ஆம்னிபஸ் பதிவுகள் குறித்து வரும் வாசகர் கடிதங்களை தளத்தில் இடுகையிடும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் ஒரு அவசர, அத்தியாவசிய நிலையை உத்தேசித்து இப்போது செய்யப்படுகிறது.
ஆம்னிபஸ் தளத்தில் ஒரு குறுகிய காலம், நண்பர் சரவணன் தொடர்ந்து சில பதிவுகளை எழுதினார்- முதல் பதிவைப் பார்க்கும்போதே, "இது தேர்ந்த கை" என்பது தெரிந்துவிட்டது அந்த ரகசியம் இன்றும் என்னோடு இருக்கிறது.
அவரது பதிவுகளில் ஒன்று, எம். பி. சுப்ரமணியன் எழுதிய "தேக்கடி ராஜா" நாவலின் அறிமுகக் கட்டுரை.
அதன் பின்னூட்டத்தில், "சார்! எனக்கு தேக்கடி ராஜாவின் பிரதி/ஒளிநகல் கிடைக்குமா?," என்று கே. ரமேஷ் பாபு கேட்டிருந்தார் .
"வருகைக்கு நன்றி திரு. ரமேஷ் பாபு. உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் ஜெராக்ஸ் பிரதி அனுப்பி வைக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி என் புரொஃபைல் பக்கத்தில் உள்ளது. நன்றி!", என்று பதிலிறுத்தார் சரவணன். அது அத்தோடு போயிற்று.