சிறப்புப் பதிவர்: பேயோன்
அமெரிக்கத் திரைப்பட இயக்குநராகப் புகழ்பெற்ற நகைச்சுவையரசர் வுடி ஆலனின் Complete Prose பற்றிப் பூரித்து எழுத நிறைய விஷயம் இருக்கிறது. கட்டுரைகள், சிறுகதைகள், குட்டிக் கதைகள், சில நாடகங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்தப் புத்தகம். பல படைப்புகள் நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்தவை.
வுடி திரையுலகில் கால்பதிக்கு முன்பு நகைச்சுவை மேடைப் பேச்சாளராக இருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் (தெரிந்திருக்காது என்ற ஊகத்தில்தான் இதைச் சொல்கிறேன்). இந்தப் படைப்புகளில் Annie Hall, Interiors, Manhattan, Crimes and Misdemeanors போன்ற படங்களை இயக்கிய சீரியஸ் ஆசாமியைவிட Love and Death, Take the Money and Run, The Curse of the Jade Scorpion போன்ற 'செரி காமெடி' வகைப் படங்களை இயக்கிய நிகழ்த்துகலைஞரைப் பார்க்கலாம்.
இந்த அறிமுகக் கட்டுரையை முடித்துக்கொள்வதற்கு முன்பு அதன் உள்ளடக்கம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
'கம்ப்ளீட் ப்ரோஸ்' ஆனது Getting Even (1971), Without Feathers (1975), Side Effects (1980) ஆகிய நூல்களின் 'கண்டு' என்று சொல்லலாம். மூன்றையும் வெளியிட்டது ராண்டம் ஹவுஸ் பதிப்பகம். இந்தத் தொகுப்பை 1991இல் விங்ஸ் புக்ஸ் வெளியிட்டது. முன்னுரையைச் சேர்க்காமல் 473 பக்கங்கள் (புத்தகத்தில் முன்னுரை இல்லை). இந்நூலில் 52 ஆக்கங்கள் இருக்கின்றன. நான் புரட்டிக்கொண்டிருப்பது இணையத்தில் வாங்கிய கச்சிதமான Picador "பேப்பர்பேக்" பதிப்பு.
கம்ப்ளீட் ப்ரோஸில் உள்ள எல்லா படைப்புகளுமே தவறவிடக் கூடாதவை. குறிப்பாகப் பேருந்து இருக்கையில். ஆனால் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம் என்று கூறத்தக்க சில படைப்புகளை இங்கு அறிமுகப்படுத்துகிறேன். வுடி ஆலனின் நகைச்சுவையின் வீச்சிற்கு இந்தக் கதைகள் நல்ல எடுத்துக்காட்டுகள். இதில் தரவரிசை எதுவும் இல்லை.