என் அம்மா வளர்ந்த கிராமத்திற்கு விடுமுறைக்குப் போனால் அங்கே படிக்கக் கிடைக்கும் விகட, குமுத, சாவி, இதயம் பேசுகிறது’களுக்கு இடையே வித்தியாசமானதாகத் தனியே இருப்பது “சோவியத் யூனியன்” என்ற பத்திரிக்கையே. இந்தியா டுடே புத்தக அமைப்பில் கொஞ்சம் முரட்டுத்தனமாக “என்னைப் படிக்காதேயேன்”, என்று சின்னஞ்சிறுவனான என்னை மிரட்டும் நிறம்போன நிறத்தில் இருக்கும் புத்தகம். அதை யார் அங்கே வாங்கினார்கள், எதற்காக வாங்கினார்கள், யார் வாசித்தார்கள் என்பதெல்லாம் இன்றும் எனக்குக் கேள்விக்குறியே.
மற்ற பத்திரிக்கைகளில் வரும், ‘மாமா/மாமி, சாரி கொஞ்சம் ஓவர், ஆறு வித்தியாசங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா” போல பகிரங்கமாகப் படிக்கத் தக்கவைகளோ, அல்லது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புரட்டத்தக்கதான நடுப்பக்க அம்பிகாவின் கழுத்திற்கு இரண்டு இன்ச் கீழே கிறக்கமாக கமல் கிஸ் அடிக்கும் படங்களோ இல்லாதவொரு புத்தகம் அது. எப்போதேனும் கண்ணில் அகப்படும் துக்ளக் பத்திரிக்கைக்கும் இந்தப் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது எனக்கு.
கம்யூனிசம், தொழிலாளி, பேதம், உழைப்பு, உழைப்பாளி, மேலைநாடு, மார்க்சியம் என்ற வார்த்தைகளெல்லாம் வார்த்தைகளாகத் தட்டுத் தடுமாறிப் படித்த பருவம்.
ஒரு காலகட்டத்தில் சோ ராமஸ்வாமியும் கூட பிடிபட ஆரம்பித்தார். ஆனால் இந்த கம்யூனிசம் மாத்திரம் பிரியமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
அலுவலகத்தில் சப்வே கவுன்டர் கதவடைத்திருந்த ஒரு நல்லிரவுப் பொழுதில் பீட்ஸா கார்னரில் ”செட்டிநாடு சைவ பீட்ஸா” என்ற புது வகையறாவைச் சுவைத்த வண்ணம் “கம்யூனிசம்னா என்ன சார், எல்லாரும் உழைக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் சரிசமம், எல்லாருக்கும் சரிசம சம்பளம், சரிசம வசதிவாய்ப்புகள், நோ ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏஸி கம்பார்ட்மெண்ட், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா.... அதானே?”, என்று ஃபிடல் காஸ்ட்ரோவின் தீவிர அபிமானி ஒருத்தரிடம் கேட்க, அவருக்கு மளுக்’கென்று கண்ணில் நீர் வந்துவிட்டது.
“என்ன சார்? செட்டிநாடு காரம் ஜாஸ்தியோ?”
“யோவ்.... ஏன்யா இப்பிடி விக்கிபீடியாவைப் படிச்சிட்டு வந்து உளர்றீங்க?”, என்றார். அவர் சட்டையில் பைப் அடித்துக் கொண்டிருந்த சே குவாரே’வும் சேர்த்து என்னை முறைப்பதாய்ப் பட்டது.
ஒரு புனிதப்போராளி ரேஞ்சுக்கு எனக்கு கம்யூனிச மூளைச்சலவை வகுப்பு எடுக்கத் தொடங்கிய நண்பரிடமிருந்து பிய்த்துக் கொண்டு வருவது உன் பாடு, என் பாடு என்றாகிப்போனது. விஷயம் கம்யூனிசம் மீதான என் எதிர்ப்பு அல்ல, அலர்ஜியும் கூட அல்ல. புரிதலின்மை என்று சொல்லிக் கொள்ளலாம்.
சென்ற வருட சென்னை புத்தகக் காட்சியில் வழக்கம் போல @f5here பிரகாஷ், “இது சூப்பர் புக் அண்ணா. இங்க்லிஷ்ல ஜார்ஜ் ஆர்வெல் எழுதினது”, என்று அச்சு வாசம் மாறாமல் அடுக்கப்பட்டிருந்த “விலங்குப் பண்ணை” புத்தகத்தைக் கையில் புரட்டியபடி சொன்னான்.
அன்பர் பிவிஆர் என்கிற பி.வி.ராமஸ்வாமி மொழிபெயர்த்த புத்தகமாச்சே . அவர் அனுப்பிய ”நம்ம மொழிபெயர்ப்பு இந்த புத்தகவிழாவில் ரிலீஸ் ஆகிறது” என்ற டெக்ஸ்ட் மெசேஜ் நினைவுக்கு வந்தது. புத்தகம் ஒரு காப்பி கையில் எடுத்துக் கொண்டேன். சொன்னால் நம்புங்கள்! விலங்குப் பண்ணை புத்தகமானது குழந்தைகளுக்கானதொரு விலங்குகளின் கதை சொல்லும் புத்தகம் என்றுதான் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை நம்பிக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டுமுன் பின்னட்டையை நோட்டமிட்டால் அதில், “கம்யூனிசம், ஸ்டாலின், ரஷ்யா”, என்றெல்லாம் எழுதியிருந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு, நமக்கு ஆவாத சப்ஜெக்டு புஸ்தகத்தைத் தெரியாம வாங்கிட்டமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.
ஒருவேளை அந்த பின்னட்டையை வாசிக்காமல் விட்டிருந்தால் எனக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு இந்தப் புத்தகத்தை ஒரு குழந்தைகள் இலக்கியம் என்றுகூட புரிந்து கொண்டிருப்பேன். கையில் எடுத்தால் ஒரு மூச்சில் படிக்கத்தக்க மிகமிக சுவாரசியமான ப்ளாட்.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆட்சி செய்பவன் அநியாய அரசியல்வாதியாகவும் ஆளப்படுபவன் முதுகொடிந்த அடிமையாகவும்தான் இருக்கமுடியும் என்ற ஒற்றைவரிக் கருத்துதான் அனிமல் ஃபார்ம் புத்தகத்தின் கதைக்கரு. இதற்கு முதலாளித்துவமோ, ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ விதிவிலக்கல்ல.
ஜோன்ஸ் என்னும் பண்ணை உரிமையாளரிடமிருந்து அவரது மேனார் பண்ணையை விலங்குகள் கைப்பற்றுகின்றன. மனிதர்களுக்கு உழைத்தது போதும் என்று அவை இப்போது இரண்டு புத்திசாலிப் பன்றிகள் தலைமையில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மகிழ்ச்சியாக உழைக்கத் துவங்குகின்றன. அந்த நம்பிக்கை, உழைப்பு, அவற்றின் திசைமாற்றம், புதிய தலைமையின் தகிடுதத்தங்கள், பன்றிகளின் குள்ளநரித்தனங்கள் என்று கதை பயணித்து வஞ்சித்தலின் உச்சகட்டத்தில் கதை நிறைகிறது.
இங்கே கதைக்களனாகக் கொள்ளப்பட்டது ரஷ்யாவின் ஸ்டாலின் காலகட்டத்துக் கம்யூனிசக் கலாட்டாக்கள். ஆனால் ஒரு புத்தகத்தின் இடத்திலும் கூட ஸ்டாலின் தர்பார் நம் கண்ணுக்குக் காட்டப் படுவதில்லை. முழுக்க முழுக்க விலங்குகளே கதைமாந்தர்கள்.
நெப்போலியன், ஸ்நோபால், ஸ்க்வீலர், பாக்ஸர் என்று பன்றிகளும், நாய்களும், குதிரைகளும் வளையவரும் கதையாகவே இருக்கிறது அனிமல் ஃபார்ம். நையாண்டி விதம் (satire) என்பார்களே அந்த ஸ்டைல் கதை. உள்ளதை நேரடியாகச் சொல்லாமல் அனிமல் ஃபார்ம் மூலமாகக் கோடி காட்டியிருக்கிறார் அனிமல் ஃபார்மின் நிஜ வடிவத்தின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்.
பொதுவாக மொழிபெயர்ப்புப் புத்தகங்களை ரசித்து வாசிப்பவனில்லை நான். ஒரு படைப்பினை அதன் உண்மையுருவில் நாம் உள்வாங்க மொழிபெயர்ப்பு பொதுவாகத் தடையாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரையில் பிவிஆர் நம்மை ஒரு நேரடித் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் அனுபவத்திற்கே கொண்டு செல்கிறார் என்பதை நாம் நிச்சயம் குறிப்பிடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில நாவலை, அதிலும் குறிப்பாக ’ஸ்பெகுலேடிவ் ஃபிக்ஷன்” வகை ஒன்றை மொழிபெயர்ப்பதென்பது அத்தனை எளிமையன்று.
அதுசரி, கடைசியில் இந்தப் புத்தகம் வாசித்தாவது கம்யூனிசம் நமக்கு விளங்கியதா என்று கேட்டீர்களா யாரேனும்?
நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் :)
விலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
கிழக்கு பதிப்பகம்
144 பக்கங்கள் / விலை. ரூ.85/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு

Giri, I must say now, "Thank you, Sir". :)
ReplyDelete