கெய்கோ ஹிகாஷினோவின் இந்தப் புதிய நாவலை சப்னா புக் ஹவுஸில் பார்த்ததுமே வாங்கிவிட்டேன். இவர் இதற்கு முன் எழுதியுள்ள முன்னிரண்டு நாவல்களைப் போலவே இதுவும் அருமையாக இருக்கும் என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணிச்சுமை மற்றும் பிறச்சுமைகள் காரணமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்க ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அண்மையில் நீண்ட ஒரு ரயில் பயணம் செய்ய நேர்ந்தது, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதை ஓரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.
இந்தக் கதையில் இரு எழுத்தாளர்கள், இருவரும் பால்யகால நண்பர்கள், ஓரே பள்ளியில் பணியாற்றியவர்கள். ஒருவர் புகழ்பெற்ற எழுத்தாளராகிறார். மற்றொருவர் சிறுவர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். இவர்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான குனிகோ ஹிடாகா தன் புது மனைவி ரியாவுடன் கனடாவுக்குக் குடியேறச் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கொலை செய்யப்படுகிறார். இவரது நெருங்கிய நண்பரும் சிறுவர் கதைகள் எழுதுபவருமான ஒசாமு நோனோகுச்சி நடந்தது என்ன என்று சொல்வதாகக் கதை துவங்குகிறது. ஹிடாகா கனடா செல்லவிருப்பதால் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார் நோனோகுச்சி. இரவில் ஹிடாகோ செத்துக் கிடப்பதைப் பார்க்கிறார். இவரும் போலீஸ்காரர் கியோசிரோ ககாவும் குற்றச் சம்பவத்தையும் அதைத் தொடர்ந்து நிகழும் புலன் விசாரணையின் போக்கையும் மாறி மாறிச் சொல்வதாக இருவரின் பார்வையிலும் கதை எழுதப்பட்டிருக்கிறது.
ஹிகாஷினோவின் முதல் இரு நாவல்களும், 'குற்றம்- நடந்தது என்ன', என்று விவரிக்கும் கதைகள், குற்றவாளி யார் என்பதைத் துப்பறியும் கதைகள் என்று சொல்ல முடியாது. கொலையாளி யார் என்பது சீக்கிரமே தெரிந்து விடுகிறது. எப்படி கொலை செய்யப்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து அறிவதுதான் கதையாக இருந்தது. இந்த நாவலில் ஹிகாஷினோ இன்னும் ஒரு அடி முன்னே வந்து, கொலையாளி யார் என்பதையும் குற்றச் சம்பவம் நிகழ்ந்தது எப்படி என்பதையும் சொல்லிவிடுகிறார். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதுதான் இந்தக் கதையின் சுவாரசியம். குற்றத்துக்கான காரணம் இன்னதென்று சொல்ல முடியாத வகையில் இருக்கிறது, ஹிகாஷினோ நம்மை இன்னும் கொஞ்சம் குழப்பி மெல்ல மெல்ல தெளிவு\படுத்துகிறார்.
இந்த நாவலில் ஒன்றை அடுத்து இன்னொன்று என்று ஒவ்வொரு அடுக்காக பொய்கள் வெளிப்படுகின்றன. மர்மக் கதைகளில் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் துப்பறிவாளர்கள் முட்டுச்சந்துக்கு வந்து நிற்பார்கள். ஆனால், இந்தக் கதை ஒரு மர்மத்தில் துவங்குகிறது, அதைத் துப்பறியும் காவல்துறையினருக்கு ஒவ்வொரு திருப்பு முனையிலும் அழகாக பொட்டலம் கட்டப்பட்டு தீர்வு அளிக்கப்படுகிறது. ஆனால் துப்பறியும் நிபுணர் ககா ஏமாற மறுக்கிறார். காவல் துறையில் பணிபுரியும் வேறு எவராக இருந்தாலும் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டு விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருவார்கள், ஆனால் ககா போலி விடைகளின் வசீகரத்தில் மயங்குவதில்லை, எவ்வளவு கச்சிதமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கமாக இருந்தாலும், இது உண்மையான நோக்கம் அல்ல என்று கண்டுகொண்டு அதைச் கடந்து செல்கிறார். இன்செப்ஷன் திரைப்படத்தில் வருவது போலவே கதை செல்கிறது, ஆனால் என்ன வித்தியாசம் என்றால் இங்கு கொலைக் காரணம் குறித்த ஒவ்வொரு விளக்கமும் அடுத்தடுத்து இன்னொரு விளக்கத்துக்கு இட்டுச் சென்று இறுதியில்தான் துலக்கம் கிடைக்கிறது..
ஒருவகையில் இந்தக் கதை வன்மம் குறித்த கதை என்று சொல்லலாம், பள்ளிச் சிறுவர்களுக்கு இடையே உருவாகி வளரும் வன்மம். சிறுவயதில் எதிர்கொள்ளப்படும் முரட்டு அதிகாரமும் (bullying), அதன் பின்விளைவுகளும் இந்த நாவலில் மிகச் சிறப்பாக வெளிப்படுகின்றன.
இந்த நாவலுக்கு மெடாபுனைவின் தன்மைகள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. இந்தக் கதை தன்னை உள்நோக்கி விவாதிக்கும் புனைவுத்தன்மை கொண்டிருக்கிறது. நம்மை வலிய ஏமாற்றும் புனைவு இது- இதன் கதையின் இறுதியில் ஏமாற்றுதலே உச்ச சாதனையுமாகிறது. படிமத்தின் ஆற்றலை உணர்த்தும் கதை. அது மனித மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியபின், அதற்கொரு நிரந்தரத்தன்மை கிடைத்து விடுவதையும், அந்த பிம்பத்தை அழிக்கும் ஆற்றலுக்காக எப்படிப்பட்ட உண்மையும் போராடவேண்டியிருப்பதையும் பேசும் நாவல் இது.
ஒரு பிரஞ்சு கவிஞர், அவர் பெயர் மறந்து விட்டேன், இந்த உலகம் தத்துவங்களால் அல்ல, பிம்பங்களால் இயங்குகிறது என்று கூறினார். இது பெரிய உண்மை என்று நினைக்கிறேன். பிம்பங்களில் முதலில் சிறிதளவு உண்மை இருக்கிறது: ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம், காலம் செல்லச் செல்ல அந்த சம்பவம் அல்லது அதில் தொடர்புடைய நபர் குறித்த பிம்பத்தின் முரண்தன்மைகள் கலைந்து, அது தனக்கேயுரிய உணர்வுகள் பொதிந்த ஒரு ஆதர்ச உருவம் பெறுகிறது. இந்த ஆதர்ச உருவம் மெல்ல மெல்ல நம் அகத்தில் வேரூன்றுகிறது, இறுதியில் இது ஒரு தொன்மம் ஆகி, முடிவில் நம் நடத்தையைத் தீர்மானிக்கக்கூடிய நம்பிக்கைகளின் ஆற்றல் பெறுகிறது. இந்தப் பயணம் முடிவடையும்போது, நம்மால் இந்த பிம்பங்களை மனித அகத்தைவிட்டு நீக்க முடியாமல் போகிறது.
ராமனின் பிம்பத்தை எடுத்துக் கொள்வோம். வால்மீகி ராமாயணத்தில், அரசனாக இருந்தாலும், சாமானிய மனிதனாக இருந்தவன், இன்றைய ஆதர்ச பூரண மானுட அடையாளம் பெற்றிருக்கிறான். ராமன் புத்துருவம் பெற்றுவிட்டான். வால்மீகி எழுதியதையே மேற்கோள் காட்டினாலும் பலர் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள், தங்கள் ராமன் மீதான நம்பிக்கையைத் தொடரவே செய்வார்கள். மானுட கற்பனையில் தொன்மங்களும் படிமங்களும் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் உண்மை மறையலாம், ஆனால் மனிதனின் நம்பிக்கைகள் உண்மையைக் கடந்து கருத்து நோக்கிச் செல்பவை. மனிதனுக்கு உண்மையைவிட, தன் கருத்துதான் முக்கியம். உண்மையை கருத்து நிலைக்கு மாற்றி, கருத்து நிலைக்கு ஒரு படிம உருவம் கொடுக்கும் அறிவாற்றல்தான் பலருக்கும் ஆறுதல் அளிக்கிறது. கடந்த காலத்தில் யாரோ ஒருவர் பூரணத்துவ நிலையை எய்திவிட்டார் என்ற நம்பிக்கை நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நமக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்கிறது.

ஒரு எழுத்தாளராக ஹிகாஷினோ சொற்களின் ஆற்றலை அறிந்திருக்கிறார். தக்க ஒரு சொல் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அவரால் துல்லியமாக கணிக்க முடிகிறது. சுவாரசியமான சொல்லமைப்பு, அழகிய வாக்கிய அமைப்பு, அசற வைக்கும் பாத்திரப்படைப்பு: எல்லாம் சொற்களைக் கொண்டே உருவாகின்றன. சொற்களே படிமங்களுக்கு நம் மூளையில் நிரந்தர இடம் கொடுக்கின்றன. மர்மத்தின் கூறாய் உள்ள சொற்களின் புனைவாற்றலையே ஹிகாஷினோ தன் நாவலில் பயன்படுத்திக் கொள்கிறார்.. இந்த நூலின் ஆசிரியர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது நம்மை ஏமாற்ற- ஆனால், அதன் உண்மையான எழுத்தாளனோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மர்மத்தை விடுவிக்க முடியாது.
குழப்பமாக இருக்கிறதா? கவலைபப்ட வேண்டாம். இதெல்லாம் நாவலைப் படித்தபின் என் மனதில் தோன்றிய எண்ணங்கள்தான். ஹிகாஷினோவின் நடை தெளிந்த நீரைப் போன்றது. ஹிகாஷினோ தத்துவம் எதுவும் பேசுவதில்லை, பக்கங்களைத் தொடர்ந்து புரட்டிச் செல்லும் சுவாரசியத்தை இந்நாவல் துவக்கம் முதல் முடிவு வரை இழப்பதேயில்லை. படித்து முடித்தபின்னும் நீங்கள் படிப்பதை நிறுத்த மனமின்றி இதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டேயிருப்பீர்கள்.

இவர் எழுதியுள்ள முந்தைய இரு நாவல்களுடன் இணைத்து வாசிக்கும் தகுதி இதற்குண்டு. இனி அடுத்த நாவலுக்குக் காத்திருப்போம்.
Malice (English), Keigo Higashino
Length: 288 pages
Publisher: Little, Brown Book Group
Price: Rs. 210
Flipkart
நன்றி - Reading Matters
Malice (English), Keigo Higashino
Length: 288 pages
Publisher: Little, Brown Book Group
Price: Rs. 210
Flipkart
நன்றி - Reading Matters
No comments:
Post a Comment