பதிவர் - கடலூர் சீனு
தமிழில் இப்போது காந்தியை அறிந்து கொள்ளச் செறிவான பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன . தவறவிடக்கூடாத நூல்களென லூயி ஃபிஷெர் எழுதிய 'நான் கண்ட காந்தி' [தமிழில் தி.ஜ.ரா., சித்தக்கடல் பதிப்பகம்], 'காந்தியின் இறுதி 200 நாட்கள்' [பாரதி புத்தகாலயம்] ஆகியவற்றை குறிப்பிடலாம். முந்திய நூல் காந்தி எனும் பேராற்றலின் வாழ்வை நமக்கு அண்மையாக்கும். பிந்தையது சமூக வாழ்வெனும் அறிய இயலா பெரும்புதிர்முன் தனது ஆத்மீக நம்பிக்கைகள் சிதறி, சரிவின் இருட்குகைக்குள் சென்று மறையும் மகாத்மாவைப் பின்தொடரும்.
காந்தி குறித்து தமிழில் இனி எத்தனை நூல்கள் வந்தாலும் அவற்றுடன் தவறாமல் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய நூல் தி.செ.சௌ. ராஜன் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி''. 1934, பிப்ரவரி 23 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாட்டில் ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்து 120 மேடைகள் வழியே தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதனுடன் ஹரிஜன சேவா நிதி, பிஹார் நிலநடுக்க நிதி சேகரித்தார் காந்தி. காந்தியின் மேடை உரைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு அவருடன் பயணித்த ராஜன், காந்தியின் தமிழக பயணத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் அடங்கியதே இந்நூல்.

ஒரு மாதம் தமிழகத்தில் எளியவர்கள் முதல் இலட்சிய ஆளுமைகள் வரை காந்தியின் முகத்தைக் காண முயன்றபோது நிகழ்ந்த உவகையின் கொந்தளிப்பை, மழலையின் விரியும் கண்களில் நிறையும் வியப்புடன் இச்சிறிய நூல் ஒரு காந்திய விசுவாசியின் பார்வையில் முன்வைக்கிறது. இந்நூலின் பக்கங்களில் சோர்வின்றி பயணிக்கும், தொடர்ந்து மனிதர்களைச் சந்தித்து உரையாடும், தனது வாழ்நாள் பணியின் உத்வேகமான தினங்களின் ஆற்றல் சுடரும் காந்தி, எளிய சொற் சித்திரங்கள் வழியே துலங்குகிறார்.
கன்னியாகுமரியில் ஒரு சத்திரத்தின் மாடியில், சூழலின் இனிய சித்தரிப்புடன் [ராஜன் கன்னியாகுமரியை காண்பது அதுவே முதன்முறை] காந்தியை ராஜன் சந்திப்பதில் நூல் துவங்குகிறது. தமிழக பயண நிரல் காரணமாக ராஜன் திரும்பத் திரும்ப காந்தியைக் காண நேர்கிறது. இம்முறை ராஜனைக் கண்டதும் காந்தி பொக்கைவாய் சிரிப்புடன் விசாரிக்கிறார், "வாப்பா, திரும்ப வந்துட்டியே, செல்லாக் காசு மாதிரி ''.
காந்தியின் பயணம் துவங்குகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 150 கிமீ பயணிக்கவேண்டும். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு ஊரில் துயில் என்ற ஏற்பாட்டுடன் பயணம் நெல்லை நோக்கித் துவங்குகிறது. நாங்குநேரி அருகே 10 குடிசைகள் மட்டுமே கொண்ட சிறு கிராமம் காந்தியின் வழித்தடத்தில் குறுக்கிடுகிறது. எப்படியோ செய்தியைக் கேள்விப்பட்டு அக்கிராமமே நூற்றுக்கணக்கான மனிதர்களால் நிறைந்து விடுகிறது . நாங்குநேரி ஸ்ரீனிவாச ஐயங்கார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. எங்கெங்கு காணினும் ஆர்வம் ததும்பும் மனித முகங்கள் மட்டுமே தென்படுகின்றன.

டாக்டர் ராஜன் |
குற்றாலம் அருவியில் காந்தி நீராட மறுத்தது அனைவரும் அறிந்ததே. அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் வரும் வழிநெடுக மக்கள் முகங்கள். ஸ்ரீவைகுண்டம் கூட்டத்தில் அதிகப்படியான மின்விளக்குகள் எரிந்ததைக் கண்டு அன்றிரவே காந்தி ராஜனிடம் வரவு செலவு கணக்கு கேட்கிறார். ராஜன் ஒப்படைத்த கணக்கைப் பார்த்து காந்தி கடிந்து கொள்கிறார். ஐந்தில் ஒரு பங்கு செலவீனம் மிக அதிகம் என்று சொல்லி சில கட்டுப்பாடுகள் விதிக்கிறார். அதாவது இனி பொதுப்பணத்தில் செலவீனங்கள் இருபதில் ஒன்று என்ற கணக்கில் மட்டுமே நிகழ வேண்டும். அன்றிரவு ராஜன் கணக்கில் முட்டி தூக்கம் தொலைக்கிறார் .
சிவகாசியில் நுழைகையில் கொட்டும் மழை. காந்தி இதன் பொருட்டெல்லாம் தயங்குவதாக இல்லை. கூட்டம் நிகழும் மைதானம் நோக்கி நகர்கிறார். நகரமே காந்திக்காக கொட்டும் மழையில் கூடி நிற்கிறது. மைதானத்திற்குள் நுழையும் காந்தியின் கார், மனிதச் சுழலில் சிக்கிக் கொள்கிறது. ''காந்திக்கு ஜே!' கோஷம் விண்ணை முட்டுகிறது. வாகனம் சேற்றுக்குள் புதைந்து விடுகிறது. அசைய இயலவில்லை. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த குமாரசாமி ராஜா, வாகனத்தை விட்டு வெளியில் குதித்து, சரிந்து கிடந்த மேடை அமைப்பிலிருந்து ஒரு கழியை உருவி சிலம்பம் சுற்றுகிறார். அவரது நண்பர்களும் அதைப் பின்பற்ற, காந்தியைச் சுற்றி சிலம்பச்சுற்று வேலி அமைகிறது. சாரதி இதுதான் சமயம் எனக் காரைக் கிளப்ப, கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்கிறார்கள் .

இங்கே மற்றொரு சுவாரஸ்யம் . இந்தப் பயணத்தில் எவ்வளவோ குறைத்தும் பிடிவாதமாக காந்தியுடன் பயணித்தோர் [ஒரு ஜெர்மானியர், சில தமிழர், பல பெண்கள் உட்பட] 20 பேர். இவர்களை ஒவ்வொரு முறையும் ஒருங்கிணைத்து ஒரு நாளைக் கடப்பது என்பது பயண நிர்வாகிகளின் முதல் பெரும் சவால். சாலை, புகைவண்டி நிலையம் என எவ்விடத்திலும் காந்தியைக் காண நெரிசல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. காந்தி பயணத்திலேயே தூங்கி, பயணத்திலேயே விழித்து, பயணத்திலேயே வாழ்கிறார். ஜன்னல்கள் வழி கரங்கள் நீண்டு காந்தியைத் தீண்டுகின்றன. மலர்களும் பழங்களும் ஜன்னல் வழி விழுந்துகொண்டே இருக்கின்றன. காந்தி வழியெங்கும் அவற்றை ஹரிஜனக் குழந்தைகளுக்கு விநியோகித்தபடி பயணிக்கிறார். சாலைதோறும் முகங்கள் தோன்றி மறைகின்றன. கிராமங்கள்தோறும் ''காந்தி காந்தி'' எனக் கூவியபடி காரைத் துரத்தும் குழந்தைகள். காந்தி பேசிய கூட்டங்களில் கணிசமானவை பெண்கள் மட்டுமே நிறைந்தவை. கணிசமான பெண்கள் காந்தியைக் கண்டவுடன் தம் நகைகளைக் கழற்றி அவர் தாள் பணிகின்றனர்.
விருதுநகரில் காந்தியை காமராஜர் எதிர்கொண்டு வரவேற்கிறார். அதை முடித்து மதுரை என காந்தி ஒரு வினாடியும் வீணாக்காமல் நகர்ந்தபடி இருக்கிறார். இடையே கடித விண்ணப்பங்கள் வழியாக புதிய புதிய ஊர்கள் பயணத் திட்டத்தில் இணைகின்றன. மானாமதுரை, மேட்டுப்பாளையம், குன்னூர், திருப்பூர், பல்லடம், கோவை, கம்பம், போடி, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, சோழவந்தான், திருச்சி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுவை, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், ஜோலார்பேட்டை வழி சென்று சென்னையில் நிறைவடைகிறது பயணம் . இந்த நாட்களை உற்சாகம் ததும்ப நகைச்சுவை மேலெழும் எழுத்தில் சிறைபிடிக்கிறார் ராஜன்.
காந்தியை நண்பர்கள் புடைசூழக் கண்டதும், ''பணக்காரனச் சுத்தியும் பைத்தியத்தச் சுத்தியும் பத்து பேருன்னு பழமொழி உண்டு,' 'எனத் துவங்குகிறார். பயண நிரலைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார், ''நாங்கள் மூச்சுவிடும் எண்ணிக்கை தவிர பிற அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்பட்ட நிரல் ''. காந்தியின் கார் ஒரு சமயம் பூட்டப்பட்டிருக்கும் புகைவண்டி கேட்டில் மோதி விபத்துக்குள்ளாகிறது. கதவு பறக்கிறது. கதவின் எச்சரிக்கை விளக்கு காரின் பேனட்டில் வானத்திலிருந்து வந்து விழுகிறது. அமளி அடங்கி, சாரதி கமால் இறங்கிப் பார்க்கிறார். காந்தி அமைதியாக ரயில்வே கேட் கடந்து தொடர்ந்து [நடை] பயணித்துக் கொண்டிருக்கிறார். மயங்கி விழுந்த கமாலைச் சுமந்தபடி ராஜன் விடுதியை அடைந்து அறைக்குள் எட்டிப் பார்க்கிறார். காந்தி அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.
கடல், அருவி, நதிக்கரை, கொட்டும் மழை, குன்னூர் குளிர், கும்பகோண தகிக்கும் வெயில் என தமிழகத்தின் சகல பருவ நிலைகளையும், எந்தச் சங்கடங்களும் இன்றி காந்தி கடக்கிறார். போடிநாயக்கனூரை அவர் நெருங்கும்போது அங்கு பிளேக் பரவிவரும் தகவல் கிடைத்து அங்கு செல்வதைத் தவிர்க்கிறார். நண்பர் ஒருவரின் கேள்விக்கு அவர், 'அங்கு சென்று சேவை செய்ய விழைகிறேன். ஆனால் அது ஆபத்து. என்னைக் காண எதைப் பற்றியும் கவலையின்றி அங்கு மக்கள் வருவர். இந்தத் தொற்று நோயை எங்கும் பரப்புவர். ஆக நான் அங்கு செல்வது நிலைமையைச் சிக்கலாக்கும்'' என பதில் அளிக்கிறார். பிளேக்கால் பாதிக்கப்படாத சிலர் அங்கிருந்து பிகார் நிலநடுக்கத்திற்கு நிதி சுமந்து வந்து காந்தி வசம் அளிக்கிறார்கள் .
நூல் நெடுக வண்ண வண்ண மனிதர்கள், அவர்களின் விசித்திர குண\பேதங்களுடன் தோன்றி வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒருமுறை ஒரு காவல்துறை அதிகாரி இந்த தமிழக பயணத்தின் நிர்வாகி தக்கர் பாபாவை அவரது வாகனத்தை அப்புறப்படுத்தும்படிச் சொல்லி மரியாதையின்றி நடந்து கொள்கிறார். காந்தியின் ஜெர்மானிய தோழர் பூட்டோ டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி ஒத்துழையாமையில் இறங்கிவிடுகிறார். வேறு வழியற்ற காவல்துறை பின்வாங்குகிறது. வேலூர் கூட்டத்தில் நெரிசலிலிருந்து காந்தியை மீட்டுவிட்டு பூட்டோ சிக்கிக் கொண்டு குற்றுயிராகிறார். பூட்டோ ஹிட்லர் அனுதாபி. அதிலிருந்து காந்தியை நோக்கி நகர்ந்து, காந்தியை அறிய அவருடனே தங்கி விட்டவர்.
அமராவதிப்புதூர் என்ற ஊரில் காந்தி தங்கியிருக்கும்போது அவரைத் தேடி அனைத்து தடைகளையும் கடந்து ஒரு கைரேகை ஜோசியன் வருகிறான். ராஜன் தடுக்க, அவன் காந்தியின் கைரேகையை தான் பார்த்தே தீரவேண்டும் என பிடிவாதம் செய்கிறான். காந்தி உள்ளிருந்து சொல்கிறார், ''1000 ரூபாய் தந்துவிட்டு கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்''. ஜோதிடன் பீதியுடன் மறைகிறான் .
ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு முஸ்லிம் கிராமம் காந்தியை வரவேற்கிறது. நிகழ்ச்சி நிரலில் இல்லாததால் காந்தியின் வாகனம் நகர்கிறது . ஒருவர் காரைக் குறுக்கே மறித்து வரவேற்பு பத்திரம் வாசிக்கிறார். காந்தி தனது நேரமின்மையைக் குறிப்பிட்டு அந்தப் பத்திரத்தை தன்னிடம் தந்துவிடும்படி கோருகிறார். சகோதரர் கேட்பதாகத் தெரியாததால் கார் நகர்கிறது. சகோதரர் ஓடி வந்து ஓடும் காரில் தொற்றிக்கொண்டு தொடர்ந்து வாசிக்கிறார். கார் போய்க்கொண்டே இருக்கிறது அவர் பாராட்டுப் பத்திரம் வாசித்து முடிக்கும்போது வாகனம் 2 கிலோமீட்டர் கடந்திருக்கிறது.
நூல் நெடுகிலும் காந்தியால் ஊக்கம் பெற்ற பற்பல லட்சிய ஆளுமைகளின் தோற்றங்கள் பூத்து வந்தபடியே இருக்கின்றன. சேலத்தில் காந்தி ஐயர் என்பவர் தனது உணவகத்தை ஹரிஜன் உட்பட சகலருக்கும் பொதுவாக்குகிறார். இன்னல்கள் வந்தாலும் தனது பணியில் உறுதியாக நிற்கிறார். காந்தி அவரது உணவகத்திற்கு வருகை தருகிறார். உணவகத்தின் அருகில்கூட செல்ல இயலா நெரிசல். ஐயரே அதில் நீந்தி வந்து தனது நிதியை அளிக்கிறார்.
சிதம்பரத்தில் சகஜானந்தர் எனும் பண்டிதர் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நந்தனார் கல்வி மற்றும் ஹரிஜன சேவா சங்கம் நடத்துகிறார். காந்தி அவருக்காகவே அங்கு வருகை தருகிறார். [அந்தச் சங்கம் வீழாது காக்கும்படி தமிழர்களை வேண்டுகிறார் ராஜன்]
காந்தி இந்தப் பயணத்தில் பெரும்பாலும் சேரிகளுக்கு விஜயம் செய்கிறார். மதுரை சேரிக்குள் மழை சேற்றில் காவல்துறை வாகனம் சிக்கிக்கொள்ள காந்தியின் சைகையின்பேரில் ஹரிஜன் மக்கள் கூடி வாகனத்தை மீட்கிறார்கள். உடுமலைப்பேட்டை அருகே வன்னீர்வலசு எனும் சேரியை அப்பாவு என்பவர் தத்தெடுத்து காந்தியின் உதாரண களமாக மாற்ற தனது வாழ்நாளை அர்ப்பணிக்கிறார். அதைக்காண காந்தி வரவேண்டும் என கடிதம் போடுகிறார். தக்கர் அந்தச் சேரி பிரதான ரஸ்தாவிலிருந்து விலகி இருப்பதால் காந்தியின் வாகனம் அங்கு வர வழியில்லை, ஆகவே அங்கு காந்தியை அழைத்துவருவது சந்தேகமே என்கிறார். அப்பாவு நாட்களைக் கணக்கிடுகிறார். காந்தி வருவதற்குள் பத்தே நாட்களில் புதிய சாலையே போட்டு விடுகிறார். காந்தி வரும் அன்று அச்சாலைக்கு காந்தி சாலை என்று பெயரும் சூட்டி விடுகிறார். காந்தி அங்கு வருகிறார். பக்தன் தனது வாழ்நாளை எரித்து உருவாக்கிய ஆலயத்திற்குள் அவனது தெய்வம் பிரசன்னம் ஆகிறது. நூலின் இப்பகுதி மிகுந்த உத்வேகம் கொண்டது .
காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம் இந்தியா முழுக்க துவங்குவதாக திட்டமிட்டதும் அதை தமிழகத்தை முதன்மையாகக் கொண்டு குமரி முனையிலிருந்து துவங்குமாறு ராஜாஜி விண்ணப்பிக்கிறார். காந்தி திருப்பூர் வரும் சமயம் சரியாக ராஜாஜி கோவை சிறையிலிருந்து விடுதலை அடைகிறார். பெரியாரின் காரில் கூட்டத்திற்கு வருகிறார். கூட்ட துவக்கத்தில் காந்தி ராஜாஜியை கவனிக்கவில்லை. முடிந்த பின்பு கவனித்து விடை பெறுகிறார் .
பயனங்களுக்கிடையில் காந்திக்கு கருப்புக்கொடி காட்டும் உயர்சாதி இந்துக்கள் குழு, பெரியார் கட்சி ஆகியவற்றை காழ்ப்பின்றி சுட்டிச் செல்கிறார் ராஜன். இவை குறித்து காந்தியின் சொற்களை, ராஜன் முன்வைக்கும் பாங்கு காந்தியின் முக்கிய உரைகளைச் செறிவுடன் சொல்லிச் செல்வது என இந்த நூலின் வன்மைக்கு தனது மொழி நடையால் ராஜன் செறிவூட்டி உள்ளார் .
ஒரு துண்டுப்படம், அதில் காந்தி எதோ பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு வெளிநாட்டு அம்மணி காந்தியை ஒரு விசித்திரப் பொருள் போல தொட்டுத் தொட்டு பார்க்கிறாள். இந்த நூல் நெடுக மனிதர்கள் எக்கி எக்கி காந்தியைத் தொட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எதனால் இந்த ஆவல்? அவரைத் தீண்டுவதன் வழி தங்கள் ஆன்மாவின் ஒளியைத் தீண்டுககிறார்களோ? தீண்டாமையை வேண்டாம் என்றவனை தீண்டும் இன்பம் நல்குகிறது இச்சிறு நூல் .
தமிழ்நாட்டில் காந்தி
காந்தியம்
பயண நூல்/ வரலாறு
தி.செ.சௌ.ராஜன்
கடலூர் சீனு
No comments:
Post a Comment