Name : Jeeves in the offing
Author : P.G.Wodehouse
Publishers : Penguin Books
To Buy : Amazon
To Buy : Amazon
நாவல் எழுதறது பத்தி பி.ஜி.வுட்ஹவுஸ் இப்படி சொல்றாரு
“ஒண்ணு, வாழ்க்கை பத்தி துளிக்கூட கவலைப்படாம, என்னை மாதிரி எழுதறது,
ரெண்டு, வாழ்க்கையின் அடிநாத பிரச்னைகளை துல்லியமா எழுதறது”. நகைச்சுவை
இலக்கியம் எழுதறது ரொம்ப கஷ்டம், நகைச்சுவை இலக்கிய புத்தகத்தை பற்றி
எழுதறது அதை விட கஷ்டம்.
எதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம்ன்னு தெரியாம வேகமா
ஓடிக்கிட்டு இருக்கு இந்த நகர வாழ்க்கை. "இப்படித்தான் வாழணும், நீ
மட்டும் ஏன் வித்தியாசமா இருக்க"ன்னு கேள்வி கேட்கும் மக்கள். ஒரு விதமான
நெறிமுறைகளுக்கு உட்பட்டு நீயும் அதே மாதிரிதான் சிந்திக்கணும்,
செயல்படணும் எதிர்பார்க்கிற மக்கள். இவங்ககூட தினமும் வாழறது கஷ்டம்தான்.
“குழந்தை ஏன் அழறது? வூட்வர்ட்ஸ் கரிப் வாட்டர் குடுன்னு” விளம்பரத்தில்
சொல்ற மாதிரி, மனசு சங்கடமா இருக்கிற நேரங்களில் வுடுஹவுஸ் எழுதிய நாவல்கள்
நல்ல மருந்து. அவரோட நாவல்களைப் படிக்கும்போதே நாமும் இதே மாதிரி
வாழ்ந்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சிக்கிட்டேதான் படிக்கிறேன். அது ஒரு
ஜாலியான உலகம்.