கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?
சமூகக் கட்டுப்பாடுகளையும் மனித நாகரிக வளர்ச்சி எனும் மாயவலையினாலும் வெறுப்பாகி வரும் சில நிகழ்வுகளையும் அவற்றைக் கையாளும் விதங்களைப் பற்றியும் இக்கதைகள் சிந்திக்க வைப்பதாக எழுதியிருந்தேன். நீர் விளையாட்டு தொகுப்பில் வரும் புகலிடம் எனும் கதை என்னை அப்படி எழுத வைத்திருக்கலாம். நதியில் விளையாடும்போது தீண்டாமை தன்னைத் தீண்டுவதில்லை என உணரும் சிறுவன் நதியில் தனது இருப்பை அறிகிறான்.
திட்டமில்லாமல் நடக்கும் நிகழ்வுகள் புது உலகைத் திறக்கும் சக்தி படைத்தவை. அவரது புனைவின் தன்மையும் அப்படிப்பட்டதே. புதிதாக எதுவும் சேர்க்கத் தோன்றவில்லை.
கேள்வி - புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?
கண்டிப்பாக அஞ்ச வேண்டும்; ஆத்திரப்படவேண்டும். உண்மையான எழுத்துக்கு இதைவிட வேறொரு சான்றும் வேண்டாம். திருச்செங்கோட்டில் ஏலியன்கள் வாழ்ந்தார்கள் எனச் சொன்னால் யாராவது ஆத்திரப்படுவார்களா என்ன?
ஒரு புனைவை எழுதும் ஆசிரியன் நம்மை அவனுடன் சேர்ந்து ஒரு பயணத்துக்கு அழைக்கிறான். அது காலத்தில், சரித்திரத்தில், பண்பாட்டு மாற்றங்களில் செய்யப்படும் பயணம். வரலாறு, தொன்மக் கதைகள், குலக்கதைகள், சமூக விழுமியங்கள், குடும்ப நம்பிக்கைகள், நம் தனிப்பட்ட நம்பிக்கைகள் என அப்பயணத்தில் பல துணைகள் நமக்குண்டு. ஒரு குலக்கதையை அல்லது நம்பிக்கையை விரித்தெழுதும்போது புனைவுக்குள் அதற்கான தேவை இருக்கிறதா என்பது மட்டுமே சகபயணியாக நமது கவலையாக இருக்க வேண்டும்.
ஆம், உண்மைக்குப் புறம்பான விஷயம் ஒன்று உண்மை போல் எழுதப்படும்போது நமது புற மனம் வருத்தப்படலாம். ஆனால், ஒரு புனைவின் வழி நம்மை வந்தடையும் எந்த உண்மையும் அதன் ஆசிரியர் உருவாக்கியது மட்டுமே. நம் பயணம் முடியும்போது அந்த உண்மையும் அதன் பிரதிபிம்பங்களும் மறைந்துவிடுகின்றன.
ஒரு புனைவெழுத்தாளன் தனது அனுபவ நிலங்களிலிருந்து அங்கொன்று இங்கொன்றாக பறித்துப் புனையும் கதையில் உண்மையைப் பிய்த்துச் சரிபார்ப்பது அச்சில் வார்த்த பொம்மைக்கிளிக்கு பேசக் கற்றுக்கொடுப்பது போன்ற ஒரு செயல். முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தைத் தெருவில் இறங்கிச் செய்யாதீர்கள்.
கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பதைத்தாண்டி தனிமனித சுதந்திரம் என்றொன்று உண்டு. அது, மீன்களுக்கென்று உள்ள ஓர் நீர் விளையாட்டு போன்றது. பலகாலம் முன்பே கவிஞர் ரூமி சொன்னது:

Fish don't hold the sacred liquid in cups!
They swim the huge fluid freedom.
(புனித தீர்த்தங்களைக் கோப்பைகளில் ஏந்தித் திரிவதில்லை மீன்கள்!
சுதந்திரத்தின் மாபெரும் நெகிழ்நீர் வெளியில் நீந்திக் களிக்கின்றன.)
புனைவுக்குள் இருக்கும் உயிரை உணராமல் போனாலும் தொலைகிறது; துடிப்பு இருக்கும்போதே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம்.
கேள்வி- பெருமாள் முருகனிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன, அவருக்கு நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல
எனச் சொல்ல நினைத்தாலும், இப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கு எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களையும் மனமுறிவையும் எதிர்கொண்டிருக்க வேண்டும் எனும் உண்மையும் புரிகிறது. இதுவும் சமூக உண்மைதான். இதைப் பதிவு செய்தாலும் உண்மைக்கு புறம்பாகப் பேசியதாய் தடை விதித்தாலும் விதிப்பார்கள். அதனால் நான் அவருக்குச் சொல்ல நினைப்பது:-
சமீபத்திய இக்கட்டிலிருந்து ஆறுதல் கிடைக்கட்டும். உங்கள் கதைகளைத் தொடர்ந்து படித்து வரும் பல வாசகர்கள் உண்டு. அவற்றில் வெளிப்படும் சமூக எதார்த்தத்துக்காக மட்டும் இல்லை. தமிழ் இலக்கிய புனைவு வெளியை விஸ்தரப்படுத்திய கலைஞனாகவும் உங்களை மதிக்கும் பலர் இருக்கிறார்கள். இந்தச் சிறிய உலகத்துள் மீண்டும் நீங்கள் இயங்க வேண்டும்.
முழுமையுடன் வெளிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது தேய்நிலவுக்குத் தெரியுமோ இல்லையோ, நாம் அறிவோம்.
oOo
ஆம்னிபஸ் குறிப்பு -
அடியாழத்தில் சுதந்திரமாகத் திரியும் மீன்களைப் போல, மேல்மட்ட கலங்கல்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பெட்டகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நொடியில் அந்த நூல் அறுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதினால் சந்தோஷமாகத் திரிகிறோம்.
என்று எழுதினார் பானபத்திர பைராகி- நீர் விளையாட்டு, பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உயிருக்கும் உடைமைக்கும் பயப்படாமல் உண்மை என்று நம்புவதைப் பேச விரும்புபவர்களுக்கும், கதை பேச விரும்புபவர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல். சுருக்கமாகச் சொன்னால், கருத்து பரிமாறிக் கொள்ளும் நீர் விளையாட்டுக்காரர்கள் நம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்.
மிகையான புகழ்ச்சியாகவோ காட்டமான விமரிசனமாகவோ அல்லாமல், ரசித்துப் படித்த, மதிக்கும் நூலை அதன் நிறை குறைகளோடு நேர்மையான மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதே ஒரு எழுத்தாளனைக் கொண்டாடும் செயலாகும். இதை ஆம்னிபஸ் பதிவர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். இதுவரை பெருமாள் முருகனின் வேப்பெண்ணைக் கலயம், சாதியும் நானும், மாதொரு பாகன், நீர் விளையாட்டு, ஆளண்டாப் பட்சி ஆகிய ஐந்து நூல்களைப் பற்றி ஆம்னிபஸ் பதிவர்கள் எழுதியுள்ளார்கள்.
புதுமைப்பித்தனும் தி. ஜானகிராமனும் இன்றும் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எழுத்தைப் பேசுகிறோமோ, அந்த எழுத்தாளன் நம்மோடிருப்பவன். கருத்துச் சுதந்திரத்தை நம்மளவில் காக்க, பெருமாள் முருகனின் எழுத்தைத் தொடர்ந்து பேசுவதே இன்று நாம் செய்ய வேண்டுவது. அந்த வகையில் ஆம்னிபஸ் தளத்தில் பெருமாள் முருகன் நூல்கள் குறித்து பதிவிட்ட நண்பர்களிடம் மூன்று கேள்விகள் கேட்டோம்.
நண்பர் அஜய் அளித்த பதில்கள் இங்கே - பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1

நண்பர் வெ. சுரேஷ் பதிவு - பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2
No comments:
Post a Comment