சிறப்பு பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன்
அமெரிக்கா - வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என இரண்டாகப் பிளந்துள்ளது. யு.எஸ் என்று நாம் காலரைத் தூக்குவது வட அமெரிக்காவைத்தான். தென் அமெரிக்காவை அல்ல. அது உடலுறுப்பில் பாதத்தைப் போல, அதிலும் சகதியில் சிக்குண்ட பகுதி. அங்கு பல நாடுகள் - அர்ஜெண்டினா, சிலி, பெரு என்று. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் முன்பிருந்த சூழலில் அதன் மொத்த நாடுகளும் மக்களும், அவற்றின் அரசின், அதிகாரத்தின், அரசியலின் தலைவர்களின் குடுமியும் முழுக்க முழுக்க யு.எஸ்-ஸின் கைகளில் இருந்தது (இன்றும் கொஞ்சம் இருக்கிறது, இடையில் பிடி நழுவிவிட்டது).
அந்தப் பிடியை விடுவித்து அவற்றை ஒருமித்த லத்தீன் அமெரிக்காவாக உருவாக்கிவிட முனைந்த ஒரு இளைஞன் செயல்படுத்திய பல்லாயிரம் மைல் தொலைவு மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த தகவல்களை மருதன் எழுதிய 'மோட்டார் சைக்கிள் டைரி' விவரிக்கிறது.

எர்னஸ்டோ சே குவேரா தனது நண்பன் ஆல்பர்ட்டோ கிரானடோவுடன் இணைந்து சென்ற பயணம் எவ்வாறு அவர்களிருவரையும் மாற்றியது என்பது பற்றி பல மொழிகளில் பல புத்தகங்கள் வந்திருந்தாலும் தமிழில் இது முதல் முறை. பயணம் துவங்கிய அர்ஜெண்டினாவில் தொடங்கி சே சந்தித்த ஃபிடல் காஸ்ரோ வரை இந்த நூல் செல்கிறது.
எர்னஸ்டோவாக இருந்த இளைஞன் சே வாக மாறிய கதை, ஒரு போராளியின் தோற்றம் என்ற அடிப்படை வரிகளை வழவழவென வர்ணிக்காமல், வரலாற்றையும் அதன் பின் இணைந்த மக்களையும், சேவின் பன்முகவாதத்தையும், அரசியல் நிலையையும் ஆங்காங்கு நூலின் வெவ்வேறு இடங்களில் மருதன் பின்னிப் பிணைத்துள்ளது சிறப்பு.
சேவின் வீடு:
சேவின் அம்மா செலியா பல்வேறு விதமான பின்னணி கொண்ட மனிதர்களையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, உபசரித்து, உரையாடி மகிழ்வார். சேவின் வீட்டில் இலக்கியம், கலை, வரலாறு, சமூகம் என்று விவாதிக்கும் சேவின் அம்மா செலியாவைப் பற்றிய அறிமுகம் குறிப்பிடத்தக்கது. சே போராளியாக மாறுவதில் தாய் செலியாவின் பங்கும் இருந்திருக்கிறது.
ஆனால், சேவின் தந்தையான சீனியர் சே நமக்குப் பிடித்தமானவர். வீட்டில் நடக்கும் அறிவுசார் பேச்சுக்களைக் காதில் வாங்காமல், 'போங்கடா எங்களுக்குத் தெரியும்!", என்று தனது தடதடக்கும் பைக்கை ஓட்டியபடி வெளியேறிவிடுவாராம்!
சே ஒரு புத்தகப் புழு:
புத்தகங்களை சே வலுவாக நேசித்திருக்கிறார். பெற்றோர் சேமித்து வைத்திருந்த நூல்களை வாசித்திருக்கிறார். பாப்லோ நெரூடா, பிராய்ட், கார்ல் மார்க்ஸ், ஹிட்லர் தொடங்கி நம்ம ஊர் நேரு வரை சே வாசித்து, தனது குறிப்பேட்டில் தகவல்களைப் பதிவு செய்ததோடு, 'கொண்டெம்பொரரி ஹிஸ்டரி அஃப் தி மாடர்ன் வேர்ல்டு' என்ற 25 பாகங்கள் கொண்ட வரலாற்று நூலை ஒரே மூச்சாக வாசித்திருப்பதே அவரது புக் லவ்வுக்கு ஒரு உதாரணம். சேவின் நூற்காதலை புத்தகத்தில் வரும் இந்த பத்தியின் மூலம் கண்டு கொள்ளலாம்.
"சில சமயங்களில், விருந்தினர்களின் தொடர் வருகையால் எர்னஸ்டோவின் வாசிப்பு தடைபடுவதும் உண்டு. பொறுக்க முடியாமல் குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் வாசித்துக்கொண்டிருப்பார்."
மோட்டார் பயணத்தின் முதல் நாள்:
என்ஜினியராக வேண்டும் என்று நினைத்து நம்மைப் போலவே கனவு கவிழ்ந்து, கடைசியில் மருத்துவப் படிப்பில் புகுந்து, பரீட்சை எழுதிமுடித்த விடுமுறையில் நண்பன் கிரானடோவுடன் அர்ஜெண்டினாவின் தேசிய பானமான மேட் பானம் அருந்தியபடி பேசிக்கொண்டிருக்கும்போது இந்த ஐடியா முதலில் கிரானடோவிடம் உதயமாகி, பிறகு சேவிடம் ஒட்டிக் கொண்டது. ஜனவரி 1952 - அட்லாண்டிக் கரையையொட்டி அவர்கள் பயணம் ஆரம்பமானது.
காதலில் விழுந்த சே:
சிச்சினா என்ற பெண்ணின் மீது காதல் கொண்ட சே தனது பயணத்தின் ஒரு அங்கமாக, போகிறபோக்கில் அவளது வீட்டுக்கும் செல்கிறார். 'கம் பேக்' என்ற பெயருடைய நாய்க்குட்டியை சிச்சினாவுக்குப் பரிசாகக் கொடுக்கிறார். இந்த தகவல்களுடன் சேர்த்து, வழியில் இரண்டு முறை "திரும்பி விடு" கீழே விழுந்தது, ஒரு குதிரையின் காலில் சிக்கி மிதிப்பட்டது, அதற்கு தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது, போன்ற கிளைத் தகவல்கள் அழகானவை.
ஆஸ்துமா நோய்:
ஆஸ்துமா நோயினால் அல்லல்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்த சே-வுக்கு ஒரு காமெடி அனுபவம். சேவின் மூச்சிழுப்பு சிறுத்தையின் சத்தம் என்று உடன் இருந்தவர் நினைக்காமலிருப்பதற்காக அவர் இன்ஹேலரை உபயோகிக்காமல் இருந்துவிட்டார். இல்லையென்றால், "அந்த நபர் நிச்சயம் தனது கத்தியைப் பிரயோகித்திருப்பார். எனவே, சத்தமின்றி அப்படியே படுத்துக்கொண்டார் எர்னஸ்டோ," என்று குறிப்பு சொல்கிறது.
சே வின் பயணத்திலிருந்து...
அர்ஜெண்டினா துவங்கி சிலி, பெரு,கொலம்பியா, வெனிசூலா, மியாமி வழியாக திரும்ப அர்ஜெண்டினாவை அடைவதோடு பயணம் முடிவடைகிறது. மோட்டார் சைக்கிளில் அவர்கள் சிலி வரை மட்டுமே பயணித்திருகிறார்கள். பெரு செல்வதற்கு முந்தியே அதனிடமிருந்து விடைபெற்றவர்கள் அதற்குப் பிறகு லிஃப்ட் கேட்பது, வேலை செய்து கப்பலில் செல்வது, குட்டி விமானம் பிடிப்பது என்று கடைசியில் மியாமியை அடைந்திருக்கிறார்கள். ஒருவேளை மோட்டார் பைக்கில் ஆரம்பித்ததனால் 'மோட்டார் சைக்கிள் டைரி' என்ற பெயரில் சே எழுதியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.

- சே சந்தித்த அடித்தட்டு மக்கள் கொடுத்த அனுபவம்
- உலகத்தின் வளம் ஒருசாராருக்கு மட்டுமே சேரும் நிலையை அறிந்து வருந்திய நிலை
- சூச்சிகாமாட்டா சுரங்கத்தின் முதலாளித்துவம்
- இன்கா நாகரீகம் ஏற்படுத்திய தாக்கம்
- க்யூபாவிலிருந்து பாடிஸ்டாவைத் துரத்தி க்யூபப் புரட்சி வெற்றியடைய உதவியது
- கம்யூனிசப் பற்று
- ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்த நட்பு
- தொழுநோயாளிகளிடம் காட்டிய கனிவும் அவர்களுடன் வாழ்ந்த நாட்களும்
- ஏழை மக்களை நினைத்து உருகியது
- பசி, வறுமை, உடல் உழைப்பு ஒருபுறம் கஷ்டப்படுத்த, சொகுசு, மிதமிஞ்சிய செழிப்பு என்ற ஏற்றத்தாழ்வின் மீதான வெறுப்பு மறுபுறம் கடுப்படிக்க வைப்பது
என்று ஒரு 23 வயது இளைஞன் உலகின் இரண்டு புள்ளிகளை தனது நண்பனுடன் சேர்த்து இணைத்தபோது ஏற்பட்ட சலனங்களாக இந்த நூலில் சொல்லப்பட்டிருந்தாலும்,
- பொலிவியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு அவரை சுட்டு வீழ்த்தியிருப்பதன் பின்னணி
- மக்களை நேசித்த சே, மனிதநேயம் கொண்ட சே உருவாக்கிய கொரில்லா போர் முறையின் எதிர்மறை விளைவுகள்
என்று இன்னும் கூடுதல் தகவல்களை சொல்லியிருக்கலாம்.
கொரில்லா போர் முறையை அரிச்சுவடியாகக் கொண்ட இயக்கங்கள் ராணுவ ஆட்சி குறைந்துபோன இன்றையச் சூழலுக்கு பொருத்தமான ஒன்றா என்பதையும் விவரித்திருக்கலாம்.
அதைவிட இன்றைய இளைஞர்கள் சே குவேரா-வை ஒரு சினிமா கதாநாயகனாக பார்ப்பதை இந்த புத்தகத்திம் மேலும் மெருகூட்டுவதாகவே இருக்கிறது.
மோட்டார் பைக்கின் மேல், பயணத்தின் மேல், காதல் வைத்திருக்கும் ஒரு இளைஞன் சே என்கிற படிமம் இன்று உலக இளைஞர்களிடையே பரவிக் கிடக்கிறது (இளைய தலைமுறையினருக்கு பைக் என்றால் பிடிக்கும் அல்லவா!) சம்பந்தப்பட்ட மனிதனைப் பற்றி அறிந்திராவிட்டாலும் சே படம் போட்ட டீ சர்ட்டுகளை இளைய சமுதாயம் விரும்பி அணிந்து வீறு நடைபோடுவதைப் பார்க்கும்போது, சே குவேரா எனும் ஆளுமை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து விடுபட இன்னுமொரு நூற்றாண்டுகூட ஆனாலும் ஆகலாம் என்று தோன்றுகிறது.
இது தவிர்த்து தினசரி அலுப்பிலிருந்து சமூக பொதுநலத்துக்கு வருவதில் உள்ள விழுமியங்களை முக்கிய காரணிகளாக உருவாக்கிவிட இந்த புத்தகத்தில் மருதன் உழைத்திருக்கிறார். ஒரே மாதிரி வாழ்க்கை, காலை, மதியம், மாலை, இரவு - சூரியன் வருகிறது, நிலா கழிகிறது நாமும் பிறந்தோம், பிறக்க வைத்தோம், இறந்தோம் என்று இருந்து முடியாமல், 'தேடிச் சோறு நிதந்தின்று...' கவிதைக்கு செயல்வடிவம் அமைத்தவர்களில் சேவும் ஒருவர் என்று இந்த நூலில் வலியுறுத்துகிறார் மருதன்.
சீரியசான பல விஷயங்கள் முன், மருதன் அவர்களுடைய எழுத்தில் எப்போதும் இருக்கும் துள்ளலான அதிசுவாரசிய நடை நூலின் முதல் ஐம்பது பக்கம் வரை கை பிடித்துக்கொண்டே வந்து இடையில், 'நீயே பழகிக்கொள்,' என்று விட்டுவிட்டுச் செல்வதை இந்த இடத்தில் ஒரு நிறையாகவே சொல்ல நேர்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இருள் கொண்ட மக்களை நோக்கி நகரும்போது அங்கு கொஞ்சம் இலக்கியத்தின் தேவையை உணர்ந்து மாற்று பாணியில் எழுத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். ஆழ்வாசிப்பின் வறுமையிலிருப்பவர்கள் ஒரு வரியை இரண்டொரு தரம் வாசித்தாலொழிய கடக்க முடியாத உணர்வுக்கு ஆளாக்கச் செய்வதிலிருந்து, அடர்ந்த தன்மையை இப்புத்தகத்துக்கு மருதன் கொடுத்துவிட்டார் என்று சொல்ல முடிகிறது.

மோட்டார் சைக்கிள் டைரி, மருதன்,
கிழக்கு பதிப்பகம்
No comments:
Post a Comment