ஆம்னிபஸ் பதிவுகள் குறித்து வரும் வாசகர் கடிதங்களை தளத்தில் இடுகையிடும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் ஒரு அவசர, அத்தியாவசிய நிலையை உத்தேசித்து இப்போது செய்யப்படுகிறது.
ஆம்னிபஸ் தளத்தில் ஒரு குறுகிய காலம், நண்பர் சரவணன் தொடர்ந்து சில பதிவுகளை எழுதினார்- முதல் பதிவைப் பார்க்கும்போதே, "இது தேர்ந்த கை" என்பது தெரிந்துவிட்டது அந்த ரகசியம் இன்றும் என்னோடு இருக்கிறது.
அவரது பதிவுகளில் ஒன்று, எம். பி. சுப்ரமணியன் எழுதிய "தேக்கடி ராஜா" நாவலின் அறிமுகக் கட்டுரை.
அதன் பின்னூட்டத்தில், "சார்! எனக்கு தேக்கடி ராஜாவின் பிரதி/ஒளிநகல் கிடைக்குமா?," என்று கே. ரமேஷ் பாபு கேட்டிருந்தார் .
"வருகைக்கு நன்றி திரு. ரமேஷ் பாபு. உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் ஜெராக்ஸ் பிரதி அனுப்பி வைக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி என் புரொஃபைல் பக்கத்தில் உள்ளது. நன்றி!", என்று பதிலிறுத்தார் சரவணன். அது அத்தோடு போயிற்று.
ஆனால் அண்மையில், திரு ஷண்முகதாஸ் அவர்கள் ஆம்னிபஸ் தளத்தில் உள்ள தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி ஒரு செய்தி அனுப்பினார்-
"தேக்கடி ராஜா - நான் பாலக்காட்டில் பத்தாவது படிக்கும்போது non-detailed text -ஆக இருந்த, என்னை மிக மிக பாதித்த புத்தகம். நல்ல புத்தகங்களுக்கே உள்ள சாபம் -ஒருவர் கடன் வாங்கி சென்றார்... ஆயிற்று 40 வருடங்கள். தேக்கடி ராஜா வரவில்லை. இத்தனை காலமாக தேடி இணையத்தில் பார்க்கும்போது... கெஞ்சி கேட்கிறேன் எப்படியாவது எனக்கு ஓர் பிரதி கிடைக்குமா? இதன் அடுத்த பகுதியோ, அல்லது இதை போல ஒரு கானககதையோ, சில வருடங்கள் கழித்து இவரே எழுதி ஓர் குறுநாவலாக ஒருவார இதழில் வந்த நினைவு. முதல் வெளியீட்டாளர்கள் கோவை- பழனியப்பா பிரதர்ஸ் என்று எண்ணுகிறேன்.
Regards,
shanmughadas"
இதன் பின் நண்பர் சண்முகதாஸ் மீண்டும் இவ்வாறு எழுதினார்-
"நான் நேற்று இணையத்தில் தேடியபோது மிக அண்மையில் அனேகமாக கடைசியாக - 1996 -ல்- சென்னையில் அமுதம் நிலையம் பதிப்பித்ததாக கண்டேன். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ( எண் 04428111790- 09940026305) பிறகு அழைப்பதாக சொல்லி என் கைபேசி எண்ணை பெற்றுக்கொண்டனர். ஆனால் அழைக்கவில்லை. நீங்கள் எனக்கு இப்புத்தகம் கிடைக்க உதவி செய்யுங்கள்
எனக்கு வயது 59 - நான் 1966 -ல் பாலக்காட்டில் 10-வது படிக்கும்போது non-detail புத்தகமாக படித்தது. மற்ற புத்தகங்களை விற்றபோது இதை மாத்திரம் நான் மிக பாதுகாப்பாக வைத்து இருந்தேன் . அதைத்தான் எனது தமிழாசிரியர் கொண்டுபோனவர் ....... போனதுதான். திரு கல்கி யின் பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தேனோ அத்தனை முறை இந்த சிறு புதினத்தையும் படித்திருப்பேன். திரு கோபுலு வின் உயிரூட்டும் கருப்பு வெள்ளை சித்திரங்கள் சத்தியமாக இப்போதும் கண்முன் நிற்கின்றன.. மறுபடியும் அதை பார்க்கும் படிக்கும் பேறு உங்களால் கிடைக்கும் என எண்ணுகிறேன்
உங்கள் அன்புக்கு நன்றி.
அன்பன்
சண்முகதாஸ்"
நண்பர் சரவணன் தேக்கடி ராஜா புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்து அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
குக்கர் விசிலடித்து அறிவிப்பதற்கு முற்பட்ட காலங்களில், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்," என்று சொல்வதுண்டு. தேக்கடி ராஜா புத்தகம் வாங்கிப் படிக்க வாசகர்கள காத்திருக்கின்றனர் என்பது உறுதி. இதை அச்சில் வைத்திருப்பது பதிப்பகங்களின் கடமை. யாராவது முன்வருவார்களா?
ஏற்கனவே நண்பர் ரமேஷ் பாபு, இப்போது நண்பர் சண்முகதாஸ்- எத்தனை பேருக்குதான் ஜெராக்ஸ் எடுத்து இலவசமாக அனுப்புவார் நண்பர் சரவணன், அவருக்குமே கட்டுபடியாகுமா? இதெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவன் நிலைக்கு அவரைக் கொண்டு சென்றுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.
நல்ல விடயம். இதுபோல பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட பல்வேறு சிறுவர் நாவல்களிலும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மீ ள் பதிப்புச் செய்யலாம்.
ReplyDeleteஅண்மையில் கூட எனது பதிவொன்றில் வீரமணியின் விடுமுறை என்ற சிறுவர் நாவல் பற்றி எழுதியிருந்தேன். துப்பறியும் சிறுவர்கள் என்று இன்னொரு நாவலும் நினைவுக்கு வருகின்றது.
நல்ல முயற்சி. வாழ்த்துகள்!
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம் அறம் இணையதளம்
ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
உதவிக்கு பயன்படுத்து லிங்க்
அருமை. எங்கள் வீட்டில் "தேக்கடி ராஜா " ஒரிஜினல் ஆனந்த விகடனில் வந்த தொடரை, அந்த கால வழக்கப்படி யாரோ புத்தகமாக த் தைத்து வைத்திருந்தார்கள். அது எங்கோ இருக்கிறது. கிடைத்தால் எடுத்து காட்டுகிறேன். மிக ப் பழைய புத்தகம். "கார்ட்டூன்" கேரக்டர்கள் கூட குடுமியும் பஞ்சகச்சமும் கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள்.
ReplyDeleteநான் 2006 பள்ளியில் படித்த போது என்னிடம் தேக்கடி ராஜா புத்தகம் இருந்தது , தினமும் படிப்பேன் .. இப்போது இல்லை , இருந்தால் சொல்லுங்கள் வாங்கி கொள்கிறேன்.
ReplyDeleteநண்பர் சரவணனுடன் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தேன். அவரது mail ID etc என் மொபைல் தண்ணீரில் மூழ்கியதில் தொலைத்துவிட்டேன்/அழிந்துவிட்டது. அவரேயோ யாராவதோ கொடுத்து உதவ இயலுமானால் நன்றியுடையவனாவேன்.
ReplyDelete(3/12/20 - 5.38)தகவல் அனுப்பியவர் பெயர்: வெங்கட்
Deleteஎனக்கும் ஒரு பதிவு வேண்டும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும் இப்புத்தகத்தை கடந்த 30 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. தயவு செய்து உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Delete