A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

26 Sept 2014

Short Cuts - Raymond Carver

                                                           சிறப்புப் பதிவர்: ஷாந்தி

Image courtesy http://images.word-power.co.uk/

Short Cuts ரேமண்ட் கார்வரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்க இலக்கியத்தில் கார்வரின் சிறுகதைகள் சமகால சிறுகதைகளுள் சிறந்த படைப்புகளாய் திகழ்கின்றன. அனேகமாய் இவர் கதைகளை படித்தவுடன் கார்வருக்கு நாம் வாசகர்களாகி விடுகிறோம். எத்தகைய தருணங்களையும் இவர் விவரிப்பு சுவாரஸ்யமாய் காட்டிவிடுகிறது. இவரின் விவரிப்புகளில் கதையின் கனம் அத்தனை கச்சிதமாய் வெளிப்பட்டு படித்து முடித்த பின்னும் அந்த சம்பவங்கள், கதாபாத்திரங்கள் நம்முள் அதிர்வலைகளை  உண்டாக்குகின்றன.


இந்தத் தொகுப்பில், கார்வரின் கதையுலகம் திருமணமானவர்களை சுற்றியே இருக்கிறது. பின்தங்கியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும் அவர்களுடைய நிலையில்லா வாழ்க்கையையுமே சுற்றி வருகிறது. இவர் கதையின் ஆண்கள் பெரும்பாலும் குடிப்பழக்கத்தில் மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள், பொறுப்பை வெறுத்து உல்லாசத்தை விரும்புகிறார்கள், பெண்கள் சகிப்புத்தன்மையோடும், அதீத பொறுப்பு சுமையால் அயர்ச்சியோடும், பதட்டத்தோடும் இருக்கிறார்கள். கதைமாந்தர்கள் எப்போதும் எதாவது தப்பித்தல்களை எதிர்நோக்கியே வாழ்க்கையைக் கடத்துபவர்களாய் இருக்கிறார்கள்.

    
கார்வரின் இந்தக் கதைகளில் எந்தவித கடினமான அலங்காரமான ஆங்கில வார்த்தைகளும் இல்லை. மிக எளிய வார்த்தைகளை மட்டுமே கையாள்கிறார். தொடர்ந்த விவரணைகளால் கதை அனுபவத்தை முழுமையாக்குகிறது இவரின் எழுத்து நடை. கதைமாந்தர்களின் அனிச்சை செயல்களைகூட அவர் விவரிப்பது அவர்களை நிஜமான மனிதர்களாய் நம் மனதில் நிறுத்திச் செல்கிறது. விவரிப்புகளில் கதைமாந்தர்களின் உணர்ச்சிகள், அவர்கள் வெளிக்காட்டா உணர்வுகள், கதைக்களத்தின் சூழ்நிலை என தேவையான அனைத்து பரிமாணங்களும் வெளிப்பட்டு இவர் கதைகள் கச்சிதமான வாசிப்பாய் இருக்கின்றன.

ரேமண்ட் கார்வரின் கதைகளை அறிமுகப்படுத்திய ட்விட்டர் தோழி லேகா @yalisaisl கூறும்போது "இவர் கதைகள் திருமணமானவர்களுக்கானவை" என்று குறிப்பிட்டார்- அது அத்தனை பொருத்தம். தனிமனிதர்களுக்கு மேலோட்டமாய்/ சாதாரணமாய் தெரியும் விஷயங்கள் திருமண உறவிற்குள் அணுகப்படும் விதம் முற்றிலும் மாறுபட்டது. தனிமனிதர்களின் ஆசைகள், சலனங்கள், கோபங்கள், ஒழுக்கம், நடத்தை போன்றவைகளில் இடறல்களை மிக எளிதாய் சரிசெய்ய முடிகிறது, அல்லது பாதிப்புகளை குறைக்க முடிகிறது.  திருமண உறவில் ஆண்/பெண் இருவரது உணர்ச்சிகளும் அவர்கள் மனைவி/கணவன் குழந்தைகள் என அந்த குடும்பத்தில் மொத்தமாக சங்கிலித்தொடராய் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. அவை அணுகப்படும் விதமும் உணர்ச்சி சிக்கல்கள் மிகுந்தவை. அத்தகைய சிக்கல்களை, அவர்கள் வெளிக்காட்டாமல் ஆனால் உள்ளிருந்து அவர்கள் வெளிப்பாடுகளை செலுத்தும் ஆழ்மன கசப்புகளை, அசௌகரியங்களை, ஆதிக்கங்களை, துன்பங்களை கார்வரின் கதையுலகம் பேசுகிறது. 

ரேமண்ட் கார்வர் சிறுகதைகளின் தலைப்புகள் பெரும்பாலும் கதைகளின் இடையே வரும் வாக்கியங்களாய் இருக்கின்றன. கதையின் தொனியை அத்தனை அழகாய் பிரதிபலிப்பவை இந்த கதை தலைப்புகள். தலைப்பு வாக்கியங்கள் கதைக்குள் வரும் இடத்திற்கு முன்னும் பின்னுமான கதையின் கனத்தை  நிறுத்துப் பார்க்கும் தராசாய் தலைப்புகள் இருக்கிறது.
  
    
"They are not your husbands" என்னும் கதையில் வரும் கணவன் தன் மனைவி வேலை செய்யும் உணவகத்துக்கு வாடிக்கையாளரைப் போல் செல்கையில் பக்கத்து மேசையில் சிலர் அவள் பருமன் குறித்து செய்யும் தரக்குறைவான கேலி அவனை கோபப்படுத்துகிறது. வீட்டில் அவன் தன் மனைவியை உடல் எடையை குறைக்குமாறு கூறுகிறான். எளிமையான உத்தியாக உணவு உண்ணாமல் இருக்க சொல்கிறான். அவளும் அதை கடைபிடிக்க ஆரம்பிக்கிறாள். தன்னுடன் பணிபுரிபவர்கள் தான் பருமனாக இல்லை என்று கூறுவதாக சொல்கிறாள். அதற்கு கணவன்,  "அவர்கள் ஒன்றும் உன் கணவர்கள் இல்லை. நான்தான் உன் கணவன், நான் கூறுகிறேன் நீ உண்ணாமல் உடல் இளைக்கவேண்டும்" என்கிறான். ஆனால் அப்படி அவள் பட்டினி கிடந்து மெலிந்தாலும் அதே உணவகத்துக்குச் சென்று மறுபடி அவளைப்பற்றி கேலிபேசியவர்களின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறான்,  தன் மனைவி என்று சொல்லாமல் மற்ற வாடிக்கையாளர்களிடம் அவள் பற்றி கருத்து கேட்க முயல்கிறான். இந்த கதையில் "they are not your husbands" என்று அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்காதே என்னும் கணவன்தான் தொடக்கம் முதல் அடுத்தவர்கள் கூறும் சில கேலிச்சொற்களுக்கு முக்கியத்துவம் தருவதும் அதில் பிடிவாதமாகவும் obsessedஆகவும் இருக்கிறான். கார்வரின் இத்தகைய கதை தலைப்புகளே கதையின் கனத்தையும் ஆழத்தையும் கூறுபவைகளாய் இருக்கின்றன.

"So much water close to home" என்னும் கதையில்  நண்பர்களுடன் சென்று முகாம் அமைத்து மீன் பிடித்து, உல்லாசமாய் சில நாட்களை கழிக்க செல்பவர்கள் அங்கு ஆற்றில் கண்டுபிடிக்கும் இளம்பெண்ணின் சடலம் குறித்தும் அதைப் பற்றிய செய்தி அவனின் மனைவியை எவ்வாறு பாதிக்கிறது என்பதும் பற்றியது. ஆற்றில் மிதக்கும் சடலத்தை கண்டவுடன் எப்படியும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடிவு செய்து அங்கு ஒரு மரத்தில்  அந்த சடலத்தை கட்டிவிட்டு முகாமை தொடர்கிறார்கள் நண்பர்கள்,  பின்பு காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கிறார்கள். தன் கணவன் செய்த இந்த செயல் அவனை இரக்கமில்லாதவனாக மனைவியை நினைக்க வைக்கிறது, அவள் அந்த பெண்ணிற்காக வருந்துகிறாள். அந்த சம்பவத்தில் தன் கணவனது பங்கை அனுமானித்தவாறே இருக்கிறாள். அதைப்பற்றி கேட்கும்போதெல்லாம் கணவனிடமிருந்து அந்த பெண் ஏற்கனவே இறந்திருந்தாள் என்ற பதிலே கிடைக்கிறது. வீட்டின் அருகேயே மிகப்பெரிய நீர்ப்பரப்பு இருக்கையில் பயணம் செய்து அந்த ஆற்றிற்கு அவர்கள் போக வேண்டிய அவசியமென்ன என்று நொந்து கொள்கிறாள். யாரென்றே தெரியாத அந்த பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு மிகுந்த சிரமத்திலும் அவள் செல்கிறாள். அந்த நிகழ்வு தரும் துன்பததைவிட சாட்சியான தன கணவன் உட்பட யாரையும் அது பாதிக்கவில்லை என்பது அவளை வருத்துகிறது. 

Image courtesy: http://www.moorepartners.ca/

கார்வரின் கதைமாந்தர்கள் நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை எல்லாவித சாத்தியக்கூறுகளோடும் தொடர்ந்து யோசித்து யோசித்து அந்த சம்பவத்திற்கான ஒரு மாயமுடிவிற்குள் மனதளவில் சிக்கிக்கொள்கிறார்கள். அது முழுக்க அவர்கள் சிந்தனையாகவோ அல்லது உண்மையாகவே இருப்பினும், தொடர் யோசித்தலால் அந்த சூழ்நிலையை கடினமாக ஆக்கிக் கொள்பவர்களாய் இருக்கிறார்கள். "Will you be quiet, please" என்னும் கதையில் நடந்து முடிந்த ஒன்றை மறுபடி மறுபடி அனுமானிக்கும் கணவன் கதாபாத்திரம் கூறுவதாய் கீழ்க்கண்ட வரிகள் வருகின்றன- 
"he wondered drunkenly, who could look at one event in their lives and perceive in it the tiny makings of the catastrophe that thereafter set their lives on a different course?"  
மனதளவில் இப்படி ஏதோ ஒரு சம்பவம், கசப்பு, அனுமானங்களில் சிக்கி தவிக்கும் கதைமாந்தர்கள் அதை வெளிக்காட்டாமல் அதன் சுமையோடு குடும்பத்தை தொடர முற்படும்போது வரும் சிக்கல்களையே பெரிதும் பேசுகின்றன இவர் கதைகள்.

இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை "A small good thing". பிறந்தநாளன்று கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து சிலநாட்களில் இறந்துபோகும் ஒரு சிறுவனது பெற்றோரின் பாசப்போராட்டத்தை அணுஅணுவாய் விவரிக்கும் உருக்கமான கதை. சிறுவன் சுயநினைவில்லாமல் கண்விழிக்காமல் இருக்கும் அந்த சில நாட்களில் பெற்றோரின் பதைபதைப்பு, அவன் கண்விழிக்க வேண்டுமென்று ஒவ்வொரு கனமும் அவர்களது எதிர்பார்ப்பு, பின் அந்த எதிர்பார்ப்பின் விளிம்பில் அவனது இறப்பு தரும் மீளா துயர் - இவற்றின் விவரிப்பு கார்வரின் எழுத்தாளுமையின் உச்சம்.

அந்தச் சிறுவன் மருத்துவமனையில் இருக்கும்போதும் இறந்தபின்பும் அடிக்கடி அந்த வீட்டிற்கு மகனைப்பற்றி வரும் மர்ம தொலைபேசியால் அந்த துன்ப சூழ்நிலையில் கலக்கம் கொள்கிறார்கள். அந்த தொலைபேசி அழைப்பு பிறந்தநாளுக்கு கேக் தருவிக்க முன்பதிவு செய்திருந்த பேக்கரியிலிருந்து வருவது தெரிந்து அங்கு செல்கிறார்கள். மிகுந்த கோபத்தோடு அந்த கடைக்காரரிடம் தங்களின் துயரத்தைக் கூறி  தொலைபேசி அழைப்புகளுக்கு கோபப்படுகிறார்கள். அந்த கடைக்காரர் அதைக்கேட்டு தன் செயலுக்கு மிகவும் வருந்துகிறார். குடும்ப உறவுகள் இல்லாமல் தனியாக பல மணிநேரம் பேக்கரியில் உழைக்கும் அவருக்கும் மகனை இழந்த பெற்றோருக்குமான அந்த உரையாடல் நெகிழ்ச்சியானது. அந்த தம்பதியின் துன்பத்தை தன்னுடைய எந்தவித ஆறுதலும் மன்னிப்பு கோரலும் தேற்றாது என உணர்ந்து, அப்போதுதான் தயாரான சூடான சில இனிப்பு ரொட்டிகளை அவர்களுக்கு தருகிறார், சாப்பிடுவது ஒரு சிறிய நல்ல காரியம் (A small good thing) என்றும் அவர்களுக்கு அது தேவையெனவும் கூறுகிறார்.  துன்பத்தின் பிடியில் உள்ள அவர்களுக்கு அந்த இதமான உணவு அந்த கணத்தில் அவர்களுக்கு தேவையான ஆறுதல் அனைத்தையும் தருகிறது.

"A small good thing" கதையின் அழகியலையும்,  தாக்கத்தையும், விவரிப்புகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவமனையில் காத்திருக்கும் நாட்களில், வீட்டிற்கு சென்று குளித்து சில வேலைகளை முடித்து திரும்புவதற்கு கிளம்புகிறாள் அந்த தாய். கூடுதல் பதைபதைப்போடு மருத்துவமனை திரும்புகையில் அவள் அங்கு முன்பு சந்தித்த பெண்ணிடம் மனதிற்குள் சொல்லிக் கொள்வதாய் வரும் வரிகள்:

"Don't have children",  "For God's sake , don't. " 

நம்மைமைவிட நம்மால் அதிகம் நேசிக்கப்படுபவர்கள் நம் குழந்தைகள். குழந்தைகளுக்கு துன்பம் நேர்கையில் துடித்துப்போகும் பெற்றோரின் மனதின் வலியை பிரதிபலிக்கும் வரிகள் இவை. இந்த  உருக்கமான கதை வாசிப்பவர்களின் மனதை விட்டு நீங்காது.


கார்வர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்ததால் அவர் கதைகளும் அந்த உலகத்திலேயே பெரும்பாலும் 
​சுழல்கின்றன​
. மது பழக்கதிற்கோ,
​ ​
பொறுப்பின்மைக்கோ,
​ ​
ஆதிக்க
த்​
திற்கோ  எந்தவித நியா
ய​
மும் கற்பிக்காமல் அந்த தப்பி
த்​
தல்களை மிக நேர்மையாகவே அணுகுகிறது அவரது எழுத்து.தங்கள் சலனங்களால் குடும்பத்தையே கலங்கச்செய்து தாங்களும் உருக்குலைந்து போகும் குமிழி வாழ்வு வாழ்பவர்கள், அனுமானங்களின் பிடியில் முடிவை ஒப்படைக்கும் கதைமாந்தர்கள்,
​ ​
மதுப்பழக்கம் ... என்று வேறு ஒரு அடர் வாழ்க்கையை சித்தரித்தாலும் கார்வரின் எழுத்தாளுமை அற்புதமானது. 
​இந்தக் ​
கதைகளை வாசிக்கும்
​ ​
நேரம்  கதை
யு​
லகினுள் பார்வையாளராய் வசிக்கும் அனுபவத்தை தருகிறது கார்வரின் எழுத்து.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...