Plugin for WordPress, Blogger...