A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

24 Feb 2013

காட்ச்-22 நடைபிணங்களின் நகைச்சுவை

சிறப்பு பதிவர் : அஜய்

போர் குறித்து பலருக்கும் இருக்கும் எண்ணம் என்ன? போர்க்காலம் தேசப்பற்று எழுச்சியடையும் காலம்,  அது வெறியாகவும் மாறும் காலம். போர்க்களத்தில் தங்கள் வாழ்வை பலி கொடுக்கும் இளைஞர்களைப் பார்த்து மற்றவர்கள் பெருமைப்படுகிறார்கள், அவர்களுக்காக பரிதாபப்படுகிறார்கள். போர்க்களம், தேசப்பற்று, அதில் களப்பலி காணும் இளைஞர்கள் குறித்த பெருமையும் துயரமும் - புத்தகங்களும் இதர ஊடகங்களும் இவ்வுணர்வையே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன.

ஆனால் இது குறித்து மாற்றுப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் பலரும் உண்டு, அவர்கள் போரின் மறு முகத்தைத் தங்கள் படைப்புகளில் விவரித்திருக்கின்றனர்.  முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்கெடுத்த போர் வீரர்கள் இவர்கள், தங்கள் அனுபவ சேகரத்தை புத்தகங்களாகப் பண்படுத்திக் கொடுத்திருப்பவர்கள் இவர்கள். எரிக் மரியா ரிமார்க் (Erich Maria Remarque), ஜேம்ஸ் ஜோன்ஸ் (James Jones) போன்றவர்கள் தீவிரமான, நிதர்சன படைப்புகளைத் தந்தனர். கர்ட் வோன்னகட் (Kurt Vonnegut) போன்ற சிலர் நிஜ வாழ்வின் கொடூரத்தை அறிவியல் புனைவுகளாகக் கலந்தடித்துக் கொடுத்தனர்.

அப்புறம் ஜோசப் ஹெல்லர் இருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசிய விமானப்படை வீரர்களில் ஒருவர்தான் ஜோசப் ஹெல்லர். போரின் குரூரங்களை இருண்ட அங்கதமாகப் பார்க்கும் ஒரு ராட்சத பித்து நிலையை போதப் பார்வையாக்கும் அவரது காட்ச் 22 என்ற நாவல் இருக்கிறது - பிணவறையின் அச்சத்தையும் அழுகையையும் சிரிப்பையும் சமநிகழ்வாய் விவரிக்கும் நாவல்.


நேசநாடுகள் இரண்டாம் உலகப் போரில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த இறுதி ஆண்டுகளைக் களமாய் கொண்ட இந்தப் புனைவு இத்தாலியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ராணுவ தள அனுபவங்களைத் தொடர்கிறது. இதில் ஒரே நிகழ்வு வெவ்வேறு பார்வைகளில் விவரிக்கப்படும்போது, திரும்பத் திரும்ப ஒரே விஷயமே சொல்லப்பட்டிருப்பதான உணர்வு சிலருக்கு வரலாம். ஆனால் திரும்பச் சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதோ ஒரு கூடுதல் தகவல் இருக்கிறது. அந்தத் தகவல், நாவலைப் புரிந்து கொள்ள நம்மை இன்னும் நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. துவக்கத்தில் தொடர்பற்றதாகத் தெரியும் நிகழ்வுகள், தொடர்ந்த வாசிப்பில் பொருள் நிறைந்திருப்பதான புரிதலைத் தருகின்றன.

இந்த நாவலில் உள்ள ஏராளமான பாத்திரங்களின் அனுபவ விவரணைகளே இதன் பக்கங்களை நிறைக்கின்றன. இதில் கதை என்ற ஒன்றை ஒற்றைத்தன்மையில் பார்ப்பதை விட,  இதில் வரும் பாத்திரங்களை ஒரு குறியீடாகவும், இதன் சம்பவங்கள் வேறொன்றை பிரதிபலிப்பதாகவும் பார்க்க வேண்டும் - அப்போதுதான் நாவலின் அங்கதத்தை மீறி அது சொல்ல வரும் இருண்மையான பேசுபொருளை  உணர முடியும்.

இரண்டாம் உலகப் போரின்போது, அதன் இறுதி ஆண்டுகளில் கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்தவர்கள், ராணுவம் அல்லாத வேறு துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள், சற்று முதியவர்கள் (ஒரு 40 வயது வரை) என பலதரப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு பயிற்சியும் அதிகம் அளிக்கப்படவில்லை, குறிப்பாக மன ரீதியாக அவர்களைத் தயார் செய்யவில்லை. போரின் பயங்கரத்திற்கு ஒருவரை பயிற்சியால் மன ரீதியாக முற்றிலும் தயார் செய்து விட முடியாது என்பது உண்மை. இருந்தும் அப்போதைய அவசரத்தில் அத்தியாவசிய பயிற்சியைத் தாண்டி எந்த புரிதலையும் அளிக்காமல் மந்தை மந்தையாக அவர்கள் போர்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

எங்கு போர் நடந்தாலும் - அது உலகப் போரோ, அல்லது வீயட்நாமோ இராக்கோ,- அதில் பங்கேற்பவர்களுக்கு வரும் மன நெருக்கடி பற்றியும், போர் முடிந்தும் அன்றாட வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியாத நிலை பற்றியும் பல பதிவுகள் உள்ளன.  உலகப்போரில் அமெரிக்காவின் பங்கை குறித்து Stephen Ambrose  எழுதிய புத்தகங்களில் (D-Day, Band Of Brothers, Citizen Soldiers)  இத்தகைய பல சித்தரிப்புகள் உண்டு. உதாரணத்துக்கு, பதினேழு பதினெட்டு வயதில் போர்களத்திற்கு அனுப்பப்பட்டு வந்து சேர்ந்த முதல் நாளே இறப்பவனைப் பற்றிய சம்பவக் குறிப்பு.  Stephen Ambrose போர் எதிர்ப்பாளர் அல்ல - கடிதங்கள், நிர்வாக குறிப்புக்கள், வாய்மொழி தரவுகள் இவற்றைக் கொண்டு தான் படைப்புகளை எழுதியுள்ளார். Citizen Soldiers என்ற ஒரு புத்தகத்தின் பெயரே வீரர்கள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்பதைச் சொல்கிறது (இவர் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அறிவுத் திருட்டு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது, அது இந்த இடத்தில் முக்கியமில்லை, அவர் புத்தங்களில் தரும் தகவல்தான் முக்கியம், அது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது).


தங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத பயங்கரங்களை சந்தித்த, சந்திக்கும் இப்படிப்பட்ட வீரர்களின் பிரதிநிதி யோசாரியன் (Yossarian). காட்ச் 22 நாவலில் 'Insanity is contagious' என்று ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறது.  அதற்கேற்ப எண்ணற்ற பாத்திரங்கள், அபத்த நிகழ்வுகள், அதனால் அவர்கள் கிட்டத்தட்ட மனநிலை பிறழ்ந்த நிலையில் இருப்பது, பிறகு நாவலிலிருந்து காணாமல் போவது என கட்டுக்கடங்காமல் பாயும் இந்த நாவலில் யோசாரியன் ஒரு தொடர் பாத்திரம். பெரிதும் இவன் பார்வையில் தான் நாவல் நகர்கிறது. 'Insanity is contagious'  என்பதை உணர்ந்தவன், எப்படியாவது  தன் உயிரைக, sanityயை  காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவனது முக்கியமான லட்சியம் (He was going to live forever, or die in the attempt). ஒருபுறம் பித்து நிலை, இன்னொரு புறம் தெளிவான மனநிலை என இரண்டுக்கும் நடுவில் இருப்பவன் (insanity X lucidity).

அவன் சொல்வது பைத்தியக்காரத்தனமாக இருப்பது போல் தோன்றினாலும் அதிலும் ஒரு தர்க்கம் இருக்கும்.  யோசாரியனுக்கும் அவனது நண்பனுக்கும் நடக்கும் உரையாடல் கீழே.

They're trying to kill me," Yossarian told him calmly.

"No one's trying to kill you," Clevinger cried.

"Then why are they shooting at me?" Yossarian asked.

"They're shooting at everyone," Clevinger answered. "They're trying to kill everyone."

"And what difference does that make?"

இதில் யோசாரியன் கூறுவது பைத்தியக்காரத்தனம் என்று முதலில் நாம் எண்ணலாம், ஆனால் இறுதியில், அவன் பார்வையில் பார்த்தால் அவன் சொல்வது  சரியானதுதான் என்பதை உணர்கிறோம். குறிப்பாக யோசாரியன் என்பவனைக் கொல்ல வேண்டும் என்று கொலை முயற்சி செய்வதற்கும், எதிரி என்ற பொது அடையாளத்தில் கொல்ல முயல்வதற்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலும் இறக்கப்போவதென்ன்னமோ யோசாரியன்தான்.

ஆமாம், இது போன்ற பிணவறை அங்கதமே இந்தப் படைப்பெங்கும் நிறைந்திருக்கிறது. இது போன்ற ஒரு வாக்கியத்தைப் படித்ததும் சிரிப்பு வருகிறது, ஆனால் அந்தச் சிரிப்பு நீடிப்பதில்லை.  இந்த பாத்திரம் மட்டுமல்ல நாவல் முழுதும் அபத்தமும், அதை நியாயப்படுத்தும் தர்க்கமும் இணைந்தே உள்ளன (நாவலின் தலைப்பான 'Catch-22' வின் அர்த்தமே இப்படிப்பட்ட ஒரு இணைப்புதான்). இது போல் சிரிக்க வைக்கும் கட்டங்கள் நிறைந்த நாவல், ஆனால் நம் சிரிப்பு இதன் இருள்நகையின் தாக்கத்தில் விரைவில் உறைந்து போகிறது. யோசாரியான் போல் மறக்க முடியாத பாத்திரங்கள் பல.


ராணுவம் என்பதும் ஒரு நிறுவனம்தான். இங்கும் ஒரு நிறுவனத்தில் நடக்கும் அதிகார மோதல்கள், மேலதிகாரி மற்றவரிடம் வேலை வாங்கிக்கொண்டு தான் புகழ் பெறுவது, நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலாவதியான, அர்த்தமற்ற விதிகள் என அனைத்தும் உண்டு.அவை இந்த நாவலில் பகடி செய்யப்படுகின்றன. அதன் உச்சகட்டம் டாக் டனீகா (Doc Daneeka). இவர்தான் நாவலின் தலைப்பை உருவாக்குபவர்.  அனைத்து அமைப்புகளிலும் உள்ள விதிகளின் இயந்திர இயக்கம் இவனது விதியையும் நிர்ணயிக்கிறது. அப்படி என்ன ஆகிறது இவனுக்கு?

ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் இத்தனை மணி நேரம் போர்க்களத்தில் விமானங்களை இயக்கியிருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. விதியை சரி செய்ய, தான் விமானப்பயணம் செய்யாமல், ஆனால் தன் பெயர் மட்டும் பயணியர் பட்டியலில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான் அவன். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவன் பெயரளவில் மட்டும் பயணித்திருந்த விமானம் எரிந்து விழுந்து விடுகிறது, அவன் இறந்துவிட்டதாகப் பதிவு செய்யப்படுகிறது. டனீகா உயிருடன் இருந்தாலும், அனைவரின் கண்முன்னும் ரத்தமும் சதையுமாக நடமாடினாலும், அவன் இறந்துவிட்டதாகவே நிர்வாக அமைப்பு கருதுகிறது. மரணம் குறித்த தகவல் அவனது மனைவிக்கு அனுப்பப்படுகிறது, அவளும் அதை ஏற்றுக் கொள்கிறாள். உயிரோடு இல்லாத காரணத்தால் தன் பிரிவை விட்டு அவனால் வெளியே செல்ல முடியாது, இறந்தவனை வெளியேற அனுமதிக்க விதிகளில் இடமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அவன் இறந்து விட்டதாக தொடர்ந்து சொல்வதால், அவனே காலப்போக்கில் அதை நம்பத் தலைப்படுகிறான். அபத்தத்தின் உச்சம்.

நிர்வாக அமைப்பின் அர்த்தமற்ற விதிகளின் இன்னொரு உதாரணம் மட் (Lieutenant Mudd). இவர் தன் குழுவில் சேரும் முன்னரே இறந்து விடுகிறார் (மேலே Ambrose புத்தகத்தில் வரும் நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளேன், அதைப் போன்றதே இதுவும்). இவரை போரில் இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்ப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஒருவரும் ஒன்றும் செய்வதில்லை. மட் என்று ஒருவர் இருந்ததையே யாரும் ஒப்புக்கொள்வதில்லை.

ராணுவ அமைப்பு எப்போதும் தவறிழைக்காது என்பதை வலியுறுத்த உயிரோடு இருக்கும் டனீகா இறந்தவராகவும், இறந்த மட் எப்போதுமே இருந்திராதவராகவும்  bureaucracyஆல் நிறுவப்படும் அவல நகைச்சுவை இது.
பொதுவாக போர் குறித்த சித்திரங்களில் மன்னர்களும் தளபதிகளும் களத்தில் இறங்கிப் போரிடுவதாக படித்திருக்கிறோம். இப்படி பழங்காலத்தில் நடந்திருக்கலாம், நவீன போர் முறை வந்தபிறகு அது அரிதே. (Rommel போன்றவர்கள் இரண்டாம் உலகப்போரில்  நேரடியாக முன்னின்றனர் என்று படிக்கிறோம்). தங்கள் போர் வெறியால், வீரர்களை துச்சமாக மதித்து தேவை இல்லாமல் பலி கொடுப்பவர்கள்தான் இக்காலத்தில் இருக்கிறார்கள். ட்ரீடில் (General Dreedle) அப்படிப்பட்ட ஒருவர். தன் கீழ் பணியாற்றுபவர்களை தூசு போல் எண்ணுபவர், அவர்களுடைய உயிரின் மதிப்பை அறியாதவர். தான் நேரடியாக பங்கேற்காமல், தன் வீரர்கள் ஒரு நகரத்தை பிடித்தபின் நடக்கும் வெற்றி வரவேற்பின்போது மட்டும் முன்னிற்பவர். இவர் கூடவே ஒரு பெண் வருகிறார். ட்ரீடில் மருமகனும் அவருக்கு உதவியாக வருகிறார். ட்ரீடில் மருமகன் அந்தப் பெண்ணிடம் முறை தவறி நடக்க வேண்டும், அதை தான் கண்டுபிடித்து மருமகனை தண்டிக்க வேண்டும் என்பது ட்ரீடிலின் அவா. அவருக்கும் பெக்கம் (General Peckem) என்ற இன்னொரு தளபதிக்கும் அதிகாரப் போட்டி உண்டு. இந்தப் போட்டியில் பெக்கம் தோல்விதான் அடைகிறார். 

போர்களத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள், இது ஹெல்லரின் உலகம். இதில் அவர் சுட்ட விரும்புவது, கட்டுக்கோப்புடன் செயல்படுவதாக நம்பப்படும் ராணுவம் போன்ற நிறுவன அமைப்பிலும் மலிவான போட்டி பொறாமைகள் உண்டு என்பதைத்தான். ராணுவ உயரதிகாரிகள் கீழ்மையானவர்களாக, சுய லாப/ முன்னேற்ற நோக்கம் கொண்டவர்களாகவே நாவலில் வருகிறார்கள். இன்னொரு அதிகாரி பற்றி ஹெல்லர் இப்படி கூறுகிறார்

"Colonel Cathcart was indefatigable that way, an industrious, intense, dedicated military tactician who calculated day and night in the service of himself."

ஈராக், ஆப்கான் யுத்தங்களுக்கு பிறகு, அந்த நாடுகளில் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை எவ்வாறு தொடங்கின, வளர்ச்சி என்ற பெயரில் எவ்வளவு லாபம் ஈட்டுகின்றன என்பதை நாம் படித்து வருகிறோம். அப்படி பிணந்தின்னி கழுகுகளாக இருக்கும் நிறுவனங்களின் குறியீடுதான் மிலோ மைண்டர்பைண்டர் (Milo Minderbinder).

இவர் ஒரு வர்த்தக குழுவை நடத்துகிறார், இவர் மூலம்  போரின் வர்த்தக முகத்தையும் பகடி செய்கிறார் ஹெல்லர். உணவக அதிகாரியாக இருக்கும் இவர் ஒரு தூய முதலிய ஊழியராக இருக்கிறார். போரின் இருதரப்புக்கும் தேவையானவற்றைத் தருவித்துத் தரும் வர்த்தகர் இவர். எதிர் தரப்புகள் இரண்டுக்குமிடையே தனக்கென ஒரு தனி தொலை தொடர்பை உருவாக்கிக் கொள்கிறார் இவர். தன் தொழில் நிமித்தமாக போர்க்களத்தில் எங்கும் செல்லும் உரிமை இவருக்கு அளிக்கப்படுகிறது.

மிலோ யாருக்கும் கட்டுப்பட்டவரில்லை. இவரது தொழிலும் அதில் பணம் பண்ணுவதுமே இவரை இயக்குகின்றன. தன் செயல்களை நியாயப்படுத்த மிலோ சொல்லும் தாரக மந்திரம் இதுதான், "What's good for Milo Minderbinder, is good for the country". அனைவரையும் தன் காரியத்திற்காக வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவர் இவர். போர் குறித்த மாற்று கருத்தை கொண்ட யோசரியானையே மிலோ, The country was in peril; he was jeopardizing his traditional rights of freedom and independence by daring to exercise them, என்று கூறி அவனையும் தன் வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறான்.

ஒரு முறை தன் வியாபார செயல்பாட்டினால் தன் குழு மீதே குண்டு மழை பொழியச் செய்கிறான் இவன். இதனால் மிலோ தண்டிக்கப்படுகிறான் என்று நீங்கள் நினைத்தால் தவறு-  தன் வியாபாரத்தால் வந்த லாபத்தை அவன் சொன்னதும், அனைத்தும் மறக்கப்படுகின்றன, தொடர்ந்து அனைத்து பக்கமும் தன் வியாபாரத்தை செய்கிறான். மற்ற எந்த நிறுவன வியாபாரமும் போல், லாபம்தான் போரின் முதல் இலக்கு, அதற்காக அனைத்தும் நடக்கும் என்பதை உணர்கிறோம். மிலோவின் இன்னொரு பொன்மொழி இதை உறுதி செய்கிறது - "Frankly, I'd like to see the government get out of war altogether and leave the whole field to private industry." இன்று Blackwater போன்ற நிறுவனங்கள் சட்டத்தை நீங்கள் சரி செய்து கொடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போர்தொழிலில் இறங்கிவிட்டன .

அண்மைக் காலத்தில் அதிகம் பேசப்படும் உலகளாவிய கிராமத்தையும், உலகைத் தன் கிராமமாக்கிக் கொண்ட தொழிலதிபர்களையும்கூட பகடி செய்யும் படிமமாக இருக்கிறான் மிலோ. ழுக்கம், கட்டுப்பாடு, மெலியோரைக் காத்தல் இவற்றை தனது கொள்கையாக கொண்ட ராணுவத்திலும் குழுக்கள், மற்றவரை வதைத்தல் எல்லாம் உண்டு. இப்படி பாதிக்கப்படும் ஒருவர்  'மேஜர் மேஜர் மேஜர் மேஜர்' (Major Major Major Major). ஆமாம், 'Major Major Major' என்பது அவரது பெயர்.அவனது அப்பாவால் விளையாட்டாக வைக்கப்பட பெயர் அது. ஆரம்பத்திலேயே மோசம் போனவன் இவன். கடைசி மேஜர் ராணுவத்தில் அவர் பதவி .  இவனை பற்றி ஹெல்லர் இப்படி கூறுகிறார் -

"Some men are born mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them. With Major Major it had been all three. Even among men lacking all distinction he inevitably stood out as a man lacking more distinction than all the rest, and people who met him were always impressed by how unimpressive he was."

இந்தப் பெயரின் காரணமாக அவன் மிக விரைவாக பதவி உயர்வு பெறுகிறான். கணினியில் ஏதோ கோளாறு, அவனது பெயரை ஒரு பதவியாக அது கணக்கு செய்து கொள்கிறது. இனி அவனை பதவி இறக்கம் செய்ய முடியாது, அப்படி செய்தால் ராணுவத்தின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது என்று ஒத்துக்கொள்வதற்கு ஈடானது. எனவே அவன் உயர் பதவியில் இருக்கிறான். எதுவும் செய்யாமல் தங்களுக்கு சமமாக ஆகிவிட்ட கோபம் அவனது சகாக்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் இருக்கிறது. இவ்வளவு வேகமாக முன்னேறிவிட்டான் என்ற கோபம் அவனது ஊழியர்களுக்கு இருக்கிறது. அவன் தனித்து விடப்படுகிறான், அவனை யாரும் விரும்புவதில்லை.

ஒரு முறை அவன் கூடைப்பந்தாட்டம் ஒன்றில் மாறு வடத்தில் கலந்து கொள்கிறான். அவன்கீழ் வேலை செய்பவர்கள் அவனை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், விளையாடுவது போல் ஆளாளுக்கு அவனை அடி பின்னியெடுத்து விடுகிறார்கள். இவ்வாறாக அவர்களது கோபம் தீர்கிறது. இந்தப் பாத்திரம் நடுக்கதையில் காணாமல் போய் விடுகிறது. இவனுக்கென்று தனித்த ஆளுமை கொஞ்சம்கூட இல்லை, இவன் பார்ப்பதற்கு நடிகர் 'Henry Fonda' போல் இருப்பதாக குறிப்பிடப்படுகிறான், அவன் உருவம்கூட தனித்தன்மை கொண்டதாக இல்லை. அவன் Henry Fondaவேதான் என்றும் வதந்திகள் கிளம்புகின்றன, இவை அவனிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயத்தையும் அழித்துவிடுவதாக இருக்கின்றன.


ரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் ஹிட்லரை எதிர்ப்பதை நியாயப்படுத்திய முக்கிய காரணம், ஹிட்லர் இன அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தார், அடிமைப்படுத்தினார், அவர்களை விடுவிக்க வேண்டும், மானுடம் வெல்ல வேண்டும் என்பதே.  உயர்ந்த குறிக்கோள். இப்படிப்பட்ட உயர்ந்த குறிக்கோளை சொல்லிக்கொண்டு தான்  கிரேக்க-ட்ரோஜன் போர், ஐரோப்பியர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளை கைப்பற்றியது, ஈராக் போர்கள் என காலந்தோறும் நடந்து வருகிறது. ஆனால் வெளிப்படையாக சொல்லப்படாத காரணங்கள் உண்டு (வியாபாரம் போன்றவை, இதை மிலோ பாத்திரம் மூலம் ஹெல்லர் சுட்டுகிறார்).

இது ஒரு புறம் இருக்க, தன் சொந்த குடிமக்களை இந்த நாடுகள் எப்படி நடத்தின? அப்போதைய வல்லரசான இங்கிலாந்து பிற இன/ நாட்டு மக்களிடம் எப்படி நடந்து கொண்டது, அதன் வல்லாதிக்க வெறியில் எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம். அமெரிக்காவில் அமெரிக்க - இந்தியர்கள் (native american) ஆஃப்ரோ அமெரிக்கர்கள் (afro american) எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதும் நாம் அறிந்ததே. ராணுவத்தில் அமெரிக்க - இந்தியர்கள், ஆஃப்ரோ - அமெரிக்கர்கள் எத்தனை பேர் உயர் பதவியில் இருந்தார்கள், அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்  என்பதைப் படித்தால் அதுவே பல பதிவுகள் அளவுக்கு தகவல்கள் தரும். இந்த நாவலில் ஹல்போட் (Chief White Halfoat) என்ற அமெரிக்க - இந்திய பாத்திரம் வருகிறது. தங்களுடைய பூர்விக இடத்திலிருந்து மட்டுமின்றி, எங்கு சென்றாலும் எப்படி வெள்ளையர்களால் விரட்டப்பட்டனர் என்று கூறுகிறார்.

"How could I learn to read or write?” Chief White Halfoat demanded with simulated belligerence, raising his voice again so that Doc Daneeka would hear. “Every place we pitched our tent, they sank an oil well. Every time they sank a well, they hit oil. And every time they hit oil, they made us pack up our tent and go someplace else. We were human divining rods. Our whole family had a natural affinity for petroleum deposits, and soon every oil company in the world had technicians chasint us around. We were always on the move. It was one hell of a way to bring a child up, I can tell you. I don’t think I ever spent more than a week in one place.”

சொந்த நாட்டிலேயே இடமற்றவர்களாக, விரட்டி அடிக்கப்படுவது ஒரு உச்சகட்டத்தை அடைந்து, அவர்கள் எங்கு செல்வார்கள் என்று யூகித்து எண்ணை நிறுவனங்கள் அவர்களுக்கு முன்பே அங்கு குடியமர்ந்து விடுகிறார்கள், இதனால் முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச ஆசுவாசமும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுவும் நம்பக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இங்கு ஹல்போட் அமெரிக்க-இந்தியர்கள் ஒடுக்கப்பட்டதின் ஒரு குறியீடு. அவரின் அலைச்சல் அவர் இனத்தின் அலைச்சல். வெளியெங்கும் சுதந்திரமாக இருந்தவர்கள் 'reservations' என்று ஓரிடத்தில் அடைக்கப்பட்டு வாழ நேர்ந்த நிலை பற்றி நமக்கு ஒரு நினைவூட்டல். மேலும் நேச நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டையும் இது நமக்கு காட்டுகிறது.

இங்கு எண்ணை நிறுவனங்களை பற்றிய குறிப்பு முக்கியமானது, எண்ணை மற்றும் ஆயுத நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலில், அந்நாட்டின் கொள்கை முடிவுகளில் மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றன. (பல துப்பாக்கி சூடுகள் நடந்து அப்பாவிகள் பலர் இவற்றில் கொல்லப்பட்டாலும் இன்றும் 'Gun Control' குறித்த விவாதங்கள் முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன).

ஹல்போட் பேசும் போது இன்னொரு மிக நுணுக்கமான விஷயத்தை வெளிக்கொணர்கிறார் ஹெல்லர்.

"Racial prejudice is a terrible thing, Yossarian. It really is. It’s a terrible thing to treat a decent, loyal Indian like a nigger, kike, wop, or spic,” Chief White Halfoat nodded slowly with conviction

பாருங்கள், தான் ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் ஹல்போட், ஆஃப்ரோ-அமெரிக்க இனத்தவர்கள் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கவில்லை, தங்களை அவர்களுடன் ஒப்பிடுவதை அவர் வெறுக்கிறார். இது ஒரு மிக முக்கியமான, அனைத்து நாடுகளுக்கும், இனங்களுக்கும், சாதிகளுக்கும் பொருந்தும் விஷயம். இதை இந்தியாவிலேயே பார்க்கிறோம், சாதி எப்போதும் உயர் படிநிலைக்குச் செல்ல எத்தனிக்கும் அதே நேரத்தில் தனக்கு தாழ் படிநிலையில் இருப்பவரை அங்கேயே இருத்தி வைக்க முயல்கிறது. இதையே ஹல்போட் சொல்கிறார்.

இந்த பாத்திரம் மிக சில இடங்களிலேயே நாவலில் வருகிறது, ஆனால் அது சொல்லும் செய்தி பல. மேலோட்டமாக இருக்கும் அவல நகைச்சுவையில் இவை கவனிக்கப்படாமல் போகலாம்.


ரிக் மரியா ரிமார்க்கின் போர் எதிர்ப்பு நாவல் 'All Quiet on the Western Front' இப்படி முடிகிறது -

He fell in October 1918, on a day that was so quiet and still on the whole front, that the army report confined itself to the single sentence: All quiet on the Western Front. He had fallen forward and lay on the earth as though sleeping. Turning him over one saw that he could not have suffered long; his face had an expression of calm, as though almost glad the end had come.

போர் முடிந்து சமாதானம் ஏற்பட்ட அன்று மடிகிறான் கதை நாயகன். இந்த அவலத்தை ஹெல்லர் கொடுக்க விரும்பவில்லை, யோசாரியன் ஏன் சாக வேண்டும் என்பதே அவர் தரப்பு. எனவே இந்த அசாத்திய நாவலின் முடிவில் யோசாரியன் ராணுவத்தை விட்டுத் தப்பியோடுகிறான். அவன் நல்லபடியாக தப்பிப் பிழைக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் - ஹெல்லர் பின்னர் எழுதின க்ளோசிங் டைம் (Closing Time) என்ற நாவலில் யோசாரியன் மீண்டும் வருகிறான்.

இந்த நாவலின் பேசுபொருள் மற்றும் அதன் பிணவறை நகைச்சுவை குறித்து உங்களுக்கு ஒரு காட்சி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ராணுவ வீரர்களை கோழைகளாகவும் தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரித்து அவர்களின் தியாகத்தை மலினப்படுத்துவதாக இந்த நாவல் விமரிசிக்கப்பட்டுள்ளது. இதைவிட ஒரு அபாண்டம் இருக்க முடியாது. உண்மையில், இந்த நாவல் இயல்பு வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக நரகத்தில் புகுத்தப்பட்ட இளைஞர்களைப் பார்க்கிறது - அவர்களுக்கு அதில் எப்படி பிழைத்திருப்பது என்பது பிடிபடுவதில்லை. உண்மையில் மிகவும் கருணையுடன் அவர்களை விவரிக்கிறது காட்ச் 22.

இளைஞர்களின் பார்வையில் போரைப் பார்க்கும்போது போர் குறித்த நம் பெருமிதங்கள் புரட்டிப் போடப்படுகின்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கோட்பாடுகளை உருவாக்குபவர்களையும்,  தேசப்பற்று என்றால் தேசத்துக்காக உயிரைக் கொடுப்பது என்று நினைக்கும் தேசியவாதிகளையும் வேண்டுமானால் இந்த நாவல் கோபப்படுத்தலாம். ஆனால் இதே ஆட்கள் தங்கள் தேசத்துக்காக தம் சுண்டு விரல்களையும்கூட தியாகம் செய்யப் போவதில்லை என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

இரண்டாம் உலகப்போர் இதன் களமாக இருந்தாலும், ஹெல்லர் ஐம்பதுகளில் நடந்த 'கொரிய போர்', 'அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அரசு இயந்தரத்தால் நசுக்கப்பட்டது', 'அமெரிக்க/ரஷ்ய பனிப்போர்' என பல விஷயங்களின் பாதிப்பில் இந்த நாவலை எழுதியதாக கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும் முக்கிய இழை மனிதர்கள் அசாதாரண சூழ்நிலைகளை சந்திப்பதும், அதிலிருந்து தங்களுடைய மானுடத்தை காப்பாற்றி பிழைக்க முயல்வதுமே.

சிலருக்கு இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கோபம் இருந்தால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் இருபதுகளில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு நிறைய பிரச்சினைகள் நிச்சயமாக இருந்திருக்கும். ஆனால், நம்மில் எத்தனை பேர் நம்மைக் கொல்லப் போகிற அடுத்த வெடியையும் தோட்டாவையும் தப்பித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம்? அடுத்த நாளை விடுங்கள், ஒரு மணி நேரம் கழித்து நாம் உயிரோடு இருப்போமா என்பதே தெரியாத சூழ்நிலையை நாம் யாரும் சந்தித்ததில்லை.

நாவலில் வரும் இந்த உரையாடலைப் படியுங்கள். இருபதுகளில் இருக்கும் ஒருவன் இத்தகைய மனநிலையில் இருக்க வேண்டுமென்றால் அவன் எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்திருக்க வேண்டும்?

"Today you're an old man."

"Old?" asked Clevinger with surprise. "What are you talking about?"

"Old."

"I'm not old."

"You're inches away from death every time you go on a mission. How much older can you be at your age? A half minute before that you were stepping into high school, and an unhooked brassiere was as close as you ever hoped to get to Paradise. Only a fifth of a second before that you were a small kid with a ten-week summer vacation that lasted a hundred thousand years and still ended too soon. Zip! They go rocketing by so fast. How the hell else are you ever going to slow down?" Dunbar was almost angry when he finished.

இன்றும் உலகெங்கும் இளைஞர்கள் பலரும் இது போன்ற அச்சுறுத்தும் சூழல்களை எதிர்கொள்கின்றனர், நமக்கெல்லாம் அதனால் பாதிக்கப்படாமல் வாழும் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. தங்களால் புரிந்து கொள்ளவே முடியாத விஷயங்களை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கும் இந்த இளைஞர்களை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது கொஞ்சம் புரியலாம். இறுதியாக ஹெல்லர் இந்த புத்தகம் பற்றி சொன்னதுடன் முடிக்கிறேன், மொத்த புத்தகத்தை இதில் encapsulate செய்கிறார்

Frankly, I think the whole society is nuts - and the question is: What does a sane man do in an insane society?"

இப்போதும் இந்த நாவலை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால் போர்க்களத்துக்கு அனுப்பப்படும் இளைஞர்களின் வாழ்வை வீரமும் தியாகமும் நிறைந்த ஒன்றாக பீடத்தில் வைக்காமல் இனி வேறு வகையில் பார்ப்பீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.



Catch 22,
Joseph Heller
Alfred A.Knopf Inc.

image credits:


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...