A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

4 May 2014

தற்கொலை குறுங்கதைகள் - அராத்து


18ம் நூற்றாண்டு தொழிற்புரட்சிக்குப் பின்னான தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்கத்தக்கது. நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் பத்தாண்டுகளில் நிகழத் தொடங்கின. 20ம் நூற்றாண்டின் மத்தியில் பிறப்பெடுத்த கணினித் தொழில்நுட்பம் இந்த வேகத்தை மேலும் பன்மடங்காக்கியது. இந்த 21ம் நூற்றாண்டில் மனிதன் தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிமையாகிவிட்டான் என்றால் அது மிகையாகாது.

தொழில்நுட்ப புரட்சி பிரம்மாண்டமான நகரங்களை உருவாக்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்களை நகரங்களில் கொண்டு குவித்துள்ளது. பாரம்பரியத் தொழில்கள் அழிந்து ஆண்களும் பெண்களும் இன்று புதிய புதிய தொழில்களிலும் சூழ்நிலைகளிலும் பணிபுரியும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே பாரம்பரிய ஆண் பெண் உறவுகள்  வெகு வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. பொருள் தேடுவதில் நாம் அடைந்துள்ள மாற்றம் நம் கலாச்சாரம் என்று இதுவரை நாம் பொத்தி வைத்திருந்ததில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது.

பெருநகரங்களில் மனிதன் ஒரு சிதறுண்ட வாழ்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேலும் அதிக இளம் பெண்களை  மிக அந்நியமான சூழ்நிலையில் அந்நிய ஆண்களின் மத்தியில் பணிபுரியும், வாழும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தனம் அதிகம் இருப்பினும் ஒரு சிறு உறவு வட்டம் அல்லது கிராமம்  அளித்து வந்த பாதுகாப்பு முற்றிலும் தகர்ந்து பெண் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் அவசியத்தை உருவாக்கியுள்ளது.

பொருளாதாரமே அடிக்கட்டுமானம், கலாச்சாரம் மேல்கட்டுமானம்தான் என்ற மார்க்சிய கருத்துவாக்கத்தை இன்று நிகழும் மாற்றங்கள் நினைவு கொள்ள வைக்கின்றன. சிதறுண்ட வாழ்க்கை, அந்நியத்தன்மை, புதிதாகக் கிடைத்துள்ள பொதுவெளியில் தனியாக நடமாடும் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை ஒரு புது மாதிரியான யுவர்களையும் யுவதிகளையும் இன்று அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு  மாநிலத் தலைநகரங்களிலும் உருவாக்கியுள்ளது. இவர்கள் இன்றைக்கு எழுதப்படும் தமிழின் தீவிர இலக்கியத்தில் சித்தரிக்கப்படுகிறார்களா? 

மானுடம் என்றென்றும் எதிர்கொள்ளக்கூடிய கேள்விகளுக்கே நீண்டகால இலக்கிய மதிப்பு உண்டு எனினும் இன்று நம் கண் முன்னே நிகழும் மாற்றங்களும் இலக்கியத்தில் பதிவாவது மிக முக்கியமானது  என்றே நான் நினைக்கிறேன். அந்த வகையில்தான்  அண்மையில் படித்த அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் என்னைக் கவர்ந்தன.



இதைச் சொன்னதுமே என்  இலக்கிய நண்பர்கள் பலர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவர்களுக்கெல்லாம் அராத்துவின் பதிவுகள் பரிச்சயம் என்பது முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம். நான் அராத்துவின் பதிவுகள் எதையும் இதற்கு முன்னால் படித்ததில்லை. அதனால் எந்தவிதமான முன்முடிவுகளுமின்றி இந்த நூலைப் படிக்க முடிந்தது என்றே நினைக்கிறேன்.

இதில் என்னை முதலில் கவர்ந்தது அவரது நடை. அதில் உள்ள எள்ளல் கலந்த நகைச்சுவை. மற்றும் வெகு நிச்சயமாக நான் மேலே சொன்ன இந்த நவீன யுகத்தின் இளைஞர்களும் யுவதிகளும். இந்த நவயுக வாலிபர்களின், யுவதிகளின் சிதறுண்ட வாழ்வைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் குறுங்கதை வடிவம் பொருத்தமானதாகவே உள்ளது. இதை யுவன் சந்திரசேகரின் மணற்கேணி போல தனித்தனி கதைகளாகவும் வாசிக்கலாம், ஒரே நாவலாகவும் ஒரு இணைப்புடன்  வாசிக்கலாம்.

எல்லா பெண் பாத்திரங்களின் பெயரும் சாந்திதான். சாந்தியின் காதலர்களின் பெயர்களும் கணவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த ஆண்பெயர்களும் அவர்களின் குணத்தைச் சொல்லும் காரணப்பெயர்கள்தான், ஊசி என்பது போல.

பல குறுங்கதைகள் அவற்றின் கூர்மைக்காக ரசிக்கலாம். ஆனால் இந்த வடிவத்தின் ஒரு குறைபாடு சுருக்கென்று தைக்கும் பல குறுங்கதைகள்கூட அடுத்தடுத்த கதைகளாகப் படிக்கும்போது நினைவிலிருந்து வழுக்கி வெளியே போய்விடுவதுதான். அதை மீறி சில கதைகள் மனதில் நிற்கத்தான் செய்கின்றன.

அதில் இரண்டு கதைகள், லாஸ்ட் பஸ் என்ற கதையும் இன்னொன்றும். லாஸ்ட் பஸ், தற்கால நவீன வாழ்வின் தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிப்போன ஆம்னிபஸ்சையும் அதன் ஒட்டுனரையும் பற்றியது. கதை முடிவில் சுரீர் எனத் தைக்கும் விளைவை கொடுக்கும் கதை. இன்னொன்று, வேலைக்கு சென்று வீடு திரும்புவதற்குள் பல்வேறு ஆண்களின் பல்வேறு வகை தொந்தரவுகளை சந்தித்து அவற்றைக் குறித்து கணவனிடம் புகார் கூறும் பெண்ணின் கதை. அதை அவள் கணவன் எதிர்கொள்ளும் விதமும் அதற்கு அப்பெண்ணின் பதிலும் சிரிக்க வைத்தாலும் ஆழமான வேதனையையும் கொடுக்கும் ஒன்று.

இந்தக் கதைகளில் பளிச்சென்று கண்ணைக் குத்தும் ஒரு அம்சம் பட்டவர்த்தனமான மொழிப் பிரயோகம். தமிழ் இலக்கியத்தில்  விதிவிலக்காகவே பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகள் இந்தப் படைப்புகளில் வெகு சரளமாகவும் அதிக அளவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார்த்தைப் பிரயோகங்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் விற்பனைச் சாதனை நாவல்கள் படிக்கும் நம் வாசகர்கள் ஆங்கிலத்தில் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை சலனமில்லாமல் தாண்டிச் செல்லும்போது  இவை தமிழில்  வந்தால் மட்டும் முகம் சுளிப்பது ஒரு போலித்தனம்தான். இது குறித்து வெகு ஆண்டுகளுக்கு முன்பே ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதியுள்ளது நினைவுக்கு வந்தது.

இந்தக் கதைகளை படித்து முடித்தபின் மேற்சொன்ன அந்த taboo உடைவதற்கான வேளை வந்துவிட்டது போலதான் தெரிகிறது. நிச்சயமாக இந்த மாதிரியான வார்த்தைகள் ஒரு அதிர்ச்சி மதிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள் உண்டு. ஆனால் உண்மையிலேயே  ஒரு சில அலுப்பூட்டும், அருவருக்க வைக்கும் இடங்களில் இந்த வார்த்தைகள் மிகப் பொருத்தமானவையாகவே உள்ளன என்றும் சொல்ல வேண்டும். பழைய தமிழ் எழுத்துக்களில் பாராட்டும் விதமாக தஞ்சையின் வசவு வார்த்தைகள் இடம் பெறுவது போல.
இதை டிஜிமாடர்னிசம் என்ற வகை எழுத்து என்று சாரு தன்  முன்னுரையில் (சாருவிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை)  எழுதுகிறார். அப்படியல்ல அது வேறு, என்ற ஒரு சில கருத்துக்களையும் நான் கேள்வியுற்றேன். வகைப்பாடுகளைப் பற்றி கவலைப்படாமலேயே இதை நல்ல எழுத்து என்ற  வகையிலேயே நான்  சேர்ப்பேன். நிச்சயமாக இது ஒரு பொதுப்பாணியாக நிலை பெற முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இந்த பாணியிலான எதிர்கால தமிழ்   எழுத்துக்களுக்கு இந்த நூல் ஒரு முன்னோடியாக அமையும் என்று சொல்லலாம். 

தற்கொலை  குறுங்கதைகள், அராத்து,
ரூ. 180, உயிர்மை,

இணையத்தில் வாங்க ; டிஸ்கவரி, என்ஹெச்எம், உடுமலை

புகைப்பட உதவி - கார்த்திக் நீலகிரி



11 comments:

  1. இந்த தளத்தைப்போல மோசமான புத்தக விமர்சனங்களை எங்கேயுமே பார்க்கமுடியாது. வழக்கமாக பாலாஜி என்பவர்தான் கொடுமை செய்வார். இது அதைவிட ஒருபடி மேல்..இவர்களெல்லாம் வாசித்துவிட்டுத்தான் எழுதுகிறார்களா வாசித்தால் ஏதாவது புரிகிறதா என்றெல்லாம் சந்தேகம் வருகிறது. அதிலும் இந்த சுரேஷ் என்பவர் எழுதிய பல விமர்சனங்களை போய் பார்த்தேன். நல்ல புத்தகங்களையெல்லாம் எழுதியிருக்கிறார். இந்த கதைகள் நான் வாசித்தவை. அங்கே இங்கே கேட்ட சில்லறை ஜோக்குகளையும் அரட்டையில் கிடைத்த வம்புகளையும் எல்லாம் சேத்து ஒரு சமையல் மாதிரி செய்திருக்கிறார். கொடுமையான புத்தகம். இந்த சுரேஷ் வகையறாக்கள் இலக்கியத்திலே தேடுவது அராத்து மாதிரியானவர்கள் தரக்கூடிய ‘வாழ்வனுபவம்’தான் என்றால் அவர்கள் ஏன் இலக்கியத்தை எல்லாம் வாசிக்கிறார்கள்? கொடுமை. இனி இந்தப்பக்கமே வரக்கூடாதுடா சாமி ஜான் செல்வா

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தங்கள் வெளிப்படையான கருத்துகளை மதிக்கிறோம்.

      தரமான விமரிசனம் எழுத விரும்புகிறோம், வரவேற்கிறோம். தாங்கள் எழுதியளித்தால் அது எங்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும்.

      மீண்டும் நன்றிகள்

      Delete
  2. மன்னிக்கவேண்டும். கொஞ்சம் கடுமையாகவே எழுதிவிட்டேன். ஆனால் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். யோசியுங்கல். நான் இந்த இணையதளங்களை வாசிக்க ஆரம்பித்து 9 வருஷம் ஆகிறது. திண்ணை என்று ஒரு இணையதளம் இருந்தது. அதை இப்போது எவருமே சீந்துவது கிடையாது. ஏன்? அதில் editorial policy கிடையாது. யார் என்ன எழுதினாலும் போடுவோம் என்பதுதான் அதனுடைய கொள்கை. அதை அப்படியே அறிவித்து நடத்தினார்கள்


    அப்போதே நான் அவர்களுக்கு எழுதினேன். இணையத்திலே selection தான் பெரிய பிரச்சினை. அதாவது availability யை சமாளிப்பதுதான் பிரச்சினையே. ஆகவே எல்லாவற்றையும் அள்ளி கொட்டக்கூடிய ஒரு இடம் இணையத்தைப்பொறுத்தவரை பிரயோசனமே இல்லாத ஒன்று. எங்கே எனக்கான விஷயங்களை select பண்ணி வைத்திருக்கிறார்களோ அதுதான் எனக்குத்தேவை. அப்படி selection நடக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு policy தேவை. அந்த policy யை நம்பித்தான் நான் ஒரு வாசகனாக அதைப்போய் வாசிக்கிறேன்.


    இது ஒரு தனிநபரின் இணையதளம் என்றால் அங்கே அவரது taste and sensibility தெளிவாக இருக்கிறது. நாலு கட்டுரை வாசித்தாலே அது தெரிந்துவிடும். அதை நான் நம்பமுடியும் என்றால் அங்கே போய் படிப்பேன். அங்கே எனக்கு நல்ல பிரயோஜனமுண்டாகும். இப்போது ஆர்வி என்பவர் ஒரு இணையதளம் நடத்துகிறார். சிலிகான் ஷெல்ப் என்று பெயர். அவர் ஒரு சுமாரான வாசகர். ஜனரஞ்சகமான கதைகளில் கொஞ்சம் தரமாக வாசிப்பார். இது ஒரு grade. அது எனக்குத்தெரியும். என்ன சொல்கிறார் என்று நான் போய் பார்ப்பேன்.

    ஆனால் இந்தமாதிரி ஒரு பொதுவான தளம் என்றால் அதற்கு ஒரு editorial policy இருக்கவேண்டும். ஒருவர் அல்லது சிலபேர் சேர்ந்து அதை முடிவுசெய்து காப்பாற்றவேண்டும். இங்கே பொதுவாக இந்தமாதிரியான value system த்தினை முன்வைக்கிறார்கள் என்று எனக்குத்தெரியவேண்டும். சும்மா எல்லாரும் அவரவருக்குப்பிடித்ததை எழுதுவார்கள் என்றால் அது ஒரு junk box. அதற்கு ஒரு மதிப்பு கிடையாது. அதை நான் நம்பி வாசிக்கமுடியாது

    இங்கே நான் வாசித்தவரை நல்ல மதிப்புரைகள் வந்துள்ளன. அவற்றை எழுதக்கூடிய தனிநபர்களை எனக்கு தெரியாது. ஆகவே அதை இந்த தளத்தின் கருத்தாக நினைப்பேன். அந்த வரிசையிலே பாலாஜி, வெ.சுரேஷ் மாதிரியான tasteless , senseless விமர்சகர்கள் எழுதினார்கள் என்றால் எனக்கு ஒரு scale தட்டுபடவில்லை. அதாவது அராத்து எழுதக்கூடியது இலக்கியம் டோஸ்டோயெவ்ஸ்கிக்கு எழுதத்தெரியாது என்று ஒரு தளம் at a time சொல்வது மாதிரி இருக்கிறது. இதுதான் பிரச்சினை

    இவர்கள் எல்லாம் எழுதக்கூடாதா , இப்படி எல்லாம் பார்க்கக்கூடாதா என்று கேட்கலாம். எழுதலாம். ஆனால் அவர்களே ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் எழுதலாம். நான் அதில் போய் ஒரு கட்டுரை வாசித்ததுமே இந்த பாலாஜி என்பவர் சுஜாதா , ராஜேந்திரகுமார், இந்திரா சௌந்தரராசன் வகையறாக்களின் வாசகர், அவருக்கும் இலக்கியத்துக்கும் சங்காத்தம் இல்லை, தேறாத கேஸ் என்று சொல்லி திரும்பிவிடுவேன். அந்தப்பக்கமே தலைவைத்து படுக்கமாட்டேன். வெ.சுரேஷ் அதிகம்போனால் ஆங்கில கிரைம்கதைகள்,செக்ஸ் கதைகள் வரை வருவார் என்று நினைத்து விலகி போவேன்

    இங்கே நீங்கள் ஒரு quality mixing செய்கிறீர்கள். நல்ல புத்தகங்களைப்பற்றிய நல்ல விமர்சனமும் போடுகிறீர்கள். அவை மிகவும் accurate ஆக எழுதப்படுகின்றன. நடுவே அராத்து சூப்பராக எழுதுகிறார், புஷ்பா தங்கத்துரை இலக்கியமேதையாக்கும் என்றெல்லாம் வெ சுரேஷ் மாதிரியானவர்கள் எழுதுவதையும் போட்டால் நீங்கள் செய்வது என்ன? Actually you are demolishing literary values. அதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது.


    இதை இந்த இடத்திலே நல்ல கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் ஒன்று இந்த பாலாஜி , வெ.சுரேஷ் மாதிரியான pulp mongers எழுதும் crap கள் வரக்கூடாது என்று சொல்லலாம். இல்லாவிட்டால் விலகிப்போகலாம். இங்கே அவர்களுடைய செலவில் இவர்கள் weed cultivation செய்கிறார்கள். அதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    நான் தமிழிலேபள்ளிக்கூடம் படிக்கவில்லை. தமிழ் நன்றாக எழுதத்தெரியாதவன். என் வேலை Theology. சும்மா அவ்வப்போது வாசிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. பாலாஜி, வெ சுரேஷ் இருவரைக் குறித்தும் நீங்கள் எழுதியுள்ள விதம் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமளிக்கிறது. இருவரும் என் நண்பர்கள், தாம் நினைத்ததை ஒளிவு மறைவில்லாமல் எழுதினார்கள். அவர்கள் கூறியதில் தவறிருக்கலாம், ஆனால் அவர்களின் நேர்மையைக் கருத்தில் கொண்டு ஒரு கணம் நிதானித்திருக்கலாம் என்பதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

      அவர்கள் இதுவரை எழுதிய விஷயங்களே அவர்களின் ரசனைக்கும் மனமுதிர்ச்சிக்கும் சான்று, வாசிப்பவர்கள் தாமாகவே எப்படி முடிவெடுத்துக் கொண்டாலும் சரி.

      தனிப்பட்ட முறையில் சுரேஷ் அராத்துவைப் புகழ்ந்ததாலோ பாலாஜி தாஸ்தவெஸ்கிக்கு எழுதத் தெரியாது என்று சொன்னதாலோ அவர்கள் சோரம் போனதாக நான் நினைக்கவில்லை, ஆம்னிபஸ் தளம் சோரம் போனதாகவும் நினைக்கவில்லை. இவர்கள் எழுதுவதை இனியும் தொடர்ந்து வாசித்தபின் நீங்களும் இதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எவ்வளவு பெரிய மேதையும் sublime to the ridiculous போவதை நாம் பார்க்கிறோம், நாமெல்லாம் சாதாரணர்கள் (அதற்காக இவர்கள் ridiculousஆக எழுதியதாக அர்த்தமில்லை, சொந்தமாக சிந்திக்கும் ஒவ்வொருத்தருக்கும் இந்த ரிஸ்க் இருக்கு என்பதைச் சுட்ட இதைச் சொல்கிறேன்)

      oOo

      தமிழில் புத்தகங்களை எழுதுபவர்கள் மிகக் குறைவு, அல்லது ஆம்னிபஸ் போன்ற தளங்களுக்கு எழுத முன்வருபவர்கள் மிகக் குறைவு. எனவே, ஐநூறு வார்த்தைகளாவது இருக்க வேண்டும், எதிர்மறை விமரிசனங்கள் கூடாது என்ற இரண்டு எடிட்டோரியல் பாலிசிகள் மட்டுமே இங்கு இருக்கின்றன. இதில் மூன்று எதிர்மறை விமரிசனங்கள் வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். அவை அனைத்தும் பாலாஜி எழுதியவை - வாரம் ஒரு பதிவு என்று ஆரம்ப கட்டத்தில் நாங்கள் எழுதிக் கொண்டிருந்தபோது, இணைய இணைப்பு இல்லாமல், ப்ரௌஸிங் சென்டர் போய் அவசியப்பட்டபோதெல்லாம் பதிவு எழுதி ஆம்னிபஸ் தொடர்ந்து இயங்க அவர் செய்த உதவி மிகப் பெரும் உதவி - அதற்கு நன்றிக்கடனாகவே அவர் மிகவும் விரும்பியதன் பேரில் இந்த விமரிசனங்கள் வந்தன. இதை ஒரு சமரசம் என்று சொல்வதைவிட, அவர் மீதுள்ள மதிப்பையும் நன்றியுணர்வையும் வெளிக்காட்ட கிடைத்த ஒரு வாய்ப்பு என்று நினைக்க விரும்புகிறேன். நிற்க.

      நீங்கள் தியாலஜியில் ஆர்வம் உள்ளவர் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. Spinoza போன்றவர்களின் நூல்கள் குறித்து எழுதலாமே? நன்றாக எழுதத் தெரியவில்லை என்பதெல்லாம் குறையாக இருக்க முடியாது, எழுத விஷயம் இல்லை என்பது மட்டுமே எழுத மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியும் :)

      Delete
    2. தங்களால் natbas2012 at gmail dot com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள இயலுமா? நன்றி.

      Delete
  3. இந்தத் தளத்தின் ஒரு வாசகன் என்ற முறையில் என் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் எடிட்டோரியல் என்ற விஷயம் மிகக் குறைவு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.இலக்கியம் என்பதை யார் முடிவு செய்வது? இலக்கிய எழுத்தாளர்கள் என அறியப்படுபவர்கள் எழுதுவது எல்லாமே இலக்கியமாகி விட வேண்டுமா? புதுமைப் பித்தன் கதைகளில் பத்து கதைகள் சாஸ்வதம் என க.நா.சு எழுதியதாக நினைவு.முதல் புத்தகம் படித்தவுடனே அது இலக்கியமா இல்லையா என எப்படி அறிவது. தொடர்ந்து படிப்பதால் மட்டுமே ஒரு வாசகனால் படைப்புக்களின் தகுதியை தரம் பிரிக்க முடிகிறது. யாரோ பட்டியல் போடுவதலோ, ஒரு படைப்பு எந்த பட்டியலிலும் இடம் பெறவில்லை என்பதாலும் அது எதற்கும் பயன்படாது எனக் கூற முடியாது.இது முழுக்க முழுக்க வாசக அனுபவம்.
    இந்தத் தளத்தில் எல்லா விதமான புத்தகங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சுரேஷ் மற்றும் பாலாஜி இருவரும் தொடர்ந்து இந்தத் தளத்தில் எழுதி வருகிறார்கள். சுரேஷ் அவர்களை அவருடைய இசைக் கட்டுரைகள் மூலம் எனக்கு அறிமுகம் உண்டு. அவர்கள் எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் இலக்கியம் என சொல்லப்படும் கதைகள் குறித்தும் எழுதியுள்ளார்கள். இலக்கியம் மற்றும் இலக்கியமாக ஒத்துக் கொள்ளப்படாத புனைவுகள் சார்ந்த அவர்கள் பரந்த வாசிப்பு அனுபவம் என்னைப் போன்ற வாசகர்களுக்கு தேவையானது தான்.
    சமகாலத்தில் வெளிவந்துள்ள ஒரு கதைத் தொகுப்பைக் குறித்து சுரேஷ் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில் அவருடைய கருத்தை நேர்மையாக வெளியிட்டிருக்கிறார். சிலர் எழுதிய புனைவுகள் குறித்து தான் பேச வேண்டும். மற்றவைகள் குறித்து எதுவும் எழுதக் கூடாது அல்லது படிக்கக் கூடாது என்பது ஒருவித அடிமை மனப்பான்மை போல தோன்றுகிறது. குறைந்தபட்சம் இலக்கியம் இல்லை என நிறுவவாவது பல விதமான படைப்புக்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட தாக்குதல் தேவையில்லாதது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸார்.

      எடிட்டோரியல் பாலிசி குறித்து நண்பர் கூறியதில் தவறில்லை, எது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்காத, நம்மவராக அல்லாதவர்களுக்கு அநீழி இழைக்காத பாலிசியாக இருக்கும் என்பதை இது போன்ற விவாதங்கள் கண்டடைய உதவும்.

      ஓரே ஒரு விஷயம். நீங்கள் சொல்லும் சுரேஷ், எஸ். சுரேஷ், இசைக்கட்டுரைகள் எழுதும் இவர் இந்தப் பதிவை எழுதவில்லை. இதை எழுதியுள்ளவர் வெ சுரேஷ். ஆம்னிபஸ்சுக்கு வெளியே சொல்வனம் இணைய இதழில் சில கட்டுரைகள் இருவரும் செய்துள்ளனர்.

      இவை எஸ் சுரேஷ் செய்தவை - http://solvanam.com/?author=156

      இவர்தான் இந்தக் கட்டுரையை எழுதிய வெ சுரேஷ். http://sureeven.wordpress.com/

      நன்றி.


      Delete
  4. இறையியல் படிக்க ஆரம்பிக்கும்போது ஒரு முக்கியமான வரியைச் சொல்லுவார்கள். 'good word is good word, nothing else' தேவனின் வார்த்தை,அர்த்தமுள்ள வார்த்தை ஒன்றுதான். அதை சரியாக கண்டுபிடிக்கவும் புரிந்துகொள்ளவும்தான் இறையியல்.மற்றபடி எல்லாமே ஒன்றுதான் என்று சொல்ல ஆரம்பித்தால் படிக்கவே வேண்டியதில்லை.

    discrimination இல்லாவிட்டால் வாசிப்பதைப்போல வெட்டிவேலை வேறு ஒன்றும் இல்லை. identification - valuation- classification- discrimination இதுதான் வாசிப்பின் framework. இந்த தளம் என்ன செய்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேனோ அதையேதான் மேலெ சொன்ன நண்பர் எழுதியிருக்கிறார். 'இவர் சொல்றத இவர் சொல்லட்டுமே அவர் சொல்றத அவரும் சொல்லட்டும். எல்லாமே ஒண்ணுதான்' என்று சொல்கிறார். நல்ல இலக்கியம் மோசமான எழுத்து என்று ஒருவர் discriminate செய்தால் அது அடிமைத்தனமாம். [இதை இட்டிலி தோசை விசயத்தில் சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன்]

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமாகச் சொன்னால் இங்கே எழுதுவதெல்லாம் சாதாரண ஒரு வாசக கருத்துதான். அதற்குமேல் எதிர்பார்க்க முடியாது..

      மன்னித்துக் கொள்ளுங்கள், தீர்ப்பு சொல்லும் உரிமை எங்களுக்கு இருப்பதாக நினைக்கவில்லை, அதனால் நீங்கள் சொல்வது போன்ற எடிட்டோரியல் பாலிசியை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது.

      இதற்கு மேல நாமிருவரும் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருப்போம், ஆம்னிபஸ் தளம் தங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைக்கிறேன், உரையாடலுக்கு நன்றி.

      Delete
  5. ஆம்னி பஸ்ஸில் அனைத்து வகையான விமர்சனங்களும், அறிமுகங்களும் வரும் என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன்.அவரவர் கருத்தை சொல்லவும், பலவிதகோணங்களை விவாதிக்கவுமான இடமென்று தவறாக நினைத்து விட்டேன். பலரும் இந்த தளத்தை நல்ல புத்தக அறிமுக, விமர்சன, தளமென்று கூறியிருந்ததை நம்பி ஏமாந்து போய்விட்டேன். ஜெயமோகன், பத்ரி சேஷாத்ரி, இன்னும் யாரெல்லாம் இதை பரிந்துரை செய்தார்களோ அவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டங்கள்
    ஆம்னி பஸ் புத்தகங்களுக்கு தரச்சான்று தரும் இடமென்று எனக்கு தெரியாமல் போனதே. எனக்கு ஞானத்தை அளித்த ஜானுக்கு நன்றிகள் கோடி. இனி நானும் உங்களை போல உஷாராக நடந்து கொள்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.
    ஆர் வி ஜனரஞ்சகமான புத்தகங்களை படிப்பார் என்று போட்டாரே ஒரு போடு, கேட்க சந்தோஷமாக இருந்தது. அவரும் படித்து இன்புறுவாராக.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ரெண்டு டயர் பஞ்சர், இப்ப இருக்கற காத்தையும் புடிங்கியாச்சா? நல்லா இருங்க!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...