ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இவர் எழுதிய The Sea என்ற நாவல் விமரிசக அங்கீகாரமும் புக்கர் போன்ற பரிசுகளும் பெற்ற ஒன்று. இது தமிழில் ஜி. குப்புசாமி அவர்களால் 'கடல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பிரசுரம். இந்த தமிழாக்கத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு பரிந்துரைக்கிறார் : "புக்கர் பரிசு பெற்ற நாவலான ஜான் பான்வில்லின் 'கடல்' தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இந்த நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி குப்புசாமி."
தேர்ந்த இலக்கியவாதியாகக் கொண்டாடப்படும் ஜான் பான்வில் தமிழக இலக்கியவாதிகளுக்கு ஒவ்வாத ஒரு இழிசெயலும் செய்கிறார் - பெஞ்சமின் ப்ளாக் என்ற பெயரில் துப்பறியும் நாவல் எழுதுகிறார் இவர். இவையும் விமரிசக அங்கீகாரம் பெற்றுவிட்ட காரணத்தாலோ என்னவோ, "பெஞ்சமின் ப்ளாக்காக ஜான் பான்வில் எழுதிய" புத்தகம் என்று முன்னட்டையில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு இவரது 'The Lemur' என்ற துப்பறியும் நாவலை விற்பனை செய்கிறார்கள். கொண்டை தெரிந்தபின்னும் என்ன வேஷம், கலைத்து விடலாமே, என்று நாமானால் சொல்வோம், ஆனால் இதில் ஒரு வணிக உத்தி இருக்கிறது : பெஞ்சமின் ப்ளாக்கை அறிந்தவர்களுக்கு அவரது இயற்பெயர் ஜான் பான்வில் என்பது ஒரு பொருட்டாக இருக்கப் போவதில்லை, ஜான் பான்வில் என்ற இலக்கியவாதி அப்படி என்னதான் பெஞ்சமின் ப்ளாக்காக எழுதியிருக்கிறார் என்று தீவிர இலக்கிய வாசகர்கள் சிலர் இதை ரகசியமாகப் படிக்கக்கூடும். எப்படியும் லாபம்தான்.
இந்த நாவலின் கதைச் சுருக்கத்தை முன் அட்டையின் உட்பக்க ஃப்ளாப்பில் உள்ளபடி சொல்கிறேன் - புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லிவிட்டதை பதிவில் சேர்ப்பதை தப்பு சொல்ல முடியாது. அப்படியும் அடாவடியாக தப்பு சொல்பவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.
"'வில்லியம் 'பிக் பில்' முல்லோலாண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோடி கோடியாக சம்பாதித்தவர். சிஐஏவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் இப்போது தன் மகள் லூசியின் துணையோடு முல்லோலாண்ட் அறக்கட்டளையின் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வில்சன் க்ளீவர் என்ற துப்பறியும் பத்திரிக்கையாளர் தனக்கு எதிரான உண்மைகளை அம்பலப்படுத்தும் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதத் திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியும் முல்லோலாண்ட், தன் மகளின் கணவன், ஜான் கிளாஸ்ஸிடம் தன் அதிகாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை எழுதும் பணியை ஒப்படைக்கிறார்.
"ஆனால் கிளாஸ்ஸின் இளம் ஆய்வாளன் கிளாஸ்ஸையே பிளாக்மெயில் செய்கிறான், இதனால் கிளாஸ் விதிர்விதிர்த்துப் போகிறார். தன் ரகசியங்களும் முல்லோலாண்டின் ரகசியங்களும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறார், அவனை பணிநீக்கம் செய்கிறார். ஆனால் சீக்கிரமே, 'லெமூர்' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் அந்த ஆய்வாளன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை நியூயார்க் நகர காவல்துறை மூலம் அறிகிறார்.
"அமைதியை விலைக்கு வாங்க முடியாது - நியூயார்க்கின் பணக்கார குடும்பங்களில் ஒன்றானாலும்கூட இது சாத்தியமில்லை. அதிரடி ரகசியங்களால் துளைக்கப்பட்ட லெமூர் ஒரு அற்புதமான சமகால த்ரில்லர், இதில் பெஞ்சமின் ப்ளாக் தன் ஆட்டத்தின் உச்சத்தில் இருப்பதை நாம் காண்கிறோம்"
புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். புத்தகத்தை வாசித்தவர்கள் முந்தைய பத்தியின் கடைசி வாக்கியத்தை நீக்க வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே, இது விமரிசக தளமல்ல, வாசக தளம் என்பதால் அந்த மாதிரியான ஆட்சேபணைகளுக்கு இங்கே இடமில்லை.

அகவுலகும் புறவுலகும் கூடும் புள்ளிகளை இணைத்து மனித வாழ்வின் வரைபடத்தைத் தொகுப்பவை இலக்கியம் என்று சொல்ல முடியுமா? இதையே மூளையைச் சேதப்படுத்தாத தமிழில் எளிமையாகச் சொல்வதானால் ஆம்னிபஸ்ஸின் முன்னணி பதிவர் பாலாஜி நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் குறித்து சொன்னதை மேற்கோள் காட்ட வேண்டும் - "நாஞ்சில் நாடு கற்பனையல்ல, அந்த நிலமும் மக்களும், இரத்தமும் சதையுமாக விவரிக்கப்படுகிறார்கள். இந்த கதைகளை நாஞ்சில் நாட்டையும் அதன் மக்களையும் விட்டுப் பிரித்துப் பார்க்க முடியாது."
அடுத்தபடியாக ஒரு கேள்வி. இலக்கியத்தில் குற்றப் புனைவு போன்ற வகைமைகளுக்கு உரிய இடமென்ன? மானுட அனுபவ வரைபடத்தின் ஒரு சிறிய பகுதியின் சந்து பொந்துகளை ஆய்ந்து இவை பதிவு செய்கின்றன என்று சொல்லலாமா? பிணத்தில் துவங்கி கொலையாளி வரையிலான எல்லைக்குள்தான், இன்னமும் பொதுமைப்படுத்தினால் குற்றம் முதல் குற்றவாளி வரையான எல்லைக்குள்தான், துப்பறியும் கதைகள் செயல்பட்டாக வேண்டும். காதல் கதைகளும் இந்த மாதிரி ஈர்ப்பு இயங்கும் எல்லைகளுக்குள்தான் தன் விவரணைகளைச் செய்தாக வேண்டும். இப்படியே ஒவ்வொரு ழானரையும் சொல்லிக் கொண்டு போகலாம்.
அப்படியானால் இதெல்லாமும் இலக்கியம்தானே என்றால், உண்டு ஆனால் இல்லை என்றுதான் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சென்னையின் வரைபடம் மனிதன் நடந்து செல்லக்கூடிய பாதைகளை விவரித்தாலே தேவைக்கும் அதிகமானது. பொந்துகளாளான தரைக்குக் கீழுள்ள பாதைகள் எலிகளுக்கு வேண்டுமானால் உதவலாம், நமக்கல்ல, இல்லையா? இந்தப் பாதைகள் நம் அனுபவ எல்லைக்கு அப்பாற்பட்டவை.
ஆனாலும்கூட பெஞ்சமின் ப்ளாக் போன்றவர்கள் எழுதும் கதைகள் எங்கே இலக்கியத்தைத் தொடுகின்றன என்றால், இவர்களது எல்லைகள் மயிலாப்பூர் முதல் திருவல்லிக்கேணி வரை மட்டுமே இருந்தாலும், ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன, வெவ்வேறு மனிதர்களை காட்சிப்படுத்துகின்றன. கதை என்னவோ அரதப்பழசுதான், ஆனால் கதை சொல்லப்படும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. விவரணைகளைப் பிரமாதமாகச் செய்கிறார்கள், இவர்கள் கையில் மொழி தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது, நாம் பழைய விஷயங்களைத் திரும்பத் திரும்ப புதிய கோணங்களில் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். இவர்கள் எப்படியாவது ஆழமான எதையாவது இந்த மாதிரி கதைகளில் சொல்லிவிடுகிறார்கள் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.
உதாரணத்துக்கு, லெமூர் என்ற இந்த நாவலை எடுத்துக் கொண்டால், இரண்டே இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம். கதாநாயகன் பெயர் ஜான் கிளாஸ். முன்னணி பத்திரிக்கையாளனாக இருந்த கிளாஸ் படைப்பூக்கத்தை இழந்து விட்டவன் - உணர்ச்சிகள் உலர்ந்து தேய்வழக்குகள் மலிந்த தன் எழுத்தைக் கைவிட்டு, ஒரு பணக்கார மாமனாரின் செல்ல மகளின் கணவனாகக் காலம் தள்ளுகிறான், கதை நெடுக தேய்வழக்குகளில் இடறி விழுந்துகொண்டே இருக்கிறான். இப்போது இவன் தன் மாமனாரின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் செய்யப்போவதுகூட ஒரு வெள்ளையடிக்கிற வேலைதான். ஆனால் ஏதோ ஒரு பைத்தியக்கார கணத்தில், உள்ளே என்ன இருக்கிறது என்று ஒரு ஆளைக் குடைந்து பார்க்கச் சொல்லும்போதுதான் தப்பு செய்கிறான்.
பழக்கப்பட்டிருந்தாலும் இந்த பணக்கார உயரம் எல்லாம் ரொம்ப பெரிசு, படைப்பூக்கம் குன்றி உறைந்திருக்கிறான், எப்போதும் நொறுங்கிவிடக்கூடிய ஒரு கண்ணாடிதான் ஜான் கிளாஸ். நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தியின் சொற்களில் கிளாஸ் ஒரு படிமம். இந்தப் படிமம் இன்னொரு படிமத்தால் செறிவடைகிறது பான்வில்லின் விவரிப்பில் -
"அவனது அலுவலகத்தின் ஒரு மூலையில் உலோகத்தாலான ஒரு பெரிய சதுர வடிவ மேஜை இருந்தது. இப்போது கிளாஸ் அங்கு சென்று அதன் பின் கவனமாக அமர்ந்தான். அமர்ந்தபின் தன் பீதி சற்றே குறைந்திருப்பதை உணர்ந்தான். அவனது அலுவலகம் முப்பத்து ஒன்பதாம் மாடியில் இருந்தது. இவ்வளவு அதிக உயரத்தில் பணியாற்ற வேண்டும் - ஏன், எதையும் செய்ய வேண்டும் - என்று எதிர்பார்க்கப்படுவது அபத்தம். அங்கு வந்த முதல் நாள் அவன் அதன் இழைக்கப்பட்ட கண்ணாடி சுவற்றின் விளிம்புக்குச் சென்றிருந்தான். கீழே குனிந்து பார்க்கும்போது, இரண்டு மாடிகள் கீழே, மூழ்கிய நகரின் பரப்பில் அவசரமில்லாமல் மிதந்து செல்லும் பனிப்பாறைகளைப் போன்ற பஞ்சுப் பொதிகளாய் வெண்ணிற மேகங்களைப் பார்த்திருந்தான். இப்போது அவன் இரு கைகளையும் தன் முன் இருந்த மேஜையில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டான், ஆட்டங்காணும் மிதவையை நிலைக்குக் கொண்டுவருவதுபோல். உடனடியாக ஒரு சிகரெட் மிகவும் தேவைப்பட்டது".
'நீண்ட கழுத்தும் சிறிய தலையும் பெரிய, மின்னும் கண்களும்' கொண்ட தன் ஆய்வு உதவியாளன் பொந்தில் வாழும் எலி போன்ற ஒரு விசேஷ ஜந்து என்று நினைக்கிறான் கிளாஸ், லெமூர் ஒருவகை எலி என்ற நினைப்பில் அவனுக்கு அந்தப் பெயரையும் சூட்டுக்கிறான். ஆனால் பின்னர்தான் தன் தவறை உணர்கிறான், லெமூர் என்ற பெயர் லேமூர்ஸ் என்ற லத்தீன் சொல்வழி வந்தது, லத்தின் மொழியில் ஆவிகளையும் பேய்களையும் குறிக்கும் சொல் அது என்று சுட்டுகிறாள் அவனது தோழி. புதைக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டுபிடித்துத் தருவான் என்று நம்பிய கிளாஸுக்கு அவன் மறக்கப்பட்ட நினைவுகளையே, maraikkappatta குற்றங்களையே உயிர்ப்பித்துத் தருகிறான்.
அதன்பின் கிளாஸ்ஸின் உறவுகள் நொறுங்குகின்றன என்று சொல்வது இவ்வகைக் கதைகளுக்கே உரிய ஒரு தேய்வழக்கை வெளிப்படுத்தும் காரியமாக இருக்கும், இல்லையா?
The Lemur: A Novel
Benjamin Black
Picador
No comments:
Post a Comment