A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

13 Jan 2013

அமெரிக்காயணம் - டான் டிலிலோ

சிறப்பு பதிவர் : அஜய்

(நவீன உலக இலக்கியத்தைப் பேசும்போது போர்ஹெஸ், மார்க்வெஸ், லோசா என்று லத்தின் அமெரிக்காவில்  ஆரம்பித்து பரவலாக அறியப்பட்ட பத்து பன்னிரண்டு பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. உலக இலக்கியம் எண்ணற்ற குரல்களைக் கொண்டது, பல திசைகளில் விரிவது, மானுடத்தின் பல முகங்களை வெளிப்படுத்துவது. பன்மைத்தன்மை கொண்ட உலக இலக்கியத்தை ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களைக் கொண்டு மட்டும் அடையாளப்படுத்திவிட முடியாது. 

தமிழில் அதிகம் அறியப்படாத நவீன ஆங்கில எழுத்தாளர்களை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் அஜய். பிரதி ஞாயிறன்று உங்கள் ஆம்னிபஸ்ஸில் மட்டும் வெளியாகும் இத்தொடரில் இதுவரை ஜார்ஜ் ஸான்டர்ஸ் மற்றும் டெபோரா ஐசன்பர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழின் ஆகச்சிறந்த சிற்றிதழ்களில் ஒன்றான வலசையின் அண்மைய பதிப்பில் அஜய் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. வலசைக்கு ஆம்னிபஸ் தன் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

இனி  அஜய்-)



சிந்தனைகளைப் புனைந்த நாவல்கள் என்று டிலிலோவின் படைப்புகள் குறிப்பிடப்படுவதில் எனக்கு இசைவு உண்டு. ஏதோ ஒரு ஐடியா அல்லது கான்செப்ட் அல்லது சமகால சமூக நம்பிக்கை அவரது நாவல்கள் பலவற்றின் பின்னணியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. நாவலின் பின்னணியில் உள்ள அந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவும் துணைக் கருவிகளாகவே அவரது பாத்திரங்கள் இருக்கின்றனர். உதாரணமாக 'White Noise' நாவலில் நுகர்வுக் கலாச்சாரமும் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலும் இப்படிப்பட்ட ஒரு தளமாக இருக்கின்றன, "மாவோ II" நாவலில் குழுக்களின் (cult) அதிகாரமும் மனித மனநிலையின் மீதான தொலைக்காட்சி பிம்பங்களின் (imagery) ஆதிக்கமும் பின்னணியாக இருக்கிறது. இதைச் சொல்வதால் டிலிலோ வாசகர்களிடம் ஏதோ ஒரு கருத்தைத் திணிக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மாறாக, சொல்வதற்கு அவருக்கு ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது, அதை அபுனைவாக எழுதாமல் புனைவாக எழுதுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

என்னால் இவரது நாவல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்ல மாட்டேன். எந்த ஒரு கலைப் படைப்பையும் அப்படியெல்லாம் புரிந்து கொண்டுவிட முடியுமா என்ன? இவரது எழுத்தை ரசித்துப் படிக்க முடிகிறது என்றும் சொல்ல மாட்டேன். ரசித்துப் படிக்க முடியவில்லை என்று சொல்லும்போது மகிழ்ச்சியான, சுகமான வாசிப்பைத் தருவதில்லை என்ற பொருளில் சொல்கிறேன். ஆனாலும்கூட அவர் நம்மை இழுத்துக் கொள்கிறார், நம்மிடம் சொல்வதற்கு அவருக்கு ஏதோ ஒன்று இருக்கிறது. நான் கவனிக்காத ஏதோ ஒன்றை, அல்லது நாம் கவனித்திருந்தாலும் அவர் போல் அவ்வளாவு சரியாக வெளிப்படுத்த முடியாத ஏதோ ஒன்றை அவரால் சொல்ல முடிகிறது. அதனால்தான் அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

டிலிலோவின் எழுத்து எப்படிப்பட்டது என்ற புரிதல் தேவைப்படுவதால்தான் இத்தனையும் சொல்கிறேன் - முன் சொன்னது போல், சிந்தனைகளின் புனைவே இவரது நாவல்கள். எனவேதான் டிலிலோ குறித்த அறிமுகம் அவசியமாகிறது. மேலும், இவரது கதைக்களம் அமெரிக்காவாக இருக்கிறது, அல்லது அமெரிக்க வரலாற்றில் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலகட்டம். இது அமெரிக்கர்களாக அல்லாத வாசகர்களுக்கு சில நாவல்களில் ஒரு விலகலை ஏற்படுத்தலாம்.

'லிப்ரா' என்ற நாவல் ஹார்வே லீ ஆஸ்வால்ட்டைப் (Harvey Lee Oswald) பற்றிய நாவல். இந்த நாவலுள் நுழைய நமக்கு கென்னடி கொலை பற்றிய சில அடிப்படை தகவல்கள், அமெரிக்க வரலாற்றில் அதன் முக்கியத்துவம், கொலையின் பின்னணியில் வெளிவராத சதிகள் உள்ளன என்பதான ஊகங்கள், என்று பலவும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதை பற்றி தேடும் ஆர்வம் இருக்க வேண்டும். கென்னடி சுடப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் - where were you when kennedy was shot- என்று இந்த நிகழ்வு நடந்த நாட்களில் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளும் அளவிற்கு அமெரிக்க சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய கொலை இது.  இந்தப் பின்னணி நமக்குத் தெரியாதபோது, யார் இந்த ஆஸ்வால்ட், இவனை பற்றி ஏன் இந்த நாவல் என்று அவனை ஒரு முழு கற்பனை பாத்திரமாகவே பார்ப்போம். கொஞ்சம் யோசியுங்கள், இந்த நாவலை ஒரு முழு புனைவாக படிப்பதற்கும், நிஜ மனிதர்கள் சார்ந்து எழுதப்பட்ட புனைவாக படிப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? இரண்டாவது வகை வாசிப்பு நமக்கு தரும் அனுபவம் முதலாவதை விட முற்றிலும் மாறாக இருக்கும்.

டிலிலோவின் 'பாதாள  உலகம்' (underworld), அமெரிக்க பேஸ்பால்  விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆட்டத்தை பற்றிய வர்ணனையுடன் ஆரம்பிக்கிறது.  பேஸ்பால் பற்றியோ அந்த குறிப்பிட்ட ஆட்டத்தை பற்றியோ தெரியாத என்னை போன்ற ஒருவனுக்கு எண்பது பக்கம் நீளும் இதை படிப்பது மிகவும் சிரமம். அதாவது 83 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய வென்ற இறுதி ஆட்டத்தை பற்றி எண்பது பக்கம் எழுதினால் நான் மிக ஒன்றி படிப்பேன், ஒரு அமெரிக்கருக்கு அது அன்னியமாக இருக்கும்.

மேலும், டிலிலோவை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனநிலை தேவைப்படுகிறது என்பதுதான் என் அனுபவம். தொலைக்காட்சியில் என்ன காட்டுகிறார்கள் என்பதைப் பற்றியோ அதன் பிம்பங்களின் தாக்கத்தைப் பற்றியோ, குழுக்கள் (cult) பற்றியோ எந்த ஆர்வமுமில்லாத மனநிலையில், 'இரண்டாம் மாவோ' நாவலை நீங்கள் வாசித்தீர்களானால் அது என்ன சொல்கிறது என்பதே உங்களுக்கு எட்டாது.
 
டிலிலோவை படிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் முதல் புத்தகம் முக்கியமானது. ஏனென்றால் மேலே நாம் பார்த்த 'பாதாள உலகம்' அல்லது 'லிப்ரா' போன்ற நாவல்களை முதலில் படித்தால்  ஒரு விலகல் ஏற்பட்டு அவரது அத்தனை எழுத்துக்களையும் தவற விட்டு விட வாய்ப்புள்ளது.  1971ல் பதிப்பிக்கப்பட்ட அமெரிக்காயணம் (Americana) என்ற டிலிலோவின் முதல் நாவலில் துவங்குவதுதான் சரியாக இருக்கும். வழக்கமான ஒரு நாவலின் கட்டமைப்பு எப்படி இருக்குமோ அதற்கு மிக அருகில் இருக்கும் நாவல் இது, மேலும் அவரது ஒட்டுமொத்த எழுத்துலகின் களம், அவர் எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றியும் இந்த நாவல் ஒரு அறிமுகம் அளிக்கிறது. அமெரிக்காயணம் மூலம் அவரது எழுத்துலகைப் பற்றி நமக்கு ஒரு பார்வை கிட்டி அதன் அடிப்படையில் அவரின் மற்ற படைப்புக்களை அணுகுவது சுலபாகிறது.

இந்த நாவல் இரண்டு ழானர்களில் (genre) இயங்குகிறது.  இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்த நாவலின் முதல் பகுதி அலுவலகக் கதை, (office novel), இரண்டாம் பகுதி சாலைப் பயணக் கதை. (road novel).

இதன் நாயகன் டேவிட் பால். இவன்தான் கதைசொல்லியும்கூட. திரைப்படத்துறை மாணவன். ஒரு டிவி ஸ்டூடியோவில் எக்ஸிக்யூட்டிவாக இருக்கிறான். இளைஞன், தன் தொழிலில் இன்னும் உயரே உயரே செல்லக் கூடியவன். அவனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. தனக்கு முன்னால் இருப்பவர்களையும் தாண்டிச் செல்ல விரும்பி, அதே நேரம் தன்னை முந்தி செல்ல பின்னால் யாராவது நெருங்குகிறார்களா என்று  முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே இருக்கும் ஓட்டப்பந்தயமாக இருக்கிறது இவனது வாழ்க்கை. இதைத் தவிர வேறொன்றுமில்லாத அவனது வாழ்க்கை வெறுமையான ஒன்று.

இந்த நாவலின் துவக்கமே அவனுக்கு அப்போதிருந்த மனநிலையைப் பேசுவதாக இருக்கிறது, "Then we came to the end of another dull and lurid year." நாவலில் போகப்போக டேவிட் ஒரு சுவாரசியமற்ற வாழ்க்கைக்குப் பழகிப் போகிறான். (இந்த நாவலின் தாக்கத்தில் இந்த முதல் வரியை Joshua Ferris 2007ல் வெளிவந்த தனது முதல் நாவலுக்கு பெயராக வைத்தார் 'Then we came to the end').

மெல்ல மெல்ல அவனுக்குத் தன் வேலையில் இருக்கும் ஆர்வம் போய் விடுகிறது. ரேட்டிங்ஸ் குறித்த கவலைகள் எல்லாவற்றையும் மறந்து எந்த பரபரப்புமற்ற வெறுமையில், ஒரு மயக்க நிலையில் ஆழ்ந்து விடுகிறான். தான் தன் வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்பதை அவன் அறிந்திருக்கிறான், அதனால் பெரிய பிரச்சினைகள் வரும் என்பதும் தெரிந்திருக்கிறது, ஆனால் அவனால் எதிலும் அக்கறை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. வெடிக்கப் போகும் குண்டு அருகில் அல்லது பயங்கர விபத்தை நோக்கி  செல்லும் வாகனத்தில் விபத்து நடக்கப்போகிறது என்று தெரிந்தும்  எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும்  ஒரு தற்கொலை, சுய அழித்தொழிப்பு (self destructive streak) நிலையில் இருக்கிறான். இந்த மனநிலையின் சில சாயல்கள் 2003ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட டிலிலோவின் எரிக் பாக்கரில் (cosmopolis நாவல்) இருக்கிறது. ஒரு பக்கம் மாற்றங்கள்  நிகழ நிகழ சில விஷயங்கள் அப்படியே இருப்பது போல் மனித மனதின் ஓட்டம் அதிகம் மாறுவதில்லைதானே?

இந்தத் துவக்கப் பகுதிகள் இருண்மையான நகைச்சுவையோடு இருக்கின்றன, ஆனால் ஆபிஸ் நாவல் வகைமையைச் சேர்ந்த நாவல்களை நீங்கள் வாசித்திருந்தால் இதில் ஒன்றும் புதுமை இல்லை. ஒரு வழியாக டேவிட் தன் மூர்ச்சை நிலையிலிருந்து விடுபடுகிறான், ஒரு வீடியோ காமெராவை எடுத்துக் கொண்டு சாலைகளில் பயணிக்கிறான். தன் பணி தொடர்பான பயணம் என்று சொல்லிக் கொள்கிறான், ஆனால் உண்மையில் அவன் யதார்த்ததை அறியவே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறான். இது நாவலின் இரண்டாம் பகுதி.

காமிராவும் கையுமாக அவன் அமெரிக்காவின் இதயத்தை நோக்கிப் பயணிக்கிறான், உண்மையில் அது எங்குமில்லாத ஒரு இடம்தான். வழியில் பலரைச் சந்திக்கிறான். டேவிட்டின் காமிரா பிறரின் அந்தரங்கத்தைப் பதிவு செய்து கொள்ளும் கருவியாகிறது. மனிதர்களை அவர்களது தற்காப்புகள் நீக்கப்பட்ட விலங்கு நிலையில் படம் பிடித்துக் கொள்கிறான். காமிராவின் முன் தங்கள் குடும்பம், நண்பர்கள், உறவுகள் பற்றிய அந்தரங்க எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். பாலுறவில் ஈடுபடவும் முன்வருகிறார்கள். இது ஏதோ வாயரிசம் என்பது மட்டுமல்ல, மக்கள் தங்கள் அந்தரங்கத்தை பிறரின் பார்வைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பது பற்றியும்தான். இந்நாளைய எம்எம்எஸ் விவகாரங்கள், ரியாலிட்டி ஷோக்களில் நாம் இதைத்தானே பார்க்கிறோம். சில விஷயங்களில் இன்று நடப்பதை 1970களிலேயே டிலிலோ அறிந்து விட்டது போலிருக்கிறது.

இந்த மாத உயிர்ம்மையில் இமையம் எழுதி உள்ள சிறுகதை இதை பற்றிதான் பேசுகிறது. கதையில் தொலைகாட்சியில் முகம் வருவதற்காக தங்கள் கிராமத்தின் வரலாற்றையே எந்த பிரக்ஞையும் இல்லாமல், மாற்றி மீள் உருவாக்கிக் கொள்ள கிராமத்து மக்கள் தயாராக உள்ளனர், அந்தளவுக்கு தொலைகாட்சி நிழற்பட கருவியினால் சிறைப்பட வேண்டுவென்ற ஆவல், வெறி. நாற்பது வருட இடைவெளியில், வெவ்வேறு இடங்களில் உள்ள இரு எழுத்தாளர்கள் ஒரு கருவை பற்றி எழுதும்போது அந்த கரு உலகளாவிய பொதுத்தன்மை கொண்டது என்றுதானே அர்த்தம். அதுதான் டிலிலோ. சில விஷயங்கள் அமெரிக்காவின் களத்தில் காலூன்றி  இருந்தாலும், அவருடைய மொத்த எழுத்துலகம் பொதுவானது, சிறு முயற்சி செய்தால் அனைவரும் உணரக்கூடியது.

டேவிட்டின் வேலை தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, அவன் அதன் யதார்த்தத்தை விட்டு இன்னும் இன்னும் விலகிப் போகிறான். தன் பயணமும் காமிராவுமே அவனுக்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன. மக்களையும் அவர்கள் வாழும் சூழலையும் படம் பிடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனது குழந்தைப்பருவ நினைவுகள் கிளர்ச்சியடைகின்றன. நாவலின் நாயகனைப் போலவே கதையும் எங்கெங்கோ செல்கிறது, முடிவில் கென்னடி கொலை செய்யப்பட்ட டல்லாஸுக்குச் செல்கிறான் டேவிட். (டல்லாஸுக்கு செல்வதுகூட கென்னடி மரணத்தின் மீது அமெரிக்க மனதிற்கு உள்ள obessionஇன் குறியீடு தான், மேலும் அந்த மரணம் தொலைகாட்சிக்கு பல வாசல்களை திறந்து விட்டதும்கூட என்கிறார்  டிலிலோ).
Kennedy was shot on film, Oswald was shot on TV. Does this mean anything? Maybe only that Oswald’s death became instantly repeatable. It belonged to everyone. The Zapruder film, the film of Kennedy’s death, was sold and hoarded and doled out very selectively. It was exclusive footage. So that the social differences continued to pertain, the hierarchy held fast—you could watch Oswald die while you ate a TV dinner, and he was still dying by the time you went to bed, but if you wanted to see the Zapruder film you had to be very important or you had to wait until the 1970s when I believe it was shown once on television, or you had to pay somebody thirty thousand dollars to look at it — I think that’s the going rate.
நாவல் இங்கு நிறைவு பெற்றாலும் டேவிட்டின் இலக்கில்லா பயணம் என்னவானது என்பது ஒரு கேள்விக்குறிதான்.

Americana, Don Delilo
Viking




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...