Marcus Sedgwick எழுதிய Revolver (2009) நாவல் அலாஸ்காவிலும் ஸ்வீடனிலும் நிகழ்கிறது. கதை 1910ஆம் ஆண்டில் சொல்லப்படுகிறது - இடையிடையே வரும் பகுதிகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் அலாஸ்காவில் நடந்த ஒரு தங்க தள்ளுமுள்ளுவின்போது நடந்ததைப் பேசுகின்றன. வில்லன் கடந்த காலத்திலிருந்து உயிர் பெற்று எழும் கதை, மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பற்றிய கதையும்தான்.
கதையின் துவக்கத்திலேயே புத்திசாலித்தனத்துக்கு வேலை வந்து விடுகிறது. ஆர்க்டிக் வட்டத்தின் பனி வனாந்தரத்தில் கதையின் பிரதான பாத்திரம் தனியாக இருக்கிறான், அவன் ஒரு சிறுவன் - உதவிக்கு ஆள் வேண்டுமானால் பல மைல்கள் தேடிப் போக வேண்டும். அவன் இறந்த அப்பாவின் பிரேதத்தோடு கேபினில் இரவின் இருளில் தனித்து விடப்பட்டிருக்கிறான் - விடியலில் துப்பாக்கியும் கையுமாக முரட்டு ராட்சதன் வுல்ஃப் அவனுக்குத் துணையாக வந்து சேர்கிறான் - ஆனால் அவன் வந்திருப்பது சோகத்தில் பங்கேற்கவோ உதவி செய்யவோ அல்ல, எங்கே இருக்கிறது, இருக்கிறதா என்ன என்றே தெரியாத தங்கத்தில் பங்கு கேட்டு வந்திருக்கிறான். அது கிடைக்காவிட்டால் அப்பா செய்த துரோகத்துக்கு பிள்ளையைக் கொன்று பழி தீர்த்துக் கொள்வான். ஆனால் நம் இளம் ஹீரோ ஸிக்குக்கோ தங்கம் பற்றி எதுவும் தெரியாது. தங்கம் எங்கே என்று கேட்கும் வுல்ஃபிடமிருந்து தப்பிப்பது எப்படி? "நீ எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும், அறிவைப் பயன்படுத்த வேண்டும்," என்று அப்பா அவனுக்குச் சொன்ன அறிவுரையே கடைசி வரைக்கும் ஸிக்க்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

இளம் பிள்ளைகளுக்கான இந்த நாவல் (Orion Children's Books) அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை, அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறது. அப்பா தன் மகனுக்கு ஒரு ரிவால்வரைக் கொடுத்திருக்கிறார் - அனைத்து நம்பிக்கைகளுயும் பொய்த்தபின் இது உனக்கு உதவி செய்யும் என்று சொல்லியிருக்கிறார் அவர். ஆனால் அம்மாவோ, நம்பிக்கையிழந்த பின்னும், எதிர்பார்ப்புகளை அனைத்தும் பொய்த்த பின்னும், அன்பே உன்னைக் காக்கும் என்று விவிலிய வாக்கியங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். விடை தெரியாத ஒரு ரகசியத்தின் பதிலைச் சொல்லாவிட்டால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுபவனிடமிருந்து தப்ப வழியில்லை - ஒளித்து வைத்திருக்கும் ரிவால்வரை எடுத்து அவனைக் கொன்றாக வேண்டும். ஸிக் - அந்தச் சிறுவன் அதைச் செய்வானா? துவக்கம் முதல் முடிவுவரை இதுதான் கதையின் சஸ்பென்ஸ்.
செகாவ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது - உன் கதையில் ஒரு துப்பாக்கி இருந்தால் அது வெடித்தாக வேண்டும். இந்தக் கதையின் முடிவில் துப்பாக்கி வெடிக்கிறது, ஆனால் நாம் எதிர்பார்த்த மாதிரி அது வெடிப்பதில்லை. இங்கேதான் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது, அப்பா சொல்லிக் கொடுத்த அறிவையும் அம்மா புகட்டிய அறவுணர்வையும் பயன்படுத்தி ஸிக் எப்படி தப்பிக்கிறான் என்பது கதையில் தனியாகச் சொல்ல வேண்டிய விஷயம்.
இந்த மாதிரி கதைகளில் உணர்ச்சிகள், புத்திசாலித்தனம், புறச் சூழல் எல்லாமும் முக்கியமாக இருக்கின்றன. புறச்சூழல் என்று சொல்லும்போது நாம் இயற்கைச் சூழல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல், கருவி, தொழில்நுட்பம் என்று எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். மனித மனதின் உள்ளே என்ன நடக்கிறது என்பதையும் வெளியே என்ன நடக்கிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. பாத்திரங்களின் வாழ்வும் சாவும் இந்த அறிவால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. மனித மனமும் அவனைச் சுற்றியுள்ள சூழலும் பிணைந்திருக்கின்றன - இந்தப் பிணைப்பை, எப்படிப்பட்ட சூழலில் மனிதன் எப்படி நடந்து கொள்வான், கருவிகள் எப்படி செயல்படும் என்ற விஷயங்களை, முழுமையாகப் புரிந்து கொள்பவனே வெற்றி பெறுகிறான்.
இந்தக் கதையில், பனிப் பொழிவு, உறைபனி, குளிர் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஸிக்கைக் காப்பாற்றக்கூடிய தகவல்களை மறைத்து வைத்திருக்கின்றன. அது தவிர ரிவால்வரும் உண்டு, அது எப்போது எப்படி வேலை செய்யும் என்ற தகவல்களும் முக்கியமானவை. அவனைக் கொல்ல வந்திருக்கும் வுல்ஃபுக்கும் இந்தத் தகவல்கள் உண்டு, ஆனால் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துபவனுக்கே இவை உதவி செய்யும். ஸிக்கின் அப்பா, ஐனாரும் புத்திசாலித்தனத்துடன்தான் தங்கத்தைச் சேர்த்து பாதுகாத்திருக்கிறார். தான் சாகுமுன், அதை அடையும் வழிக்கான தடயத்தையும் உறைந்த குளத்தின் பனிப்பரப்பில் தன் மகனுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். முரட்டு பலத்துடன் மிரட்டும் வுல்ஃப் இவற்றையெல்லாம் கவனிக்கத் தவறுகிறான், ஸிக் சரியான நேரத்தில் சரியான புள்ளிகளை இணைக்கிறான். அவன் எப்படி புத்திசாலித்தனமான தீர்வு காண்கிறான் என்பதுதான் கதையில் சுவாரசியம்.
"இறந்தவர்களும் கதை சொல்வார்கள்," என்று துவங்குகிறது கதை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு இறந்து கொண்டிருப்பவர்களும் நாவலை எழுதிய செட்ஜ்விக்குக்கு கதை சொல்லியிருக்கிறார்கள். துப்பாக்கிகளைக் கொண்டாடிய ஜெஃப்பர்ஸன் காலம் இன்று பள்ளிச் சிறுவர்களையும் சுட்டுத் தள்ளும் அபத்தத் துணிச்சலுக்கு அமெரிக்காவைக் கொண்டு வந்திருக்கிறது. துப்பாக்கியின் ஆற்றலைப் பேசும் அதே சமயம், அதைப் பயன்படுத்துவதில் உள்ள தார்மிகச் சிக்கல்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் செட்ஜ்விக். ஸிக்கின் சிக்கல்களுக்கு அவர் அளிக்கும் தீர்வின் தார்மிக நியாயம் கொஞ்சம் கேள்விக்குரியது, ஆனால் அதன் புத்திசாலித்தனம் பாராட்டப்பட வேண்டியது - "The ways of God even involve crimes; He knows how to use this and take advantage of them in ways unknown to us but well know to him, says Pope John Paul II," என்று ஒரு நண்பர் அஞ்சல் அனுப்புகிறார்.
இந்த நாவலைத் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்த்தால் நம் கதைகள் அகம் என்ற அச்சில்தான் திரும்புகின்றன என்று தோன்றுகிறது. கருவிகள், தொழில்நுட்பம், இயற்கை நிகழ்வுகள் என்ற புறக்காரணிகளைக் கதையோட்டம் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. இதை வேறிடத்தில் பேச வேண்டும்.
Revolver, Marcus Sedgwick,
Orion Children's Books,
விமர்சனம் அருமை
ReplyDeleteவாசித்தமைக்கு நன்றிகள்.
Delete