முப்பதொன்பது வயதான வெரோனிகா ஹெகார்ட்டி தன்னைவிட ஒரு வயதே மூத்தவனான சகோதரன் லியம் ஹெகார்ட்டியின் தற்கொலைச் செய்தியைத் தெரிவிக்க தன் பிறந்த வீட்டிற்குச் செல்கிறார். பொறுமையே வடிவான அப்பாவியாகக் கருதப்பட்ட தன் தாயிடம் அவர்தான் இந்த துயரச்செய்தியைப் போட்டுடைக்க வேண்டும். ஆனால் அவரது தாய் மீது அவருக்கு ஆத்திரம்தான் வருகிறது, சற்றும் இரக்கம் வர மறுக்கிறது. பன்னிரண்டு பிள்ளைகள், இடையில் நான்கு குறைப் பிரசவங்கள்: ஒரு ஆதர்ச ஐரிஷ் கத்தோலிக்க மனைவி, சமையலறையிலும் பிரசவக் கூடத்திலுமே ஆயுளைக்கழித்தவர், எதிர்பேச்சு பேசாதவர், பிள்ளைகளின் பரிதாபத்தை சம்பாதித்தவர், நினைவு கலங்கியவர் போல வெறித்திருப்பவர், பார்வைக்கு இனியவர், மெலியவர். இருந்தும் ஏன் ஆத்திரம் வருகிறது? எதையோ எதிர்க்க மறுத்தவர் என்பதாலா, எதையுமே வெளிப்படுத்தாதவர் என்பதாலா? வெரோனிகாவின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காமல் மழுப்பியழைப்பதாலா? “மறதியே உருவானவள்” என்பதாலா?
வெரோனிகா தன் பிரியத்துக்குரிய சகோதரன் ஏன் தற்கொலைக்குத் தள்ளப்பட்டான் என்று ஆராய ஆரம்பிக்கிறார். அந்தக் கதை தன் தாய்-வழிப் பாட்டி ஆடா மெர்ரிமனின் கதையில் ஆரம்பிக்கிறது. ஆடா ஒரு அநாதை. அவரது கணவன் அன்பைத்தவிர வேறெதையும் அதிகம் தந்ததில்லை. ஆடா எப்படி குடும்பம் அழியாமல் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டார்? இரகசியம் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் எஜமானரில் பொதிந்திருந்ததோ? லாம்பெர்ட் ந்யூஜென்ட் என்ற அந்த நபரில்தான் தன் குடும்பத்தின் கதை துவங்குவதாக வெரோனிகா நம்புகிறாள். அவருக்கும் தன் பாட்டிக்கும் இடையே ஏதோ ஒரு சிக்கலான காதலோ காமமோ இருந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்கிறார். அதற்கான ஆதாரங்களைத் துப்பறியப் புறப்படுகிறார்.
ஆனால் அவர் கற்பனை செய்யும் குடும்ப சரித்திரம் அவர் நினைவுகூர மறக்கும் அல்லது வெறுக்கும் அவரது வாழ்வனுபவத்தைவிடத் துல்லியமாக விவரிக்கப்படுகிறது. தன் பாட்டி ஆடா மிக அழகானவள், பழக்கவழக்கங்களில் தன் தாயை விடப் பல மடங்கு உயர்த்தட்டு நாகரிகங்களைக் கொண்டிருந்தவள், அவளது வீட்டில் பொருட்களுக்குத் தனித் தனி இடங்களும் அந்தஸ்தும் இருந்தது, டீக்கோப்பைகளாகட்டும், வருடத்தில் ஒரு முறையே எடுத்துப் பயன்படுத்தப்படும் கலை மிகுந்த பயன்பாட்டுப் பொருட்களாகட்டும், அவற்றில் ஆடாவின் தேர்வும், அடையாளமும் இருந்தன. தனக்கு எட்டுவயதும் லியாமுக்கு ஒன்பதுமாய் இருந்த ஒரு கோடையில் அவர்கள் ஆடாவின் அந்த சுத்தமான வீட்டிற்கு அனுப்பப் படுகிறார்கள். அந்நாட்களில் அவள் கண்ட ஒரு காட்சியே இந்நாவலின் மைய-முடிச்சாய் இருக்கிறது.
ஆனால் இந்த சம்பவத்தை விவரிக்க வெரோனிகாவிற்கு புத்தகத்தின் முக்கால் பாகம் பிடிக்கிறது; அதே சமயம் அந்த சம்பவம் உண்மையாகவே நிகழ்ந்ததா இல்லை வெறும் கற்பனையா என்று அவரால் உறுதியாகச் சொல்லவும் முடியவில்லை. ஒரு உளவியல் பக்கத்திருப்பியின் கதைமாதிரியை ஆசிரியர் இலாகவமாக தலைகீழாக்குகிறார்.
அந்த இடைவெளியில் விரிவது வெரோனிகா தன் பாட்டி ஆடாவைப் பற்றிப் பின்னும் கற்பனைக் காட்சிகள்: ஆடாவும் ந்யூஜென்டும் எப்படியெல்லாம் தம் கேள்விக்குரிய காதலைச் சுற்றி செயல்பட்டிருப்பர், ஆடாவின் கணவன் அந்த சித்திரத்தில் எப்படிப் பொருந்தியிருப்பான்; அவர்களது முக்கோணத்தின் மிக அந்தரங்கமான தருணங்கள் வெரோனிகாவின் கண் முன் சினிமாவைப் போல விரிகின்றன, உடல்கள், உடல்களின் தனித்தன்மைகள், மடிப்புகள், நிறங்கள், பிழைகள், தெவிட்டுமளவு கவர்ச்சியற்ற அந்தரங்கங்கள். வில்லியம் காஸ் தன் கட்டுரையில் சொன்ன ஒரு விஷயம்: “தோலினைத் தொட்டு அழுத்திப் பிடிக்கப்படும் கைவிளக்கு அணைந்தே இருந்தாலும் பங்கமில்லை. ஒளியைப் போலவே கலைக்கும் தூரம் தேவை, பாலியல் அனுபவத்தை நேரடியாக விவரிக்க முற்படும் எவரும் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அதில் அடக்கமாகும் அலைக்கழிப்புகள் தத்தம் அகவயமான உள்ளடக்கத்திற்கு வெளியே அபத்தனமானவை, அந்த உள்ளடக்கத்தின் தீவிரம் சீக்கிரமே அதன் வெளிப்படைக் காரணத்தை மிதமிஞ்சிவிடுகிறது, அந்த முழு அனுபவம் இறுதியில் மொழிபிழந்துவிடுகிறது, முட்டும் நெருக்கத்தில் இயங்கும் பெருங்கலை எதுவுமே இல்லை. இது கத்துக்குட்டிக்களுக்கான முனைவல்ல. அதிசிறந்தவர்களுமே கையகப்பட்டனர்.” என்ரைட்டால் கையகப்படாமல் தப்பிக்க முடிகிறதா? வெரோனிகாவின் குரலின் அகவயத்தன்மை, ஆசிரியரின் குரலிலிருந்து தள்ளி ஒலிக்கிறதா? தன் சகோதரி இந்நாவலின் சுயசரிதை கலக்காத தன்மையைச் சுட்டிக் காட்டியதை ஆசிரியர் பல இடங்கலில் பகிர நேர்ந்தது வாஸ்தவம்தான். அதே சமயம் நாவலின் தர்க்கத்திலுமே இந்த கலைமிக்க தூரம் எப்படி உருவாக்கப்படுகிறது?
வெரோனிகா தன் பாட்டியின் வாழ்க்கை சம்பவங்களைத் தன் மனதில் மாற்றி மாற்றி கட்டமைக்க முயன்று, சோர்ந்து சொல்வது: “நான் அவர்களை குரூரமான வகைகளில் வளைத்து மறு-கட்டமைப்பு செய்யலாம், ஆனால் என் இதயம் என்னைக் கைவிடுகிறது, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிகழும் விஷயங்களில் ஏதோ ஒன்று அவ்வளவு மலிந்திருக்கிறது, இந்த பயங்கரமான அத்துமீறல்கள் இறுதியில் வெறும் பாலியலே. வெறும் பால்.” இது தான் வெரோனிகாவின் இரகசியம்.
தன் சகோதரனின் இழப்பின் இரகசியமும் இதுதான். அவனுக்கு நடந்த ஒரு பாலியல் அநீதிக்கு வெரோனிகா சாட்சியா இல்லையா? ஒருவரது வாழ்வில் இவ்விதத்தில் ‘மலிந்திருக்கும்' பாலியல் சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையை அழிக்கும் சக்தி கொண்டவையா, இல்லை ஒருவர் தன்னையே அழித்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் சாக்குப்போக்குகளா? இவ்விஷயங்களில் ஒருவரது மௌனமும் மறதியும் எவ்வளவு தூரம் செல்லுபடியாகும்? அவற்றின் விளைவுகள் உறுதியானவையா இல்லையா? இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் வெரோனிகாவிற்குத் தன் ‘சந்தோஷமான’, ‘வெற்றிகரமான' மணவாழ்வின் அர்த்தமின்மையும், இறை நம்பிக்கை விட்டுச் சென்ற இடத்தில் வெறித்திருக்கும் சூனியமும் அச்சுறுத்தும் வண்ணம் புலப்படுகின்றன.
ஆன்மீக அடித்தளமற்ற வாழ்வில், ஆன்மீகத்தை அலைக்கழித்து விடும் சமூகச் சூழலில், நம்மைச்சுற்றியிருக்கும் மலினங்களை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்? அதிலும் மனிதர்களின் எல்லா விதமான பரிமாற்றங்களின் இதயத்திலும் ஒளிந்திருக்கும் பாலுணர்வு பிறழ்வுக்கு உள்ளாகும்போது அதை எப்படித் தீர்மானித்து உன்னதப்படுத்த முடியும்? குடும்பம் என்ற அமைப்பு உண்மையில் எவ்வகையான ஒப்பந்தங்களாலானது, அதன் விரிசல்களின் பின்புறமுள்ளப் பள்ளத்தாக்கின் ஆழம்தான் என்ன? வெரோனிகா தன் மணவாழ்வையும் இந்த இருண்ட ஒளியில் பார்க்கும் தருணங்கள் பயங்கரமானவை. அதுவரை அவள் தன் கணவனின் அத்தியாவசிய அலுவலுக்காகக் கேள்வியின்றி செய்து வந்த உபசாரங்களும், தன் இரண்டு மகள்களின் கல்விக்கென்று செய்து வந்த பணிவிடைகளும் வெறுமே தன் இருத்தலைக் காத்துக்கொள்ளவென்றும், தன்னை அவர்களது வாழ்வில் உபயோகமானவளாக்கிக் கொள்ளவென்றும் செய்த அர்த்தமற்ற செயல்கள் போலத் தோன்றிவிடுகின்றன, “நீ எப்பொழுதும் சந்தேகித்தது உண்மைதான் - நீ செய்யும் அநேக செயல்களும் வெறும் முட்டாள்தனம், அசல் முட்டாள்தனம், நீ பெரும்பாலாக செய்ததெல்லாம் நச்சரிப்பும், புலம்பல்களும், உன்னை விரும்பக்கூட ஆயாசப்படுபவர்களுக்காகப் பணிவிடைகள் செய்வதும்தான், அதைக்கூட விடுங்கள், தத்தம் காலணிகளைத் தன் படுக்கைக்கடியிலேயே கண்டுபிடிக்க முடியாதவர்கள் அவர்கள்; திரும்பிப் பார்த்து உன் மேல் குற்றம் சுமத்துபவர்கள் - கத்தி கதவடைப்பவர்கள் - வெறுமே ஒற்றைக் காலணி மட்டும் தட்டுப்படும்போது.”
“நான் இப்பொழுது அழுதுகொண்டிருக்கிறேன், விமான-நிலைய வீதியை எட்டப் போகிறேன், என் சாப் 9.3 வண்டியின் சக்கரத்தின் பின் என் கண்கள் பிதுங்கக் கலங்கிக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் உன் கணவரின் அலுவலக சந்திப்பு, அந்த அதிமுக்கியமான சந்திப்பு, முக்கியமே இல்லை என்பதால் (எப்படித்தான் உன்னால், ஒரு நொடிக்கேனும், அதைப் போன்ற விஷயங்களை முக்கியமாகக் கருத முடிந்தது?), மேலும் அவர் அந்த அரை-மணி நேரம் உன்னைப் பரிபூரணமாகக் காதலிக்கிறார், இல்லையேல் உன் சகோதரன் புதிதாய் இறந்திருக்கும் இந்த அரை வாரப் பொழுது முழுவதும்.”
இந்த இருண்ட வாழ்க்கைக் கோணத்தின் ஒரே சிறு ஒளி, ஒரே சிறு ஆறுதல், அன்பிற்கான சாத்தியம். தன் குடும்பத்தின் மீதும், தன் மீதும் வெரோனிகாவால் மீண்டும் கனிவையும் அன்பையும் செலுத்த முடியுமா? அதற்கு ஏதாவது குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவாரா? அந்தக் குறுக்குவழியில் தன் தாயின் சப்தமற்ற மணவாழ்வின் எதிரொலி இருக்குமா? தன் சகோதரன் அறுவெறுத்த ஆழமின்மை இருக்குமா? தன் வாழ்விலிருந்தே ஒருவரால் எவ்வளவு தூரம்தான் தப்பிக்க முடியும்? இந்தக் கேள்விகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களே கதையாய் விரிகிறது. சில தருணங்களில் கவிதையாய்.
ஐரிஷ் எழுத்துக்களில் ஏனோ இந்த வறுமையும், வெறுமையும் மீண்டும் மீண்டும் படிக்கக் கிடைக்கின்றன. அதிலும் ஒரு சவத்தின் இறுதிச் சடங்குகள் ஐரிஷ் இலக்கியத்தின் ஒரு முக்கியப் படிமமாகவே ஆகிவிட்டது போலும் (ஜேம்ஸ் ஜாய்ஸில் துவங்கி, ஃப்ளான் ‘ஓ ப்ரையன், ஃப்ரான்க் ‘ஓ கானர், என்று ஒரு சிறு பட்டியல் நினைவுக்கு வருகிறது). இந்த நாவலின் தலைப்பைக் கூட இரண்டு விதங்களில் பொருள்படுத்திக் கொள்ளலாம்: லியாமின் இறுதிச் சடங்கிற்காகக் கூடிய ஹெகார்ட்டி சகோதர-சகோதரியரின் கூடுகை, வெரோனிகா மேற்கொள்ளும் தன் குடும்ப மற்றும் சுய வரலாற்றின் சேகரிப்பு. ஆனால் அவர் சேகரிப்பதெல்லாம் வெறும் சாத்தியங்கள் தான்; உறுதி என்பது நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறது, அதைத்தவிர வேறு ஒரு உறுதி இருக்குமானால் அது மரணம்தான்.
The Gathering, Ann Enright,
Jonathan Cape
Amazon, Book Bazaar India
The Gathering, Ann Enright,
Jonathan Cape
Amazon, Book Bazaar India
ஆன்லைன் DATA ENTRY செய்து சம்பாதிக்க வேண்டுமா ?
ReplyDeleteஆன்லைன் வேலை தேடி தேடி சலித்து ஏமாந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும்.அதிகப்படியான ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் இங்கு நாங்கள் சொல்வதும் பார்த்ததும் அனுபவித்தும் இருக்கிறோம் .இப்பொழுது நாங்கள் ஏமாற்றம் என்ற நிலை இல்லாமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறோம். போதும் என்ற மனம் உள்ளவர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக தினமும் ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். கண்டிப்பாக உங்கள் உழைப்பு முக்கியம் மேற்குறித்த தகுதிகள் உள்ள நபர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .நன்றி .
ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க வேண்டுமா ?
தேவையான தகுதிகள் :
1.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்.
2.டைப்பிங் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
3.பொறுமையாக கற்று கொள்ளும் குணம் .
வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்
மேலும் விவரங்களுக்கு
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping