Terminal
Robin Cook
Novel
Photo Cortuesy/To Buy:Barnesandnoble
சில சமயம்
எங்கேயாவது நீண்ட பயணம், முக்கியமாக ரயிலில் போகும்போது, நிறைய போர்
அடிக்கும். அந்த மாதிரி சமயங்களில் எதாவது படித்தால் நன்றாக இருக்கும்
என்று தோன்றும். கொஞ்சம் படிக்கலாம், கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்கலாம்.
இந்தப்
புத்தகத்தை அது மாதிரியான ஒரு ரயில் பயணத்தின்போது படிக்கவில்லை, வீட்டில்
வெட்டியாக இருந்தபோது படித்தது. ஆனால் ரயில் பயணங்களில் படிக்க ஏதுவான
புத்தகம்.
ராபின்
குக், ஒரு மருத்துவர், அதே சமயம் நாவலாசிரியர். நிறைய மருத்துவம் சார்ந்த
த்ரில்லர் கதைகளை எழுதி இருக்கிறார். “டெர்மினல்” அதே மாதிரியான ஒரு நாவல்.
என்னுடைய நண்பன் ஒருவன், சில வருடங்கள் முன்பு பழைய புத்தக கடையில் இந்த
மாதிரி புத்தங்களைப் படிக்க வாங்கி, அவர் படித்து விட்டு, எனக்கு படிக்கத்
தந்தான்.