பெயர் : இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-3
பதிப்பகம் : கலைஞன் பதிப்பகம்,
10, கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை-17
உள்ளடக்கம் : சிறுகதைகள்
தொகுத்தவர் : விட்டல் ராவ்
இரண்டு வாரம் முன்பு எழுதிய "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-1" புத்தக பார்வையைத் தொடர்ந்து இந்த வாரம் "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-3" புத்தகத்தைப் பார்க்கலாம்.
புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவ்வளவாக பெயர் தெரியாத எழுத்தாளர்கள் என்று சென்ற நூற்றாண்டில் வெளிவந்த கதைகளில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையளவு கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விட்டல் ராவ். இத்தனை கதைகளைத் தேர்ந்தெடுக்க எத்தனைக் கதைகளைப் படித்திருக்க வேண்டும் இவர்?
இந்தத் தொகுப்பில் என் மனதில் தாக்கம் ஏற்படுத்திய ஆறு சிறுகதைகள் இவை:
புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவ்வளவாக பெயர் தெரியாத எழுத்தாளர்கள் என்று சென்ற நூற்றாண்டில் வெளிவந்த கதைகளில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையளவு கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விட்டல் ராவ். இத்தனை கதைகளைத் தேர்ந்தெடுக்க எத்தனைக் கதைகளைப் படித்திருக்க வேண்டும் இவர்?
இந்தத் தொகுப்பில் என் மனதில் தாக்கம் ஏற்படுத்திய ஆறு சிறுகதைகள் இவை:
பிரயாணம்- அசோகமித்திரன் .:வயது முதிர்ந்து நோயினால் அவதிப்படும் தன்னுடைய குருவுடன் மலைப் பிரதேசம் வழியாக வரும் சீடன், இரவில் அவருடைய சாவை எதிர் கொள்கிறான். அதைத் தொடர்ந்து அவரது உடலை ஓநாய்களிடமிருந்து அவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. சீடனின் பார்வையில் இருந்து மொத்த கதையும் சொல்லப்படுகிறது, கடைசி பத்தி வரை மிக சாதாரணமாக செல்லும் கதை, திடுக்கிட செய்யும் முடிவு, ஓ.ஹென்றிதனமான கதை, மிக சிறந்த ஹாரர் கதைன்னு சொல்லாம்.
ஜன்னல் - சுஜாதா : மனித மனம் எவ்வளவு விசித்திரமானது ஒரு சமயம் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுகிறது, இன்னொரு சமயம் அதை வெறுக்கவும் செய்கிறது. ஒரே வேலையை ஒன்பது வருடங்களாக தினமும் 8 மணி நேரம் செய்யும் சீனிவாசனின் கதை இது. ஒரு நாள் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அதிகமாக வரவே மருத்துவரை சந்திக்கிறான்.இயந்திரத்தனமான வாழ்க்கை மனித மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் - இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
யானையின் சாவு - சார்வாகன் : குழந்தைகளோடு பழக ஆரம்பிக்கும்போது கஷ்டமாக இருக்கும், நாம் அதனுடைய அலைவரிசையை அடையும்போது நாமும் குழந்தையாவே மாறிவிடுகிறோம், ஆனால் குழந்தை வளர்ந்து விடும்போது நாம் குழந்தையாவே இருந்து விடுகிறோம். கோயிலில் நிஜ யானையைப் பார்த்துவிட்டு அதை வாங்க வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தை.பொம்மை யானை வாங்கித் தந்தவுடன் அதனுடன் ஐக்கியமாகி விடுகிறது, குழந்தையின் தந்தையான ரங்கநாதனும் பொம்மை யானையை நிஜ யானையாக பாவித்து விளையாடுகிறான், ஒரு நாள் குழந்தை மற்றும் யானையோடு புதிய ஆட்டம் ஆடலாம் என்று அவன் வரும்போது , குழந்தை யானையை வெறுத்து பொம்மை கார்க்கு தாவி விடுகிறது.
யுகசந்தி - ஜெயகாந்தன்: இந்தக் கதை இப்போது படிக்கும்போது ரொம்ப சாதாரணமாகதான் இருக்கும் . ஆனால் கதை எழுதப்பட்ட காலங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் பயங்கர முற்போக்கான கதை. சிறு வயதிலே தன்னைப் போல் விதவையாகிவிட்ட தன்னுடைய பேத்தியுடன் நெய்வேலியில் வாழும் பாட்டி,தன்னுடைய மகனை சந்திக்க புதுப்பாளையம் வருகிறார். பாட்டி எடுத்துக் கொடுக்கும் கடிதம் அந்த குடும்பத்தையே உலுக்கி விடுகிறது, பாட்டியின் பேத்தி மறுமணம் செய்துக் கொள்ள தீர்மானம் செய்து விட்டாள். குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே அவளை வெறுக்க பாட்டி மட்டும் அவளுக்கு ஆதரவாக சென்று விடுகிறார்.
போர்த்திக் கொள்ளுதல்-வண்ணதாசன் : இந்த ஆண்கள் ஏன் எப்போதுமே மனைவியைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என ஆணின் பார்வையில் சொல்லப்படும் கதை. தினமும் கொசு கடியால் அவதிப்படும் கணவனுக்காக மிகுந்த சிரமங்களுக்கு இடையே சரசு ஒரு போர்வை வாங்கி வைககிறாள். நண்பனுடன் வீட்டுக்கு வரும் கணவன் , அவள் அன்பை புரிந்து கொள்ளாமல், "போர்வை நல்லாயிருக்கே, விலை மலிவா ?" என பொய் சந்தோஷத்துடன் பேசிவிட்டு. போர்வையை நண்பனிடம் போர்த்திக் கொள்ளக் கொடுத்து விடுகிறான்.
ஒரு தேதி -ஆத்மாநாம்: மூன்றாம் மனிதனின் பார்வையில் இருந்து சொல்லபடுகிற ஒன்றரை பக்க கதை. தான் குறித்து வைத்த தேதியில், நினைக்கும் விஷயங்கள் நடந்தால் என்ன மாறுதல்கள் ஏற்படும் என அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போது அவன் தூக்கத்தில் இருந்து விடுபடுகிறான், ஆனால் நிஜமான உறக்கத்தில் இருந்து விடுப்பட்டனா ? இல்லை இன்னும் அவன் கனவுக்கு உள்ளேதான் உள்ளானா ?
இதே தொகுப்பில் நான் ரசித்த மற்ற கதைகள் : ஜெயந்தன்- மொட்டை, சு சமுத்திரம் - போதும் உங்க உபகாரம், நாஞ்சில் நாடன்- பாலம். ஆதவன் -லேடி, இரண்டு தொகுதியும்(1,3) நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தன. இது வரை படித்திராத புதிய எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தின.
இந்த முயற்சியை செய்த விட்டல் ராவுக்கு நன்றி சொல்ல வேண்டும். விட்டல் ராவின் இந்த தொகுப்பைப் போல் மேலும் சிலர் சென்ற நூற்றாண்டின் கதைகளை எடை போட்டு, அவற்றில் தங்களுக்கு சிறந்ததாகத் தெரிவதை எல்லாம் தொகுத்தால் இப்போது எழுதத் துவங்குபவர்களுக்கு ஒரு உயர்ந்த லட்சியம் கிடைத்த மாதிரி இருக்கும்.
இந்த முயற்சியை செய்த விட்டல் ராவுக்கு நன்றி சொல்ல வேண்டும். விட்டல் ராவின் இந்த தொகுப்பைப் போல் மேலும் சிலர் சென்ற நூற்றாண்டின் கதைகளை எடை போட்டு, அவற்றில் தங்களுக்கு சிறந்ததாகத் தெரிவதை எல்லாம் தொகுத்தால் இப்போது எழுதத் துவங்குபவர்களுக்கு ஒரு உயர்ந்த லட்சியம் கிடைத்த மாதிரி இருக்கும்.
No comments:
Post a Comment