ஜாரட் டைமண்டின் ‘துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் எக்கு’ நூலில் அவர் வரலாற்று எழுச்சி வீழ்ச்சி நிகழ்வுகளில், மார்க்சிய பொருள்முதல்வாத முரண் இயக்கம் எனும் கோட்பாட்டுக்கு வெளியே இருக்கும் வேறு பல காரணிகள் குறித்து தனது சிந்தனையை முன்னெடுக்கிறார். உதாரணமாக முதல் உலகப்போருக்கு முன்னான காலக்கட்டத்தில், ராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையான குதிரைகள் மீதான ஆளுமை கொண்டோரின் எழுச்சி தருணத்தை ஜாரெட் முன்னிலைப்படுத்துகிறார். கி மு 1674இல் எகிப்த்தில் ஹிக்ஸோ எனும் குழு, பாரோக்களுக்கு சொந்தமான குதிரைகளின் பரிபாலகர்களாக இருக்கிறார்கள். குதிரை மீதான தேர்ச்சி அக்குழுவுக்கு கைவந்தவுடன் ஒரு சிறிய படையெடுப்பு மூலம், அரசை வென்று அவ்வினக்குழு சில காலம் பாரோக்களாக ஆட்சி புரிகிறார்கள்.
ஜாரெட்டின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முறை தனது உரையாடலில் ஜெயமோகன், பாலை நில மக்கள், இந்தியாவை வென்று அடக்க அடிப்படைக் காரணிகளாக அம் மக்கள், தங்கள் அன்றாட உயிர் பிழைத்தலுக்கு, பாலைநில சூழலுடன் புரிந்த சமரில் அடைந்த தகவின் பலனாய்க் கிடைத்த மூர்க்கம், மற்றும் சோர்வே அற்ற உறுதி குலையாத அரேபியக் குதிரைகள் மீது, அதன் திறன்கள் மீது, அவர்கள் அடைந்திருந்த தேர்ச்சியை முன்வைத்தார். தொடர்ந்து மேய்ச்சல் சமூகமாக இருந்து, முகமதிய அரசர்களின் குதிரைகளுக்கு பரிபாலகர்களாக மாறி, அதன் பலனாக கைவரப்பெற்ற குதிரைகள் மீதான ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்து வந்த நாயக்க மன்னர்களின், அடித்தளத்தை இதே சிந்தனை வரிசை கொண்டு விளக்கினார். இந்தப் பாலைநில ஆற்றலுக்கு, நிகராக எழுந்துவந்த சத்ரபதி சிவாஜி, மற்றும் நாயக்க வம்சம் இரண்டின் ஆற்றலுக்கான அடித்தளமும் இதேதான் என்று தொடர்ந்தார்.
நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை,ஒரு புதிய சிந்தனைத் தளத்தில் நிறுத்தி, அதன் வெளிச்சத்தில் விஷயங்கள் புதிதாக துலங்குகையில் அளிக்கும் உவகையில் அன்றெல்லாம் திளைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் கண்டேன். செர்ஜி பாத்ரோ இயக்கி, மங்கோலிய மொழியில் வெளியான, செங்கிஸ்கான் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மங்கோல்’ எனும் படம் அது. அதன் தருணங்களும், கானின் எழுச்சியும், இந்த சிந்தனைத் தொடரில் பொருந்தி, மேலும் பல சிந்தனை பாதைகளுக்கு என்னை அழைத்துச் சென்றன.
பின்னர் சமீபத்தில் ஜாரெட்டின் அந்த நூல் தமிழில் வாசிக்கக் கிடைத்தது. [வெளியீடு பாரதி புத்தகாலயம்] ஜாரெட் அவரது நூலின் பக்கங்களில், வெவ்வேறு தருணங்களில் சொல்லியவற்றை, ஒரு வரிசையில் வகுத்துக் கொண்டேன்.
முதலில் வேட்டைச்சமூகம். இங்கே வலியது எஞ்சும் எனும் வன நீதிதான் அடிப்படை. அடுத்து வேட்டையுடன் இணைந்த மேய்ச்சல் சமூகம். இங்கே இயற்கையுடன் ஒரு உடன்படிக்கை நிகழ்கிறது. தேவைக்கு மட்டுமே இயற்கை நுகர்வு, ,பேராசைக்கு அல்ல அதுதான் இங்கு அடிப்படை. அடுத்து வேளாண் சமூகம். வேட்டை சமூகம் கொண்ட ஸ்தரமின்மை இங்கே இல்லை. தங்கி வாழும் தன்மையால் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. உணவு சேமிக்கப்படுகிறது. சமூக நிர்வாகமும், சேமிப்பு பாதுகாக்கப்பட ராணுவமும் தேவையாக, அதை உருவாக்க உபரியும், உபரியின் வழி மையமான அரசாங்கமும் உருவாகின்றன. படிநிலையில் இந்த வேளாண் மைய அமைப்பைக் காக்க, ஒரு மைய அரசு. அது முதலில் ஒடுக்குவது, அல்லது அழிப்பது வேட்டைச் சமூகமாக இருக்கிறது. இன்று மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா கிமு 7000 அளவிலேயே விவசாயம், மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் அடித்தளம் அமைத்து விட்டது என்பதை இதனுடன் இணைத்து சிந்திக்க, சுவாரஸ்யம் கூடுகிறது.
இந்த அடிப்படை சிந்தனைகளின் இலக்கிய சாட்சியமாக, மைய அரசால் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் ஒன்றின் இறுதி நாட்களை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமீது மனிதன் செலுத்தும் வன்முறையால், எதிர்வரும் சுய அழிவு, இவற்றை சரடாகக் கொண்டு, ஒரு இயற்கை தரிசனத்தை முன்வைத்த அற்புதமான புனைவு ஒன்று வாசிக்கக் கிடைத்தது.
ஜியாங் ரோங் எழுதிய, [ஆங்கிலம் வழி தமிழில்] சி.மோகன் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில், ‘’ஓநாய் குலச்சின்னம்’’ எனும் நாவல் அது.