Name : Jeeves in the offing
Author : P.G.Wodehouse
Publishers : Penguin Books
To Buy : Amazon
To Buy : Amazon
நாவல் எழுதறது பத்தி பி.ஜி.வுட்ஹவுஸ் இப்படி சொல்றாரு
“ஒண்ணு, வாழ்க்கை பத்தி துளிக்கூட கவலைப்படாம, என்னை மாதிரி எழுதறது,
ரெண்டு, வாழ்க்கையின் அடிநாத பிரச்னைகளை துல்லியமா எழுதறது”. நகைச்சுவை
இலக்கியம் எழுதறது ரொம்ப கஷ்டம், நகைச்சுவை இலக்கிய புத்தகத்தை பற்றி
எழுதறது அதை விட கஷ்டம்.
எதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம்ன்னு தெரியாம வேகமா
ஓடிக்கிட்டு இருக்கு இந்த நகர வாழ்க்கை. "இப்படித்தான் வாழணும், நீ
மட்டும் ஏன் வித்தியாசமா இருக்க"ன்னு கேள்வி கேட்கும் மக்கள். ஒரு விதமான
நெறிமுறைகளுக்கு உட்பட்டு நீயும் அதே மாதிரிதான் சிந்திக்கணும்,
செயல்படணும் எதிர்பார்க்கிற மக்கள். இவங்ககூட தினமும் வாழறது கஷ்டம்தான்.
“குழந்தை ஏன் அழறது? வூட்வர்ட்ஸ் கரிப் வாட்டர் குடுன்னு” விளம்பரத்தில்
சொல்ற மாதிரி, மனசு சங்கடமா இருக்கிற நேரங்களில் வுடுஹவுஸ் எழுதிய நாவல்கள்
நல்ல மருந்து. அவரோட நாவல்களைப் படிக்கும்போதே நாமும் இதே மாதிரி
வாழ்ந்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சிக்கிட்டேதான் படிக்கிறேன். அது ஒரு
ஜாலியான உலகம்.
உதாரணத்துக்கு, “Jeeves in the offing” என்கிற இந்த
நாவலில் வரும் கதாபாத்திரங்கள், வுட்ஹவுஸ் சொல்றா மாதிரி வாழ்க்கையைப்பத்தி
கவலைப்படறது இல்லை, பணம், பெண், புகழ்னு எது பின்னாடியும் ஓடறது இல்லை -
ஆரம்பத்தில் பெண்கள் பின்னால ஓடற வுட்ஹவுஸ் பாத்திரங்கள், அந்தப் பெண்கள்
கிடைத்தபின் அவர்களிடமிருந்து தப்பிச்சு ஓடறாங்க, அதனால அதையும் சீரியஸா
எடுத்துக்கக் கூடாது :)
நாவல் முழுக்க சின்ன சின்னதா, எதிர்பாரா இடங்களில்
திருப்பங்கள் ஏற்படுத்திக் கொண்டே வருவதும், அதன் மூலம் ஏற்படும்
நகைச்சுவையும் ரொம்ப சிறப்பு. நாவலில் ரெண்டு மூணு இடங்களில் சக
எழுத்தாளர்களை நக்கல் அடிப்பதும், புரியாத, ரொம்ப கஷ்டமான ஆங்கில
வார்த்தைகளை நுழைத்து, அந்த இடத்திலேயே அந்த வார்த்தைக்கு விளக்கம் சொல்லி
இலக்கியவாதிகளையும் நக்கல் அடிப்பதும் நன்றாக இருக்கிறது.
பேர்டி(Bertie) தனது அத்தை டஹலியா(Dahlia)
அழைப்பை ஏற்று அவரது இல்லத்துக்கு செல்கிறார். அதே சமயம் பேர்டியின்
முன்னாள் பள்ளி தலைமை (கொடுங்கோல்) ஆசிரியர் உப்ஜான், மர்ம நாவல் ஆசிரியர்
கிரீம்ஸ் (Mrs.creams) அவரது மகன் வில்லி (Willie), உப்ஜானின் வளர்ப்பு
மகள் மில்ஸ் (Mills, பேர்டியின் முன்னாள் காதலி ராபர்டா (Roberta wickham),
மூளை மருத்துவர் ரொடெரிக் (Roderick) ஆகியோரும் அங்கே
அழைக்கப்படுகின்றனர்.
ராபர்டா-கிப்பர்(kipper, பேர்டியின் நண்பர்)ஐ
காதலிக்க, கிப்பர் தனது முன்னாள் ஆசிரியர் உப்ஜான் எழுதிய புத்தகத்தை
கடுமையாக விமர்சிக்க, உப்ஜான் தனது வளர்ப்பு மகளை, வில்லிக்கு(Willie)
திருமணம் செய்ய, வில்லி பின் அனுப்ப, அதே சமயம் கிப்பர்ஐ திருமணம் செய்ய
தனது தாய் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதற்காக பொய்யாக பேர்டியை திருமணம்
செய்யப்போவதாக ராபர்டா விளம்பரம் செய்து அதன் மூலம் கிப்பர்ஐ திருமணம்
செய்ய எண்ண, இந்த விளம்பரத்தை படித்துவிட்டு, கோபமாக கிப்பர் ராபர்டாவுக்கு
கடிதம் எழுத, அதைப் படித்துவிட்டு ராபர்டாவுக்கு கோபம் வர, அதே சமயத்தில்
டஹ்லியா மில்ஸ்(இன்) காட் மதர், மில்ஸ் அமெரிக்காவில் ஊர் சுற்றி-காசுக்கு
சீட்டு ஆடுகிறான், பெண்கள் மீதும் செலவு செய்பவன் - இவனை திருமணம்
செய்துகொண்டு விடுவாளோ என்று எண்ணி வில்லியை கண்காணிக்க, பட்லர் (Butler)
ரொடெரிக்கை வரவழைக்கிறார்.
இந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொருவரையும்
கண்காணித்துக் கொண்டு ஓடுவதும், அதன் மூலம் ஏற்படும் சின்னச் சின்ன
நகைச்சுவையும் நாவலை வேகமாக இட்டுச் செல்கிறது. நாவல் முழவதும்
காட்-மௌஸ்(Cat-mouse) துரத்தல் மாதிரி ஒரு விதமான சுழற்சியில்
சென்றுகொண்டு, நம்மை அந்த சுழற்சியில் இழுத்துக் கொள்வது ஆசிரியரின் பலம்.
ரெண்டு மூணு நாள் சேர்ந்தா மாதிரி இந்த நாவலை படிச்சு
முடிச்சேன். ஒவ்வொரு தடவையும் நாவலை பாதியில் விட்டு விட்டு, இயல்பு
வாழ்க்கைக்குத் திரும்போது மனசு என்னவோ பண்ணும். ஆனா என்ன செய்றது நிஜ
வாழ்க்கை அழைக்கும்போது நாவல் கதைமாந்தர்கூட வாழ முடியாது. ஆனா இன்னும் சில
வுட்ஹௌஸ் நாவல்களை வாங்கி பத்திரப்படுத்திக்க வேண்டும், மனசு சங்கடமான
நேரங்களில் உதவும்.
No comments:
Post a Comment