A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label உலக இலக்கியம். Show all posts
Showing posts with label உலக இலக்கியம். Show all posts

24 Feb 2013

காட்ச்-22 நடைபிணங்களின் நகைச்சுவை

சிறப்பு பதிவர் : அஜய்

போர் குறித்து பலருக்கும் இருக்கும் எண்ணம் என்ன? போர்க்காலம் தேசப்பற்று எழுச்சியடையும் காலம்,  அது வெறியாகவும் மாறும் காலம். போர்க்களத்தில் தங்கள் வாழ்வை பலி கொடுக்கும் இளைஞர்களைப் பார்த்து மற்றவர்கள் பெருமைப்படுகிறார்கள், அவர்களுக்காக பரிதாபப்படுகிறார்கள். போர்க்களம், தேசப்பற்று, அதில் களப்பலி காணும் இளைஞர்கள் குறித்த பெருமையும் துயரமும் - புத்தகங்களும் இதர ஊடகங்களும் இவ்வுணர்வையே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன.

ஆனால் இது குறித்து மாற்றுப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் பலரும் உண்டு, அவர்கள் போரின் மறு முகத்தைத் தங்கள் படைப்புகளில் விவரித்திருக்கின்றனர்.  முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்கெடுத்த போர் வீரர்கள் இவர்கள், தங்கள் அனுபவ சேகரத்தை புத்தகங்களாகப் பண்படுத்திக் கொடுத்திருப்பவர்கள் இவர்கள். எரிக் மரியா ரிமார்க் (Erich Maria Remarque), ஜேம்ஸ் ஜோன்ஸ் (James Jones) போன்றவர்கள் தீவிரமான, நிதர்சன படைப்புகளைத் தந்தனர். கர்ட் வோன்னகட் (Kurt Vonnegut) போன்ற சிலர் நிஜ வாழ்வின் கொடூரத்தை அறிவியல் புனைவுகளாகக் கலந்தடித்துக் கொடுத்தனர்.

அப்புறம் ஜோசப் ஹெல்லர் இருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசிய விமானப்படை வீரர்களில் ஒருவர்தான் ஜோசப் ஹெல்லர். போரின் குரூரங்களை இருண்ட அங்கதமாகப் பார்க்கும் ஒரு ராட்சத பித்து நிலையை போதப் பார்வையாக்கும் அவரது காட்ச் 22 என்ற நாவல் இருக்கிறது - பிணவறையின் அச்சத்தையும் அழுகையையும் சிரிப்பையும் சமநிகழ்வாய் விவரிக்கும் நாவல்.


10 Feb 2013

வரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா

சிறப்பு பதிவர் : அஜய் 

எக்காலத்திலும் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் இயல்பு கொண்ட ஒரு தொல்கதையை 'வரலாற்றாய்வாளர்' நவீனப்படுத்துகிறது.  பல திரைப்படங்களுக்கும் புத்தகங்களுக்கும் கதைக்கருவைக் கொடுத்த தொல்கதை இது - ப்ராம் ஸ்டோகர் தன் டிராகுலாவை உருவாக்க அடிப்படையாக இருந்த 'கவுண்ட் டிராகுலா' (Count Dracula) அல்லது 'வ்லாத் தெபஸ்' (Vlad Tepes) என்ற அந்த நிஜ மனிதரைத்தான் சொல்கிறேன். டிவிலைட் (Twilight) தொடரை அதன் வெற்றியின் பாதிப்பில் நகல் செய்து எழுதப்பட்ட நாவல் இல்லை இது. இரத்தக் காட்டேரிகள், vampirism   போன்ற விஷயங்கள் அதிக அளவில் இல்லாத, முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை எலிசபெத் கொஸ்தோவாவின் 'வரலாற்றாய்வாளன்'. இது டான் ப்ரௌவுனும் அவரது சகாக்களும் பொங்கலிட்டுப் பரிமாறும் பழகிய சரக்கில்லை. சிறப்பான கதையமைப்பு கொண்ட இந்த நாவலில் அவற்றைவிட தேர்ந்த கதை சொல்லல் உண்டு. 

இந்த நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சொல்லப்படாத கதைசொல்லியின் பார்வையில் இதன் முதல் பகுதி துவங்குகிறது. நாவலின் எந்த இடத்திலும் இவரது பெயர் குறிப்பிடப்படுவதில்லை. எழுபதுகளில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார் இவர். இந்தப் பகுதியில், ஒரு விடலைப் பருவ மாணவியான கதைசொல்லி தன் தந்தை பால் உடன், ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கிறார். பால் சமூக அமைதி மையம் ஒன்றை நிர்வகிக்கிறார், அது மனிதாபிமான சேவைகளைச் செய்கிறது.  சொர்க்கம் போன்ற கதைசொல்லியின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் குறுக்கிடுகிறது - அவரது தந்தையின் நூலகத்தில் ஒரு நாள் அது எதிர்ப்படுகிறது. மரக்கட்டையில் செதுக்கிய வடிவங்களில் மசி பூசி அச்சிடப்பட்ட அதன் ஓவியங்களில் டிராகுலாவோடு தொடர்புடைய டிராகனின் ஒற்றை உருவமும் இருக்கிறது. அது குறித்து தன் தந்தையிடம் விளக்கம் கேட்கிறார், ஆனால் அவருக்கு எதுவும் பேசும் விருப்பம் இல்லை. ஆனால் எப்படியோ தன் தந்தையிடமிருந்து உண்மையை வரவழைத்து விடுகிறார். கதை சொல்லியின் தந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் துவங்குகிறார்.

29 Jan 2013

ஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்

சிறப்பு  பதிவர் : அஜய்


முதலில் கொஞ்சம் சுயபுராணம். அமெரிக்காவைப் பற்றி ஓரு சிறுவனாக எனக்கிருந்த மனச்சித்திரம் நான் கண்ட திரைப்படங்களையும் வாசித்த புத்தகங்களையும் கொண்டு உருவான ஒன்று (குழந்தைகள்/ பதின்ம வயதினருக்கான கதைகள், pulp fiction). அதில் ஓரு ஒற்றைத்தன்மை இருந்தது. என் மனதில் இருந்த அமெரிக்கா செழிப்பான ஓரு மாபெரும் நிலப்பரப்பு, அதன் நகரங்களில் உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் திரண்டிருந்தன, அங்கிருந்த மக்கள் பெரும் பணக்காரர்களாக இருந்தனர், அவர்களின் பால்விழைவு கட்டுப்பாடற்றிருந்தது. பெரும் பணம், பொருள் ஈட்ட வேண்டும் என்பது போன்ற தீவிரமான குறிக்கோள்களுடன் வாழ்ந்த அவர்கள் பிரம்மாண்டமான நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்தனர். நிறுவனங்களாக அல்லது மாஃபியா கும்பல்களாக மோதிக் கொண்டனர் (corporate/mafia wars). இவர்களைத் தவிர இன்னொரு கூட்டமும் இருந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த கெட்டவர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற முயற்சிக்கும் கூட்டம் இது. 

இந்த அமெரிக்கா வெள்ளையர் கருப்பர் என்று இரண்டு குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது. நிலத்தின் பூர்வகுடிகளும் சிவப்பிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கொடுமையானவர்களாக இருந்தனர், அல்லது வெள்ளையர்களின் உதவியாளர்களாக. அவர்களுடைய தனித்தன்மை என்று எதுவும் இல்லை, stereotyping தான் எங்கும். நம் தமிழ் நாட்டு 'ராணி காமிக்ஸ்' காட்டிய செவ்விந்தியர்களும் இப்படிதான் இருந்தார்கள்.  அங்கு குடியேறியிருந்த ஹிஸ்பானிக்குகளும் ஏனைய வேற்று இனத்தவர்களும் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. (உதாரணமாக 'காட்பாதர்' (mario puzo) நாவலின் முக்கிய பாத்திரம் இத்தாலிய குடியேறி என்றாலும், கதையின் களன் வேறொன்றாக இருப்பதால் அதிலும் இது பேசப்படவில்லை) நான் வாசித்த புத்தகங்களின் கதைமாந்தர் எதிர்கொண்ட பிரச்சினைகள் என் வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. என் மனதில் இருந்த சித்திரம் யதார்த்தத்தைவிட்டு வெகுவாக விலகிய ஓரு திரிக்கப்பட்ட பிம்பம். இதெல்லாம் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்த நாட்களில் இப்படியெல்லாம் இருக்கும் என்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. இன்றும் கணிசமான பேர் அமெரிக்காவை ஒரு சொர்க்க பூமியாகத்தான் பார்க்கிறார்கள், 2005இல் காட்ரினா (katrina) புயலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டபோது அங்குள்ள சீர்கேடுகள், ஊழல்கள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் அரசு நிர்வாக செயலின்மை வெளிச்சத்துக்கு வந்தபோது அதை நம்ப முடியாமல் தவித்தவர்களை நான் அறிவேன்.

அந்த சிறு வயதில் கிடைத்திருந்த புத்தகங்களைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும்போது கிராமங்களைப் பற்றிய விவரணைகளோ கிராமங்களில் வாழ்ந்தவர்கள் பற்றிய பதிவுகளோ, அவர்களும் சமகாலத்தில்தான் வாழ்கின்றனர் என்ற உணர்வோ அவற்றில் வெளிப்பட்டிருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்காவில் நகரங்கள் மட்டும்தான் இருந்தன என்பதுபோல் ஓரு உணர்வு, கிராமங்கள் என்ன, சிற்றூர்களும்கூட தொடப்படவில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பம் வரையில் (pre-liberalization era) சிறுவர்களாக இருந்தவர்களுக்கு அமெரிக்கா பற்றிய ஒரு பொது எண்ணம் இப்படிதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதும் கிராமங்களைப் பேசும் நாவல்கள் எழுதப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், எனக்கு அவை எதுவும் தெரிய வரவில்லை. பின்னர்  இன்னும் பல எழுத்தாளர்களை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் மெல்ல மெல்ல வேறொரு சித்திரம் உருவானது.

உதாரணத்துக்கு ரேமண்ட் கார்வார் அமெரிக்காவின் மத்திய மற்றும் தாழ்நிலை நடுத்தர வர்க்கத்தினரின் நகர, சிறு நகர வாழ்க்கையைப் பற்றிய ஓரு புரிதலைக் கொடுத்தார். அப்டைக், புறநகர் மற்றும் சிற்றூர்களில் வாழ்ந்த அமெரிக்கர்களின் இல்லற உறவைப் பற்றிய ஓரு புரிதலைத் தந்தார். அமெரிக்க பூர்வ குடிகளை பற்றி, அவர்கள் வாழ்கை முறை, தொன்மங்கள் பற்றி   N. Scott Momaday, Sherman Alexie போன்ற பலர் எழுதுகிறார்கள். ஹிஸ்பானியர்களின் குடியேற்ற வாழ்கை பற்றி (hispanic immigrant experience), ஜூனோ டியாஸ் (Junot Diaz) எழுதுகிறார். இவற்றைப் போன்ற படைப்புக்கள்தான் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றன.

அந்த வகையில் ஆனி ப்ரூவின் எழுத்தில்தான் கிராமப்புற அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.  அதன் ராஞ்ச்கள், அவற்றை நிர்வாகிக்கும் கவ்பாய்கள், அதன் பாலைவனங்கள், பிரெய்ரிகளை நாம் அவரது நாவல்களில்தான் அறிகிறோம். எனக்குக் கிடைத்த அவரது முதல் நாவலே வாசித்து முடித்ததும் என்னை அவரது எழுத்தை நேசிக்கும் வாசகனாக்கிக் கொண்டது.



20 Jan 2013

ரகசிய வரலாறு - டானா டார்ட்

சிறப்பு பதிவர் : அஜய்

முதலிலேயே கொஞ்சம் உஷார்படுத்தி விடுகிறேன். டானா டார்ட்டின் முதல் நாவலான "ரகசிய வரலாறு" (The Secret History) மர்மக் கதையோ த்ரில்லரோ அல்ல. நாவலின் பெயரையும் பின்னட்டை 'டயோனிசியச் சடங்குகள்' ('Dionysian rites') என்று ஏதோ பேசுவதையும் பார்த்தால் அப்படி ஒரு எண்ணம் வரலாம். வேண்டாம், கலைத்து விடுங்கள்.

ஆமாம், இந்த நாவலின் துவக்கத்திலும் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதற்கு பின் பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிய பின்னர், அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது. அதனால் இந்த நாவலை 'coming of age' நாவல் என்று கூறலாம். மர்மக் கதைக்கு ஆசைப்பட்டு இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாந்து விடுவீர்கள்.

இந்த நாவலின் நிகழ்வுகள் ஒரு உயர்தரக் கல்லூரியில் நடைபெறுகின்றன. முக்கிய பாத்திரங்களில் ஒருவனான ரிச்சர்ட் கல்வி ஊக்கத் தொகை உதவியுடன் கல்லூரியில் இணைந்திருக்கிறான். சிறிய கிராமத்திலிருந்து வரும்  மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த அவனால் அங்கு ஒன்ற முடிவதில்லை, தன் குடும்பப் பின்னணி குறித்து பொய் சொல்லி/அதை மறைத்து  மற்றவர்களுக்கு சமமாகச் சேர்ந்து கொள்ள முயற்சி செய்கிறான். அந்தக் கல்லூரியில் ஜூலியன் மாரோ என்ற ஒரு பேராசிரியர் இருக்கிறார், ரொம்பவும் பூடகமான நபர்.  பண்டைய கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் அவர் தன் வகுப்பில் அதிக மாணவர்களை சேர்ப்பதும் இல்லை.  அந்த வகுப்பில் ஒரு ஐந்து மாணவர்கள் (நான்கு ஆண்   ஒரு பெண்)  எப்போதும் ஒரு குழுவாக இருக்கிறார்கள், தங்கள் குழு தவிர்த்து மற்றவர்களுடன் அவர்கள் அதிகம் பழகுவதில்லை.   ஐந்து மாணவர்களின்பாலும் அவன் ஈர்க்கப்படுகிறான், இதில் பண்டைய கிரேக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தைவிட  அந்த மாணவர் குழுவிடம் நட்பாக வேண்டும் என்பதுதான் அவனுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, ஒரு முறை அவர்களுக்கு உதவி அதில் வெற்றியும் பெறுகிறான். பின்னர் அவர்கள் வழிகாட்டுதல்படி,  மாரோவிடம் மீண்டும் பேசி வகுப்பில் சேர அனுமதி பெறுகிறான், அதைத் தொடர்ந்து ஐவர் குழுவில் இணைந்து அறுவனாகிறான். 

13 Jan 2013

அமெரிக்காயணம் - டான் டிலிலோ

சிறப்பு பதிவர் : அஜய்

(நவீன உலக இலக்கியத்தைப் பேசும்போது போர்ஹெஸ், மார்க்வெஸ், லோசா என்று லத்தின் அமெரிக்காவில்  ஆரம்பித்து பரவலாக அறியப்பட்ட பத்து பன்னிரண்டு பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. உலக இலக்கியம் எண்ணற்ற குரல்களைக் கொண்டது, பல திசைகளில் விரிவது, மானுடத்தின் பல முகங்களை வெளிப்படுத்துவது. பன்மைத்தன்மை கொண்ட உலக இலக்கியத்தை ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களைக் கொண்டு மட்டும் அடையாளப்படுத்திவிட முடியாது. 

தமிழில் அதிகம் அறியப்படாத நவீன ஆங்கில எழுத்தாளர்களை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் அஜய். பிரதி ஞாயிறன்று உங்கள் ஆம்னிபஸ்ஸில் மட்டும் வெளியாகும் இத்தொடரில் இதுவரை ஜார்ஜ் ஸான்டர்ஸ் மற்றும் டெபோரா ஐசன்பர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழின் ஆகச்சிறந்த சிற்றிதழ்களில் ஒன்றான வலசையின் அண்மைய பதிப்பில் அஜய் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. வலசைக்கு ஆம்னிபஸ் தன் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

இனி  அஜய்-)



சிந்தனைகளைப் புனைந்த நாவல்கள் என்று டிலிலோவின் படைப்புகள் குறிப்பிடப்படுவதில் எனக்கு இசைவு உண்டு. ஏதோ ஒரு ஐடியா அல்லது கான்செப்ட் அல்லது சமகால சமூக நம்பிக்கை அவரது நாவல்கள் பலவற்றின் பின்னணியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. நாவலின் பின்னணியில் உள்ள அந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவும் துணைக் கருவிகளாகவே அவரது பாத்திரங்கள் இருக்கின்றனர். உதாரணமாக 'White Noise' நாவலில் நுகர்வுக் கலாச்சாரமும் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலும் இப்படிப்பட்ட ஒரு தளமாக இருக்கின்றன, "மாவோ II" நாவலில் குழுக்களின் (cult) அதிகாரமும் மனித மனநிலையின் மீதான தொலைக்காட்சி பிம்பங்களின் (imagery) ஆதிக்கமும் பின்னணியாக இருக்கிறது. இதைச் சொல்வதால் டிலிலோ வாசகர்களிடம் ஏதோ ஒரு கருத்தைத் திணிக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மாறாக, சொல்வதற்கு அவருக்கு ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது, அதை அபுனைவாக எழுதாமல் புனைவாக எழுதுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

என்னால் இவரது நாவல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்ல மாட்டேன். எந்த ஒரு கலைப் படைப்பையும் அப்படியெல்லாம் புரிந்து கொண்டுவிட முடியுமா என்ன? இவரது எழுத்தை ரசித்துப் படிக்க முடிகிறது என்றும் சொல்ல மாட்டேன். ரசித்துப் படிக்க முடியவில்லை என்று சொல்லும்போது மகிழ்ச்சியான, சுகமான வாசிப்பைத் தருவதில்லை என்ற பொருளில் சொல்கிறேன். ஆனாலும்கூட அவர் நம்மை இழுத்துக் கொள்கிறார், நம்மிடம் சொல்வதற்கு அவருக்கு ஏதோ ஒன்று இருக்கிறது. நான் கவனிக்காத ஏதோ ஒன்றை, அல்லது நாம் கவனித்திருந்தாலும் அவர் போல் அவ்வளாவு சரியாக வெளிப்படுத்த முடியாத ஏதோ ஒன்றை அவரால் சொல்ல முடிகிறது. அதனால்தான் அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


6 Jan 2013

அதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்

சிறப்பு  பதிவர் - அஜய்

டெபோரா ஐஸன்பெர்க் சிறுகதைகளின் நான்காம் தொகுப்பு "அதிநாயகர்களின் அந்திப்பொழுது" (Twilight of the Superheroes). இதில் ஏழு கதைகள் இருக்கின்றன. இவரது சிறுகதைகள் அனைத்தும் ஒரே தொகுப்பாகவும் கிடைக்கின்றன. டெபோரா ஐஸன்பெர்க்கின் எழுத்தை வாசிப்பதற்குமுன் இவரது கதை சொல்லும் முறை பற்றிய சில விஷயங்களை பார்த்து விடலாம். பொதுவாக இவரது கதைகளுக்கு கச்சிதமான முடிவு இருப்பதில்லை. ஏ என்ற இடத்தில் ஆரம்பித்து பி, சி என்று ஒழுங்கான அமைப்பில் கதை சொல்லப்படுவதில்லை. பல இழைகள் வாசகருக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

30 Dec 2012

வற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்



ஆம்னிபஸ் தளம் 365 நாட்களில் 365 பதிவுகள் இடுவதான முதன்மை நோக்கத்துடன் துவக்கப்பட்ட புத்தக தளம். இங்கு இணைந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் வாரம் ஒருநாள் அவரவருக்கான தினத்தில் பதிவிடுகிறோம். தங்கள் நூல் மதிப்பீடுகளை இங்கு இணைத்துக் கொண்ட வேறு சில நண்பர்களின் பதிவுகள் சிறப்புப் பதிவுகளாக இடுகையிடப்படுகின்றன. நேற்றோடு எங்கள் நோக்கத்தில் பாதியளவை நிறைவேற்றி விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம்.

முதலில் முன்னூறு சொற்களில் சிறு அறிமுகம் தந்தால் போதும் என்பது நோக்கமாக இருந்தது. சில வாரங்களிலேயே உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மிகச் சிறு அறிமுகங்களாக, அதிலும் குறிப்பாக, கதைச் சுருக்கமாக, இந்தப் பதிவுகள் இருப்பதாக விமரிசனங்கள் எழுந்தன. எனவே, கதைச் சுருக்கத்தையும் தாண்டி, புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். சமீப காலமாக, வெறும் புகழ்ச்சியாக இருக்கிறது என்ற விமரிசனத்தை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளோம். வாசகர் தளம் எனபதால் விமரிசனம் செய்யும் தகுதியும் திறனும் மிகக் குறைவு, இருப்பினும் அந்த திசையிலும் சிலர் செல்லத் துவங்கியுள்ளனர்.

திரும்பிப் பார்க்கும்போது எத்தனை துறைகள், எத்தனை எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறோம் என்பது வியப்பாக இருக்கிறது. விமரிசனத் துறையில் புகுவதைவிட, இந்த திசையில் முனைப்பு காட்டுவது தமிழ் வாசகர்களின் ஒரு முக்கியமான தேவையை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகளின் இடத்தை உலக இலக்கியத்தைக் கணக்கில் கொண்டுதான் நிறுவ வேண்டும் என்ற கருத்தை ஜெயமோகன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் நவீன உலக இலக்கியத்தின் தாக்கத்தில் எழுதுகின்றனர், அது குறித்த புரிதல் சில விமரிசகர்களுக்கு இருக்கலாம். ஆனால், நம்மைப் போன்ற வாசகர்கள் எத்தனை பேருக்கு உண்டு?

இரண்டாண்டுகளுக்கும் மேலாக  Words Beyond Borders என்ற வலைத்தளத்தில் நண்பர் அஜய் நவீன உலக இலக்கியம் குறித்து தொடர்ந்து பதிவுகள் செய்து வருகிறார். ஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நவீன உலக இலக்கியத்தில் ஒரு அறிமுகத்தை அளிக்கும் நோக்கத்தில் அவரது பதிவுகள் இங்கு தமிழில் திருத்தி எழுதப்பட்ட வடிவில் அளிக்கப்படுகின்றன.

அஜய் அளிக்கும் அறிமுகங்கள் இனி ஒவ்வொரு ஞாயிறும் காலை ஒன்பது மணிக்கு உங்கள் அபிமான ஆம்னிபஸ் புத்தக தளத்தில் இடுகையிடப்படும். புதிய திசையில் ஆம்னிபஸ் பயணிக்கவிருக்கிறது, நண்பர்களின் நல்லாதரவைக் கோருகிறோம்.

௦௦௦௦
(1958ஆம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஸான்டர்ஸ் ஒரு அமெரிக்கர். ஜியோபிசிகல் என்ஜினியர். பள்ளிப் படிப்பை முடித்த ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் படைப்பிலக்கியப் பணியில் முதுநிலைப் பட்டக்கல்வியை சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் முறைப்படி பயின்றார். இருந்தாலும் அவர், "நான் புரிந்து கொள்ளக்கூடிய அளவு பின்புல அறிவு எனக்கு இல்லாத ஒரு துறையில் குறைகருவிகளுடன் இயங்குகிறேன். வெல்டிங் செய்பவனை ஆடைகளை வடிவமைக்கச் சொன்ன மாதிரி" என்றுதான் சொல்லிக் கொள்கிறார். தற்போது அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸான்டர்ஸ், நான்குமுறை புனைவிலக்கியத்துக்கான நேஷனல் மாகசைன் விருது பெற்றிருக்கிறார், ஒரு முறை ஓ ஹென்றி விருதுக்கான இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவரது படைப்புகள் வேறு பல அமைப்புகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளன.

நுகர்வுச் சமூகம், பெருநிறுவன கலாசாரம் மற்றும் பெருவாரி மக்களுக்கான ஊடகங்களின் அபத்தங்களை கேலி செய்வதாக இவரது எழுத்து உள்ளது. ஏளனம் என்ற அளவில் மட்டும் அடங்கிவிடாத இவரது படைப்புகள் அறம் குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன. "நம் பற்றாக்குறை வளங்களுக்கும் நம்மிடம் உலகம் கோருவதற்கும் உள்ள இடைவெளியே வாழ்க்கையிலும் என் கதைகளிலும் நாடகீயத் தருணங்களை உருவாக்குகின்றன," என்று சொல்லும் ஸான்டர்ஸ், "நம் வாழ்க்கையின் அடிநாதமாய் ஒலிக்கின்ற கிறுக்குத்தனத்தை முழுமையாய் சுட்ட முடியாத இயலாமையே என் எழுத்தின் கிறுக்குக் குரல்களாகவும் ஒலிக்கின்றன" என்கிறார். "உண்மையையும் மானுட சுதந்திரத்தையும் மதிக்கும் இடத்தில் எப்போதும் நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு அப்பால் கவலைப்பட எதுவுமில்லை," என்ற அளவில் மட்டுமே இவரது அரசியல் இருக்கிறது).
ஸான்டர்ஸின் In Persuasion Nation என்ற சிறுகதை தொகுப்புக்கு அஜய் எழுதிய மதிப்பீடு இனி:


து வற்புறுத்தல்களின் யுகம். எல்லா காலகட்டங்களிலும் எல்லாரும் ஒருவரையொருவர் இதையும் அதையும் செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். ஆனால் இன்று  வற்புறுத்தப்படுவதின் உச்சகட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் சில பத்தாண்டுகளாக பெரிய அளவில் நம் வாழ்வை ஊடுருவி விட்டன. இன்று நாம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின்  கைபேசியை வாங்கினால், அது நமக்கு உபயோகமா என்று மட்டும் பார்க்கிறோமா  அல்லது பலரும் அதை உபயோகிப்பதால், அந்த வகை கைபேசி இல்லாதவன்  மனிதனே இல்லை என்று உருவாக்கப்படும் ஒரு வித மாயையினால் அதை வாங்குகிறோமா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரை  சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நம்மில் பலர் அந்த மக்களை பற்றி, வாழ்க்கை முறை பற்றி அறிந்தவர்களா, அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களா?> முன்பு, நம்முடைய அனுபவம், தேவை  சார்ந்து  நமக்கு ஒரு அபிப்பிராயம் அல்லது தெரிவு இருக்கும். பின்புதான் மற்றவர்களுடன் நமக்கு  ஏற்படும் உரையாடல்கள், ஊடகங்களின் செய்திகள், நாம் படிப்பது  இவற்றுடன் அவற்றைப் பொருத்தி பார்த்து நம் தெரிவை மாற்றிக் கொள்வோம் அல்லது நமது நிலையில் உறுதியாக இருப்போம். ஆனால் இன்று ஊடகங்களில் வரும் செய்திகள்/ பெருநிறுவனங்கள்  தரும் விளம்பரங்கள்தான் நம்முடைய கருத்துக்களை, நமக்கான தெரிவுகளை  உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவது போய், யாராலோ, எதற்காகவோ முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளே நமக்கு தகவல்களாகக் கிடைக்கின்றன.

ஜார்ஜ் ஸான்டர்ஸின் 'பெர்சுவேஷன் நேஷன்" (Persuasion nation) என்ற தொகுப்பில் ஒரு சீரழிந்த, ஒரு டிஸ்டோபியன் (dystopian) சமூகத்தை நாம் பார்க்கலாம். நுகர்வுக் கலாசாரத்தில் மக்கள் எவ்வாறெல்லாம் வற்புறுத்தப்படுகிறார்கள், சுய தேர்வோ, கருத்துக்களோ இல்லாதவர்களாக மாற்றப்படுகிறார்கள்  என்பது இந்தத் தொகுப்பின் மையக் கருத்தாக இருக்கிறது. இதில் ஒரு அபத்தம் என்னவென்றால் கதைமாந்தர், தாங்கள் இருக்கும் சமூக அமைப்பை நேசிப்பவர்கள், தாங்கள் இன்னும் தங்கள் தெரிவுகளை எந்த குறுக்கீடோ, வற்புறுத்தலோ இல்லாமல் செய்து கொள்வதாக எண்ணுபவர்கள். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளின் களமாக அமெரிக்கா இருந்தாலும் எந்த ஒரு வளரும் அல்லது வளர்ந்த நாட்டுக்கும் இந்தக் கதைகளின் எல்லைகள் விரியக்கூடும்.



Related Posts Plugin for WordPress, Blogger...