புதிதாக வெளிவந்திருக்கும் கிழக்கு பதிப்பக வெளியீடு `பயங்கரவாதம்: நேற்று இன்று நாளை` புத்தகத்தின் முன்னுரையை இணையத்தில் முதல்முறையாக வெளியிடுவதில் ஆம்னிபஸ் பெருமை கொள்கிறது. உடனுக்குடன் அனுப்பிவைக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு மிக்க நன்றி.
பயங்கரவாதம்
: நேற்று இன்று நாளை
பி. ராமன்
தமிழில்
ஜே.கே. இராஜசேகரன்
கிழக்கு
பதிப்பகம்
424 பக்கம்,
விலை ரூ.290
முன்னுரை
இன்றைய
உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது.
கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண
அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட ரோத வெடி பொருட்கள்,
மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத்
தூண்டும் கரு களாக செல்போன்கள்,
மானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப்
பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.
இன்றைய
பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறு-பட்டிருக்கிறது.
நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்-திலிருந்து
பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இன்றைய
நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில்
நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக
அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்-களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி
அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத்
தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.
பயங்கரவாதிகளில்
பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்-களாகவோ தகவல் தொழில்நுட்ப
நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று
மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக
அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும்
தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக
இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும்
விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.
9/11 சம்பவம்
நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள்
ஏராளம். இது போன்ற இன்னொரு
சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத
நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை
நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு
நடவடிக்கைகள் தோல் யடையுமானால், பயங்கரவாத
சம்பவத்தின் ளைவுகளைத் திறம்படச் சமாளிக்கும் வகையில் நம்மை ஆயத்தப்படுத்திக்
கொள்வது அவசியம்.
2001 செப்டம்பர்
11-ம் தேதியிலிருந்து, அது போன்ற பெரும்
அழிவு ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அனைவரின்
கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அவையனைத்தும்
கடல்சார் பயங்கரவாதம், எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பேரழிவு தரும் ஆயுதங்கள்
கொண்ட பயங்கரவாதம், சக்தி வாய்ந்த தகவல்
தொடர்புக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் அபாயம் சார்ந்தவையாக உள்ளன.
1993 பிப்ரவரியில்
நியூயார்க் உலக வர்த்தக மையத்தைத்
தகர்க்க முயற்சி நடந்தது. அன்றிலிருந்து
உலகம் முழுவதுமாகப் பழைய, புதிய பயங்கரவாதம்
குறித்த வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இனம், கருத்தியல், மதம்
போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்த பழைய
பயங்கரவாதிகள், ஒரு ‘லட்சுமண ரேகையை’
ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டனர். இந்தக்
கோட்டைத் தாண்டி வர அவர்கள்
முயற்சி செய்ததில்லை. அவர்களுடைய செயல்பாடுகள், பொதுமக்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும்
என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.
1993-லிருந்து,
ஒரு புதிய வகை பயங்கரவாதிகளை
இந்த உலகம் எதிர்கொண்டு வருகிறது.
இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு ‘லட்சுமண ரேகை’ போல்
எந்த தக் கட்டுப்பாட்டுக் கோடும்
கிடையாது. பெருவாரியான மக்களுக்குக் காயம் ஏற்படுத்துவதிலும் சர்வ
நாசம் விளைவிக்கக் கூடிய
பயங்கரவாதத்திலும்தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மனிதர்களைக்
கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சீர்குலைக்கின்றனர்.
பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறுதல், அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக மத உரிமை, கடமை
போன்றவை பற்றிப் பேசுகின்றனர். தேவைப்பட்டால்,
மதத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாக்கும்
வகையில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களுடைய
மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல்,
அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை
குறித்து நாம் ழிப்பு உணர்வுடன் இருக்க
வேண்டியது மிக முக்கியமாகும். ழிப்பு உணர்வுடன்
இருப்பது என்றால் தயாராக இருப்பது
என்று பொருள். அவர்களைப் பற்றிய
விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது?
அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள்
முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது
எப்படி? முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல்
அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி? இவையே இன்று
நம் முன்னால் உள்ள மிகப் பெரிய
கேள்விகள்.
இன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில
முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம் ழிப்பு
உணர்வை ஏற்படுத்து-வதுமே இந்த நூலின்
பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய
நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான்
ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து
இங்கே தந்துள்ளேன். அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்-பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும்
இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு
அத்தியாயத்தையும் முழு ளக்கம் கொண்டதாக அமைக்கப்
பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில
விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும்
பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம்
இருக்காது. எனினும், இந்த நோக்கத்தை நிறைவேற்றும்
போது சில குறிப்புகள் திரும்பத்
திரும்ப இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.
வணக்கம்.
பி. ராமன்
சென்னை
No comments:
Post a Comment