ஓரிரு மாதங்கள் சமூக வலைதளங்களில் கிறுக்கி விட்டு திடீரென இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் இணையமில்லாமலோ, எழுதாமலோ இருக்க முடிவதில்லை. இப்படி ஓரிரு சின்ன விஷயங்களுக்கு நம்மை
அடிமையாக்கிக் கொண்டு அவற்றிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பது இயல்பே. அதுவும் இவையெல்லாம் பொழுது போக்காக இருக்கும்போதே இவ்வளவு தவிப்பு எனில், எழுத்தே உயிராய் இருக்கும்போது அதைப் பிரிவதென்பது எவ்வளவு துன்பம், கொடுமை? அதுவும் ஆண்டுக் கணக்கில்
பிரிவதென்றால்?. இப்படி நீண்ட பிரிவுக்குப் பின்னர் மீண்டும் எழுத நேர்ந்தால் அதன் வீரியம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இந்த புத்தகம், சுந்தர ராமசாமி ஏழு
ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு எழுதிய ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு.
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறிவிட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார்.- புத்தகம் பற்றி நூலகம்.காம்
முன்னுரையிலிருந்து ஒரு வரி:
“ஒருவன் தன்னைத் தன் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளும்போது அதுவே பலமாகி விடுகிறது.” மேற்கூறிய வரிகளை பிரதிபலிக்கின்றன கதைகள் ஐந்துமே. தன்னைத் தானே உணர்ந்த எழுத்து. அதில் முதல் சிறுகதை “அழைப்பு” மிகவும் முக்கியமானது. இக்கதையைப் பற்றி சுருங்கச் சொல்ல ஒரு பழமொழியைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, “சாது மிரண்டால் காடு
கொள்ளாது!”. ஏழு வருடங்கள் தன்னுள் எழுந்த கற்பனைகள்
அனைத்தையும் வெளிக்காட்டாமல் மறைத்து ஒதுக்கி, அழுத்தம் தாளாமல் ஓர் சமயம் வெடித்துச் சிதறினால் உள்ள தீவிரம் வார்த்தைகளில். கதைகளிலும்.
“போதை” சிறுகதை, நம் அனைவரிடமும் இருக்கும் நாம் பெருமைப்படும்
ஏதோ ஓர் விஷயத்தின் வலுவை சமூகத்தோடு இணைத்துப் பார்க்கிறது. அதன் பொருட்டு நாம் இழக்கும் மனிதாபிமானத்தைச் சுட்டுகிறது. “பல்லக்குத் தூக்கிகள்” கதை அனைவரிடமும் இருக்கும்
நீங்காப் பழக்கத்தைக் கிண்டலடிக்கிறது. ”நல்லது நடக்குதோ இல்லையோ
செய்துதான் வைப்போமே” என்ற மனநிலையைச் சுட்டுகிறது. நம்மை நாமே நம்பாத நிலை
அல்லது அதீதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பு எனவும்
இக்கதையைக் கூறலாம். நாம் தூக்கிச் சுமக்கும் வீண் சுமைகளே பல்லக்குகள் என
பல்லிளிக்கிறது நம்மை நோக்கி.
தாழ்வு மனப்பான்மையின்
தீவிரத்தைச் சுட்டும் “வாசனை” சிறுகதை. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கே உரிய சந்தேகம், உச்சகட்டமாய் தானொன்றும் இளைத்தவனில்லை என்று வரும் வீரம்
போன்றவற்றை சுட்டும் கதை. ஊனமுற்றவர்களுக்கு இயல்பாகவே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிழிக்கிறது கதை. சமூகத்துக்கான செய்தி ஒன்றுமில்லை என்றாலும் அதற்கான காரணம் சமூகமாகவே இருக்கின்றது.
“துன்பங்கள், பிரச்சினைகள், உயர்வுகளின் சன்னிதானத்தில்
நிர்வாணமாக நிற்கின்ற ஒரு மனதை சுந்தர ராமசாமியின் எழுத்தில் நான் காண்கிறேன். -
நா, ஜெயராமன்”
சுந்தர ராமசாமி | சிறுகதை தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 69 | ரூ. 50
ஆன்லைனில் பெற: நூலகம்
.
.
.
நல்ல தேர்வு. சிறுகதைகளைப் பற்றி இன்னும் விபரமாக எழுதியிருக்கலாமே?
ReplyDeleteநன்றி.
தம்பி - நல்லா எழுதியிருக்கீங்க.. இன்னும் சிறுகதைகளை விவரித்திருக்கலாம்..
ReplyDeleteபைராகியின் ஆசிர்வாதம்
ஓம்!ஓம்!ஓம்!