நாஞ்சில் நாடன் முன்னுரையில் எழுதுவது இது :
"பனை உயரம் மண்ணுக்குக் கீழே இருந்து முளைத்த நான், பிறப்பால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளன். வெள்ளாளன் எனும் சொல் எந்தக் காலத்திலும் எனக்கோர் கவசமோ குண்டலங்களோ அல்ல. மாறாக வாகாக அடிவாங்கும் ஒரு மர்மஸ்தானம். ஆனாலும் அதிகமாக அறிந்த, பெரும்பாலும் எனது படைப்புகளில் கையாண்ட சமூகம் இது.
"எனவே நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்கு எதிரான படைப்புகளைச் செய்பவன் என்றும் அவர்தம் காலாவதியான பெருமைகளைத் தாங்கிப் பிடிப்பவன் என்றும் இரண்டு முரண்பட்ட குற்றச்சாட்டுகள் என் மீது உண்டு. சற்றுத் தீவிரமான கண்ணோட்டத்தில் வெள்ளாளத் துரோகி என்றும் வெள்ளாள சாதி வெறியன் என்றும்கூட முகம் கூடியதுண்டு. ஆனால் மேற்சொன்ன இரண்டும் இல்லை நான். யாருடைய சாயத்தையும் பூசி, அடைப்பத்தையும் தாங்கி நடப்பவனும் இல்லை. பெர்ட்டோல்ட் பிரெக்ட் சொல்வதைப்போல், "நீங்கள் தேடுவது யாராக இருந்தாலும் அது நானில்லை..."
"சம்பந்தமில்லாத மூன்றாவது ஆளாக விலகி நின்று இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டிருக்கிறேன்,"" என்று நாஞ்சில் நாடன் கூறிக் கொண்டாலும், ஒரு நாஞ்சில் நாட்டு வெள்ளாளராகவே இதை எழுதியிருக்கிறார். தலைக்கட்டு வரி கட்டும் கடமை தன் குடும்பத்தினருக்கு இருப்பது குறித்து இப்படி எழுதுகிறார் :
"ஓலைக்கூரை வீடு என்றாலும், ஈசானமூலையில் இருந்ததால், எனது தாத்தா, அந்த ஊரின் முதல் வரி. இப்போது கூரைவீடு என்பது ஓட்டுவீடாக மாறியுள்ள நிலையில், வீட்டுக்கு மூத்த ஆண்பிள்ளையாகிய நான், க. சுப்பிரமணியம் முதல் வரி. இது சாதியில் ஒரு இடம் முன்பதிவு செய்து கொண்ட ஏற்பாடு என்று எனது வாசகர்களுக்குத் தோன்றும். எனது மண்ணும் மக்களும் என் இலக்கிய வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிப் போன நிலையில் எனது கடைசிப்பயணம் நான் பிறந்த வீரநாராயணமங்கலத்தின் பாறையாற்றின் மேலக் கரையில் இருக்கும் சுடுகாட்டை நோக்கி அமைய வேண்டும் என்பதற்கான முன்பதிவுதான் அது, என்னைப் பொறுத்தவரையில்"
எனது அனுபவத்தில், சுயசாதி அபிமானம் இல்லாதபோதும் நம்மில் பலரின் சமூக நிலைப்பாடுகள் தம் சாதியைச் சேர்ந்த பிறரின் கருத்துகளைப் போலவே இருப்பதைப் பார்க்கிறேன். சுயசாதி விமரிசனம் செய்பவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. அரசியலில் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் சமூக விழுமியங்களில் ஒரு பொதுப்பண்பு நம் சாதிக்கேற்ற வகையில் அமைந்து விடுகிறது. இதற்கான விதிவிலக்குகள் உண்டு, ஆனால் அவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினர். பொதுவாகச் சொன்னால், நடுநிலைமை என்ற பெயரில் சாதியை மறைத்துக் கொண்டு, அல்லது மறுத்து, கருத்து சொல்வதைக் காட்டிலும் நாஞ்சில் நாடனைப் போல், "நான் இன்ன சாதிக்குரியவன்" என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒரு நேர்மை இருக்கிறது. குறைந்தபட்சம் நம் கருத்துகளை நம் சாதி எந்த அளவுக்குக் கட்டமைத்திருக்கிறது என்றாவது பிறர் தெரிந்து கொள்ள முடியுமல்லவா? அவர்களது அனுமானம் சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், நம் சமூக யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டால், இந்த விமரிசனத்துக்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
இன்னமும் இங்கு சாதியமைப்பு குலையாத நிலையில், சொல்லப்போனால் உட்சாதி பிரிவினைகள் தளர்ந்து பெருஞ்சாதிகளாக இறுக்கம் கொள்ளும் நிலையில், நாஞ்சில் நாடனின் இத்தகைய விமரிசனங்களுக்கான தேவை இருக்கவே செய்கிறது. ஏனென்றால், இது போன்ற கடும் விமரிசனங்களை சுய சாதியை நோக்கியே செய்ய முடியும்- -
"தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்று பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்து கொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது..."
சாதியைக் கடந்து செல்ல முடியாவிட்டாலும் நாம் அதை மறக்க விரும்புகிறோம், பொதுவாழ்வில் அதற்கு எந்தத் தாக்கமும் இல்லை என்று நம்ப விரும்புகிறோம். ஆனால், இது உண்மை எனில், நாஞ்சில் நாடன் இவ்வாறு சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? -
"மற்ற பிரிவினரான நாடார், செட்டியார், கவுண்டர், தேவர், நாயக்கர், முதலியார், கோனார், சாம்பவர், அனைவரிடமும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி தெரிகிறது. பிராம்மணர்கள் எந்தச் சூழலுக்கும் தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மட்டும் பழைய கர்வங்களை மட்டுமே இன்னும் சுமத்து திரிகிறார்கள்".
நாஞ்சில் நாடனின் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை" திரும்பிச் செல்ல முடியாத ஒரு காலத்தை, திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒரு வாழ்வை, தொலைத்துவிட்டோம் என்ற வலியுடன் விவரிக்கிறது. நாஞ்சில் நாடன் விரும்புவதுபோன்ற வளர்ச்சியை இவர்கள் பெற்றாலும், இந்நூலில் விவரிக்கப்படும் விவசாய வளமையை, வழிபாடுகளை, சடங்குகளை, கலைகளை, உணவுகளை, மொழியை மீட்க வழியில்லை என்றுதான் தோன்றுகிறது - எல்லாம் போய் விட்டன. இந்த இழப்பு, ஏதோ அந்த சமூகத்தின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு.
'அரசியல்' என்ற சொல்லை அதன் விரிவான பொது பொருளில் பயன்படுத்துவதானால், தன் எழுத்துக்கு அரசியல் நோக்கம் உண்டு என்று சொல்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். உலகை ஒரு குறிப்பிட்ட திசையில் உந்திச் செல்வதும், எத்தகைய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற பொதுக்கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விருப்பமுமே தான் எழுதுவதற்கான காரணங்களாக இருக்கின்றன என்றார் அவர். எந்த ஒரு புத்தகமும் அரசியல் சாய்வு இல்லாமலிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, கலைக்கும் அரசியலுக்கும் தொடர்பே இருக்கக்கூடாது என்பதும்கூட ஒரு அரசியல் நிலைப்பாடுதான் என்பது ஆர்வெல்லின் கருத்து. அவரைப் பொருத்தவரை நடுநிலைமை என்பதே சாத்தியமில்லை. நேர்மையான எழுத்தாளன் என்பவன் தன் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவன்.
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும், அவர்களின் மீது அன்பும் கோபமும் கலந்து எழுதப்பட்டிருந்தாலும், இந்தப் புத்தகத்தை 'நடுநிலைமை' என்பதன் முழு அர்த்தத்தில் வாசிக்கும்போது, இதில் நம் எல்லாருக்கும் விஷயம் இருக்கிறது. "தாலமும் தட்டமும் பிளேட் ஆகிவிட்டன' என்று அவர் எழுதும்போது, சிறுவயதில் நானும் பயன்படுத்தி, பலபத்தாண்டுகளாக மறந்துவிட்ட தாலம், தட்டம் என்ற சொற்கள் நினைவுக்கு வருகின்றன. புலைமாடனும் சுடலைமாடனும் பேச்சி அம்மனும் இசக்கியம்மன்களும் 'இன்று மஞ்சணைச் சிவப்பின் நிறம் மங்கியும் பொருக்காடி உதிர்ந்தும் உருவங்கள் மழையில் வெயிலில் காற்றில் கரைந்தும் உருவிழந்தும் கிடக்கின்றன,' எனும்போது இழப்பு நம் அனைவருக்கும்தான்.
"மாடுகளுக்கும் வெள்ளாளர்களுக்கும் இருந்த உறவென்பது என்று துவங்கியதென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆனால் இன்று தொடரவில்லை. தொழுப்பிறப்பு கன்றுக்குட்டி என்றும் கிடேரி என்றும் காளையங்கன்றுகள் என்றும் பால்மாடுகள் என்றும் தொழு நிறைந்து கிடந்த செல்வம் இன்று இல்லை," என்பது நம் அனைவருக்கும் நல்ல செய்தியில்லை. "இந்திய விவசாய விஞ்ஞானிகளும் பன்னாட்டு இரசாயன உர நிறுவனங்களும் பூச்சிக்கொல்லி நஞ்சு நிறுவனங்களும் நடத்திய வர்மானிய தாக்குதல்களை அவனால் உணர முடியவில்லை," என்பது நம் அனைவருக்கும் இழப்புதான்.
வழிபாடுகளில் கொடையும் சாமி ஆடுவதும், வில்லுப்பாட்டு, கும்ப ஆட்டம், கணியான் ஆட்டம், நையாண்டி மேளம், சாமி வரத்துப் பாட்டு போன்றவையும் எவ்வளவு முக்கியமாக இருந்தன என்பதைச் சொல்லும்போது நாஞ்சில் நாடன் எழுதுவது இது:

"இருபது ஆண்டுகளுக்கும் மேல், மரீனா கடற்கரை மரத்து மூட்டில் ஞானக்கூத்தன், ராஜகோபால், ஆத்மாநாம், ஆனந்த், எஸ். வைத்யநாதன், ராம் மோகன், நந்தலாலா ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் இவை பற்றியெல்லாம் குறிப்பிட்டேன். "உங்கள் ஊர் மலைப்பிரதேசத்தினுள் இருக்கும் ஆதிவாசிக் குடியிருப்பா?" என ஆனந்த் கேட்டதும் ஞானக்கூத்தன் குறுக்கிட்டு, "நீங்களெல்லாம் நகரத்து பிறப்பு வளர்ப்பு. உங்களுக்கு நாஞ்சில் நாடன் சொல்வது அர்த்தமாகாது" என்று சொன்னதும் இன்று எனக்கு நினைவுக்கு வருகிறது".
'அர்த்தம்' என்ற சொல், பொருள் என்ற குறுகிய விளக்கமாக நின்றுவிடுவதில்லை. புருஷார்த்தங்கள் என்று சொல்லப்படும் நான்கு லட்சியங்களில் ஒன்றாகும் அது - அர்த்தம் என்பது வாழ்வின் பொருளை, வாழ்தலைக் கொண்டு அறிய முனையும் தேடல். இன்று, எல்லாரும் நம்மைப் போன்ற நகரத்து பிறப்பு வளர்ப்புக்களாக மாறி வருகிறார்கள்.
"சமீபத்தில், "நம்பிரான் விளையாட்டுக்கு ஊருக்குப் போனயாலே?" என்று தம்பி மகனிடம் கேட்டால், "ஆமா பெரியப்பா, கோயில்லே கஞ்சியும் குருமாவும் சூப்பரா இருந்து" என்றான். கூட்டுக்கறி என்பது குருமாவாக அவனுக்குத் தெரிவதன் சமூகக் கொடுமையை என்னவென்று சொல்ல?"
என்று எழுதுகிறார் நாஞ்சில் நாடன். இந்த அர்த்தம் நாம் யோசித்தறிய வேண்டிய ஒன்று.
"வழி என்பது பிறர் காட்டுவதல்ல; தானே கண்டடைவது" என்பதன் உட்பொருள் நம் அனைவருக்கும் ஒரு விளக்கமாக இருக்க வேண்டும். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் அனைத்து மாற்றங்களும் நல்லவையல்ல. எவை நல்லவை எவை அல்லவை என்பதை அறிவது கடினம்தான். ஆனாலும் எவை நமக்குரியவை என்பதை அறியவும், எத்திசையில் செல்ல வேண்டும் என்று உணரவும் இது போன்ற புத்தகங்கள் தேவைப்படுகின்றன.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை,
நாஞ்சில் நாடன், 2003,
காலச்சுவடு பதிப்பகம்,
No comments:
Post a Comment