இணையத்தில் வாங்க : The Graveyard Book
சிறு வயதில் அம்புலிமாமாவில் வரும் கதைகளை மிகவும் விரும்பிப் படித்ததுண்டு, அதில் வரும் பேய்க் கதைகள் சிறு வயதில் மிகவும் ஆர்வத்தை தூண்டியதுண்டு. அந்த மாதிரி கதைகள் அதற்கு அப்புறம் படிக்க முடியாமல் போய், மிகத் தீவிரமான கதைகள் படிக்க நேர்ந்தது. சில வருடங்கள் முன்பு ஸ்டார்டஸ்ட் என்ற ஃபான்டஸி படம் பார்க்க நேர்ந்தது. அந்த படம் பற்றி மேலும் அறியும் ஆவல் ஏற்பட்டது. அதே பெயர் கொண்ட ஒரு நாவலில் இருந்து படமாக்கப்பட்ட கதை அது. அதை எழுதியவர் நெய்ல் கைமான்.
நேரம் கிடைக்கும்போது இவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்து வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் முன்னால் இந்த நாவலை படிக்கக் கிடைத்தது. கைக்கு கிடைக்கும்வரை இந்த நாவலைப் பற்றி சிறிதுகூட அறிந்ததில்லை. முதல் சில பக்கங்களைப் புரட்டியபோது இது குழந்தைகளுக்கான நாவல் என்று அறிய வந்தபோது சிறிது ஏமாற்றம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் முதல் பக்கத்தில் துவங்கி இந்த நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
நேரம் கிடைக்கும்போது இவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்து வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் முன்னால் இந்த நாவலை படிக்கக் கிடைத்தது. கைக்கு கிடைக்கும்வரை இந்த நாவலைப் பற்றி சிறிதுகூட அறிந்ததில்லை. முதல் சில பக்கங்களைப் புரட்டியபோது இது குழந்தைகளுக்கான நாவல் என்று அறிய வந்தபோது சிறிது ஏமாற்றம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் முதல் பக்கத்தில் துவங்கி இந்த நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
நாவலின் முதல் பத்தியிலேயே கதையின் வில்லன் அறிமுகப்படுத்தப்பட்டு விடுகிறான். ஜாக் என்கிற அந்த வில்லனைப் பற்றி அறிய வரும்போதே நம் முதுகுத்தண்டு சில்லிட்டு விடுகிறது. கதையின் ஆரம்பமே ஜாக் தான்.
There was a hand in the darkness and it held a knife.The knife had a handle of polished black bone, and a blade finer and sharper than any razor. If it sliced you, you might not even know you had been cut, not immediately.
இந்த நாவலின் எனக்கு பிடித்த விஷயம், மயானத்தைப் பற்றி கைமான் மிக விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார். நாவலின் நன்றியுரை படிக்கும்போது இதைப் பற்றி நமக்கு விரிவாகத் தெரியவருகிறது. இந்த நாவலின் கதை பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. அதே சமயம் மிகச் சில வரிகள், வாசகர்கள் கவனத்தைக் கவர மட்டுமே இங்கு எழுதுகிறேன்.
முதல் அத்தியாயத்தில், ஒரு சிறு குழந்தையைத் தவிர ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கொலை செய்கிறான் ஜாக். இந்தச் சிறு குழந்தை தப்பிப் பிழைத்து, மயானத்தில் தஞ்சம் புகுகிறது. அங்கிருக்கும் பேய்கள், இந்த குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கின்றன. குழந்தைக்கு பாட் என்று பேய்கள் பெயர் சூட்டுகின்றன- bod , nobodyயின் சுருக்கம்.
இந்தப் புத்தகத்தில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள். இந்த ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிச் சிறுகதையாகவும் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பாட் இரு வயது வளர்கிறான். எட்டாவது அத்தியாய முடிவில் வில்லனை எதிர்த்து நிற்கிறான்.
இந்த பேய்கள் மூலமாக பல வித்தைகளை அவன் அறிகிறான். இந்த நாவலில் பேய்கள் தவிர ghouls, werewolf, witches, vampire (Silas, the godfather for Bod) போன்ற பாத்திரங்களும் உண்டு. இந்த ஒவ்வொரு கதாபாத்திரமும், பாட்டுக்குச் சில விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றன. Silas என்ற பாதுகாவலர் மூலமாக பாட் எப்படி மாயமாக மறைய வேண்டும் என்பதையும் Ms Lepsecu மூலமாகச் சின்ன சின்ன மந்திர தந்திர விதிகளையும், Ms Elizabeth என்ற சூனியக்காரி மூலமாக வேறு ஒரு சில விதிகளையும் அறிகிறான். இவற்றைப் படிக்கும்போதே இந்த வித்தைகள்தான் வில்லனை எதிர்கொண்டு போரிட உதவப் போகின்றன என நம்மால் யூகிக்க முடிகிறது.
இந்த நாவலில் நான் மிக முக்கியமாகக் கருதுவது, மிகக் கொடூரமான வில்லன் இதில் இருப்பதும் ஃபான்டஸியை கைமன் எவ்வளவு அழகாகக் கையாள்கிறார் என்பதும்தான். நாவலின் வில்லன் பற்றி அல்லது நாவலின் கையாளப்பட்ட உத்திகளை மேலும் சொல்வது நாவல் படிக்கும் ஆவலைக் கொன்றுவிடும்.
இதில் பாட் என்ற அந்தச் சிறுவனுக்கும் ஒரு சிறு பெண்ணுக்கும் சின்னதாய் ஒரு காதல் மலர்கிறது. இதை காதல் என்று சொல்லிவிட முடியாது, ஒரு சின்ன puppy love என்று சொல்லலாம். இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை புத்தகம் படித்து தெரிந்துக் கொள்ளவும்.
இந்த மயான உலகத்தை நம்பும்படியாக எழுதியுள்ளது நாவலின் மிகப் பெரிய பலம். இந்தச் சிறுவன் வளர்ச்சி அடைந்தாலும் மற்ற கதாபாத்திரங்கள் ஒரே வயதில் இருப்பதில் பாட் உணரும் சோகம் நம்மையும் தாக்குகிறது.மொத்தத்தில் இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு கணமும் மிக அருமையாக இருந்தது. இந்த நாவலுக்கு கார்னெகி மற்றும் நியூபேரி பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment