சிறப்பு பதிவர் - கிருஷ்ணகுமார் ஆதவன்
ஆடு மேய்க்கும் இடையனான சிறுவன் சந்தியாகு, புதையலிருக்கும் பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணம் நாவலின் கதைக் கரு. இடையிடையில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிலப்பரப்புகள், சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவனது பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கின்றன. பயண முடிவில் சடுதியில் நேர்ந்துவிடும் ஒரு சிறிய திருப்பத்தின் மூலம் நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பௌலோ கொய்லோவின் சிறந்த நாவல்களில் ஒன்று இது. உலக அளவில் அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றும்கூட. பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். ரஸவாதி - அடிப்படையில் ஒரு தத்துவார்த்தமான நாவலாக இருந்தாலும் மீயதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதையைக் கொண்டுள்ளது. கதையின் மையத்தில் உள்ள தத்துவம் படிம அமைவிலான சுட்டலாய் ஆங்காங்கே பேசப்படுகிறது.
இடையன் சந்தியாகு. கிழட்டு ராஜா. சூனியக்கார கிழவி. திருடன். பளிங்கு வியாபாரி. ரஸவாதி. பாத்திமா. குப்தமடாதிபதி. பாலைவன ஆதிவாசிகள். போர் வீரர்கள். என்று மிகச் சில பாத்திரங்களே கதாசிரியரால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தவிர காற்று, சூரியன், பாலைவனம் ஆகிய இயற்கை கருப்பொருட்கள் மாயாஜால கதையில் வரும் பாத்திரங்களாக கதையின் வாசிப்பில் முன்னிற்பதையும் தவிர்க்கவில்லை கொய்லோ.
அனைவருக்கும் பொதுவான ஒன்றை சிறுவன் சந்தியாகு வழியே நாவலாசிரியர் சொல்லிச் செல்கிறார். அவன் இந்த உலகிலுள்ள எந்த ஒரு மனிதனுக்கும் நிகரானவன். அனைவருக்கும் ஒரு இலக்கு இருப்பது போல் அவனுக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. அதை அடைய உண்மையாக முயலும் தருணத்தில் இந்த உலகமே அவனுக்கு துணை நிற்கும் என்ற கருத்தை கொய்லோ நாவலின் மூலமாக சொல்கிறார்
அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், சிறுவன் சந்தியாகு சந்திக்கும் மனிதர்களுக்கு இணையானவர்கள். காதலிக்கும் பெண் சந்தியாகுவின் பாத்திமாவாக வருகிறாள். உலக ஆன்மாவாக கடவுளர்கள் இருக்கிறார்கள். காற்று, சூரியன் போன்றோர் இயற்கையுடனான அன்னியோன்யம். ரஸவாதியும் கிழட்டு ராஜாவும் அனுபவசாலிகள். திருடனாக, கெட்டவர்கள். அடையப்போகும் புதையலாக நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விழிப்பு கண்ட ஆசையும், இலக்கும் இருக்கிறது.
இவ்வாறாக நாவலிலுள்ள அனைத்து விசயங்களும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தொடர்ச்சியாகப் பொருந்திவரும் வகையில் இருக்கும் பாத்திரங்களையும், சம்பவங்களையும் கொண்டுள்ள காரணமே இந்த நாவல் உலக அளவில் கவனம் பெற்றதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
ரஸவாதம் குறித்து வரும் இடங்களில் - பொருட்கள் ஒன்று மற்றொன்றாகமாறுவதல்ல. அதற்கென்று ஒரு இலக்கு உண்டு. இருப்பதிலேயே அதனதன் நிலையில் அதன் இலக்கை அடையக்கூடியது. அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற படிப்பினைகள் ஆழமானவை. நன்றாகப் படிக்கும் குழந்தையோடு படிப்பு வராத மக்குக் குழந்தையை ஒப்பிட்டு அவனைப் போலவே நீயும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பெற்றோரை உதாரணமாக இங்கு சொல்லலாம்.
அவனுக்கு என்ன வருமோ அதை கற்றுத் தாருங்கள், அதே போல ஒவ்வொருவராலும் என்ன இயலுமோ அதை போதியுங்கள் என்று கொய்லோ தனது நாவலில் ரஸவாத சம்பவத்தில் சொல்லியிருக்கிறார்.
சகுனங்களின் மீதான நம்பிக்கை, நமது தலையில் ஏற்கனவே ஒன்று எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படும் விதி, இதயம் சொல்வதை மட்டும் கேட்டல் போன்றவற்றின் மீது நாவலாசிரியர் அதீத ஊக்கம் கொண்டிருப்பதை நாவல் முழுக்க கவனிக்கலாம்.
இந்த நாவலை ஆங்கிலத்தில் வாசிக்கவில்லை. இருந்தாலும் உணர்ந்த குறைகளைச் சொல்வதில் தவறேதும் இருக்காது என்று நினைக்கிறேன்.
நிகழ் யதார்த்த உலகு தொடர்புடைய நிகழ்வுகள் அதிகமாக இல்லாமல் ஃபான்டஸி வகையாக இருக்கும் நாவலில் இத்தகைய தத்துவார்த்தம் கலந்து சொல்லியிருப்பதால் இப்புத்தகம் மனதுடன் நெருக்கமடையவில்லை. உலகப் புகழ்பெற்ற நாவலாக இருந்தாலும், அந்த அளவு புகழ் பெறாத நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவற்றுக்குச் சமமான இடத்தை இதற்குக் கொடுக்க முடியவில்லை. ஜோசே சாரமாகோ எழுதிய 'அறியப்படாத தீவின் கதை', மற்றும் எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் 'வேள்வித் தீ' என்ற நாவலும் நினைவுக்கு வருகின்றன.
'அறியப்படாத தீவின் கதை', ரசவாதியை ஒத்த படிமங்களையும், சம்பவங்களையும், கதை மையத்தையும் கொண்டது. இருந்தாலும், 'அறியப்படாத தீவின் கதை' எனக்குள் ஏற்படுத்திய அதிர்வை ரசவாதி ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, ரசவாதி தமிழாக்கத்தில் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் கதை மாந்தர்களை குறிக்கும் சொற்கள் வாசிப்பில் சுவையாக இல்லை. நவீன கிளாசிக் வரிசை நாவல்களில் ரசவாதியை சேர்க்கலாமா என்று என்னைக் கேட்டால் முடியாது என்றே சொல்வேன்.
எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் 'வேள்வித் தீ' நாவலின் முதல் பகுதியை வாசித்துப் பார்த்துவிட்டு, ரசவாதியை ஒரு முப்பது பக்கங்கள் வாசித்துப் பாருங்கள், கண்ணனும், சந்தியாகுவும் வேறு வேறானவர்கள் அல்ல என்பது தெரியவரும். மேலும், இருவரும் தங்களது இலக்கினை அடைய கடுமையாக உழைப்பவர்கள். ஒருவர் புதையல் தேடி நெடும்பயணம் மேற்கொண்டால் மற்றொருவர் அடித்தட்டு தொழிலாளியிலிருந்து முதலாளியாக உயர்வதற்கு கனவு காண்பவர். கண்ணன் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து நிறைவான வாழ்க்கைக்காக முயற்சிக்கிறான். இதையே சந்தியாகுவும் செய்கிறான்.சந்தியாகுவிற்கு அவனது வாழ்வுப்பாதையில் இருப்பது போலவே, கண்ணனுக்கும் தடைகள் ஏற்படுகின்றன.
வேள்வித் தீ கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் தெருக்களிலும் நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது. ரசவாதி - ஸ்பெயின் நிலத்தில் ஆரம்பித்து எகிப்திய மண்ணில் நிறைவுறும் கதைக்களம். இரண்டு நாவல்களுக்கும் பெரிய வேறுபாடாக இதையே கருதுகிறேன். இதைத் தவிர்த்த சில கூடுதல் வேற்றுமைகள் இருக்கின்றன என்றாலும் அடிப்படையில் இரண்டுமே ஒரே கருவைக் கொண்டவை. ஆனால், எம்.வி.வெங்கட்ராம் அவர்கள் உருவாக்கியிருக்கும் வாசகனோடு பிணைந்து வரும் கதைக் கட்டுமானத்தை - பௌலோ கொய்லோ தனது ரசவாதியில் உருவாக்க தவறியிருக்கிறார். இதனால் நவீன கிளாசிக் தரத்தை ரசவாதிக்கு சொல்ல முடியாது என்பது என் கருத்து.
முக்கியமாக, ரசவாதிக்கு முற்பட்ட நாவல் வேள்வித் தீ. உலக அளவில் சொல்ல வேண்டியதில்லை, நமது நவீன தமிழ் இலக்கிய அளவிலேயே இது இன்று பரவலான கவனத்தை பெற்றிராத நாவல் இது. அதனாலும், 'வேள்வித் தீ'யின் முக்கியத்துவம் ரசவாதியை விட மேலானது என்பதை இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. தத்துவம், ஆங்காங்கு காணப்படும் அறிவுரைகள் தவிர ரசவாதியில் நாவலில் முக்கியமாக எதையும் தேட முடியவில்லை. அடர்த்தியற்ற கதைப்போக்கு ரஸவாதியை மங்கலாக்குகிறது.
தமிழாக்கத்தைப் பொறுத்தவரை சிறப்பான வார்த்தைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் வாசிப்புக்கு அந்நியமாகவே தோன்றியது. ஒரு புதுமையோ, உற்சாகமோ இல்லாமல் நாவலின் மூலப்பகுதிகள் அறுவை போடுகின்றன. வாழ்வுக்குப் பயனாக இருக்கும் சில உவமைகள், தத்துவப் பின்னணிகள் நாவலின் கனத்தை அதிகரித்தாலும் புதிதாக வேறு ஒரு களத்தைத் தேடி அடைய சிரமமாக இருக்கிறது. அவ்வகையில் சமகால மொழிபெயர்ப்பு நாவல்களோடு ஒப்பிடுகையில் ரஸவாதி பலபடிகள் பின்தங்கியிருக்கிறார்.
ரஸவாதி, பௌலோ கொய்லோ,
காலச்சுவடு பதிப்பகம்,
ரூ. 120
இணையத்தில் வாங்க :கிழக்கு, நூல் உலகம்
புகைப்பட உதவி - நூல் உலகம்

No comments:
Post a Comment