குறிப்பு: சாலிம் அலி என்று இந்த
புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். இந்தியப் பறவைகள் புத்தகத்தில் சலீம் அலி என்று
இருக்கிறது. சாலீம் அலி என்று கூட எழுதுகிறார்கள். எது சரி என்று தெரியவில்லை. அதனால்
இந்த புத்தகத்தில் இருப்பது போல் சாலிம் அலி என்றே நானும் எழுதுகிறேன். சரியான உச்சரிப்பு
என்ன என்பது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
A.J.Cronin
A.K.Ramanujan
Amartya Sen
Andrea Maria Schenkel
Anton Chekhov
Arthur Hailey
Bill Bryson
Deborah Eisenberg
Elizabeth Kostova
Gay Neck
Geoff Dyer
George Orwell
Harper Lee
Henning Mankell
Ian McEwan
Jared Diamond
Jilly Cooper
Jonathan Livingstone Seagull
Joseph Heller
Kenneth Anderson
Kiran Desai
Maugham
Michael McCarthy
O.Henry
Orhan Pamuk
P.G.Wodehouse
PB.ஸ்ரீனிவாஸ்
R.K.Narayan
Richard Bach
Ronald Wilks
Stephen King
Swami Tejomayananda
Upamanyu Chatterjee
William Sydney porter
dhan gopal mukerji
mark tully
okakura kakuzo
saggi
steven weinberg
vikram seth
ஃபெயின்மன்
அ. முத்துலிங்கம்
அ.கா.பெருமாள்
அகிலன்
அசோகமித்திரன்
அனார்
அறிஞர் அண்ணா
அறுசுவை அரசு நடராஜன்
அழகியசிங்கர்
ஆ. சிதம்பரகுற்றாலம்
ஆதவன்
ஆர்.கே.நாராயண்
ஆர்.ஷண்முகசுந்தரம்
ஆஸ்கார் ஒயில்டு
இடாலோ கால்வினோ
இந்திரா பார்த்தசாரதி
இந்துமதி
இரா. நாறும்பூநாதன்
இரா.நடராசன்
இரா.முருகன்
இரா.முருகவேள்
இலக்கிய வீதி இனியவன்
இலவச கொத்தனார்
உமா சம்பத்
என்.சொக்கன்
என்.ராமதுரை
எம் கோபாலகிருஷ்ணன்
எம். வி. வெங்கட்ராம்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.சந்திரமௌலி
ஏ.கே.ராமானுஜன்
ஏ.கோபண்ணா
ஒல்கா பெரோவ்ஸ்கயா
க.நா.சு
கண்மணி குணசேகரன
கரிச்சான் குஞ்சு
கலாப்ரியா
காப்கா
காலபைரவன்
கி. ராஜநாராயணன்
குமரி எஸ்.நீலகண்டன்
குல்தீப் நய்யார்
கே நெக்
கோபிநாத்
கோபுலு
சந்திரசேகர சர்மா
சமஸ்
சல்மான் ரஷ்டி
சா. கந்தசாமி
சா.பாலுசாமி
சாருநிவேதிதா
சாலீம் அலி
சி.சரவணகார்த்திகேயன்
சி.சு.செல்லப்பா
சிபி.கே.சாலமன்
சு. வேணுகோபால்
சுகுமாரன்
சுஜாதா
சுந்தர ராமசாமி
சுனில் ஜோகி
சுப்புடு
சுவாமி விவேகானந்தர்
செல்லம்மா பாரதி
செள.ராஜன்
சே. இரகுராமன்
சோம.வள்ளியப்பன்
ஜனனி ரமேஷ்
ஜான் பான்வில்
ஜி.நாகராஜன்
ஜிம் கார்பெட்
ஜெயகாந்தன்
ஜெயமோகன்
ஜே. ஹெச். வில்லியம்ஸ்
ஜோதிநரசிம்மன்
டாக்டர். சு.முத்து செல்லக்குமார்
டாக்டர். பி.எம்.ஹெக்டே
டாக்டர்.எல்.மகாதேவன்
தமிழ் மகன்
தரம்பால்
தி. ஜானகிராமன்
தி.ஜானகிராமன்
தியடோர் பாஸ்கர்
து.கணேசன்
ந.பிச்சமூர்த்தி
நகுலன்
நடிகர் சிவகுமார்
நமீதா தேவிதயாள்
நா.முத்துக்குமார்
நாகம்மாள்
நாகூர் ரூமி
நாஞ்சில் நாடன்
ப. சிங்காரம்
பல்லவி அய்யர்
பழ.அதியமான்
பழ.கருப்பையா
பவன் வர்மா
பவா செல்லதுரை
பஷீர்
பா.ராகவன்
பாம்பே ஜெயஸ்ரீ
பாரதியார்
பாலகுமாரன்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
பாலு மகேந்திரா
பாவண்ணன்
பி.எச்.டேனியல்
பி.எம்.சுந்தரம்
பி.ஏ.கிருஷ்ணன்
பி.வி.ராமஸ்வாமி
பிரமிள்
பெஞ்சமின் ப்ளாக்
பெருமாள் முருகன்
பொ.கருணாகரமூர்த்தி
மகாகவி பாரதியார்
மதன்
மனுஷ்யபுத்திரன்
மருதன்
மலர்மன்னன்
மா.கிருஷ்ணன்
மார்க்வெஸ்
மாஸ்தி
மில்லி போலக்
முகில்
முஹமது யூனுஸ்
யதுகிரி அம்மாள்
யுவன் சந்திரசேகர்
ரகோத்தமன்
ரமணி சந்திரன்
ரா.கி.ரங்கராஜன்
ராஜாஜி
லலிதாராம்
லா.ச.ரா
லிவிங்ஸ்மைல் வித்யா
லூசியன் ஸ்ட்ரைக்
லெமூர்
வ.ரா
வண்ணதாசன்
வா.மு கோமு
வாலி
விட்டல் ராவ்
வின்சென்ட் ஷீன்
விளதீமிர் பகமோலவ்
வீயெஸ்வி
வுடி ஆலன்
வெரியர் எல்வின்
வேதவல்லி
வைக்கம் முகமது பஷீர்
வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்
வைரமுத்து
ஷோபா சக்தி
ஹென்னிங் மான்கெல்
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts
16 Jan 2013
26 Aug 2012
கல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்
Posted by
Natarajan Venkatasubramanian
கடந்த மூன்றாண்டுகளாக இரண்டு மாதத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், வீட்டிலிருக்கும் மற்றவர்கள் அவற்றைத் தொடுவது என்பது நான் எங்காவது வைத்துவிட்டுப் போகும்போது, திட்டிக்கொண்டே அவற்றை பத்திரப்படுத்துவது என்ற அளவில்தான். அதிர்ஷ்டவசமான விதிவிலக்குகளும் உண்டு; சில புத்தகங்களை வீட்டில் அனைவரும் படித்துவிடுவார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படித்தான் படித்தார்கள். ஒரு புத்தகத்தை வீட்டில் எல்லோரும் படிக்கும்போது நமக்கு ஒரு சந்தோஷம். திட்டு வாங்குவது வேறு குறையும்.
கல்யாண சமையல் சாதம் ஒரு முழு சுயசரிதை இல்லை. நடராஜன் தன்னுடைய வாழ்வானுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். ஏழு வயதில் தந்தையுடன் வேலைக்குச் சென்றது முதல், தான் மேலேறி வந்த அனுபவங்களை ஒரு தொண்ணூறு வயது தாத்தா சொல்லக் கேட்பது ஒரு டானிக் மாதிரியிருக்கிறது.
என்னுடைய ஏழுவயதில் நான் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டிருந்ததாக நினைவு. நடராஜன், அந்த வயதில் மாட்டைக் குளிப்பாட்டுவது, மற்ற வீடுகளுக்குச் சென்று கற்சட்டியைத் தேய்த்துக் கொடுப்பது, தந்தையுடன் சமையல் வேலைக்குச் செல்வது என்றிருந்திருக்கிறார். (1950க்கு முந்தைய வாழ்க்கைகளைப் படிக்கையில், ஒரே வீட்டில் நிறைய குழந்தைகள், குறைவான வருமானம் போன்றவை ரொம்பச் சாதாரணம் என்று தெரிகிறது. மேலும் குழந்தைகள் இறப்பு என்பதும் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறது. இன்றைக்கு நிலைமை எவ்வளவோ மேல்).
கல்யாண வீடுகளில் சமையற்காரர்கள் நடத்தப்படும் விதமே தன்னை வைராக்கியத்தோடு உயரத்தை அடைய உந்துசக்தியாக இருந்ததாகச் சொல்கிறார் அவர்:
“விகடனில் என்னைத் தொடர் எழுதச்சொல்லிக் கேட்டபோது, எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வை இதுவரையில் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது சொல்கிறேன். ரொம்ப வெளிப்படையாகச் சொல்வதானால் குழப்பம்தான் உண்டானது. இடுப்பில் ஈரத்துண்டுடன், புகைமண்டலத்தின் நடுவே கரிபிடித்த பாத்திரங்களுடன் போராடிக் கொண்டிருக்கிற சாதாரண ஒரு சமையல்காரனுக்குப் பல லட்சக்கணக்கான வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பெரிசாக என்ன இருக்கிறது என்பது தான் அந்தக் குழப்ப உணர்வு.
"பிறகு கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்தபோது, கண்ணெதிரில் ஆள் உயர பாத்திரத்தில் சோறு பொங்கிக் கொண்டிருந்தாலும், சொந்தக் குடும்பத்துக்கு அரைவயிறு சோறுபோட முடியாமல் தவித்த எனது முதல் பாதி வாழ்க்கை பற்றிப் பகிர்ந்துகொண்டால்தான் என்ன என்று தோன்றியது. கூடவே, ‘சமையல்காரந்தானே’ என்று பரவலாக இருக்கிற உதாசீனத்தைப் பற்றியும் வாசகர்களிடம் ஒரு பாட்டம் சொல்லி அழுதால், பொதுவான அந்த அலட்சிய மனோநிலை மாறக்கூடும் என்றும் தோன்றியது. எனக்கு மனசும் கொஞ்சம் லேசாகும் போல் இருந்தது”
என்று சொன்னாலும், புத்தகம் முழுக்க முழுக்க சென்டிமென்ட்டைப் போட்டு நிறைத்து விடவில்லை. புத்தகத்தில் பாதி கல்யாண கலாட்டாக்கள்தான். மேலும், தன்னைத் தூக்கிவிட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவே இதை எடுத்துக்கொண்டிருக்கிறார் நடராஜன். கீதா கஃபே ஜெயராமன், திருப்பதியில் உதவி செய்த ரெட்டியார், தாசபிரகாஷ் ஹோட்டல்காரர்கள் என்று பலரும் தனக்கு உதவியதை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் கூடவே முப்பது பக்கங்களுக்கு அறுசுவை அரசு வழங்கும் சமையற்குறிப்புகளும் இருக்கின்றன.
கல்யாண சமையல் சாதம் | ‘அறுசுவை அரசு’ நடராஜன் | விகடன் பிரசுரம் |
128 பக்கங்கள் | விலை ரூ.60 | இங்கே வாங்கலாம்
7 Aug 2012
பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்
Posted by
Natarajan Venkatasubramanian
“ஐயா எனக்கு ஏதாவது கொடுங்கள்”
என்று கேட்கும் பாம்பாட்டிக்கு, மேல் வேட்டியை அரையில் கட்டிக் கொண்டு அரை வேட்டியை
கொடுக்கும் மனிதரை என்னவென்று சொல்வீர்கள்?
இப்படிச் செய்கிறீர்களே என்று
கேட்டால், “எனக்கு நாலு பேர் கொடுப்பார்கள். அவனுக்கு யார் கொடுக்கிறார்கள்? நானே யோசிக்கவில்லை.
உனக்கென்ன யோசனை?” என்று கேட்பவரை என்னவென்று சொல்வீர்கள்.
யதுகிரி, பாரதியின் தோழராகிய ஸ்ரீநிவாஸாச்சாரியாரின்
மகள். ‘சுதேசி’களான பாரதி, ஸ்ரீநிவாஸாச்சாரியார்,
வ.வே.சு ஐயர், அரவிந்தர் போன்றவர்கள் அப்போது புதுவையில் வசித்திருக்கிறார்கள். யதுகிரி
அம்மாள், பாரதியின் மகள்களைவிடச் சற்றே பெரியவர் என்று தெரிகிறது. பாரதியின் சிஷ்யையாகவே
தன்னை அறிவித்துக் கொள்கிறார். பாரதி இறந்து பலவருடங்களுக்குப் பின் தன்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறார்.
புத்தகம் வெளிவந்தது 1954ம் வருடம். அப்போது யதுகிரி அம்மாளும் காலமாகிவிட்டிருக்கிறார்.


யதுகிரி அம்மாளின் பார்வையில்
பாரதியின் இயல்பான குணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த அம்மாளுக்கு பாரதியின் வாழ்க்கையை
சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்திருக்க வேண்டும். பாரதியை தன்னுடைய தகப்பன்
ஸதானத்தில் வைத்துப் பார்க்கும் யதுகிரி அம்மாள், அவருடைய நற்குணங்களையும் நேர்மையையும்
சொல்லும் அதே நேரத்தில், அவரிடம் தான் கண்ட குறைகளையும் சொல்கிறார்.
புகுந்தவீடு செல்லும் யதுகிரியிடம் பாரதி,
புகுந்தவீடு செல்லும் யதுகிரியிடம் பாரதி,
“நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போல் பிரகாசிக்க வேண்டும். இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். பழகியபின் வழக்கமாய் விடும். கேவலம், அடிமைத்தனத்திற்கு ஒத்துக்கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு; புத்தி உண்டு. ஸ்வதந்திரம் உண்டு. தலை நிமிர்ந்து நட, உன் இருபுறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார், நேர்ப் பார்வையில் பார், கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே. தந்தை சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நிமிர்ந்து பார். இவர்களைக் கடைக் கண்ணால் பார்க்காதே. நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு. தைரியமாகப் பேசு. இதில் கற்பு கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.”
“பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம்
பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின்படியேதான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா
தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே.” என்கிறார் யதுகிரி.
மாறுவேடம் போட்டுக் கொண்டு சொல்லாமல்
கொள்ளாமல் பதினைந்து நாட்கள் பாரதியார் எங்கோ போய் வந்திருக்கிறார். செல்லம்மா தன்னுடைய
பிறந்த வீட்டிற்கு போய்விட, தான் மறு விவாகம் செய்து கொள்ளப்போவதாய் சொல்லியிருக்கிறார்
பாரதி. பல நாட்கள் தொடர்ந்து மெளனவிரதம் அனுஷ்டித்திருக்கிறார். கஞ்சா பழக்கத்தினால்
மற்றவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகிச் சென்று பின் பிறந்தவீடு
வரும் யதுகிரி, பாரதியின் கண்களில் முன் போல் ஒளியில்லை என்கிறார்.
ஒரு ஆறேழு பாடல்கள் உருவான சூழ்நிலைகள்
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யதுகிரியின் தம்பி இறந்த போது பாடியது,
நல்லதோர் வீணை. யதுகிரியின் ருது ஸ்நான வைபவத்தின் போது எழுதியது “கண்ணன் திருவடி எண்ணுக
மனமே”. சில பாடல்களில், பாரதி நேரில் பாடியதற்கும் இப்போது அச்சாகியிருப்பதற்கும் உள்ள
வித்தியாசங்களையும் சொல்கிறார். பாரதியின் எந்த படைப்புகளிலும் வெளிவராத
“இந்த தெய்வம் நமக்கநுகூலம் இனிக்கவலைக் கிடமில்லை” என்ற பாடலும் இந்த புத்தகத்தில்
இருக்கிறது.
பாரதி நினைவுகள் | யதுகிரி அம்மாள்
| பாரதி புத்தகாலையம் | 112 பக்கங்கள் | விலை ரூ.50 | உடுமலை.காம்
1. இந்த புத்தகத்தைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதியது.
2. பாரதியார், அவர் குடும்பத்தார், நண்பர்கள் இருக்கும் புகைப்படங்கள்
1. இந்த புத்தகத்தைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதியது.
2. பாரதியார், அவர் குடும்பத்தார், நண்பர்கள் இருக்கும் புகைப்படங்கள்
Subscribe to:
Posts (Atom)


