A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label அ. முத்துலிங்கம். Show all posts
Showing posts with label அ. முத்துலிங்கம். Show all posts

10 Jan 2013

அ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.

தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களை எழுதச் சொல்லி ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என அ.முத்துலிங்கம் செய்த முயற்சியின் பயன் இத்தொகுப்பு. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் அவர்களது பரிந்துரைகளை கேட்டு வாங்கி்யதையே ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார். எழுத்தாளர்களைக் கவர்ந்த புத்தகம் எனக்கேட்டாதாலோ என்னவோ சமகாலப் படைப்புகளை அதிகம் பரிந்துரைத்துள்ளனர். அவர்களை பாதித்த புத்தகம் எனக் கேட்டிருந்தால் வேறு ஒரு லிஸ்ட் கிடைத்திருக்கலாம்.
அசோகமித்திரன் (சா.கந்தசாமி - மாயவலி), இந்திரா பார்த்தசாரதி (யோஸ் சரகமோ - இரட்டை), இரா.முருகன் ( மாதவன் குட்டி- ஓர்ம்மகளூடெ விருந்து), ஜெயமோகன் (எம்.கோபாலகிருஷ்ணன் - மணல்கடிகை), பொ.கருணாமூர்த்தி (My Days - R.K.Narayanan), மனுஷ்யபுத்திரன் (ஜெயமோகன் - ஏழாம் உலகம்), அ.முத்துலிங்கம் (Teacher Man - Franck McCourt), நாஞ்சில் நாடன் (ஆழி சூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்), பாவண்ணன் (காலபைரவன் - புலிப்பானி ஜோதிடர்), எஸ்.ராமகிருஷ்ணன் (எண்பெருங்குன்றம் - வேதாசலம்), வெங்கட் சாமிநாதன் (கூகை - சோ.தருமன்), வாஸந்தி (Embers - Sandor Marai) எனப் பல எழுத்தாளர்களது கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.
என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் - ஷோபாசக்தி எழுதிய `ஆடு, புலி, புல்லுக்கட்டு` (ஜெனே - Les Bonnes) மற்றும் `படிப்பின் பயணம்` எனும் தலைப்பில் சுஜாதா எழுதிய கட்டுரை, `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` ஜெயமோகனின் கட்டுரை.


24 Sept 2012

மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்



என் நண்பர்களிடம் அவர்களைக் கவர்ந்த புத்தகங்களைக் கேட்டு அதை வாங்கிப் படிப்பேன். இது என்னிடம் உள்ள ஒரு பழக்கம், கேட்டவர்கள் அனைவரும் அ.முத்துலிங்கம் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை.”முத்துலிங்கம் கதைகள் படிச்சிருக்கியா?” நிச்சயம் இந்த கேள்வி வந்து விழும். அப்படித்தான் அறிமுகமானார் அ.முத்துலிங்கம். சில கதைகளிலேயே தெரிந்து போனது அவர் ஒரு நல்ல கதைசொல்லி. நமக்குத் தெரிந்த பல விஷயங்களை நாமறியாத வகையில் சொல்லி ஆச்சர்யமூட்டுபவர். காதலும், எள்ளலும், நகைச்சுவையும் எப்போதும் குறைந்திடாமல் வாசகனுக்குத் திருப்தியைத் தரும் சின்ன சின்னக் கதைகள்தாம். சில வேளைகளில் “ச்ச, இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சே” என்று கூட ஏமாற்றம் தர வல்ல கதைகள்.

அன்றாடம் நம் பணி நெரிசலில், இயந்திரத்தனமாக ஏதேதோ செய்து கொண்டிருக்கையில் திடிரென ஏதோ ஒரு காட்சியோ ஒரு செய்கையோ நம்மை, நம் மனதை அப்படியே Freeze செய்து விடும். பல நாட்களுக்கு முன்போ, பல வருடங்களுக்கு முன்போ நிகந்த ஏதோ ஒன்றையோ, யாரோ ஒருவரையோ நினைவுபடுத்தி மகிழ்விக்கவோ, நோகடிக்காமலோ அது போகாது. இவ்வுலகில் மிகப் பெரிய வரம் நினைவுகள், மிகப்பெரிய சாபமும் கூட. நினைவோடைகளை மனதில் தாக்கம் ஏற்படும் படி இவர் சொல்லும் கதைகள் இதில் ஏராளம்.

மகாராஜாவின் ரயில்வண்டி கதையில் நாயகன் அன்னியர் ஒருவர் வீட்டில் தங்குகிறார். அவர்களில் வீட்டில் இருக்கும் பெண்ணை இவருக்கு மிக பிடித்துப் போகிறது. மெல்லிய கிதார் இசையில் அவளுடன் சேர்ந்து இனிப்பு பிஸ்கட் சாப்பிடுகிறார். அவள் வீட்டில் வளரும் பூனைக் குட்டிகளை இவருக்கு காண்பிக்கிறாள். அந்த நாள் இனிமையாகக் கழிகிறது. பல வருடங்கள் கழித்தும் கூட, கிதார் இசையைக் கேட்டாலோ, இனிப்பு பிஸ்கட் சாப்பிட்டாலோ இல்லை நிம்மதியான உறக்கத்திலோ இவர் அவை நினைக்காமல் இருந்ததில்லை என கதை முடிகிறது. இப்படியான ஒரு பெண் எல்லோருடைய வாழ்விலும் இருக்கத்தானே செய்கிறாள்?

மற்றொரு கதையில், நல்ல லாபத்திலிருந்து இப்போது நட்டத்தில் ஓடும் ஒரு கம்பெனி ஊழியர்களுக்கு கம்பெனியின் நிலை குறித்து எடுத்துச் சொல்ல இவரை அழைத்திருக்கின்றனர். இருபத்தொன்பதாவது மாடியில் இவரது அறை. கம்பெனி நிலவரங்களை ஆராய்ந்து கொண்டும், தான் பேசவேண்டியவற்றை எழுதிக்கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார். வானத்தில் மிதப்பதாகவும், பறவைகளோடு சேர்ந்து தானும் பறப்பதாகவும் உணர்கிறார். அப்போது வேகமாய் வந்த ஒரு பறவை அறைச் சாளரத்தை வெற்றுவெளி என்று நினைத்து மோதிச் சாகிறது. இவர் அந்த பறவையைக் கையிலெடுத்து அதன் மரணத்தை உணருகிறார். அடுத்தநாள் மீட்டிங்கில் இந்தப் பறவையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். இறுதியில் ஊழியர்களுக்கு வேறேதும் சொல்லத் தேவைப்படாமல் போகிறது. அவ்வளவு நேர்த்தியாக கம்பெனி நிலவரத்தையும் அந்த பறவையையும் இணைத்துப் பேசுகிறார். இது தொடக்கம் சிறுகதை. இது போலத்தான் வாழ்க்கையில் ஏதேதோ சம்பவங்கள் நமக்குப் பல படிப்பினைகளை தந்து செல்கிறது.

படிப்பினையையும், மெத்தப் படித்தவர்களையும் பகடி செய்யும் எதிரி கதை மிகச் சிறந்தது எனச்சொல்லலாம். ம்வாங்கி என்பவர் அந்த ஊரிலேயே மெத்தப் படித்த ஆசாமி, படிப்பிற்கேற்ற வேலை ஒன்றும் கிடைக்காததால் இவர் அறிவில் கோழிப்பண்ணை வைக்கலாம் என்று முடிவு செய்து அந்த தொழில் துவங்குகிறார். கோழிகள் அப்படியே இருக்க, முட்டைகள் மட்டும் தினசரி களவு போகின்றது. நாளடைவில் அது ஒரு பாம்பின் செய்கை என கண்டு கொள்கிறார். தனக்கு ஒரு எதிரி வாய்த்ததையும், அதை வெற்றிகொள்ளப் போகும் வழிமுறைகளையும் சிந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் என்ன செய்தாலும் அந்த பாம்பு இவரை ஏமாற்றி முட்டையை அபகரித்து விடுகிறது. இவர் தந்திரமாக அந்த பாம்பை கொன்று விடுகிறார். அதன் பின்னரே எதிரியை தான் நேருக்கு நேர் சந்திருக்க வேண்டும், அது முட்டையை அபகரிக்காமல் செய்திருக்க வேண்டும். தந்திரமாகக் கொன்றது தன் தவறு என உணருகிறார். இதுபோலத்தான் சில சமயங்களில் நம் வெற்றியை மட்டுமே உத்தேசித்து நாம் செய்யும் பல காரியங்களும் பின்னர் நமக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். 

நாமறிந்த விஷயங்களையே நமக்குத் தெரியான புதிய பரிமாணத்தில் நமக்கு எடுத்துச் சொல்கின்றன கதைகள். இதே போல பல சிறந்த கதைகளை உள்ளடக்கி ஒரு நல்ல வாசித்தனுபவத்தை தரவல்ல ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு இப்புத்தகம்.

அ. முத்துலிங்கம் | சிறுகதைத் தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 173 | விலை ரூ.125

இணையத்தில் வாங்க: கிழக்கு

3 Sept 2012

அங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்

பெயர்                 :அங்கே இப்ப என்ன  நேரம்
ஆசிரியர்           : அ. முத்துலிங்கம்
உள்ளடக்கம்   : கட்டுரைகள்
முகவரி            :67, peters road, Royapettai.
                              Chennai-14.
Phone                  : +91-9884196552
E-mail                 :tamizhininool@yahoo.co.in



இப்ப வரைக்கும் , நிறைய தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து எழுதின புத்தகம் படிச்சு இருந்தாலும், இலங்கை தமிழ் எழுத்தாளர் எழுதின புத்தகம் ஒண்ணுகூட படிச்சது இல்லை. கொஞ்சம் தயக்கத்தோடுதான் அ. முத்துலிங்கம் எழுதின  "அங்கே இப்ப என்ன நேரம்" புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன், சில இடங்களில், நான் படித்திராத தமிழ் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருந்தாலும், படிச்சு முடிச்ச உடனே மனதில் ஆழமா தங்கிவிட்டார்.

இந்த புத்தகத்தில் கனடா வாழ்க்கை, சந்திப்பு, ரசனை, பயணம், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக் கதை, சிந்திப்பதற்கு என்ற ஒன்பது தலைப்புகளில் 48 கட்டுரைகள், ஒவ்வொரு தலைப்பிலும் 5 முதல் 8 கட்டுரைகள்.
 
 "கனடா வாழ்க்கை" என்ற தலைப்பில் கனடாவில் கடன் அட்டை பெறுவதில் இருந்து, வீடு வாங்குவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது உள்ள சிரமம்களை சொல்கிறார். உதாரணத்திற்கு,

 " நான் கார் ஓட்டுவதற்கு பத்து விரல்களையும் பாவிக்கிறேன். கனடாவில் ஒன்பது விரல்களில் தான் கார் ஓட்ட வேண்டும். அப்படித்தான் பலர் செய்கிறார்கள் . வலது கையின் நடுவிரலை எதிரே வருபவர்களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும் , குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்கு தனியே வைத்திருக்க வேண்டும். என் குரு அதையும் படிப்பிக்கவில்லை".
 "கனடாவில் சூப்பர் மார்க்கெட்"என்ற கட்டுரையில் அங்கு  இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தினமும் சுற்றுவது,  கண்ணில் படும் பொருட்களை வாங்குவது, அங்கு கிடைக்கும் இலவச சாம்பிள்களை ருசி பார்ப்பது என்றெல்லாம் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறார், ஆனால் மனைவி  வாங்கிவர சொன்ன பொருட்களை மட்டும் மறந்துவிடுகிறார்.  

"சந்திப்பு" தலைப்பில் சுந்தர ராமசாமியை கலிபோர்னியாயில் சந்தித்ததும், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் என்ற எழுத்தாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் தமிழ் துறை பேராசிரியர் தொ .பரமசிவன், கனடாவில் புகழ் பெற்ற நாடக நடிகர், நெறியாளர், "Dean gilmour" பற்றி எழுதுகிறார்.

 நடிகை பத்மினி கனடாவில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினரராக வருகிறார், அ . முத்துலிங்கம் வீட்டில் தங்குகிறார். நிறைய பேர் பத்மினியிடம் நீங்கள் ஏன் சிவாஜி கணேசனை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என கேட்கும்போது அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால் நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, யாரும் அதை பற்றி கேட்காத போது, "நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி" என்று அதன் காரணம் சொல்லும் போது , ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்படுகிறது. 

Related Posts Plugin for WordPress, Blogger...