யானைகளைப் பற்றி நிறைய விஷயம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு வை. ஷண்முகசுந்தரம் மொழிபெயர்த்த ஜே. ஹெச். வில்லியம்ஸ் எழுதிய "யானைக்கூட்டம்" என்ற புத்தகத்தைப் படித்தேன். நிறைய விஷயங்கள் இருந்தன, ஆனால் எதுவும் மகிழ்ச்சியளிப்பவையாக இல்லை. பர்மாவின் காடுகளில் யானைகள் போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் மரம் வெட்டவும் பாலங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டதை ஆவணப்படுத்தும் குறிப்புகள். சில சமயம் கொடூரமாக இருக்கின்றன..
முதல் உலகப்போரில் ஒட்டகப் படையில் பணியாற்றிய வில்லியம்ஸ் போருக்குப் பின் வேறு வேலை தேடுகிறார். பர்மாவில் யானைகள் பராமரிப்பு வேலை இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அவருக்கு அதில் ஆர்வம் வருகிறது - "வனத்திலே வசிப்பது... வேட்டையாடுவது... குதிரைக் குட்டிகளின் மேல் சவாரி செய்வது, தனிமையைத் தாங்கிக் கொள்வது," இதுதான் வேலை என்ற நினைப்பில், பர்மா எங்கே இருக்கிறது என்று உலகப் படத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்.
அவர் வேலைக்குச் சேர்ந்த பர்மா வணிகக் கழகம் பர்மிய காடுகளிலிருந்து தேக்கு மரங்களை வெட்டி உலகெங்கும் விநியோகித்தது. பர்மாவின் அடர்ந்த மலைக்காடுகளில் மரங்களை வெட்டி, ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் வேலையை இரண்டாயிரம் யானைகளே செய்தன. வில்லியம்ஸுக்குக் கீழ் எழுபது யானைகள், ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள காடு. இந்த யானைகளும் அவற்றின் மாவுத்தர்களும் பத்து கிலோமீட்டருக்கு ஒரு தொகுப்பு என்று பத்து தொகுப்புகளில் இருக்கின்றனர். இவர்களது வாழ்க்கை முறை சுவாரசியமாக இருக்கிறது, மனதுக்கு வருத்தமாகவும் இருக்க்கிறது.
நாம் நினைக்கிற மாதிரி இந்த யானைக்கூட்டம் ஒரு வேலிக்குள் இருப்பதில்லை. தினமும் வேலை முடிந்தவுடன் கால்களில் சங்கிலிகளைக் கட்டி யானைகளைக் காட்டில் மேய விட்டுவிடுகிறார்கள். அடுத்த நாள் காலை ஒவ்வொரு மாவுத்தனும் யானைகளின் கால் தடங்களைத் தொடர்ந்து அவை இருக்குமிடம் செல்கிறார்கள். அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து எட்டு மைல் தொலைவுக்கும்கூட இப்படி தேடிச் செல்ல வேண்டியிருக்கும். யானைகள் ஏறத்தாழ ஒன்பதடி உயரமுள்ள புல்வெளிகளில் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியோசைதான் யானைகளுக்கான அடையாளம்.
காட்டில் இருக்கும் யானைகளுக்கு திடீரென்று ஏற்படும் சலனம் கோபத்தை உண்டாக்கலாம். எனவே, மணியோசையைக் கொண்டு தன் யானை இந்தப் புல்காட்டில் இருப்பதை அவதானிக்கும் மாவுத்தன் உரத்த குரலில் பாட்டு பாடிக் கொண்டே புல்வெளியை அணுகி, கால் மணி நேரத்துக்கு பாடுவதும், அதை 'லா! லா!' என்று அழைப்பதுமாக இருக்கிறான். அன்றைய வேலைக்குத் தன் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்ட யானை ஒன்பதடி உயர புற்களை விலக்கிக்கொண்டு வெளியே வருகிறது. "ஹிமிட்" என்ற உத்தரவுக்கு அந்த யானை அமர்கிறது, "தா!" என்றது எழுந்து நிற்கிறது. இவ்வாறாக கீழ்படிதலுக்கு ஒப்புக் கொண்ட யானையின் கால்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியை அகற்றி அதன்மேல் ஏறி அழைத்துச் செல்கிறான். இனி இரண்டாயிரம் அடி உயரத்திலுள்ள காட்டில் உள்ள மரக்கட்டைகளைத் உருட்டியும் தூக்கியும் ஆற்றுக்குக் கொண்டுவர வேண்டும். இவை ஒவ்வொன்றும் நான்கு டன் எடை கொண்டவை. பாறைகளின் இடுக்குகள் வழியாகவே இதைக் கொண்டு வர முடியும். இதற்கு தேவைப்படும் பலமும் புத்திசாலித்தனமும் பொறுமையும் நினைத்தே பார்க்க முடியவில்லை.
யானைகள் இயற்கையாகவே இப்படி கீழ்படிபவை அல்ல. பர்மிய காடுகளில் பதினைந்து முதல் இருபது வயதுக்குட்பட்ட காட்டு யானைகளையே இந்த வேலைக்கு கண்ணி வைத்துப் பிடிக்கிறார்கள் என்று எழுதுகிறார் வில்லியம்ஸ். இப்படி கைப்பற்றப்பட்ட யானையை ஒரு சங்கிலியைக் கொண்டு கட்டி வைக்கிறார்கள், பல வாரங்களுக்கு அந்த யானை போராடுகிறது - அதற்கு போதும் போதாததுமாக உணவு கொடுக்கப்படுகிறது, தும்பிக்கையால் தாக்க வரும் அதன் கன்னங்களில் ஈட்டி கொண்டு குத்துகிறார்கள். உடல் எங்கும் புண்ணும் கொப்புளமுமாக இளைத்து மனம் உடைந்த நிலையில்தான் அந்த யானை மனிதனுக்குக் கீழ்படிந்து, தன் முதுகில் ஏறி அமர அனுமதிக்கிறது.
காட்டு யானைதான் என்றில்லை, பழக்கப்பட்ட யானைகளுக்குப் பிறந்து மனிதர்களுடனேயே வளரும் யானைக்குட்டிகளும் அவ்வளவு எளிதாக அடங்கிப் போவதில்லை. நேந்திரம் பழங்களால் ஆசை காட்டி குட்டி யானையைப் பட்டிக்கு அருகில் அழைத்து வருகிறார்கள். அங்கு தரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பல முடிச்சுகளில் ஒன்றில் அதன் கால்கள் சிக்கிக்கொள்கின்றன. இதை மெல்ல பட்டிக்குள் செலுத்த முயற்சி செய்கிறார்கள் மாவுத்தர்கள். ஆனாலும் முரண்டு பிடிக்கும் யானைக்குட்டியை கூங்கி என்று அழைக்கப்படும் ஆசிரிய யானை தன் தலையால் முட்டி உள்ளே தள்ளுகிறது. அங்கு ஒரு இரண்டு மணி நேரத்துக்கு மேலான போராட்டத்துக்குப் பின்னரே அது தனக்குத் தரப்படும் நேந்திரம் பழத்தை ஏற்றுக் கொள்கிறது.
இப்போது அதன் எதிர்கால பாகன் அதன் தலைக்கு மேலிருந்து அதன் மேல அமர இறக்கிவிடப்படுகிறான். போராடும் யானைக்கு நேந்திரம் பழம் கொடுத்து சமாதானப்படுத்தி மெல்ல மெல்ல இணங்க வைக்கிறார்கள். முதுகில் அமர்ந்ததும் அடுத்த கட்டமாக பாரம் ஏற்றப்படுகிறது. இங்கும் போராட்டம், தோல்வி. இறுதியாக, அதற்கு உட்காரவும் எழுந்திருக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சின்ன சின்ன வேளைகளில் ஈடுபடும் இந்த யானைகள் பத்தொன்பது வயதில் தேக்கு மரக்கட்டைகளை இழுத்துவரும் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறது.
ஜூன் முதல் பிப்ரவரி வரை வேலைக்காலம். மார்ச், ஏப்ரல், மே ஆகிய வெயில்காலத்தில் ஓய்வு. தினம் எட்டு மணி நேரம் என்று மூன்று நாட்கள் வேலை, அதன் பின் இரண்டு நாட்கள் ஓய்வு. ஆக, வருஷத்துக்கு 1300 மணி நேர வேலையில் ஒவ்வொரு யானையும் சராசரியாக 1000 டன் எடையுள்ள மரக்கட்டைகளை காட்டில் வெட்டப்படும் இடத்திலிருந்து ஆற்றுக்குக் கொண்டு போகிறது.
இந்த யானைகளைப் பற்றிதான் பீல்ட் மார்ஷல் வில்லியம் ஸ்லிம் இப்படி சொல்கிறார் : "அவர்கள் நமக்கு நூற்றுக்கணக்கான பாலங்களைக் கட்டினார்கள். ஹெலன் கிரீஸுக்குக் கப்பலைக் கட்டி இறக்குவதற்கு என்றும் செய்ததைவிடக் கூடுதலாக, நாம் கப்பல்களைக் கட்டி இறக்குவதற்கு உதவினார்கள். அவர்களில்லாவிடில், பர்மாவிலிருந்து நமது பின்வாங்குதல் இன்னும் கூடுதலான கடுமையாக இருந்திருக்கக்கூடும் என்பதுடன் அதை நாம் மறுபடி விடுவித்ததும் மேலும் தாமதமும் கஷ்டமும் நிறைந்திருக்கும். பதினாலாவது படையினரான நாம் நமது யானைக் கம்பெனிகளைப் பற்றி பெருமையாக இருந்தோம், இருக்கிறோம்".
பர்மாவில் இருந்த இந்த பதினாலாவது படை உலகின் மிகப் பெரிய ராணுவமாக இருந்தது. ஆப்பிரிக்கா, ஏசியா என்று கண்டங்களைத் தாண்டி விரிந்திருந்த பிரிட்டிஷ் பேரரசின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த போர்வீரர்கள் ஐம்பது லட்சம் பேர் அதில் இருந்தனர். இவர்களைத் தோற்கடித்து பர்மாவை வென்று, இந்திய சீன எல்லைக்கு வந்துவிட்டிருந்த ஜப்பானிய படைகள் இன்னும் கொஞ்சம் முன்னேறியிருந்தால் சீனாவையும் கைப்பற்றியிருக்கக்கூடும் என்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் எஃகு எவ்வளவு முக்கியமான போர்தளவாடமாக இருந்ததோ அதே அளவுக்கு தேக்கும் முக்கியமாக இருந்தது என்று சொல்கிறார்கள். பர்மிய யானைகள் இல்லாமல் இந்தத் தேக்கு நேச நாடுகளுக்குக் கிடைத்திருக்காது - கப்பல் கட்டுமானத்தில் தேக்குக்கு இருந்த முக்கியத்துவத்தைக் கருதும்போது, பிரிட்டிஷ் பேரரசைக் கட்டமைத்ததே தேக்குதான் என்றும்கூட சொல்கிறார்கள். இந்தத் தேக்குக்காக எங்கோ ஒரு காட்டின் மையத்தில் இருந்த யானைகள் மிகக்கடுமையான பணியில் அமர்த்தப்பட்டு, நோயிலும் உடல் காயங்களிலும் அவதிப்படுகின்றன.
யானைக்கூட்டம்,
ஜே. ஹெச். வில்லியம்ஸ், மொழிபெயர்ப்பு வை. சண்முகசுந்தரம்,
கானுயிர், மொழிபெயர்ப்பு, உலக வரலாறு
அகல், சென்னை 14, 285115584
141 பக்கங்கள், ரூ. 80.
"பர்மீய காடுகளில் யானையுடன் தான் பழகிவாழ்ந்த நாட்களை. யானைகளின் இயல்புலகம் பற்றிய அழகான சித்திரத்தை எழுத்தாக்கியிருக்கிறார் கர்னல் வில்லியம்ஸ்," என்று இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
புகைப்பட உதவி : Elephants at War, Life Magazine
இப்புத்தகம் பற்றி விரிவாய் வாசிக்க : கடற்கரய்

நூல் விமர்சனத்திற்கு நன்றி ஐயா...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி ஐயா...
Deleteஇதன் முதல் பதிப்பு என்னிடம் இருக்கிறது. அதன் விவரங்களைத் தருகிறேன்-
ReplyDeleteவெளியான ஆண்டு மார்ச் 1960, வெளியிட்டவர்கள் மலர் நிலையம், 133 பிராட்வே, சென்னை-1.
தென் மொழிகள் புத்தக டிரஸ்டின் ஆதரவோடு அன்றே 5000 பிரதிகள் வெளியிட்டிருக்கிறார்கள்! விலை ரூ. 2-10.
நூலில் ஏ.எல்.முதலியாரின் அணிந்துரை, ஃபீல்டு மார்ஷல் சர் வில்லியம் ஸ்மித்தின் முன்னுரை, மற்றும் எத்திராஜ் கல்லூரியின் மோனா ஹென்ஸ்மன் எழுதிய அறிமுகவுரை ஆகியவ்வை உள்ளன. பல கறுப்பு வெள்ளைப் படங்கள் 2ம் உலக யுத்த காலத்திலேயே நல்ல தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.
தகவல்களுக்கு மிக்க நன்றி திரு சரவண்ணன்!
Deleteபுத்தகம் குறித்து நீங்களும் எழுதலாமே? பல விஷயங்களை எழுதாமல் விட்டுவிட்டேன். அவை உங்கள் பார்வையில் வெளிப்பட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
நன்றி.