A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label சிறப்புப்பதிவர். Show all posts
Showing posts with label சிறப்புப்பதிவர். Show all posts

16 Sept 2012

Snow - Orhan Pamuk


சிறப்புப் பதிவர்: N. Balajhi


”ஸ்னோ" என்ற இந்த நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 2006ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக் எழுதிய நாவல் இது. துருக்கி மொழியில் எழுதப்பட்ட இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் படித்ததே ஒரு பெரிய கதை. புத்தகத்தை வாங்கிய நாள் முதல் திரும்பத் திரும்ப வாசிக்க முயன்று தோற்றுப் போயிருந்தேன், இந்த மாதிரி மூன்று முறை தோற்றபின் நான்காவது முயற்சியில்தான் முழுசாகப் படிக்க முடிந்தது. இதற்கு முந்தைய முயற்சிகளில் ஆரம்பத்திலுள்ள முதல் சில அத்தியாயங்களைத் தாண்டிப் படிக்க முடிந்ததில்லை. புத்தக அலமாரியில் ஸ்னோவை நான் தொலைத்தேனோ, இல்லை அதுதான் என்னைத் தொலைத்ததோ, சென்ற வாரம் வரை அதைப் படிக்கவே முடியவில்லை. போன வாரம், கப்போர்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு வழியாக ஸ்னோ என்னை அடைந்தது - என்ன இருக்கிறது பார்க்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன், இந்த தடவைதான் புத்தகத்தினுள் என்னால் நுழைய முடிந்தது.

நாவலின் மையப்பாத்திரம் கா. அவன் ஒரு பிரபல துருக்கிய கவிஞன். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வெளியேறியவன் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக துருக்கி திரும்புகிறான். அங்கு சந்திக்கும் பழைய நண்பன் மூலம் அவன் கல்லூரி நாட்களில் காதலித்த இபேக் இப்பொழுது விவாகரத்து செய்துவிட்டாள் என்றும் தனியாக இருக்கிறாள் என்றும் கேள்வி படுகிறான். இதை அடுத்து அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் காவின் மனதை ஆட்டிப் படைக்கிறது. துருக்கியின் எல்லைப் பகுதியில் உள்ள கர்ஸ் நகரை நகரை நோக்கி பஸ்ஸில் கிளம்புகிறான். தன் வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாதவன் கா, அவன் சந்தோஷத்தைத் தேடி கர்ஸ் திரும்புகிறான். அங்கே அவன் காதலித்த பெண் இருக்கிறாள். அவள் பெயர் இபெக். இபெக்கின் காதலைக் கொண்டு தன் வாழ்வில் மகிழ்ச்சியைத் திரும்ப பெற ஆசைப்படுகிறான் கா.

31 Aug 2012

கலகம், காதல், இசை - சாரு நிவேதிதா

கலகம், காதல், இசை என்கிற இந்த சின்னஞ்சிறிய புத்தகம், சமூகத்தின் வெவ்வேறு மாய அடுக்குகளை, இசைக் கலைஞர்களின் வாழ்வியல் வழியாக ஊடுருவிப் பார்க்கிறது. சீலேயில் கலைஞர்கள் அரசியலை நோக்கிப் பரவிய அசலான நிகழ்வை, புனைவைப் போல் விவரித்து பரவசப்படுத்துகிறது. இசை, அதனோடுகூட அரசியல், மானுடவியல், பூகோளம், கணிதம், வான சாஸ்திரம், பௌதிகம், கட்டிடக்கலை என எல்லாத்துறைகளையும் ரம்மியமான மொழியில் தீண்டிச் செல்கிறது. இந்த புத்தகத்தின் வாசிப்பு, முழுவதும் ஜன்னல்களால் ஆன அரண்மனைக்குள் நின்று கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது. வாசகர்கள் தாங்கள் விரும்பிய ஜன்னலைத் திறந்து பார்க்கலாம்.
கணிதமும் இசையும் என்கிற கட்டுரையின் வாக்கியங்களில், அறிவியலும் இசையும் காமம் கொண்ட இரு பாம்புகளைப் போல் பின்னிக் கிடக்கின்றன. அரபி மொழியின், இசையின் அழகியலை பற்றி இந்த புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. அதைப் படித்து முடித்ததும் இன்னும் ஓர் எழுத்து கூட தெரியாத அந்த மொழியின் மீது மெல்லிய காதல் வந்து விடுகிறது. (இசை வடிவில் அமைத்துள்ள மொழி அரபி மொழி , மற்றொரு விசேஷம் அதன் எழுத்து வடிவம் ஓவியம்).

பெத்ரோ பௌலசின் யை (எழுத்தாளர் ) பற்றி புத்தகத்தில் வரும் எளிய குறிப்பு இதோ ....
"பெத்ரோ பௌலசின்யின் koliarda என்ற புத்தகம் 1971 இல் வெளிவந்தது. கிரீசின் ஓரினப் புணர்ச்சியாளர்களின் பேச்சு மொழி அகராதி இந்தப் புத்தகம். இதற்காக இவர் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார். (ரெம்பேத்திக என்ற புத்தகத்திற்காக 5 மாதங்களும், ஹோமோ செக்ஸ்சுவல் அகராதிக்காக 7 மாதங்களும், உடல் என்கிற கவிதை தொகுதிகாகவும் 7 மாதங்கள் சிறையில் இருந்தார்.) history of the condom (1999) (படங்களுடன் விவரிக்கப்பட்ட 500 பக்க புத்தகம்.) இவர் எழுதிய புத்தங்களில் ஒன்று." 

பெத்ரோ பௌலசின் போன்ற எண்ணற்ற ஆளுமைகள். ஆதிசங்கர், பிதாகரஸ் , ஹோமர் என அற்புதமான மனிதர்களை புத்தம் நெடுக சந்திக்க நேர்கிறது. இவற்றையெல்லாம் படிக்கும்போது இது போன்றதொரு தகவல் சேகரம் இன்னொரு மனிதனால், ஏன் இன்னொரு முறை இதன் ஆசிரியர் சாரு நிவேதிதாவால்கூட நிகழ்த்த முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது!

15 ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட Inti-Illimani (இயிமானி மலைச் சூரியன் ) என்ற இசைக்குழு, இசைக்காக பிதாகரஸ் நடத்திய ரகசிய பள்ளி, ஸாம்போ என்ற உலகின் முதல் லெஸ்பியன் பெண் கவி, உடலில் டைனமைட்டைக் கட்டிக்கொண்டு சிப்பாய்கள்முன் ஆனந்த நடனமாடிய நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் அடிமைகள், என இந்த புத்தகம் பல அலாதியான விசயங்களைப் பேசி நம்மைச் சிதறடிக்கிறது.

இந்த புத்தகம் எங்கே வேறுபடுகிறது என்றால், இசையைப் பற்றி தமிழில் வெளிவந்த சொற்ப புத்தகங்களில் ஒன்றுகூட வாகா எல்லையை தாண்டிப் பேசியதில்லை. கலகம் காதல் இசை அனாயசமாக எல்லாவற்றிலும் அத்துமீறல் செய்கிறது.

"கலகம், காதல், இசையை" , பயணங்களின்போதோ, டிவி பார்த்துக் கொண்டோ , just like that படிக்க முயல்வது அபத்தம். சிகரெட்டைப் பற்றவைக்க, கடைசித் தீக்குச்சியை உரசுபவனின் கவனத்தோடு படிக்க வேண்டிய புத்தகம் இது.
கலகம், காதல், இசை - சாரு நிவேதிதா
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ. 70.
ஆன்லைனில் பெற: 600024.காம் / கிழக்கு

11 Aug 2012

உருள் பெருந்தேர் - கலாப்ரியா

சிறப்புப் பதிவர்: திருநாவுக்கரசு


தேர் கொண்ட ஊரழகு என்பார்கள். தேர் என்றாலே ஊர் தன்னழகை இரட்டிப்பாக்கி கொள்கிறது. அதிலும் நெல்லையப்பர் ஆலயத்தேர் சற்று விசேஷமானது. தாமிரபரணி நதிக்கரை எழுத்தாளர்கள் அனைவரும் நெல்லையப்பர் தேரைத் தங்கள் தமிழால் கட்டி இழுத்திருக்கின்றனர். கலாப்பிரியாவும் தன் பங்கிற்குத் தன் நினைவுகளையும், தமிழையும் கயிறாக்கி நெல்லையப்பரைத் திருவுலா இழுத்து அழைத்துச் சென்று தேரடி சேர்த்திருக்கிறார். தமிழின் முக்கிய கவியாளுமைகளுள் ஒருவரான கலாப்பிரியா உரைநடையில் தனது பால்யத்தை ''நினைவின் தாழ்வாரங்கள்'' எனும் தொகுப்பாக வெளியிட்டிருந்தார்.. உருள் பெருந்தேர் அதன் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.

பால்யத்தை தாண்டி பதின்ம வயதினராகவும், காதலும், குடும்பச்சூழலும் அலைக்கழிக்கும் வாலிபராகவும், விதிச் சுழலிலிருந்து மீண்டு சற்று ஆசுவாசப்பட்டு நடுத்தரக் குடும்பத்தலைவராகவும், எழுத்தை நேசிக்கும் கவிஞராகவும் தனது நினைவுக்கண்ணிகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து வடக்கயிறாக்கியிருக்கிறார் கலாப்ரியா. தேரும் நினைவுகளினூடே ஊர்ந்தும், மிதந்தும், நெகிழ்ந்தும் நிலை சேர்கிறது.

நினைவுகள் எப்போதும் கொடியவைதான், அதிலும்  பால்ய வயதை மெல்ல இழக்கும் பதின்ம வயதின் நினைவுகள் இன்னும் கூர்மையாகிவிடுகின்றன.  கலாப்பிரியாவிற்கும் அது நேர்கிறது. அதுவும் கவிஞர்களுக்கேயான சகலவிதமான அலைக்கழிப்புகளுடன், சற்று மூர்க்கமாய்.

நன்றாய் வாழ்ந்த குடும்பம் சிறிது சிறிதாய் நலிவடையத் துவங்குகிறது. குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கே வீட்டுப்பொருட்களை விற்கும் சூழல் இதில், தான் விரும்பிய உயர்கல்வியை பிடிவாதமாக தொடர்கிறார். இவற்றினூடே கனவாகவே நிகழ்ந்து கொண்டிருக்கும் காதல் ''சசி'', உடன் படித்த/பழகிய நண்பர்கள், நெல்லையப்பர் தேரோட்டம், அது சார்ந்த விழாக்கள், பிடித்த சினிமாக்கள், அபிமானத் தலைவர், எப்போதும் நெருக்கடியாகவேயிருக்கும் பணிச்சூழல் மற்றும் சுவாசத்துடன் கலந்துவிட்ட வாசிப்பு / எழுத்து என நினைவுகளாய் வியாபித்திருக்கிறார் இந்த ''உருள் பெருந்தேர்'' உருளும் பாதை முழுவதும்.

காலம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது..மனிதர்கள் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மனித நினைவுகளைக் கொடியதாக்குவதிலும், நீடித்திருக்கச் செய்வதிலும் உண்மை பெரும்பங்காற்றுகிறது. கலாப்பிரியாவின் இந்தத் தேரோட்டம் முழுவதும் மனிதர்கள் தங்களின் உண்மை முகத்துடனேயே உலவுகிறார்கள். கவிஞரின் முகமும், தமிழும் உண்மையின் சுடராக ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன. 

பள்ளியில் தன்னுடன், தன்னைவிட நன்றாய் படித்த விஜயரெங்கனை பின்னாளில் பேருந்து நிலையத்தில் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவனாக பார்க்கும்போது அவனை எதிர்கொள்ள இயலாமல் ஒரு ரூபாய்க் காசை வீசிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்கிறார். ஆயினும் அவன் நினைவுகள் துரத்தி கொண்டேயிருக்கின்றன. தான் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிப்பழகிய நண்பர்களை குடும்ப, பணிச்சூழல் காரணமாக திடீர் திடீரெனப் பிரிந்து போக நேர்வது கவிஞரின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கல்லூரியில் முதுகலை படிக்கும்போது உடன் படித்த நண்பன் அதே வகுப்பில் படித்த, தான் ஒரு தலையாய் நேசித்த வசுமதியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அறிந்துகொள்ளுவது, தன்னுடன் அறைத்தோழனாக இருந்த சத்தியவாசகனை பல ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் ''சத்தியவாசகன்'' என்ற அவனது பெயரைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்வது என ஒவ்வொரு நினைவும் தேர்ந்த சிறுகதைக்குரிய சுவாரசியத்துடன் நகர்கிறது. முக்கியமாக ''சினிமா'' இந்த நினைவுக் கண்ணிகளை சரியான காலவரிசையில் கோர்க்கும் நூலாக இருக்கிறது..பால்யத்திலும், நடுவயதிலும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கவிஞர் அன்றைய திரைப்படங்களையும், அவற்றின் பின்னாலிருக்கும் பல தகவல்களையும் தனது எழுத்தில் வெளிப்படுத்துகிறார்.

மனிதர்கள் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள்..தேர் உருண்டு கொண்டேயிருக்கிறது. நினைவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. கலாப்பிரியாவின் இந்த நினைவுத்தேரும் தன் பின்னால் நிகழ்ந்த பல தலைமுறைகளின் வாழ்வையும், நினைவுகளையும் சுமந்தபடியே உருள்கிறது 'உருள் பெருந்தேராய்'.

உருள் பெருந்தேர் - கலாப்பிரியா
சந்தியா பதிப்பகம்
விலை - 150 /-
இணையத்தில்: உடுமலை / கிழக்கு

10 Aug 2012

மணற்கேணி - யுவன் சந்திரசேகர்

சிறப்புப் பதிவர்: நவீன்



யுவன் சந்திரசேகர் தமிழின் தற்கால பின் நவீனத்துவ கவிஞர், எழுத்தாளர். அவர் எழுதிய மணற்கேணி.நூலகத்தில் எதேச்சையாகத்தான் படிக்கக் கிடைத்தது. பொதுவாக புத்தகங்களை மிக வேகமாகப் படித்து முடித்து விடும் என்னால் இந்தப் புத்தகத்தை முடிக்க ஒரு மாத காலம் பிடித்தது. எளிதில் கடந்து போய் விட முடியாத புத்தகம்.

முதல் முறையாக படித்ததும் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியவர்கள் இருவர் ஒருவர் சாரு நிவேதிதா மற்றுமொருவர் யுவன் சந்திர சேகரே.

மொத்தம் நூறு குறுங்கதைகள் தனித்தனியாய் ஆனால் அவற்றினிடையே ஓடும் மெல்லியநூல் ஒன்று அவற்றை நாவல் என்ற கட்டுக்குள் கட்டிவிடுகிறது. யுவன் சந்திரசேகரின் பிரதி பிம்பமாய் கிருஷ்ணன் என்ற வங்கி ஊழியரின் வாழ்க்கை சம்பவங்களே  நூறு குறுங்கதைகளும்.

 மதுரை நகர் முழுவதும் நகரும் கதை சென்னையிலும் முடிவற்றுத் தொடர்கிறது. தொடர்ச்சியாய் இல்லாமல் முன்னும் பின்னும் சிதறுகின்றன குறுங்கதைகள்.

மிகக் குறைவான வாக்கியங்கள் கொண்டே படைக்கபட்டிருக்கின்றன குறுங்கதைகள் அத்தனையும். சாதரணமாய் கடந்து போகும் சில கதைகள் கடைசி வரியில் நம்மை கட்டி போட்டு விடுகின்றன. யுவனின் பிரதிபிம்பமாய் வரும் கிருஷ்ணனே கதையின் நாயகன்.

ஒருவரை பல பேர் அடிக்கும் போது கண்டுகொள்ளாமல் போகும் கிருஷ்ணன், கல்யாணத்தில் செருப்பு காணாமல் போக சம்பந்தமில்லாத அளவில் செருப்பை திருடிக்கொண்டு வந்துவிடும் கிருஷ்ணன், ஒரு பெண்ணுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்ததும் தெரிந்தும் தெரியாமலும் என புரியாமல் பல முறைகள் பிரேக் போட்டு அந்தப் பெண்ணை தன்மேல் மோதச் செய்யும் கிருஷ்ணன், இறந்து போன பூனையின் சடலத்தைத் தேடும் கிருஷ்ணன், ஒரு பெண்ணின் கனவை தன் எழுத்தின் வழியே எழுத முயன்று தோற்று போகும் எழுத்தாளன் கிருஷ்ணன், மன்னாரை எக்மோர் ரயில்நிலையத்தில் 5மணிக்கு பார்த்துவிட்டு வீடு வந்ததும் அவன் 5 மணிக்கு மதுரையில் இறந்த செய்தியை கேட்டு திகைக்காமல் நிற்கும் கிருஷ்ணன், விவாகரத்து பெற ஊருக்கு செல்லும் கடைசி நாளில் கணவருடன் உடலுறவு கொள்ளும் பெண், அந்த நேரத்தில் அங்கே சமாதானம் சொல்ல வந்த கிருஷ்ணன் என்று புத்தகம் முழுவதும் சாதரண, அசாதாரண கிருஷ்ணன்கள் சிதறிக் கிடக்கின்றனர்.

பாதிப் புத்தகம் படித்ததும் கடைசி பத்தியை படித்து முடித்து புத்தகத்தை நிறைவு செய்யத் தேவையில்லாத புத்தகங்களிடையே, படித்து முடித்ததும் சிலநாள் மனதை அரித்து கொண்டிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.

மணற்கேணி - யுவன் சந்திரசேகர்
உயிர்மை பதிப்பகம்
விலை : Rs.180
பக்கங்கள் : 312
இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-036-4.html



8 Aug 2012

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

சிறப்புப் பதிவர்: எம்.ஜி.ரவிக்குமார்

புரட்டிப் புரட்டிப் படிப்பதெல்லாம் புத்தகங்கள் அல்ல படித்ததும் எது நம்மைப் புரட்டிப் புரட்டி எடுக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம் என்று நம்புபவன் நான் அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் இது இதற்குப் பரிசு வழங்கி சாகித்ய அகாதமி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது

நாஞ்சில் நாடன் - இவரின் கட்டைவிரல் நையாண்டியாலும்,ஆள்காட்டிவிரல் நக்கலாலும் செய்யப்பட்டிருக்கிறது அதுவே இவரின் கதைகள் முழுவதிலும் நெய்யப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டது மனிதத்தின் மாண்பைப் பேசுவது, நம் மனதில் தென்றலையும் புயலையும் ஒருசேர வீசுவது இந்தக் கதைகள் உயிர்மை,யுகமாயினி போன்ற சிற்றிதழ்களிலும், விகடன், தினமணி போன்ற பிரபல ஏடுகளிலும் வெளி வந்தவை

இவர் கதைக்குக் கொடுக்கும் தலைப்பு மழையில் நனையும் குழந்தைக்கு தாய் போர்த்திவிடும் சேலைத் தலைப்பை ஒத்தது வளைகள் எலிகளுக்கானவை, செம்பொருள் அங்கதம், பரிசில் வாழ்க்கை என்பன சில உதாரணங்கள்

ஒவ்வொரு கதைகளிலும் அந்தக் கதை நடைபெறும் இடம்,சூழல்,வரும் மனிதர்கள்,அவர்களின் வாழ்க்கை என பல்வேறு பரிமாணங்களை 70mmல் வாசகனுக்குக் காட்டுகிறார் டீட்டைலிங் என்பார்களே ஆங்கிலத்தில் அதைப் போல

அதனாலேயே நாமும் அதனூடே ஒன்றிப் போய் விட முடிகிறது உத்தரத்துப் பல்லியாய். ஒரு கதையைப் படித்து முடித்ததும் உடனே அடுத்த கதைக்குத் தாவ விடுவதில்லை அது ஏற்படுத்திய தாக்கம். சூயிங் கம்மைப் போல அது நம்மை மென்று கொண்டே இருக்கிறது.

நா.நாடனின் இன்னுமொரு சிறப்பு அவர் எப்பொழுதும் கைகொள்ளும் நாஞ்சில் நாட்டு மண்ணின் சொற்கள். கதை முழுதும் தோட்டத்தில் விரவியிருக்கும் புல்லைப் போல நாஞ்சில் மண்ணின் சொல்லே பரவிக் கிடக்கின்றன. தூய தமிழில் நாம் சொல்லும் டவலை "துவர்த்து" என்றே குறிப்பிடுகிறார். அனக்கம், அவயா
ன், சட்டுவம், சம்சயம் இப்படி பல சொற்கள் துருவ நட்சத்திரங்களாய் மின்னுகின்றன!

சூடிய பூ சூடற்க - தலைப்புக்கதை ஒரு அரசாங்க அலுவலகத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் ஒரு பியூனின் பார்வையில், கூடவே சிகப்பு நாடாவின் அவலத்தையும். என் நண்பனின் தந்தை அரசு அலுவலர். அவர் அலுவலகத்தில் நடக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அருகிலிருந்து பார்த்தவனாதலால் இந்தக் கதையுடன் என்னால் எளிதில் ஒன்ற முடிந்தது. அதிகாரிக்குப் போட மாலை வாங்கப் போன அந்தப் பியூன் மாலையை என்ன செய்கிறான் என்பதை படித்து முடித்ததும் என் புறங்கைகள் கண்களை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டன.

”தன்ராம்சிங்” கதையில் கூர்க்காகளின் வாழ்வியல் முறையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறார். விளைவு நீங்கள் மறுபடி எப்போது எங்கே ஒரு கூர்க்காவைக் கண்டாலும் உங்களின் மனதில் அவரைப் பற்றி உயர்வான எண்ணம் மட்டுமே வரும். அலுவலக நேரம் முடிந்து எல்லோரும் போன பின் விழிக்கும் அவர்களின் உலகத்தில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள், வலிகள், வேதனைகள். கூர்க்காகள் கடிதம் எழுதி அதை உரியவரிடம் கொண்டு சேர்ப்பிக்கும் முறை இப்போது வந்திருக்கும் 2G 3G நெட்வொர்க்குக்கெல்லாம் முன்னோடி.

அவ்வளவாகச் சிறு விடுப்புகள் கூட எடுக்காது ஈராண்டுகள் தொடர்ந்து பணி புரிந்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். எல்லாம் இருந்தும் நம்மை எங்கே எப்போது பார்த்தாலும் எப்படி இவர்களால் நமஸ்தே சாப் சொல்ல முடிகிறது?

செம்பொருள் அங்கதம் - ஈகோ நிரம்பிய மேலாளர்,அவரின் கீழ் பணியாற்றும் பிரதிநிதி, ஒரு பயணத்தின் போது அவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு சிறு சம்பவமே கதை. அதை இவர் சொல்லிய, விவரித்த விதம் படித்தால் மட்டுமே உணரக் கூடியது. கதையின் முடிவு நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒன்று. அதுவே என்னைப் படித்து முடித்ததும் தூங்கவிடாமல் செய்தது. ஏனெனில் இது போன்ற மேலாளர்களை நாமும் கடந்து வந்திருக்கிறோம். எப்போதும் சாயம் பூசிய முகங்களையேக் கண்டு வரும் போது திடீரென்று நிஜத்தைச் சந்தித்தால் ஏற்படும் மூச்சுத் திணறல் அது.

இந்தப் புத்தகம் நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. இப் புத்தகத்தின் எழுத்துக்கள் அலமாரியில் உறங்கினாலும் எண்ணங்கள் நமக்குள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்.

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
பதிப்பகம் - தமிழினி
விலை - ரூ100
இணையத்தில் வாங்க: உடுமலை

Related Posts Plugin for WordPress, Blogger...