கேள்வி: இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?
எனது அன்றைய மதிப்பீட்டில் எந்த மாற்றமும் செய்ய தோன்றவில்லை.பெருமாள் முருகன் படைப்புகள் ,கதைகள் எப்போதும்போல் மனதிற்கு நெருக்கமாகவே இருக்கிறது .
கேள்வி: புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?
புனைவுகளில் வரும் கதை மாந்தர்களும் ,கதைக் களமும்,காலமும் நம் கற்பனையை எளிதாக்கி கதையின் தீவிரத்தை /செறிவை(intensity) உணர்த்த துணை புரிபவை ,அவை அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .புனைவு என்றானபின் இவ்வகை ஆராய்சிகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. நிஜ வாழ்வில் அவலங்கள் ஏதுமே இல்லை என்பதுபோல் ஒரு புனைவிற்கு அஞ்சுவதும் ,ஆத்திரப்படுவதும் அவசியமற்றது
கேள்வி: பெருமாள் முருகனிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன, அவரிடம் நீங்கள் முன்வைக்கும் வேண்டுகோள் என்ன?
அவர் படைப்புகளின் வாசகியாக அவரது இந்த முடிவும் ,அதன் பின்னணியும் மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த முடிவை மாற்றி வாசர்களுக்காகவும் ஆதரவாளர்களுக்காகவும் அவர் கண்டிப்பாக எழுதுவதை தொடர வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறேன்.
ஆம்னிபஸ் குறிப்பு -
அடியாழத்தில் சுதந்திரமாகத் திரியும் மீன்களைப் போல, மேல்மட்ட கலங்கல்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பெட்டகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நொடியில் அந்த நூல் அறுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதினால் சந்தோஷமாகத் திரிகிறோம்.
என்று எழுதினார் பானபத்திர பைராகி- நீர் விளையாட்டு, பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உயிருக்கும் உடைமைக்கும் பயப்படாமல் உண்மை என்று நம்புவதைப் பேச விரும்புபவர்களுக்கும், கதை பேச விரும்புபவர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல். சுருக்கமாகச் சொன்னால், கருத்து பரிமாறிக் கொள்ளும் நீர் விளையாட்டுக்காரர்கள் நம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்.
மிகையான புகழ்ச்சியாகவோ காட்டமான விமரிசனமாகவோ அல்லாமல், ரசித்துப் படித்த, மதிக்கும் நூலை அதன் நிறை குறைகளோடு நேர்மையான மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதே ஒரு எழுத்தாளனைக் கொண்டாடும் செயலாகும். இதை ஆம்னிபஸ் பதிவர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். இதுவரை பெருமாள் முருகனின் வேப்பெண்ணைக் கலயம், சாதியும் நானும், மாதொரு பாகன், நீர் விளையாட்டு, ஆளண்டாப் பட்சி ஆகிய ஐந்து நூல்களைப் பற்றி ஆம்னிபஸ் பதிவர்கள் எழுதியுள்ளார்கள்.
புதுமைப்பித்தனும் தி. ஜானகிராமனும் இன்றும் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எழுத்தைப் பேசுகிறோமோ, அந்த எழுத்தாளன் நம்மோடிருப்பவன். கருத்துச் சுதந்திரத்தை நம்மளவில் காக்க, பெருமாள் முருகனின் எழுத்தைத் தொடர்ந்து பேசுவதே இன்று நாம் செய்ய வேண்டுவது. அந்த வகையில் ஆம்னிபஸ் தளத்தில் பெருமாள் முருகன் நூல்கள் குறித்து பதிவிட்ட நண்பர்களிடம் மூன்று கேள்விகள் கேட்டோம்.
நண்பர் அஜய் அளித்த பதில்கள் இங்கே - பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1

நண்பர் வெ. சுரேஷ் பதிவு - பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2
நண்பர் பைராகி அளித்த பதில்கள் இங்கே: பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3 - பைராகி
No comments:
Post a Comment