A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label சுயசரிதை. Show all posts
Showing posts with label சுயசரிதை. Show all posts

27 Jan 2020

ஒரு சிற்பியின் சுயசரிதை - எஸ். தனபால்

எஸ். தனபால் எழுதிய, “ஒரு சிற்பியின் சுயசரிதை,” 126 பக்கங்கள் மற்றும் 16 வழுவழு தாள்களின் இருபுறம் (பெரியார், திரு. வி. க., பாரதிதாசன், எஸ். ராதாகிருஷ்ணன், என்று தனபால் வடித்த சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களும் அவர் தன் நண்பர்களோடும் கிருஷ்ணர், மீனவர், புத்தர் வேடத்திலும்) என 32 புகைப்படங்கள் கொண்ட புத்தகம். காலச்சுவடு பதிப்பகம் இது மாதிரியான நூல்களை வெளியிடுவதில் தன்னை முதன்மை பதிப்பகமாய் நிறுவிக் கொண்டிருக்கிறது (மேற்கத்திய ஓவியங்கள் குறித்த பி.ஏ. கிருஷ்ணனின் இரு நூல்களும் இவ்வகையில் உயர் முன்மாதிரிகள்). சந்தாதாரர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் அனுப்பும் சிறுவாணி வாசகர் மையம் இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேர்ந்தெடுத்ததில் ஒரு முக்கியமான இடத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. சிறுவாணி வாசகர் மையம் அளிக்கும் விற்பனை உத்திரவாதம், காலச்சுவடு பதிப்பகத்தின் தரமான அச்சு மதிப்பீடுகள் என்ற இரண்டும் சேர்ந்து பாதுகாத்து வைத்திருக்கத்தக்க ஒரு புத்தகம் நம் கைகளில் வந்திருக்கிறது. 



17.1.1993 முதல் 31.8.1993 வரை எட்டு மாதங்கள் ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான தொடர் கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சிகள் மேற்கொண்ட இதன் பதிப்பாசிரியர் நண்பர் கிருஷ்ண பிரபு நம் நன்றிக்குரியவர். அவரிடம் இது குறித்து பேசியபோது, நுண்கலைகள் குறித்து சில புத்தகங்கள் தொடர்ந்து  வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த வரிசையின் முதல் நூல்தான் இது என்றும் சொன்னார். இந்தப் புத்தகத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்திருக்கும் என்று நம்புகிறேன். எஸ். தனபால் குறித்துமே, வெவ்வேறு கலைஞர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு ஒன்றை விரைவில் பதிப்பிக்க இருக்கிறார், அவர். அதற்கு இதைவிட நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

28 Feb 2013

நினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்

'பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாகிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சிலகாலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உற்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை...அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை..'
 
 
- டாக்டர் தி.சே.செள.ராஜன்.
 
 
பின்னட்டை வாசகத்தைப் படித்துவிட்டு நினைவு அலைகள் புத்தகத்தை வாங்கினேன். நான் ஒரு நாஸ்டால்ஜியா பைத்தியம். பழங்கால வாழ்வு பற்றிய யாராவது ஏதாவது எழுதியிருந்தாலும் உடனடியாக படித்துவிட வேண்டும் என ஆசைப்படுவேன். அதுவும் குறிப்பாக, தமிழ்நாட்டின் பழங்கால கதைகள், சமூக பழக்கங்கள், அக்காலகட்டத்து மனிதர்கள் பற்றி எழுதப்பட்டிருந்தால் அனுபவித்துப் படிப்பேன். நம் முன்னோர்கள்  மிக எளிமையாக வாழ்ந்தவர்கள் எனும் சித்திரம் பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் அர்த்தத்தை சீண்டிப் பார்க்கிறது. விஞ்ஞான காலகட்டம், தொழில்நுட்பங்கள் நம் விரல் நுனியில் எனப் பெருமைப்பட்டுக்கொண்டாலும், ஒரு சமுதாய மனிதனாக நாம் எந்தளவு முன்னேறிவிட்டோம் எனும் கேள்வியைக் கேட்க வைக்கும் புத்தகம். எண்பது வருடங்களுக்கு முன்னர் எழுதிய நினைவு அலைகள் ஆகட்டும், ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்களாகட்டும், எல்லாமே இப்போது எழுதப்பட்டவை போல நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன.
 
 
 
புத்தகத்தின் முன்னுரையை கல்கி எழுதியுள்ளார். இரவு ஒன்றரை மணிக்குப் படிக்கத் தொடங்கி கீழே வைக்க மனமில்லாமல் காலை ஐந்து மணிவரை படித்து முடித்திருக்கிறார். புத்தகமென்றால் இதுவல்லவா புத்தகம் என மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். கல்கி சொல்வது போல ஒரு தன்வரலாறு இத்தனை சுவாரஸ்யமாக எழுத முடியுமா எனும் எண்ணம் எனக்கும் உண்டானது. நூறு வருடங்களுக்கு முன்னான இந்தியாவையும், நமது கிராமங்களின் வாழ்வையும், இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் அழகாக எழுதியுள்ளார்.
 
 
 

Related Posts Plugin for WordPress, Blogger...