A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label சிறப்புப் பதிவர். Show all posts
Showing posts with label சிறப்புப் பதிவர். Show all posts

3 Oct 2013

கோவில்-நிலம்-சாதி: பொ.வேல்சாமி

சிறப்புப் பதிவர்: ஆனந்தராஜ்

”உங்கள் வீட்டில் உணவு வீணாகிவிட்டதா? 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடிவந்து அந்த உணவை ?குழந்தைகள் ஹெல்ப்லைன்”காரர்கள் பெற்றுச் செல்வார்கள்” என்றது ஒரு ட்விட்டர் செய்தி.

”மெண்டோஸ்” என்னும் மிட்டாயை குழந்தைகளுக்குத் தராதீர். கேன்ஸர் வருதாம் - என்று ஒரு குறுஞ்செய்தி வருகிறது. 

முதற்செய்தி போகிற போக்கில் அடித்துவிடப்படும் செய்தி என்றால் இரண்டாவது செய்தி வியாபார எதிரிகளால் பரப்பப்படும் வகையறா.




28 Jun 2013

Civilization – the West and the Rest by Niall Ferguson

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் 


அலுவலக வேலை காரணமாக பயணம் மேற்கொள்ளும்பொழுது, புதிய ஊரில், புதிய இடத்தில் தூக்கம் வராமல் புரளுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் அவ்வாறு புரண்டபோது, விடுதி அறையில் இருந்த தொலைகாட்சி ரிமோட்டில் சானல்களை மாற்றுகையில் புத்தக விமர்சனம் ஒன்று காலை 3 மணி என்றபோதும் என் ஆவலைத் தூண்டி, புத்தகத்தின் பெயரை பத்திரமாக எழுத வைத்தது. இது புதிது. பிறகு அந்தப் புத்தகத்தைத் தேடிப் படித்ததுடன், அந்த எழுத்தாளரின் இன்னும் மூன்று புத்தகங்களை வாசித்ததும் வேறொரு கதை.

அப்படி என்ன விஷயம் இந்தப் புத்தகத்தில்? 

ஒரு மேற்கத்திய எழுத்தாளர், “மேற்குலகின் ஆதிக்கம் முடியும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!” என்கிறார். 

1970 –களில் ஒரு சராசரி அமெரிக்கர், ஒரு சராசரி சீனரை விட 70 மடங்கு பணக்காரராக இருந்தார். 2000-களில், அதே சராசரி அமெரிக்கர், அதே சீனரைவிட 5 மடங்குதான் பணக்காரர் என்ற நிலைக்கு வந்து விட்டார். சீனாவின் ராட்சச முன்னேற்றம் ஒரு காரணம் என்றாலும், அமெரிக்கரின் முன்னேற்றத் தொய்வும் இன்னொரு காரணம்.  1970க்கு முந்தைய 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட 14 மடங்கு முன்னேற்றம் என்பது, மனித சரித்திரத்தில் எங்கும் எப்போதும் நிகழ்ந்ததே இல்லை.

இதையெல்லாம் கேட்கக் கேட்க என் முழு தூக்கமும் கலைந்து இந்தப் புத்தகம் பற்றிய தொலைகாட்சி விமரிசனத்தை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினேன். ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான, Niall Ferguson என்பவரின், “Civilization – the West and the Rest”, என்ற புத்தகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் அன்றிரவு புதிய பல சுவாரசியமான வாதங்களை கவனத்துக்குக் கொண்டு வந்தது. புத்தகத்தையும் வாங்கிப் படிக்க வைத்தது.

ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் மேற்குலகு மற்றும் அதன் ஆதிக்கம் என்று எதுவும் இல்லை. சீனாவும் இந்தியாவும் உலக வல்லரசுகளாய் திகழ்ந்து வந்தன. மேற்குலகம் எப்படி இந்தக் குறுகிய காலத்தில், உலகை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு வளர்ந்தது? ஏன் எங்கோ இருக்கும் சிரியாவில் அமைதி நிலவ, எல்லோரும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஏன் பாகிஸ்தானின் பல தீவிரவாத உதவி அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவை எதிர்பார்க்கிறோம்? ஏன் யாருமே ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க நாட்டின் பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூட, இந்தியாவை நினைத்துப் பார்ப்பதில்லை?

25 Jun 2013

The Devotion of Suspect X - Keigo Higashino

சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)


தன் கணவனிடமிருந்து விவாக ரத்து பெற்ற யாசுகோ டீனேஜ் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் அவள், தான் தன் கடந்த காலத்தைக் கடந்து வந்துவிட்ட நினைப்பில் இருக்கிறாள். ஆனால், அவள் வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு அவளது முன்னாள் கணவன், டோகாஷி, வரும்போது கடந்த காலம் அவளைப் பிடித்துக்கொள்கிறது. 

வேலை செய்யும் இடத்தில் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாத அவள், அவனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். அங்கு அவனிடம் பேசிவிட்டு இனி நீ என்னைத் தொல்லை செய்யக்கூடாது என்று சொல்லி வீடு திரும்புகிறாள் யாசுகோ. ஆனால் அவளைப் பின்தொடர்ந்து டோகாஷியும் அவளது வீட்டுக்கு வந்து விடுகிறான். 

அபார்ட்மெண்ட்டில் மற்றவர்கள் முன்னால் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாமல் வேண்டா வெறுப்பாக அவனைத் தன் வீட்டுக்குள் வர அனுமதிக்கிறாள் யாசுகோ. அவன் வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளது மகள் மிசாடோ ஸ்கூல் விட்டு வீடு திரும்புகிறாள். மிசாடோவுக்கு டோகாஷி வளர்ப்புத் தந்தை முறை. 

பணம் கொடுத்து தன் முன்னாள் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறாள் யாசுகோ. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளும் டோகாஷி, மிசாடோ பற்றி மோசமாகப் பேசுகிறான். அதனால் கோபமடைந்த மிசாடோ ஒரு பூச்சட்டியை எடுத்து டோகாஷியைத் தாக்குகிறாள். அடி விழுந்ததும் டோகாஷிக்குக் கோபம் வந்து விடுகிறது. மிசாடோவை பதிலுக்குத் தாக்குகிறான். தன் மகளை அவன் கொன்று விடப் போகிறான் என்ற பயத்தில் யாசுகோ மின்சார வடத்தைக் கொண்டு டோகாஷியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விடுகிறாள்.

21 Jun 2013

Miss Smilla’s Sense of Snow - Peter Hoeg

சிறப்புப் பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)

aka. Miss Simlla's Feeling for Snow

ஆறு வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போகிறான். அது வெறும் விபத்து என்று சொல்லி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர காவற் துறையினர் விரும்புகின்றனர். அதே குடியிருப்பில், அந்தச் சிறுவனோடு நட்பாக இருக்கும் மிஸ் ஸ்மில்லாவுக்கு அச்சிறுவனின் மரணம் விபத்து என்பதில் நம்பிக்கையில்லை.நடந்ததை அறிய அவரே தொடங்கும் விசாரணை அவர் உயிருக்கே உலை வைக்கப் பார்க்கிறது.

நாவலின் கதையென்று எடுத்துக் கொண்டால், த்ரில்லர் வகையைச் சேர்ந்த எந்த ஒரு நாவலின் கதையாகவும் இது இருக்கலாம். கதையின் நாயகமாக ஒரு பெண்; அவள் அபரிதமான திறமை கொண்டவள், ஆனால் சமூக உறவுகளில் சிக்கல். அமைதியான, ஆனால் பலசாலியான ஒரு ஆண், அவனிடம் நாயகிக்கு ஒரு ஈர்ப்பு; இக்கட்டான சமயத்தில் அவளுக்கு உதவ அவன் இருக்கிறான்; தங்களுடைய லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கும் ஒரு நாசகார நிறுவனம்; பதினைந்து நிமிட புகழுக்காக ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யத் தயாராக இருக்கும் ஒரு வில்லத்தனமான விஞ்ஞானி. இப்படி ஒரு சாதாரண த்ரில்லருக்குத் தேவையான மசாலாக்கள் அத்தனையும் இங்கே உண்டு. ஆனால் பீட்டர் ஹாக்கின் பனி குறித்தப் புரிதலும், அவருடைய எழுத்து நடையும் படித்துவிட்டுத் தூக்கி வீசும் இன்னொரு நாவலாக இல்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவலாக Miss Smilla’s Sense of Snowவை காப்பாற்றி விடுகின்றன.

18 Jun 2013

தியாக பூமி - அமரர் கல்கி

சிறப்புப் பதிவர்: சுசிலா ராமசுப்ரமணியன்

முன்குறிப்பு அல்லது முன்னெச்சரிக்கை: கதை சொல்லாமல் விமரிசனம் படைக்கச் சொல்லும் ஆசான்கள் இந்தப் பதிவைக் கடந்து போய்விடுதல் நலம். இது திறனாய்வு அன்று. நேற்று பார்த்த திரைப்படத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றதொரு பகிர்வு. நன்றி.

ல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக, பொன்னியின் செல்வனைப் பலமுறைகள் படித்தது உண்டு. கல்கியின் சமூக நாவல்களில் ’அலை ஓசை’ வாசித்தது உண்டு. தியாகபூமி’யை நீண்டகாலமாகத் தேடியது உண்டு; தியாகபூமி புத்தகத்தைச் சொல்கிறேன்.


நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வழக்கம்போல் கிரியின் கைகளில் அரை டஜன் புத்தகங்கள் இருந்தன (இந்த வரிகளை உங்களுக்காக இடைச் செருகியது; “உங்கள்” கிரி). தேவனின் மிஸ்டர்.வேதாந்தம், கல்கியின் தியாகபூமி இரண்டையும் ‘லபக்’ என்று படியேறுமுன் பிடுங்கிக் கொண்டேன். 

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் எழுதப்பட்ட புதினம் தியாகபூமி. ஆனந்த விகடனில் கல்கி பணிபுரிந்தபோது படைத்த தொடர்கதை. நல்ல வர்த்தக சினிமா எடுக்கவல்ல கதை. அந்தக் காலத்திலேயே இதே தலைப்பில் திரைப்படம் ஒன்றும் வந்துள்ளதாகத் தெரிகிறது. சரியாக அந்தகாலத்து ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் துவங்குகிறது திரைப்படம்; இல்லையில்லை புதினம். தஞ்சாவூர் ஜில்லாவின் நெடுங்கரை கிராமத்தில் 1918’ல் நடப்பதாகக் கதை.

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. தந்தையுடன் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை, ஏழை எளியோருக்கு உதவி என்று ஒரு பக்கா கதாநாயகிக்கான அத்தனை குணாதிசயங்களும் கொண்டு வளைய வருகிறாள். அவளது சிற்றன்னை, சிற்றன்னையின் தாயார் என்று இருவரும் சொல்லத் தேவையில்லாமல் சாவித்திரியை அனைத்து விதங்களிலும் படுத்தியெடுக்கிறார்கள். 

மாடர்னான மணவாட்டியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்ரீதரன். சாவித்திரி ஒரு பட்டிக்காடு என்பது அறியாமல் அவளை ஸ்ரீதரன் மணக்க நேர்கிறது. இங்கேயும் சொல்லத் தேவையின்றி வரதட்சணை கேட்டல், தாலிகட்டும் கடைசி நேரத்தில் இன்னமும் உயர்த்திக் கேட்டல் என்ற குணாதிசயங்கள் கொண்ட ஸ்ரீதரனின் அம்மா.

(அந்த காலத்திலேயே) நான்குநாள் கல்யாணம், நான்காயிரம் வரதட்சணை எல்லாம் தாண்டி சித்தியிடமிருந்து விமோசனம் கிடைத்தது என்று நினைக்கும் சாவித்திரிக்கு தன் புகுந்த ஊரான கல்கத்தாவில் பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வழக்கமான அல்லல்கள், அவலங்கள், மாமியார் கொடுமைகள். 

கொடுமையின் உச்சமாக நிறைகர்ப்பிணியாக கல்கத்தாவிலிருந்து தன்னந்தனியே கிராமத்திற்குப் பயணப்படுகிறாள் சாவித்திரி. ஊருக்கு வந்தால் அடுத்த அதிர்ச்சி அவளுக்கு முன்னதாகவே அங்கே காத்திருக்கிறது. ஊரை வெள்ளம் சூழ்ந்தபோது வேற்று சாதியினருக்கு உதவியதற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் சம்பு சாஸ்திரி மற்றும் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துகொண்டு பட்டணம் செல்கிறார்கள்.

சாவித்திரிக்கு அக்ரஹாரம் அனுமதி மறுக்கிறது. சேரி உதவ வருகிறது. அவளும் பட்டணம் பயணிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. தன் குழந்தையை சம்பு சாஸ்திரியிடம் சேர்த்துவிட்டு சாவித்திரி உமாராணியாக உருமாறுகிறாள். சம்பு சாஸ்திரி தன் பேத்தி எனத் தெரியாமலேயே அந்தக் குழந்தையை வளர்க்கிறார். ”ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!” என்ற பின்னணிப் பாடல் இன்றி புரட்சிப் பெண்ணாக, நவநாகரிக மங்கையாக மாறுகிறாள் சாவித்திரி. காலம் கரைகிறது. ஸ்ரீதரன் தமிழகம் வருகிறான். உமாராணியை அடையாளம் காண்கிறான். தன்னுடன் மறுபடி சாவித்திரி சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட்டுக்குப் போகிறான். 

கோர்ட் சொன்ன தீர்ப்பு என்ன? இறுதியில் சாவித்திரி என்ன முடிவு எடுக்கிறாள்; ஸ்ரீதரனுடன் சேர்ந்தாளா? சம்பு சாஸ்திரி தன் மகளை மறுபடி சந்தித்தாரா? இவற்றை வெள்ளித்திரையில்.... இல்லையில்லை கடைசி அத்தியாயத்தில் வாசிப்பீர்.

கதையின் மிகக் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் “நல்லான்”. சம்பு சாஸ்திரியின் அந்தரங்க உதவியாளன். சம்பு சாஸ்திரியின் சுக துக்கங்கள் அனைத்திலும் கடைசிவரைக் கூட இருக்கும் ’பெயருக்கு ஏற்றதொரு” நல்ல கதாபாத்திரம்.

சரி சரி, இத்தனை சொன்னபின் முடிவையும் சொல்லிவிடுவோம். மகாத்மாவின் அறப்போரில் நாயகனும் நாயகியும் இணைவதாக நிறைகிறது கதை.

கதை நமக்குப் பழகிய கதை என்றாலும் அமரர் கல்கியின் சொக்க வைக்கும் நடை நம்மைப் புத்தகத்துடன் அப்படியே கட்டிப்போடவல்ல ஒன்று என இந்தப் புத்தகமும் நிரூபிக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுப்பவர்கள் கடைசி அத்தியாயம் முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் (மேஜை மேல் வைப்பார்களா என்றெல்லாம் கேட்கக்கூடாது, ஆமாம்).

நல்ல எண்டர்டெயினிங் கதை வாசிக்க விரும்புபவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்கலாம். புனைவுகள் படைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வித டிப்ஸ்களுக்கும் இந்தப் புத்தகத்தை அணுகலாம். கல்கி நிச்சயம் இந்த இரண்டு ரக வாசகர்களுக்கும் கேரண்டி தருகிறார்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று சம்பு சாஸ்திரி மூலமாக சொல்லும் ஆசிரியர், பெண் விடுதலை குறித்து சாவித்திரி வழியே சொல்கிறார். தேச விடுதலை பற்றின எண்ணங்களும் கதை நெடூகிலும் உண்டு. இந்தக் கதைக்கும் கதை திரைக்காவியமாகப் படைக்கப்பட்ட போது அதற்கும் அந்த காலத்துப் பொதுஜனங்கள் எப்படி வரவேற்பு தந்தார்கள் என்று தெரியவில்லை. 

தன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதுதான் சரி என்று, “நம் தேசத்திலேயே ஆதிகாலத்திலிருந்து எத்தனையோ பேர் தியாகம் செய்யவில்லையா? நம் தேசத்தை அதனால்தானே தியாகபூமி என்று சொல்கிறார்கள்”, என்று சம்பு சாஸ்திரி இறுதியில் சாவித்திரியிடம் கேட்கிறார்.

“சுதந்திரத்திற்காகத்தான் தியாகம் செய்வே; அடிமைத்தனத்திற்காக ஒரு போதும் தியாகம் செய்யேன்”, என்னும் சாவித்திரியின் ஆணித்தரமான பதில்கள் மிக வீரியம் மிக்கவை. படிக்கையில் நம்மைப் புல்லரிக்கச் செய்பவை என்றால் அது மிகையில்லை.

__________________

தியாகபூமி
சமூக நாவல்
அமரர் கல்கி
அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கும்
அனைத்துப் பதிப்பகங்களிலும் நிச்சயம் கிடைக்கும்
விலை ரூபாய். பதிப்பாளரையும் அச்சுத் தரத்தையும் பொருத்தது :)


7 Jun 2013

கதை வளர்த்தல் - ஷாந்தி





 கதை கேட்பது, படிப்பது ஒரு ஆசுவாசமான சுகம். கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் விரியும் கற்பனை, ஆர்வம், கவனம் மற்ற விசயங்களில் எத்தனை முயன்றாலும் வருவதில்லை. சிறுவயதில் அம்புலிமாமா, கோகுலம் என படிக்கும் புத்தகம் முழுக்க கதைகள் இருந்தாலும் தொடர் கதைகளும், படக்கதைகளும் முதலில் படித்துவிட்டு மற்ற கதைகளைப் படிப்பேன். சுவாரஸ்ய திருப்பங்களோடு "தொடரும்" என முடியும் கதைகள் தொடர அடுத்த இதழுக்காக காத்திருப்பதும், அடுத்த இதழ் வந்ததும் உடனே படித்துவிட்டு மறுபடி காத்திருப்பதுமே வழக்கமாய் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் தொடர்கதை, படக்கதை, கைவினைப்பொருள் குறிப்பு என ஆளுக்கு ஒன்றாய் பிரித்து, கத்தரித்து, தொகுத்து, சேமித்து வைத்தது உண்டு. அத்தகைய தொகுப்புகளை மொத்தமாய் படிக்க அத்தனை ஆனந்தமாய் இருக்கும். விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் என புத்தக கண்காட்சிகளில் ஏதேனும் புத்தகம் ஒன்றை வாங்கும் வழக்கமும் இருந்தது.

கதை கேட்டு, கதை படித்து, பின் அதையெல்லாம் மறந்து பாடத்திட்டதில் கதைகதையாய் எழுதி முடித்து பெற்றோர் பதவி வரும்வரை கதை சொல்லும் அவசியம் இருக்கவில்லை. பின் மகனுக்கு உணவு ஊட்ட கதை அவசியமானபின் கிட்டத்தட்ட மூன்று வேளை மூன்று கதைகள் சொல்லவேண்டி வந்தது. அதுவும் சுவாரஸ்யமான கதைகள் மட்டுமே சொல்ல வேண்டும் எனப் பல நிபந்தனைகள்.

5 Jun 2013

குழந்தைகளுக்கான பகடிக் கதைகளும் புராணக் கதைகளும் - ஹரன் பிரசன்னா

குழந்தைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் - ராமகிருஷ்ண மடம்

எல்லா பெற்றோர்களுமே ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லத் திணறியிருப்போம். அதுவரை புத்தக வாசிப்பு இல்லாதவர்கள்கூட, குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதற்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கத் தொடங்கியிருப்போம். 

இன்றுவரை என்னிடம் தொடர்ந்து தனிமடலில் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், குழந்தைகளுக்கான கதை சொல்வதற்கு ஏற்ற புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு. ஆங்கிலத்தில் இப்பிரிவில் ஏகப்பட்ட புத்தகங்கள் மலைபோல் குவிந்திருக்கின்றன. ஆனால் தமிழில்தான் இப்பிரிவில் நாம் நினைக்கும் வண்ணம், நமக்குத் தேவையான நோக்கில் நிறைய புத்தகங்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்கள் உள்ளன. இவை எல்லாமே குழந்தைகளுக்கான புத்தகங்களாகவும் இல்லாமல், பெரியவர்களுக்கான புத்தகங்களுமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக அமைந்துவிட்டன என்பது என் எண்ணம். இக்குறையை ஓரளவு போக்கியிருப்பது, ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் மட்டுமே. 

4 Jun 2013

கதையும் கணிதமும் - தியானா

பூந்தளிர்

ஒரு செல்வ‌ந்த‌ர் ஊரிலுள்ள‌ அனைத்து ம‌க்க‌ளிட‌மும் ப‌ண‌ம் ப‌றிப்பார். ஹீரோ செல்வ‌ந்தரை மதியால் வென்று ம‌க்க‌ளைக் காப்பாற்றுவார். இது இந்த‌ப் ப‌ட‌த்தின் க‌தை, அந்த‌ப் ப‌ட‌த்தின் க‌தை என்று ந‌ம்மால் ப‌ல‌ ப‌டங்க‌ளின் பெய‌ர்க‌ளைச் சொல்ல‌ முடியும். இதுவே தான் One Grain of Rice - யின் க‌தையும். ஆனால் எவ்வாறு ம‌க்க‌ள் காப்பாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர் என்ப‌தில் தான் சுவார‌ஸ்ய‌மும் க‌ணித‌மும் பொதிந்திருக்கிற‌து.

இது ஒரு இந்திய‌ கிராமிய‌க் க‌தை. வெகு கால‌த்திற்கு முன் ராஜா ஒருவ‌ர் இந்தியாவை ஆண்டு வ‌ந்தார். அவ‌ர் அர‌சாட்சியிலுள்ள‌ மக்க‌ள் அனைவ‌ரும் வ‌ச‌தி மிகுந்த‌ விவ‌சாயிக‌ள். ம‌க்கள் தாங்க‌ள் விளைவித்த‌ அரிசியை த‌ங்க‌ள் தேவைக்கு எடுத்த‌து போக, மீத‌ம் உள்ள‌தை ராஜாவிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். தான் அரிசியை சேமித்து வைத்து, ப‌ஞ்ச‌ம் வ‌ரும் கால‌த்தில் கொடுப்ப‌தாக ராஜா வாக்குறுதி அளித்து, சேமிப்புக் கிட‌ங்குக‌ளை நிறைத்து வைக்கிறார். சில வ‌ருடங்கள் க‌ழித்து, ப‌ஞ்ச‌ம் வ‌ருகிற‌து. ராஜா தான் கொடுத்த‌ வாக்குறுதியைக் காப்பாற்ற‌வில்லை. ம‌க்க‌ள் அனைவ‌ரும் ப‌ஞ்ச‌த்திலும் ப‌ட்டினியிலும் வாடுகின்றன‌ர்.

1 Jun 2013

ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்


                          சிறப்புப் பதிவர் - R.கோபி

மொத்தம் பதினைந்து கதைகள். ஒன்று கூட சம்பிரதாயமான கதை இல்லை. சில கதைகள் ஆசிரியரின் அந்த நேரத்து மன ஓட்டத்தின் பதிவுகள் போல இருக்கின்றன.

‘சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளைக் கலைத்து மாற்றியமைக்கும் யுவன் சந்திரசேகரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.’
-    பின்னட்டையில் வருவது

27 May 2013

காகித மலர்கள் - ஆதவன் - 1977

சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா

எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக்கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல் அல்ல (நன்றி: Snap Judgment

முன்னெச்சரிக்கை: முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முழுக்க முழுக்க ரசித்துச் சிலாகித்துப் படித்த புத்தகம் இது என்பதால் இந்தக் கதை பற்றி எதிர்மறையாக நான் ஒரே ஒரு எழுத்தையும் இங்கே எழுதப் போவதில்லை. முழுவதும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் என்று நான் எழுதியிருப்பது உங்களுக்கு ஒரேயடியாக போரடித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, ஆதவனே பொறுப்பு.

தைத் தலைப்புடன், ஆசிரியர் பெயருடன் கதை எழுதப்பட்ட வருடத்தையும் மேலே குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால், விமர்சனம் படிப்பவர்கள் தற்போதைய காலகட்டத்தில் வெளிவந்த நாவல் இது எனக் கருதி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஒற்றை வரியில் சொல்வதானால் டில்லியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மதிப்பீடுதான் கதை.

வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று சகோதரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத நபர்கள் என இவர்களைச் சுற்றியே கதை வளைய வருகிறது. நாகரிகம் என்னும் பெயரால் ஒவ்வொருவரும் (பாத்திரங்கள்) செய்யும் பாசாங்குகள், அவை அவர்களுக்குத் தரும் திருப்தி அல்லது சலிப்பு, நாகரிக வாழ்க்கை குறித்த அவர்களது மதிப்பீடுகள் இவையே கதையின் மைய இழையாக இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சேதன் பகத் எழுதிய ‘one night at call centre"ன் சில காட்சிகளை 77’ல் வெளிவந்த இந்தக் கதையின் காட்சிகளோடு (கதை, கதாபாத்திரங்களோடு அல்ல) ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. குறிப்பாக...பெண்கள் ரெஸ்டரண்டில் பீடி பிடிப்பது.... ஓ! ஸாரி.. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, pre-marital sex (தமிழில் எழுத கூச்சமாயிருக்கு போங்கப்பா :) ).

இவையெல்லாம் அப்போதே... அந்த 70’களிலேவா? (அப்பாடா! டில்லியில்தான்). ஆனால் பாருங்கள், ஆதவன் இவ்விஷயங்களைக் கையாண்டிருக்கும் விதத்தால் மக்கள் யாரும் அவரை சேதன் பகத் அளவிற்கு எதிர்த்து அல்லது ஆதரித்துப் பிரபலம் ஆக்கவில்லை போலும்.

டில்லி மாநகரின் இடங்களை விவரிப்பதில் மாநகருடன் கதாசிரியருக்கு இருக்கும் பரிச்சயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. (சுஜாதாவின் சில கதைகளைப் படித்தால் பெங்களூருவின் கீ-ப்ளான் உங்களுக்குக் கிடைக்கும்)


மனோதத்துவ நிபுணர் போல் கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள்; சமூக அக்கறை கொண்ட விஞ்ஞானி போல் செயற்கை உரங்கள், அதன் தொழிற்சாலைகளால் மண்ணுக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் கேடுகள்; ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் போல் அரசாங்கம், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என ஆதவனின் ஆல்-ரவுண்ட் பர்ஃபார்மன்ஸில் கதையை ரசிக்க முடிகிறது.

அரசாங்க அலுவலகத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் அனைவரது செயல்பாடுகள் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், புறக்கணிப்பு என விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆதவன். பல்வேறு துறைகள் பற்றி, விஷயங்களைப் பற்றி கதாபாத்திரங்களின் விவாதங்கள்  சிந்தனைகள் மூலம் தம் கருத்துகளைப் பதிவு செய்வதைப் படிக்கும்போது பல்வேறு துறைகளைப் பற்றிய கதாசிரியரின் ஆழ்ந்த ஞானம் நம்மை நிச்சயம் வியக்க வைக்கிறது என்றால்; இதில் எங்கும் தன் சிந்தனைகளை, யாரோ இருவரின் சம்பாஷனை அல்லது விவாதம் வழியே நம் மீது வலிந்து திணிக்காமல் கதையோட்டத்தோடே கொண்டு செல்லும், சொல்லும் பாங்கில் ஆதவனின்... மேதைமை என்றழைக்கலாமா அந்த பண்பை... அது நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதில் பிடித்த சிந்தனையைத் தூண்டும் வரிகளை அடிக்கோடிட்டு திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் அடிக்கோடிட வேண்டும் என்று ஆரம்பித்தால் சில இடங்களில் பக்கம் பக்கமாக (முழுப்பக்கங்களையும்) அடிக்கோடிடும் அவசியம் ஏற்படும்.  Random-ஆக பிரித்து ஒரு பக்கத்திலிருந்து நான்கு வரிகளும் அதிக பட்சம் பக்கம் முழுவதையும் select செய்யலாம்.

என்னைப் பொருத்தவரையில் லைப்ரரியில் எடுத்த புத்தகம் இது என்பதால், அடிக்கோடிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் புத்தகம் வாசித்து முடித்த பின் மேலே சொன்ன அதே random முறையில் புத்தகத்தை book cricket விளையாடும் பாங்கில் அங்கங்கே பிரித்த இடத்தில் பிடித்த வரிகளைக் குறிப்பிடுகிறேன்.

பெண் சிந்தனையால் அணுகப்பட வேண்டியவள்...... சிந்தனைக்கு முதலில் விடுதலையளித்து விட வேண்டும். அவள் உருவாக்குகிற பிரமைகளில் ஏமாறும் முட்டாளாக வேண்டும். புலப்படாதவை புலப்படுவது போலவும், புலப்படுவது புலப்படாதது போலவும் பாசாங்கு செய்ய வேண்டும். 
இயற்கையின், சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம்தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாக்க முயல்கிறான்.
ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்திற்கு அந்தந்த சாரார் பொறுப்பாளி என்பது உண்மையோ இல்லையோ! ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை 

வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு முடிவிற்காக வெவ்வேறு விதமான முடிவுகளை ஒரே சமயத்தில் ஏற்படுமாறு முடித்திருக்கிறார் ஆதவன். எனினும், அந்த முடிவு அத்தியாயம் எழுதிய விதத்தில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். 

காகித மலர்கள் | ஆதவன் | உயிர்மை | இணையம் மூலம் வாங்க: உயிர்மை


2 May 2013

18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்

 
சிறப்புப் பதிவர் - கண்ணன்
 
ஒரு நாவல் எப்படி ஒரு வாசகனைத் தன்னுள் முழுமையாய் மூழ்கடித்து, ஓர் உச்சகட்ட மனநிலைக்கு இழுத்துச் செல்ல முடியும் என்பதற்கு மிகச்சிறந்த சான்று - அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு.

சந்திரசேகரன் என்கிற ஒரு சிறுவன் ஆளாகி முதிரும் கதை. இந்திய விடுதலைக்குப் முன்னும் பின்னும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஐதராபாத் களம். பிரபலமான எந்தவொரு ‘coming of age’ நாவலுக்கும் நிகராக ஒப்பு நோக்கக்கூடிய ஒரு படைப்பு.

சந்திரசேகரனின் வளர்ச்சியும் சமகால சரித்திரமும் பிண்ணிப் பிணைந்து வருகின்றன.
 


22 Apr 2013

இந்தியன் ஆவது எப்படி? - பவன் கே. வர்மா


சிறப்புப் பதிவர்: பத்ரி சேஷாத்ரி (@bseshadri)


சமீப காலங்களின் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் இது ஒன்று. பவன் வர்மாவின் கருத்துகள் அனைத்துடனும் நான் ஒத்துப்போகவில்லை. ஆனால் அவருடனான உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறேன்.

பிற நாடுகளால் அடிமையாக்கப்பட்டு, காலனியாக இருந்து, பின்னர் விடுதலை அடையும் நாடுகள், ஒருவித உளவியல் சிக்கலுக்கு ஆளாகும். நம்மை ஆண்டவர்கள் மீது பயம், அதே சமயம் அவர்கள் நம்மை நடத்திய விதம் காரணமாக அவர்கள் மீது வெறுப்பு, அவர்களுடைய திறன் மீதான மரியாதை,அவர்களுடைய கலாசாரத்தை உயர்ந்தது என்று நினைத்து அதன் மீதான ஆசை, நம்முடைய கலாசாரம் தாழ்ந்தது என்ற எண்ணம், அதே நேரம் நம் கலாசாரத்தில் தொன்மையான, மதிக்கத்தக்க அம்சம் ஏதேனும் இருந்ததா என்றதொரு தேடல், இப்படிப் பலப்பல எண்ணங்கள் நம்மை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். காலனி ஆதிக்கத்தில் வாழ்ந்திராத பிற நாட்டவருக்கோ, இந்தச் சுமைகள் ஏதும் இருக்கா.

7 Apr 2013

The Race for a New Game Machine - David Shippy and Mickey Phipps


சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் 



இன்று வழக்கமாக வீடுதோறும் நாம் பார்க்கும் காட்சி இது: முதியவர்கள் டிவி சீரியல்களில் உருகிக் கொண்டிருக்கையில், இளைஞர்(ஞி)கள் தங்களுடைய அறைகளில் படிப்பு/ வேலை/ தூக்கம் தவிர்த்த நேரத்தை கணினி விளையாட்டுகளில் களிக்கிறார்கள். குழந்தைகள் வெளியே விளையாடாமல் இளவயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு கணினியுடன் சஞ்சலிக்கிறார்கள் என்று முதியவர்கள் கவலைப்படுகிறார்கள். நடுத்தர குடும்பங்கள் எங்கும் நாம் சாதாரணமாக பார்க்கும் காட்சி இது.

அட, புத்தக விமர்சனம் என்று பார்த்தால் ஏதோ சமூக கட்டுரையைப் படிக்க வேண்டியிருக்குமோ என்று நீங்கள் கவலைப்படுவது புரிகிறது. இன்றைய இளைய தலைமுறையை இப்படிச் சுண்டி இழுக்கும் எலெக்ட்ரானிக் விளையாட்டு எந்திரங்களை உருவாக்கியவர்களைப் பற்றிய புத்தகத்தைத்தான் இன்று அறிமுகப்படுத்திக் கொள்ளப் போகிறோம். 

31 Mar 2013

இறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்




சாதாரணமாய் வாழ்க்கையில் நாம் அவ்வப்பொழுது கேட்பது, “அவருடைய அப்பாவின் கனவை நிறைவேற்றி, வெற்றி பெற்று விட்டார். எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும்?” – என்பது போன்ற வாக்குமூலங்கள். தனி மனிதக் கனவுகள் சிலருக்கு, தங்கள் வாழ்நாளில் நனவாகின்றன. சிலருக்கு, பல தலைமுறைகளுக்குப் பிறகே நனவாகின்றன. பலருக்கும் அவை கனவாகவே இருந்துவிடுகின்றன. நாம் இங்கு பார்க்கவிருப்பது, பெளதிகத் துறையின் நிறைவேறாத கனவு பற்றிய ஒரு அருமையான புத்தகம்.


அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் பௌதிக இயக்கங்கள் அனைத்தும், நியூட்டன் என்ற 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய பெளதிக கோட்பாட்டாளர் உருவாக்கிய இயக்க கோட்பாட்டின்படியே (Newton Laws of Mechanics) இயங்குகின்றன. பெரிதளவில், இயந்திரவியலின் (mechanical engineering) அடிப்படையும் இதுவே. இதன் பிறகு, ஒரு 150 ஆண்டுகள்,  பெளதிகமும், வேதியலும் வெவ்வேறு பாதைகளில் முன்னேறி வந்தன. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அணு ஆராய்ச்சி இத்துறைகளின் அடிப்படைக் கொள்கைகள் ஒன்றே என்பதைத் தெளிவாக்கியது. இன்று, அணு வேதியலில் (nuclear chemistry) ஏராளமான அணு பெளதிகம் அடங்கியிருப்பதை எல்லோரும் படிக்கிறோம். 


25 Mar 2013

The Universe and Dr. Einstein – Lincoln Barnett

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்



அமரர்  சுஜாதா கதைகளில் அவரது பாத்திரங்கள் ஏதாவது ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி சொல்வது போலச் சித்தரிப்பார். புத்தகத்தைப் படிக்கும் வாசகனின் வாசிப்பை விரிவுபடுத்தும் ஒரு அழகிய உத்தியாக அது இருந்தது. கணேஷ் ஏதாவது ஒரு புதிய துப்பறியும் கதாசிரியரைப் பற்றிச் சொன்னால், உடனே அந்த கதாசிரியரை புத்தகக் கடையில் தேடி (அந்த காலத்தில் கூகிள் எல்லாம் கிடையாது), வாங்கி வாசிப்பது பழக்கமாகி இருந்தது. இப்படி, சுவாரசியமான நிகழ்வுகள் புத்தகப் படிப்பை மிக ஜாலியாக வளர்த்தது காலப் போக்கில் மாறி விட்டது.

இப்போதெல்லாம் வாரக் கடைசிகளில், சில சமயம் TED  என்ற அறிவார்ந்த கருத்தரங்கு விடியோக்கள் பார்ப்பது ஒரு உருப்படியான பொழுது போக்காக இருக்கிறது. அப்படி ஒரு வாரக் கடைசி மாலையில் பார்த்த விடியோ, ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து மகிழ உதவியது. அனில் அனந்தஸ்வாமி என்பவர், படித்த பல லட்சம் இளைஞர்களைப் போல மென்பொருள் துறையில் குப்பை கொட்டி வந்தவர். இவர், உலகின் மிகவும் ரிமோட்டான (சரியான தமிழ் வார்த்தை சிக்கவில்லை) இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள மனம் தளராமல் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து, விவரணப் படங்கள் எடுத்து வருகிறார் - 'The Edge of Physics' 

1 Mar 2013

Complete Prose - Woody Allen

சிறப்புப் பதிவர்: பேயோன்

அமெரிக்கத் திரைப்பட இயக்குநராகப் புகழ்பெற்ற நகைச்சுவையரசர் வுடி ஆலனின் Complete Prose பற்றிப் பூரித்து எழுத நிறைய விஷயம் இருக்கிறது. கட்டுரைகள், சிறுகதைகள், குட்டிக் கதைகள், சில நாடகங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்தப் புத்தகம். பல படைப்புகள் நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்தவை.

வுடி திரையுலகில் கால்பதிக்கு முன்பு நகைச்சுவை மேடைப் பேச்சாளராக இருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் (தெரிந்திருக்காது என்ற ஊகத்தில்தான் இதைச் சொல்கிறேன்). இந்தப் படைப்புகளில் Annie Hall, Interiors, Manhattan, Crimes and Misdemeanors போன்ற படங்களை இயக்கிய சீரியஸ் ஆசாமியைவிட Love and Death, Take the Money and Run, The Curse of the Jade Scorpion போன்ற 'செரி காமெடி' வகைப் படங்களை இயக்கிய நிகழ்த்துகலைஞரைப் பார்க்கலாம்.

இந்த அறிமுகக் கட்டுரையை முடித்துக்கொள்வதற்கு முன்பு அதன் உள்ளடக்கம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

'கம்ப்ளீட் ப்ரோஸ்' ஆனது Getting Even (1971), Without Feathers (1975), Side Effects (1980) ஆகிய நூல்களின் 'கண்டு' என்று சொல்லலாம். மூன்றையும் வெளியிட்டது ராண்டம் ஹவுஸ் பதிப்பகம். இந்தத் தொகுப்பை 1991இல் விங்ஸ் புக்ஸ் வெளியிட்டது. முன்னுரையைச் சேர்க்காமல் 473 பக்கங்கள் (புத்தகத்தில் முன்னுரை இல்லை). இந்நூலில் 52 ஆக்கங்கள் இருக்கின்றன. நான் புரட்டிக்கொண்டிருப்பது இணையத்தில் வாங்கிய கச்சிதமான Picador "பேப்பர்பேக்" பதிப்பு.

கம்ப்ளீட் ப்ரோஸில் உள்ள எல்லா படைப்புகளுமே தவறவிடக் கூடாதவை. குறிப்பாகப் பேருந்து இருக்கையில். ஆனால் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம் என்று கூறத்தக்க சில படைப்புகளை இங்கு அறிமுகப்படுத்துகிறேன். வுடி ஆலனின் நகைச்சுவையின் வீச்சிற்கு இந்தக் கதைகள் நல்ல எடுத்துக்காட்டுகள். இதில் தரவரிசை எதுவும் இல்லை.

17 Jan 2013

ரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்

சிறப்புப் பதிவர்: வானதி நடனம்

கடந்த வாரங்களில் தான் படித்த மூன்று புத்தகங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைந்துள்ளார் நம் ட்விட்டர் நண்பர் வானதி.


1. ரஜினியின் பஞ்ச் தந்திரம்
தலைவனுக்காக (அதாவது என் தலைவனுக்காக) தலைவனின் படம் போட்ட புத்தகம். ரஜினியின் குறிப்பிட்ட சில பஞ்ச் வசனங்கள் அலுவலகம் மற்றும் வீடு (personal & Management) இரண்டு இடங்களிலும் எப்படிப் பொருந்திப் போகின்றன என்பதைப் பேசுகிறது இப்புத்தகம். மக்களைக் கவர்வதுபோல் தலைப்பு வைத்தால் மட்டும் போதாது.. இன்னும் நிறைய உழைத்திருக்கலாம் எழுதும் முன். டைம்லைன் ஃபிக்ஸ் பண்ணியாச்சே என்று வேறு வழியில்லாமல் போகிறபோக்கில் எழுத்தப்பட்டிருக்குமோ என்ற உணர்வு முதல் சில பக்கங்களிலேயே வந்துவிடுகிறது. பக்கங்களில் பாதி ரஜினியின் படங்கள்; கலர் ப்ரிண்டிங் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ;) . அனைவருக்கும் தெரிந்த அவரின் பஞ்ச் வசனங்கள் தான் படிப்பவரைக் கவர்கின்றன, அட்டைப்படத்தில் சொல்லியிருப்பதைப் போல் “மேனேஜ்மெண்ட் யுக்திகள்” அல்ல.


லேண்ட்மார்க்கில் இப்புத்தகம் “மோஸ்ட் செல்லிங்” பிரிவில் இருந்ததற்கு(இருப்பதற்கு?) ஒரே காரணம் வழக்கம் போல் ”ரஜினி” என்ற பெயரில் இருக்கும் வசீகரமே. இதே புத்தகம் ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. 

2. Nike - The Vision Behind The Victory - Tracy Carbasho

Nike நிறுவனத்தின் வெற்றிக்கதை. 1960களில் Blue Ribbon Sports என்ற பெயரில் கம்பெனி துவங்கப்பட்டது முதல் நைக்கின் தற்போதைய தயாரிப்புகள், விளம்பரத் தூதுவர்கள், நைக் நிறுவனம் வாங்கிய அவார்ட்ஸ், இடம் பெற்ற லிஸ்ட்ஸ் என சின்னச் சின்ன தகவல்களால் நிறைந்திருக்கிறது இந்த 150 பக்க புத்தகம்.


காரில் இஞ்சின் மவுண்ட் செய்யும் போது இஞ்சின் அடிபடாமல் இருக்க உதவும் மெட்டீரியலை ஸ்போர்ட்ஸ் ஷீ ஒன்றில் பயன்படுத்திய நைக் மக்களின் நுட்பம், தாங்கள் தயாரிக்கும் ஷீ முதல் அவற்றை பேக் செய்யும் அட்டைப்பெட்டிகள் வரை அனைத்து பொருட்களிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராத வகையில் சுழற்சி முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது, டைகர் வுட்ஸ், செரீனா வில்லியம்ஸ் போன்ற தங்களின் விளம்பரத் தூதுவர்களுக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்னை வந்த போது அதை அரசியலாக்காமல், அவர்களின் காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்யாமல் அவர்களுக்கு பக்கபலமாக நின்றது இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

நைக் என்றவுடன் நினைவுக்கு வருவது “Just Do it", மற்றும் மைக்கேல் ஜோர்டன். இதில் மைக்கேல் ஜோர்டன் மற்றும் அவரின் பெயரில் வந்த ஏர் ஜோர்டன் ஷூக்களுக்காக தனி சாப்டரே ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாசிட்டிவ் விஷயங்களை விரிவாக அலசிய ஆசிரியர், நைக்கின் நெகட்டிவ் பக்கங்களாக ஆரம்பத்தில் இருந்த “குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை” பற்றி சில வரிகள் மட்டுமே எழுதியிருக்கிறார். விளம்பரத் தூதுவர்கள் முதல், நைக் வெளியிட்ட சில அறிக்கைகள் வரை அவர்கள் பேசியதை/எழுதியதை அப்படியே பாடப்புத்தக ஞாபகத்தில் இதிலும் ரெஃபரன்ஸுக்காகக் கொடுத்திருப்பது தான் கொஞ்சம் போரடிக்கும் விஷயம். நைக் என்ற கம்பெனியைப் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்துகொள்ள படிக்கலாம். By The Way, Nike என்ற வார்த்தைக்கு அர்த்தம் Greek Goddess Of Victory. 

3. Great Leaders Grow - Ken Blanchard & Mark Miller

மற்றுமொரு லீடர்ஷிப் புத்தகம். இந்தமுறை பெரிய லெவெலில் இல்லாமல், எல்.கே.ஜி லெவலில். கல்லூரி முடித்து அடுத்து என்ன என்ற குழப்பத்திலிருக்கும் ஒருவர், வேலைக்குச் சேர்வதும், அங்கு அவர் கற்றுக்கொள்ளும் லீடர்ஷிப் அ,ஆ,இ,ஈ பாடமே இப்புத்தகம். வெறும் கருத்துகளாக கொட்டிக்குவிக்காமல், சொல்லவந்ததை ஒரு கதை போல் சொல்லியிருக்கிறார்கள் ஆசிரியர்கள் இருவரும். டிஷ்யூ பேப்பர் நோட்ஸ், எளிமையான கருத்துகள், முசுடு மேனேஜர், தலைக்கு மேல் வெள்ளம் போன ப்ராஜெக்ட்டுகள், வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பதில் சொல்ல மறுக்கும் சீனியர்கள் என நடைமுறை உதாரணங்கள். ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிடலாம். என்ன, சொல்லப்பட்ட  கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு தான் சில பல வருடங்களாகும்.


Must read என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த மாட்டேன். படித்தால் you will GROW. படிக்கும் போது தெரியும் இந்த GROW வுக்கான அர்த்தம்.

Happy Reading. 


_________________


ரஜினியின் பஞ்ச் தந்திரம் - பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 140 விலை: 80
ஆன்லைனில் வாங்க : டிஸ்கவரிபுக்பேலஸ் - http://discoverybookpalace.com

“Nike – The Vision behind the Victory”
Jaico Publishing House
Pages: 204, Price: Rs. 195.00
To buy Online: flipkart.com

“Great Leaders Grow” – by Ken Blanchard & Mark Miller
Collins Business
Pages: 144, Price: 120.00
To Buy Online: flipkart.com

15 Jan 2013

அழிவற்றது - அசோகமித்திரன்

சிறப்புப் பதிவர்: தோட்டா ஜெகன்

199 முறை புத்தகங்களை சுமந்து வாசகர்களின் வாசல் வரை வந்து விட்டு சென்ற ஆம்னிபஸ்ஸின் பொங்கல் சிறப்பு பேருந்தில் எனக்கும் ஒரு டிக்கெட்டை கையிலே திணித்து பஸ் ஏற்றி டாட்டா காட்டி அனுப்பிவைத்த அண்ணன் கிரி அவர்களுக்கு நன்றிகளுடன் தொடங்குகிறேன்.

விமர்சனங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் பல சமயங்களில் அவை படைப்பை விடுத்து படைப்பாளியின் மீது தெறிக்கப்படும் அம்பாய் முடிந்து விடுகின்றன என்பது முதல் காரணமாய் இருந்தாலும், முக்கியமான காரணம், எனக்கு(ம்) விமர்சனம் எழுத வராது. அசோகமித்திரனின் 'அழிவற்றது' என்ற சிறுகதை தொகுப்பை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு ஒரு நூல் அறிமுகமாகவும் அதில் இருக்கும் சிறுகதைகளின் அறிமுகமாகவும், பேப்பர்க்கார சிறுவன் தினசரியை அவசரகதியில் வீசிவிட்டுச் செல்வதைப் போல சொல்லவிழைகிறேன்.

எனது சிறு வாசிப்பின்படி என் நம்பிக்கை என்னவென்றால், தமிழ் ( நவீன ) சிறுகதை உலகை இந்திய கிரிக்கெட் அணி என எடுத்துக்கொண்டால், அதில் புதுமைப்பித்தன் தான் அணியின் பேட்டிங் கோச், மௌனி பவுலிங் கோச், அணியின் கேப்டன் சு.ரா, துணை கேப்டன் அசோகமித்திரன். தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடான், அ.முத்துலிங்கம் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், கு.அழகிரிசாமி, வண்ணதாசன் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், சுஜாதா என்னும் ஆல்ரவுண்டரையும் கொண்ட பலமான பேட்டிங் வரிசை.ஜெயமோகன் தான் அணியின் சச்சின்.  மாமல்லனும், எஸ்ராவும் அணிக்கு கிடைத்த இரு பெரும் சுழல் பந்து வீச்சாளர்கள். ஜெயகாந்தனும், கி.ராவும் தான் அணியின் வேகபந்து வீச்சாளர்கள்.

அணியின் துணை கேப்டன் அசோகமித்திரன் எழுத வந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுத வந்த முப்பது வருடம் கழித்தே பிறந்த என்னை போன்றவர்கள் அவர் நூலை தேடிப் பிடித்து படிக்கும் தொல்லை இன்றி எங்கள் ஊரின் எல்லா புத்தககடைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் தலைவர். என்னளவில் அசோகமித்திரனின் எழுத்துநடை என்பது, அது  நாவல்களோ, சிறுகதையோ, கட்டுரையோ, வாக்கியங்கள் என்பது அவர் பேனாவை திறந்தவுடன் தாளில் வந்து படுத்துக்கொள்கிறது. அவர் ஒரு போதும் அதில் வார்த்தைகளை சேர்ப்பதில்லை, மாறாக தேவையற்ற வார்த்தைகளை நீக்குகிறார் அவ்வளவே. "அழிவற்றது" அவரது முழு சிறுகதைகளும் தொகுப்பாக வந்த பின்னர் எழுதியது. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொகுப்பில் உள்ள கதைகளின் எண்ணிக்கை 17.

அவரவர் தலையெழுத்து:

விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நூலில் அழகும் வேடிக்கையும் கலந்து கோர்க்கப்பட்டிருக்கும் மிக சிறிய சிறுகதை இது.

பழங்கணக்கு:

இந்த தொகுப்பிலே இருக்கும் மிக சாதாரண, எளிதில் அனுமானிக்கக்கூடிய மிக சின்ன சிறுகதை.

முக்தி:

பாவத்தை கழுவ பிராயச்சித்தம் சொல்லித் தந்தவனே பாவமூட்டையைத் தூக்கிச் சுமக்க நேரிடும் கதை. துறவியே ஆனாலும் மனித தேகத்தில் சந்தேகம் துளியாவது மிச்சம் இருக்கும் என எளிதில் புரிய வைக்கும் எளிமையான கதை.

திருநீலகண்டர்:

மனித மண்டை ஓட்டையும், யாசகர்களின் திருவோட்டையும் உள்வாங்கி ஓடும் அழகிய சிறுகதை.

அப்பாவின் கோபம்:

வீம்பான அப்பாவுக்கும், வேலைக்கு போகும் சராசரி மகனுக்கும் இடையே நிகழும் ஒரு நாள் மனபோராட்டமே இந்த கதை. 

நகல்:

இந்த தொகுப்பில் உள்ள சிறந்த கதைகளில் ஒன்று. இஞ்சினியரிங், மெடிக்கல் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பிடிப்பு உண்டு, பாலிடெக்னிக்கும் ஆர்ட்ஸும், கம்ப்யூட்டர் டிப்ளமோவும் படிக்கும் மாணவர்கள் ஒரிஜினலின் ஜெராக்ஸ் பேப்பரைகளை  போல மற்றும் ஒரு தாள் தான் என விளிக்கும் அற்புதச் சிறுகதை. ஒன்னுக்கு தான் மதிப்பு பத்தோட பதினொன்னுக்கு அல்ல எனவும் கொள்ளலாம்.

கிணறு:

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அல்ல நடப்பது நடந்தே தீரும் என்ற சரத்தில் கட்டப்பட்ட வெடிகள் வெடிப்பதே இந்த கதை. இந்த சிறுகதையை படிக்கும் போது  எனக்கு கிறிஸ்டோபர் நோலனின் பிரஸ்டீஜ் படமும், சிறுவர்கள் ஒரு கண்ணாடி பேழைக்குள் 4 பால்ரஸ் குண்டுகளை அடைத்து விளையாடும் கருவியும் நியாபகத்திற்கு வந்தது, ஏனெனத் தெரியவில்லை.

ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ:

திரையுலகில் வாய்ப்புக்கு காத்திருந்து ஏய்ப்புக்கு உள்ளாகும் ஒருவனை சுற்றி நடக்கும் கதை.

பிச்சிகட்டி:

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியில் கணவனும் மனைவியும் வெவ்வேறு நேரங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஒரு வெறுமையான இரவில் மின்சாரம் போய் விடுகிறது. அப்போது அதனைச் சரிசெய்ய வரும் மின்சார வாரிய ஊழியர்கள் பணியை கவனித்து, உதவி தன் வெறுமையை அந்த இருட்டினுள் போக்கிக்கொண்டு ஒரு இரவை கடக்கும் கதை நாயகன் பற்றிய கதை.

வீட்டுமனை:

எல்லா நடுத்தர வர்க்க மனிதனுக்கும் ஒருக்கும் அதே கனவு தான், சாவதற்குள் வீட்டு மனை வாங்குவது. அப்படி கனவுடன் வாழ்ந்து காசு சேர்க்கும் ஒருவனுக்கு இடையில் பெரும் நோய்கள் வந்து சிறிதாய் மனம் பிறழ்ந்து, மீண்டு வந்து, அதை வெறும் கனவாகவே மட்டும் மனதிலே பூட்டி வாழ பழகிக்கொள்ளும் சாமான்யனின் கதை. தொகுப்பில் நல்ல கதைகளில் இதுவும் ஒன்று.

சிக்கனம்:

சீட்டு கம்பெனியில் பணம் சேமித்து ஏமாந்து போன மனிதனை பற்றியும், அவ்வாறு ஏமாந்தாலும் அதனை திரும்ப பெற்று விடலாம் என்ற நப்பாசையில் உழலும் இன்னொரு மனிதனை பற்றியும் சுழலும் கதை. இயல்பான கதை.

சகோதரர்கள்:

சிறுவர்கள் விளையாட்டு அரசியல், வெறுமையான மன நிலை கொண்ட சகோதரனுக்கு வறுமையில் அண்டி வந்த விதவை சகோதரியின் செலவுகள் தரும் கோபம் என கலந்து கட்டி பரிமாறப்படும் கதை. தொகுப்பின் நல்ல கதைகளில் ஒன்று.

மணவாழ்க்கை:

இந்த தொகுப்பில் மிக அதிர்ச்சி தரும் சிறுகதை இது தான். ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமைகளும், அத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அந்த பெண் புகுந்த வீட்டுக்கே செல்ல விரும்பும் வித்தியாச மன நிலையையும் சொல்லும் கதை.

அழிவற்றது:

ஒற்றன் நாவலில் நிகழ்வுகள் நடக்கும் அயோவா சிட்டியில் நடந்ததாக சொல்லப்படும் கதை. இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த கதைகளில் மற்றும் ஒன்று. சிறு அதிர்வும் இந்த கதையில் நம் இதயத்தை மீட்டி போகும்.

முழு நேர வேலை:

கிராமத்து ஏரி ஓரம் விளைந்து படர் விட்ட ஒரு செடியை பிடுங்கி , நகரத்து சேரியில் நட்டு வைக்கும் அதிர்வுக் கதையை அழகாக சொல்லி இருக்கிறார்.

இரு முடிவுகள் உடையது:

ரயில் பயணங்களில் மயில்களை பார்த்து மனதை தொலைப்பதாய் எண்ணி பணத்தை தொலைக்கும் வழக்கமான கதை தான், ஆனால் சொல்லப்பட்ட விதம் அழகு. இன்னொரு புதுமை 12B படம் போல இதற்கும் இரு முடிவுகள் உண்டு.

அடி

ஸ்டோர் குடித்தனக்காரர்களின் வாழ்வாதார முறையையும், ஒற்றுமையையும், எளிதில் அஞ்சாத தைரியத்தையும், அப்பகுதி பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் பெரும்பாலான வாத்தியார்களின் செயல்பாடுகளையும் இயல்பாய் தாங்கி ஓடும் அழகிய சிறுகதை இது.

இந்த புத்தகத்தை சிறந்த சிறுகதை தொகுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு என நம்பிச் சொல்லலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:


புத்தகத்தின் விலை:
ஒரு சினிமா டிக்கெட்டின் விலையை விட குறைவு தான்


Related Posts Plugin for WordPress, Blogger...