சுஜாதாவின்
குறுநாவல்கள்
மூன்றாம் தொகுதி
கணேஷ்-வசந்த்
Photo Courtesy/To Buy: உயிர்மை பதிப்பகம்
I think that novels that leave out technology misrepresent life as badly as Victorians misrepresented life by leaving out sex.
- Kurt Vonnegut, A Man without a Country
நம்மில் எத்தனை பேர் ஒரு குற்றத்தை நெருங்கிப் பார்த்திருக்கிறோம்? ஒரே ஒரு கொலை? சாலை விபத்துகூட நிறைய பேர் பார்த்திருப்போம். ஆனால் ஒரு கொலை?
நாம் நெருங்கிப் பழகாத காரணத்தால், கொலை செய்தவனின் மனநிலை நமக்கு குற்றவாளி யார் என்பதைவிட பெரிய மர்மமாக இருக்கிறது. நம்மில் பல பேருக்கு அந்த மாதிரி உணர்வெல்லாம் அந்நியம், இல்லையா? அதற்காக கொலையும் கற்று மற என்று சொல்ல வரவில்லை - கொலை செய்தவனின் எண்ணங்களை ஒரு நாவலாகவோ, கதையாகவோ படிக்கிறோம். அதிலிருந்து ஒரு விதமான திருப்தி அடைகிறோம். குற்றபுனைவு கதைகளின் அடிநாதமே மனித மனதின் தீராத கொலைவெறியை நிறைவேற்றித் தருவதுபோல் இருக்கிறது. வாத்தியாரைக் கேட்டால், இது தானடோஸ் இன்ஸ்டிங்க்ட் http://en.wikipedia.org/wiki/
சுஜாதாவின் இந்த தொகுதியில் மொத்தம் 13 கதைகள். நிறைய கதைகளில் ராஸ்கொல்நிகோவ் சின்ட்ரோம் (Raskolnikov Syndrome). Crime and Punishmentஇல் வருவது போல் - கவனியுங்கள், வருவது போல் என்றால் அதே மாதிரி என்று அர்த்தம இல்லை - குற்றவாளி குற்றம் செய்து விட்டு அதை யாரவது கண்டுபிடிக்கிறார்களா, இல்லை, தான் செய்தது ஒரு Perfect Crime, இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது, அதனால் தானே இந்த மாதிரி ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்று சொல்வது. அதை போலீஸ் அல்லது வேறு யாரவது துப்பு துலக்குகிறார்களா என்று உன்னித்து பார்ப்பது, அதன் மூலம் ஒரு மகிழ்ச்சி அடைவது.
இந்தத் தொகுப்பில் உள்ள குறுநாவல்களில் இந்த கரு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
சுஜாதாவின் குற்ற புனைவு நாவல்களில் முக்கியமான அம்சம், கொலையாளியை கடைசி அத்தியாயத்தில் அறிமுகப்படுத்த மாட்டார். கொலையாளி நாவலின் ஆரம்பப் பகுதிகளிலேயே வந்து விடுவான். சுஜாதா ஒரு பேட்டியில் இதைப் பற்றி குறிப்பிடும்போது, குற்ற புனைவு நாவல்களுக்கான விதிகளின்படி (முக்கியமாக ஆங்கிலம்) குற்றவாளியை எல்லா கதைமாந்தரைப் போலவும் முதலில் அறிமுகம் செய்து விட வேண்டும், ஆனால் அதே சமயம் வாசகர்களுக்கு அவனைப் பற்றி தெரிந்து விடக்கூடாது என்று சொல்லி இருந்தார். இந்த நாவல்களைக் கொஞ்சம் உன்னிப்பாக படித்தால் இந்த விஷயத்தைக் கச்சிதமாக கையாண்டிருப்பார். நாம் படிக்கும்போது யார் குற்றவாளி என்று ஊகித்து விடும்படியாக இருந்தாலும், அவன் ஏன் அந்த கொலை செய்தான் என்பதை கடைசி பகுதி வரை யோசிக்க வைப்பதில் திறமையானவர்.
இவரின் குற்றபுனைவோ சிறுகதையோ, நாவலோ அந்த காலகட்டத்தின் நிகழ்ச்சிகளை மிக உன்னிப்பாக பதிவு செய்து இருப்பார். இது கிட்டத்தட்ட ஒரு வரலாற்று பதிவு மாதிரி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, நாவலினூடே இரு கதை மாந்தரின் பேச்சின் வழியே சிறு பத்திரிகை- வெகுஜன பத்திரிகை விவாதம்.
இந்த தொகுதியின் முதல் கதையான “பாதி ராஜ்ஜியம்” கணேஷ் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, தன் அறைக்கு வரும் பெண்ணை இப்படிச் சொல்கிறான் -
“
இந்த நாவல் 1970 இறுதிகளில் வந்திருக்கும். அந்த கால நாவல்களின் கதைபாணி அப்படியே பிரதிபலிப்பதுதான். அதற்கு தகுந்தாற்போல், கணேஷ் ஒரு ஹோட்டலில் சென்று உட்கார்ந்தவுடன் அங்கிருக்கும் வெயிட்டர்கள் பற்றின கருத்து இது- “ஜீவ்ஸ் மாதிரி விரைப்பான வெயிட்டர்கள்”!
ஜீவ்ஸ் என்றால் யாருக்கு என்ன புரியும்? பி.ஜி. வோட்ஹவுஸ் படித்திருந்தால் அதில் ஜீவ்ஸ் என்று வெயிட்டர் பற்றி அறிந்திருக்க முடியும், இந்த வாக்கியத்தை ரசித்து படிக்க முடியும். "இல்லை, நாங்கள் வெகு தீவிரமான இலக்கியம்தான் படிப்போம்," என்று கங்கணம் கட்டி இருப்பவர்களுக்கு இது எதுவும் புரியாது. ஆனால் அதற்காக நாம் வருத்தப்பட முடியுமா என்ன?
இந்த தொகுதியில் இருக்கும் கடைசி கதை கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் எழுதப்பட்டது. முப்பது வருடங்கள் - எவ்வளவோ மாற்றங்கள். அத்தனையும் மிகத் துல்லியமாக சின்னச் சின்ன விஷயங்களாக அங்கங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. யாருக்காவது போஸ்ட் மார்ட்டம் எப்படி செய்வார்கள் என்று தெரியுமா? இல்லை, இறந்தவர்கள் எத்தனை மணிக்கு இறந்தார்கள் என்று எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியுமா? அதைப் பற்றியும் இந்த குறுநாவல் ஒன்றில் மிக விரிவாக எழுதி இருப்பார். இப்போது வேண்டுமானால் விக்கிபீடியாவில் படிக்கலாம், ஆனால் அதை நாவலில் சரியான இடத்தில் சேர்ப்பது மிகக் கடினம்.
நாவலில் சில இடங்களில் வரும் ‘ஏ’ ஜோக்குகளைச் சொல்ல வேண்டும்.
வசந்த்: ஆதாமுடைய முகத்தைப் பார்த்ததும் ஏவாள் என்ன சொன்னா தெரியுமா ?
கணேஷ்: என்ன?
வசந்த்: ஒண்ணுமே சொல்லலை, முதலில் முகத்தை பார்த்தாதானே!
இதே மாதிரி இன்னொன்று.
"ஒருத்தன் டாக்டரிடம் செக் அப் போனான். டாக்டர் அவனிடம், "நீங்க இனிமே வேலைக்குப் போகாதீங்க," என்று சொன்னார். அதனால் நைட் நைட் தன் மனைவியை மட்டும் வேலைக்கு அனுப்பினான். அவள் ஒரு நாள் இராத்திரி அம்பது ரூபா பத்து பைசா கொண்டு வந்தா. புருஷன் உடனே, "என்ன பத்து பைசா எல்லாம் கொண்டு வந்திருக்க" என்று கேட்க , அவள், "எல்லோருமே பத்து பைசாதான் தந்தாங்க," என்று சொன்னாள்.
இது மாதிரி எழுதுவதால்தான் இவரை வணிக எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விட்டார்கள். தன் நாவல்களை மிக மோசமான சினிமாவாக எடுத்தவர்களை இந்த நாவல்கள் மூலமே நையாண்டி செய்துவிட்டு, இந்த நாவல்களை எழுதும் விதத்தில் மாற்றம் செய்து, எக்காரணம் கொண்டு இதைப் படமாக எடுத்து விடாதபடி எழுதி, அதே சமயம் படிக்கும் விதத்தில் சுவாரஸ்யம் குறையாமல் செய்திருக்கிறார் சுஜாதா.
சுஜாதாவின் குற்ற புனைவு நாவல்களில் முக்கியமான அம்சம், கொலையாளியை கடைசி அத்தியாயத்தில் அறிமுகப்படுத்த மாட்டார். கொலையாளி நாவலின் ஆரம்பப் பகுதிகளிலேயே வந்து விடுவான். சுஜாதா ஒரு பேட்டியில் இதைப் பற்றி குறிப்பிடும்போது, குற்ற புனைவு நாவல்களுக்கான விதிகளின்படி (முக்கியமாக ஆங்கிலம்) குற்றவாளியை எல்லா கதைமாந்தரைப் போலவும் முதலில் அறிமுகம் செய்து விட வேண்டும், ஆனால் அதே சமயம் வாசகர்களுக்கு அவனைப் பற்றி தெரிந்து விடக்கூடாது என்று சொல்லி இருந்தார். இந்த நாவல்களைக் கொஞ்சம் உன்னிப்பாக படித்தால் இந்த விஷயத்தைக் கச்சிதமாக கையாண்டிருப்பார். நாம் படிக்கும்போது யார் குற்றவாளி என்று ஊகித்து விடும்படியாக இருந்தாலும், அவன் ஏன் அந்த கொலை செய்தான் என்பதை கடைசி பகுதி வரை யோசிக்க வைப்பதில் திறமையானவர்.
இவரின் குற்றபுனைவோ சிறுகதையோ, நாவலோ அந்த காலகட்டத்தின் நிகழ்ச்சிகளை மிக உன்னிப்பாக பதிவு செய்து இருப்பார். இது கிட்டத்தட்ட ஒரு வரலாற்று பதிவு மாதிரி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, நாவலினூடே இரு கதை மாந்தரின் பேச்சின் வழியே சிறு பத்திரிகை- வெகுஜன பத்திரிகை விவாதம்.
இந்த தொகுதியின் முதல் கதையான “பாதி ராஜ்ஜியம்” கணேஷ் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, தன் அறைக்கு வரும் பெண்ணை இப்படிச் சொல்கிறான் -
“
“எஸ் என்றேன்,
நைலான் சாகரம் ஆக உள்ளே நுழைந்தாள். அவள் அணிந்து இருந்த புடவையை நான்
விரும்பினேன். நான் மட்டும் தொடர் நாவலின் ஹீரோ சேகராக இறந்தால் அவளைக் கண்ட உடன்
காதல் கொண்டு இருப்பேன்.”
"இந்த நாவல் 1970 இறுதிகளில் வந்திருக்கும். அந்த கால நாவல்களின் கதைபாணி அப்படியே பிரதிபலிப்பதுதான். அதற்கு தகுந்தாற்போல், கணேஷ் ஒரு ஹோட்டலில் சென்று உட்கார்ந்தவுடன் அங்கிருக்கும் வெயிட்டர்கள் பற்றின கருத்து இது- “ஜீவ்ஸ் மாதிரி விரைப்பான வெயிட்டர்கள்”!
ஜீவ்ஸ் என்றால் யாருக்கு என்ன புரியும்? பி.ஜி. வோட்ஹவுஸ் படித்திருந்தால் அதில் ஜீவ்ஸ் என்று வெயிட்டர் பற்றி அறிந்திருக்க முடியும், இந்த வாக்கியத்தை ரசித்து படிக்க முடியும். "இல்லை, நாங்கள் வெகு தீவிரமான இலக்கியம்தான் படிப்போம்," என்று கங்கணம் கட்டி இருப்பவர்களுக்கு இது எதுவும் புரியாது. ஆனால் அதற்காக நாம் வருத்தப்பட முடியுமா என்ன?
இந்த தொகுதியில் இருக்கும் கடைசி கதை கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் எழுதப்பட்டது. முப்பது வருடங்கள் - எவ்வளவோ மாற்றங்கள். அத்தனையும் மிகத் துல்லியமாக சின்னச் சின்ன விஷயங்களாக அங்கங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. யாருக்காவது போஸ்ட் மார்ட்டம் எப்படி செய்வார்கள் என்று தெரியுமா? இல்லை, இறந்தவர்கள் எத்தனை மணிக்கு இறந்தார்கள் என்று எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியுமா? அதைப் பற்றியும் இந்த குறுநாவல் ஒன்றில் மிக விரிவாக எழுதி இருப்பார். இப்போது வேண்டுமானால் விக்கிபீடியாவில் படிக்கலாம், ஆனால் அதை நாவலில் சரியான இடத்தில் சேர்ப்பது மிகக் கடினம்.
நாவலில் சில இடங்களில் வரும் ‘ஏ’ ஜோக்குகளைச் சொல்ல வேண்டும்.
வசந்த்: ஆதாமுடைய முகத்தைப் பார்த்ததும் ஏவாள் என்ன சொன்னா தெரியுமா ?
கணேஷ்: என்ன?
வசந்த்: ஒண்ணுமே சொல்லலை, முதலில் முகத்தை பார்த்தாதானே!
இதே மாதிரி இன்னொன்று.
"ஒருத்தன் டாக்டரிடம் செக் அப் போனான். டாக்டர் அவனிடம், "நீங்க இனிமே வேலைக்குப் போகாதீங்க," என்று சொன்னார். அதனால் நைட் நைட் தன் மனைவியை மட்டும் வேலைக்கு அனுப்பினான். அவள் ஒரு நாள் இராத்திரி அம்பது ரூபா பத்து பைசா கொண்டு வந்தா. புருஷன் உடனே, "என்ன பத்து பைசா எல்லாம் கொண்டு வந்திருக்க" என்று கேட்க , அவள், "எல்லோருமே பத்து பைசாதான் தந்தாங்க," என்று சொன்னாள்.
இது மாதிரி எழுதுவதால்தான் இவரை வணிக எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விட்டார்கள். தன் நாவல்களை மிக மோசமான சினிமாவாக எடுத்தவர்களை இந்த நாவல்கள் மூலமே நையாண்டி செய்துவிட்டு, இந்த நாவல்களை எழுதும் விதத்தில் மாற்றம் செய்து, எக்காரணம் கொண்டு இதைப் படமாக எடுத்து விடாதபடி எழுதி, அதே சமயம் படிக்கும் விதத்தில் சுவாரஸ்யம் குறையாமல் செய்திருக்கிறார் சுஜாதா.
சுவாரசியம். இந்த தொகுதியில் இருக்கும் கதைகள் பெயரைச் சொல்லியிருக்கலாமே ஸார். எந்தெந்த கதைகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள குறுகுறுப்பு!
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி
Thanks Siva,Will update next week, the plan was to write the review without telling the story, So forgot to update the story names, and i have to thank Natbas for significant inputs in the review
ReplyDeleteஅன்புள்ள சிவா,
ReplyDeleteஇந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்...
1-பாதி ராஜ்ஜியம்
2-ஒரு விபத்தின் அனாடமி
3-மாயா
4-காயத்ரி
5-விதி
6-மேற்கே ஒரு குற்றம்
7-மேலும் ஒரு குற்றம்
8-உன்னைக் கண்ட நேரமெல்லாம்
9-மீண்டும் ஒரு குற்றம்
10-அம்மன் பதக்கம்
11-மெரீனா
12-புகார்..புகார்..புகார்
13-ஐந்தாவது அத்தியாயம்
இனி கதைகளைப் பற்றி பார்ப்போம்.
ReplyDeleteபாதி ராஜ்ஜியம்: நைலான் கயிற்றில் அறிமுகம் ஆன கணேஷை நாம் மறுபடியும் டெல்லியில் சந்திக்கிறோம். நீரஜா என்னும் பெண் அவனைத் தேடி வருகிறாள்-அவள் பணக்கார அப்பாவின் சார்பாக. மோதலில் ஆரம்பிக்கும் கதை போக போக ஒரு blackmail நாடகத்தில் சங்கமித்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதோடு முடிகிறது. பாதி ராஜ்ஜியம் அந்த பணக்காரர் கணேஷுக்கு கொடுக்கும் பரிசு. தனியாக இருந்தாலும் கணேஷ் காட்டும் சாமர்த்தியம், ஒவ்வொரு நூலாக அலசி ஆராய்ந்து அவன் முடிவை யூகிக்கும் தேர்ச்சி நம்மை வியக்க வைக்கும்.
ஒரு விபத்தின் அனாடமி: டெல்லியின் பரபரப்பான சந்து பொந்துகளில் ஒன்றில் ஒரு கோர விபத்து நடக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவரும் அந்த விபத்தை பார்த்த ஒரே சாட்சியும் கணேஷின் உதவியை நாடுகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் கணேஷ் விபத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கும் கதை இது. வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கிறார் சுஜாதா. ஒவ்வொரு செங்கல்லாக கணேஷ் நகர்த்தும்போதும், இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை அணுகும் பொது குடுக்கப்படும் poetic justice நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கும். A very excellent story.
மாயா: இது போலி சாமியார்களின் காலம். இந்தக் கதையும் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. வழக்கு ஒன்றை நடத்துவதற்காக ஒரு ஆசிரமம் செல்லும் கணேஷ் அங்கு எதிர்கொள்ளும் சவால்களே கதை. கூடுதல் ஊக்கமாக இதில் வசந்த் அறிமுகமாகிறான். முதல் கதையிலேயே வசந்த்தின் குறும்புத்தனங்கள் நம்மை ‘அட’ போட வைக்கின்றன. உதாரணமாக:
“ஒன்று: வாசுதேவனை போய் பார்க்க வேண்டும்”.
“ஒ.கே.”
.
“இரண்டு: இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் வேண்டும்”.
“ஒ.கே”
“மூன்று: ஒரு பாட்டில் பீர்”.
“பீரா? எப்பொழுது?”
“இப்பொழுதே!”
“ரெடி”. என்றான் சிரித்துக்கொண்டே.
இந்தக் கதை நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக சொல்வார்கள். ஆனால் ஒரு விறுவிறுப்பான கதை என்பதைத் தாண்டி ஒன்றும் ஏடாகூடமாக நமக்கு இதில் தெரிவதில்லை-கூர்ந்து வாசித்தால்.
காயத்ரி: இந்த பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் பற்றி நான் அறிவேன். ஆனால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது. கதாசிரியரே சொல்லுவதாக அமைந்திருக்கும் இந்தக் கதையில் கணேஷ்-வசந்த்திற்கு வேலை கம்மிதான். ஆனால் இறுதியில் ஈடு கொடுக்கிறார்கள் அபாரமாக. அவர்கள் இருவரையும் விட கதாநாயகி காயத்ரி நம் மனத்தில் அதிக இடம் பிடிக்கிறாள்.
விதி: ஒரு பஸ் விபத்து, காணாமல் போன ஒரு அண்ணன், அழகான தங்கை, இதில் என்ன முடிச்சுக்கள் இருக்கும்? உண்டு என்கிறது விதி. சம்பந்தமே இல்லாத முடிச்சுக்களை வைத்துக்கொண்டு கணேஷ் ஓட்ட வைக்கும் இடங்கள் புத்திசாலித்தனத்தின் ஆச்சர்ய உதாரணங்கள்.
மேற்கே ஒரு குற்றம்: கணேஷை ஒரு நடனக் குழுவை சேர்ந்த பெண் காண வருகிறாள். ஆனால் எதுவும் சொல்லும் முன் கொல்லப் படுகிறாள். விசாரணை கணேஷ்-வசந்த்தை ஜெர்மனி பக்கம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு செல்கிறது. அவர்கள் அதை சமாளிக்கும் விதமே இந்த கதை. காகிதத்தில் வரையப்படும் வட்டங்கள், கணேஷ் அதை வைத்து ஆடும் ஆட்டம் அருமையான இடங்கள்.
மேலும் ஒரு குற்றம்: ஒரு அனாமநேய டெலிபோன் அழைப்பு வருகிறது கணேஷுக்கு. பிறகு அழைத்தவர் கொலையுண்டு போகிறார். ஒரே சாட்சி கணேஷ்! எப்படி இருக்கும்? கொலையாளியின் சாதுர்யமான அணுகுமுறைகள் கணேஷை குழப்ப வைக்கின்றன, நம்மையும் சேர்த்து.
உன்னைக் கண்ட நேரமெல்லாம்: ‘ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.
ReplyDeleteமீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை. விடுமுறைக்காக மெர்க்காரா செல்லும் கணேஷ்-வசந்துக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அவர்கள் ஜெயித்தார்களா என்பது….படித்து தெரிந்து கொள்ளுங்கள். சதுரங்க ஆட்டம் போல சிந்தனைக்கு வேலை வைக்கும் கதை இது.
அம்மன் பதக்கம்: அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு விலை உயர்ந்த பதக்கம் காணாமல் போகிறது. பதக்கதோடு ஒரு பெண்ணும் ஒரு பைத்தியக்காரனும் சம்பந்தப் படுகிறார்கள். பதக்கத்தை கணேஷ் வசந்த் கண்டு பிடித்து மேலும் முடிச்சுக்களை அவிழ்க்கும் சுவாரசியங்கள் நிறைந்த கதை.
மெரீனா: மெரீனா கடற்கரையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. மெரீனாவில் பொழுது போக்கிற்காக செல்லும் ஒரு பணக்கார இளைஞன் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்கிறான். சாதாரணமாக இதை அணுகும் கணேஷ்-வசந்த் இதில் இன்னும் புதை குழிகளைக் கண்டு பிடிப்பதே கதை. இறுதி முடிவு நம்மை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும்.
புகார்..புகார்..புகார்: ஒரு pipe ரிப்பேர் விஷயம் கணேஷ்-வசந்தை பாடாய் படுத்தும் சுவாரசியமான கதை. அள்ள அள்ள குறையாத பணம் போல் இதில் அள்ளக் குறையாத பிணங்கள் நம்மை பயமுறுத்தும். Raskol Nikov Syndrome என்ற சிந்தாந்தத்தை வைத்து பின்னப்பட்ட கதை. சட்டம் படித்தவர்கள், சட்டம் பயிலுவோர் இந்தக் கதையை அதிகம் ரசிப்பார்கள்.
ஐந்தாவது அத்தியாயம்: மர்மக் கதையில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் வரிக்கு வரி நடந்தால்? இது தான் இந்தக் கதையின் முடிச்சு. பிரபல இருதய மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலை வருகிறது. அதுவும் அவள் வாசிக்கும் மர்மக் கதையின் ஐந்தாவது அத்தியாயம் முடிவதற்குள் அவள் கொலையுண்டு போவாள் என்கிறது கதை. அந்த கொலை நடப்பதற்குள் கணேஷ் -வசந்த் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது suspense. விறுவிறுப்பு கம்மி என்றாலும் (என்னை பொறுத்தவரையில்) இறுதியில் முடிச்சுக்கள் அவிழும்போது கணேஷின் மூளை இன்சூர் செய்யப்பட்டதோ என்னும் கேள்வி நம் மனதில் எழுவது என்னவோ நிஜம்.
இப்படி சுவாரசியம் குறையாத பதிமூன்று கதைகள் இந்த தொகுப்பில்...
Thanks Balhanuman, there are some comments from people, that i dwell too much into story without writing the review, So i told myself not to get carried away by the stories, write the concepts that tethers the 13 stories. Once again thanks for your comments :-)
ReplyDeleteவழக்கம்போல பால ஹனுமான் கலக்கிவிட்டார்! சுஜாதா என்றவுடன் அவருக்கு ஹனுமான் பலம் வந்துவிடுகிறது!
ReplyDelete//உன்னைக் கண்ட நேரமெல்லாம்: ‘ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.
//
இந்த கதையில்தானே வசந்த் கதையின் ஆரம்பத்தில் "பாஸ், பஞ்சு அருணாசலம் மேல கேஸ் போடணும் பாஸ் (ப்ரியா கதையை சொதப்பினதிற்காக!)" என்று சொல்வார்!
//
மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை.
//
இந்த தொலைக்காட்சி தொடரில் நடிகர் சுரேஷ் கணேஷாகவும் ஆதிராஜ் வசந்தாகவும் நடித்தார்கள்.
முதலில் என்னவோ போலிருந்தது. அப்புறம் சரியாகவே பொருந்தினார்கள். இதுவரை வந்த கணேஷ், வசந்திற்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.