"புலியின் கண்களின் உள்ளே காடு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்ற போர்ஹேயின் வரி உண்மை என்பதை கென்னத்தின் எழுத்தை வாசிக்கையில் அறிந்துகொள்ள முடிகிறது - எஸ். ராமகிருஷ்ணன்
சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர காடு மிகவும் பாதுகாப்பான இடம் என்று எழுதுகிறார் கென்னத் ஆண்டர்சன். 1960களிலேயே, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையைக் கடப்பதைவிடவும் காட்டுக்கு நடுவில் வாழ்வது பாதுகாப்பானது என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். எஸ். சங்கரன் மொழிபெயர்த்த அவரது 'ஏலகிரியில் சிறுத்தை வேட்டை' என்ற புத்தகத்தைப் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
பொதுவாக, காட்டு விலங்குகள் அனைத்துமே மனிதனைப் பார்த்ததும் ஓடிப்போய் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றன. குஜராத் தீபகற்பத்தில் உள்ள காடுகளுக்கு வெளியே சிங்கங்கள் கிடையாது. புலியையும் சிறுத்தையையும் பார்த்து நாம் பயப்படுவது அர்த்தமற்றது - ஒரு சில புத்தி கெட்ட புலிகளைத் தவிர மற்றவை எல்லாம் கனவான்கள். சிறுத்தை ஒரு கோழை, நாய்களைப் போல் 'சீ! போ!" என்று எளிதாகத் விரட்டியடித்து விடலாம். கரடி ஒரு சோம்பேறி, அச்சம் மிகுந்தது, மூர்க்கமானது. மனிதன் வருவதைப் பார்த்தாலே ஓடிப் போய் விடும். சிங்கம், புலி, சிறுத்தை, கரடி என்று நாம் காட்டில் பயப்படும் விலங்குகள் எல்லாம் இப்படி - காயம் பட்டிருந்தாலோ, வேட்டையாட முடியாதபோதோ இல்லை நாம் அவற்றின் பாதையில் குறுக்கிட்டு அச்சுறுத்தினாலோதான் மனிதனைத் தாக்கும்.
பாம்புகளை எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ எல்லாமே விஷமற்றவை. இந்தியாவில் உள்ள பாம்புகளிலேயே மூன்றுதான் உயிர்கொல்லி வகை விஷப்பாம்புகள். அவற்றில் இரண்டு வயல்வெளிகளில் வாழ்பவை. மிச்சமிருக்கும் ஒரே ஒரு பாம்பும் காட்டில் மிதித்தால், அல்லது பயமுறுத்தினால்தான் நம்மைக் கொத்தும்.
ஆக, காடுகள் மிகவும் பாதுகாப்பானவை - இரண்டே இரண்டு விலங்குகளைத் தவிர எல்லாம் நல்லவை. காட்டுப் பன்றி ஒன்று. அது சீக்கிரம் தாக்குகிறது, விடாமல் தாக்குகிறது, ஆவேசமாகத் தாக்கிக் கொண்டே இருக்கிறது. அதையடுத்து யானை. அதிலும் குறிப்பாக ஒற்றை யானை. மனிதனை ஏற்கனவே கொன்றிருக்கும் யானை, காமவெறி பிடித்த யானை, ஒற்றை யானை, குழந்தையுடன் இருக்கும் பெண் யானை - காட்டில் நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதானால் இவற்றால்தான் ஏற்படும். ஆனால் கூட்டமாகத் திரியும் யானைகள் யாரையும் எதுவும் செய்வதில்லை. சொல்லப்போனால் யானைகளும்கூட கோழைதான். புலி உறுமுவது போல் உறுமினால் எந்த யானையாக இருந்தாலும் உடனே ஓடிப் போய் விடும்.
கென்னத் ஆண்டர்சன் இப்படிப்பட்ட விலங்குகளைதான் வேட்டையாடியிருக்கிறார். அவருடைய அப்பா, தாத்தாக்களுக்கு மனிதனைக் கொல்லக்கூடிய விலங்குகள் காட்டில் இருக்கின்றன என்பதே அவற்றை கொன்று தலையை வெட்டித் தொங்கவிடவும், தோலை உரித்துப் போர்த்துக கொள்ளவும் போதுமான காரணமாக இருந்திருக்கிறது. வன விலங்குகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவும் இந்த வேட்டைக்காரர்களுக்கு அவற்றைக் கொல்ல நியாயமான காரணங்கள் தேவைப்படுகின்றன. மனிதர்கள் மற்றும் அல்லது ஆடு மாடுகளைக் கொல்லும் புலிகளையும் சிறுத்தைகளையும் தீர்த்துக் கட்டுவது ஒரு அறச்செயலாகிறது. ஆண்டர்சன் எழுதும் காலத்திலேயே இவற்றின் எண்ணிக்கை அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைந்து விட, இந்தப் புத்தகத்தில் கனமான நாஸ்டால்ஜியா நெடி அடிக்கிறது.
டன்பார் பிராண்டர், சாம்பியன், கிளாஸ்பர்ட், பெஸ்ட், கார்பெட் போன்ற சிறந்த எழுத்தாளர்களில் பலர் இந்தியக் காடுகளில் ஏராளமான விலங்குகள் இருந்த அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று சொல்லி அவர்களின் அரும்பெரும் பணியை நினைவுகூர்கிறார் ஆண்டர்சன் -
"அவர்களுடைய சிறந்த பணிக்கு தக்க உண்மையான மதிப்பு இப்போதுதான் பிரபலமாகியுள்ளது. மேலும் பல வருடங்கள் சென்று இந்தியாவின் காட்டு விலங்குகள் கடந்த காலத்தில் இருந்த ஒன்றாக மாறும்போதுதான் இந்த அறிஞர்களின் எழுத்துகளுக்கு மதிப்பு மென்மேலும் பெருகும் என்று சொல்லலாம். வருங்காலச் சந்ததியினருக்கு எந்தச் செல்வத்தினாலும் விலைகொடுத்து வாங்க முடியாத அறிவுச் செல்வத்தைப் பாதுகாத்து வைத்த அரும்பணி என்று இவர்களுடைய சேவையைக் கூறலாம்."
கனமான நகைமுரணையும்கூட சொற்கள் எவ்வளவு சுலபமாகத் தாங்கிக் கொள்கின்றன - வேட்டையாடுவதைவிட "மதிப்புள்ளதும் ஆனால் கடினமானதுமான காட்டு விலங்குகளைப் போட்டோ எடுப்பது, இயற்கையை ஆராய்வது போன்றவற்றில் அவர்கள் ஆர்வம் வளரத் தொடங்கிவிட்டது," என்று ஆண்டர்சன் எழுதுகிறார். காட்டு விலங்குகள் கணிசமாகக் குறைந்து விட்ட நிலையில் அவற்றை கொல்வதைவிட உயிரோடு பிழைத்துப் போக விட்டதை புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படுத்துவதில்தான் நவீன வேட்டைக்காரர்களுக்கு மரியாதை இருக்க முடியும். வேற வழி!
எல்லகிரி சிறுத்தை, கிழ முனுசாமியும் மகடிச் சிறுத்தையும், சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை என்ற மூன்று வேட்டைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ஏலகிரி சிறுத்தையைக் கொல்ல ஜோலார்ப்பேட்டை வரும் ஆண்டர்சன், ரயில் நிலையத்திலிருந்து ஏலகிரிக்கு இரவு வேளையில், ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்துக்கு நடந்தே செல்கிறார் - கையில் பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்துக் கொண்டு. விளக்கு வெளிச்சத்தைப் பார்த்ததும் சிறுத்தை, மனிதர்களைக் கொல்லும் சிறுத்தையாக இருந்தாலும், ஓடிப் போய் விடுமாம். இதுவாவது பரவாயில்லை, அங்கு ஒரு பெண் கொல்லப்பட்ட குட்டை ஒன்றின் அருகில் ஒரு புதர் இருக்கிறது. அதன் மறைவில் சிறுத்தை பதுங்கியிருந்ததற்கான தடயம் தெரிகிறது. கென்னத் ஆண்டர்சன், ஒரு ஆட்டை குட்டைக்கருகில் கட்டி வைத்து விட்டு, சிறுத்தை பதுங்கிக் கொல்லும் புதரில் தான் பதுங்கிக் கொள்கிறார்! - "புதர் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் பக்கவாட்டிலோ அல்லது பின்புறமாகவோ நான் இருக்கும் இடத்தை அடைய முடியாது. முன் பக்கமாக மட்டுமே வர முடியும். அவ்வழியில் அது வருவதை எதிர்பார்த்து நான் துப்பாக்கியோடு தயாராக இருப்பேன்"
சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை மிகப் பிரமாதமான த்ரில்லர். மனிதர்களைக் கொல்லும் ஒரு கருஞ்சிறுத்தையைத் தேடி காட்டுக்குள் தன்னந்தனியாய்ப் போகிறார் ஆண்டர்சன், இரவின் இருளில்.
எல்லகிரி சிறுத்தை, கிழ முனுசாமியும் மகடிச் சிறுத்தையும், சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை என்ற மூன்று வேட்டைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ஏலகிரி சிறுத்தையைக் கொல்ல ஜோலார்ப்பேட்டை வரும் ஆண்டர்சன், ரயில் நிலையத்திலிருந்து ஏலகிரிக்கு இரவு வேளையில், ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்துக்கு நடந்தே செல்கிறார் - கையில் பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்துக் கொண்டு. விளக்கு வெளிச்சத்தைப் பார்த்ததும் சிறுத்தை, மனிதர்களைக் கொல்லும் சிறுத்தையாக இருந்தாலும், ஓடிப் போய் விடுமாம். இதுவாவது பரவாயில்லை, அங்கு ஒரு பெண் கொல்லப்பட்ட குட்டை ஒன்றின் அருகில் ஒரு புதர் இருக்கிறது. அதன் மறைவில் சிறுத்தை பதுங்கியிருந்ததற்கான தடயம் தெரிகிறது. கென்னத் ஆண்டர்சன், ஒரு ஆட்டை குட்டைக்கருகில் கட்டி வைத்து விட்டு, சிறுத்தை பதுங்கிக் கொல்லும் புதரில் தான் பதுங்கிக் கொள்கிறார்! - "புதர் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் பக்கவாட்டிலோ அல்லது பின்புறமாகவோ நான் இருக்கும் இடத்தை அடைய முடியாது. முன் பக்கமாக மட்டுமே வர முடியும். அவ்வழியில் அது வருவதை எதிர்பார்த்து நான் துப்பாக்கியோடு தயாராக இருப்பேன்"
சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை மிகப் பிரமாதமான த்ரில்லர். மனிதர்களைக் கொல்லும் ஒரு கருஞ்சிறுத்தையைத் தேடி காட்டுக்குள் தன்னந்தனியாய்ப் போகிறார் ஆண்டர்சன், இரவின் இருளில்.
"மேலும் சில வினாடிகள் சென்றதும் சிறுத்தை நிச்சயமாக என்னை நோக்கித்தான் ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதைத் தீர்மானமாக முடிவு செய்து கொண்டேன். ஆனால், அதனுடைய சத்தத்தை என்னால் கேட்கக்கூடிய வரையில் தாக்கும் என்ற அபாயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். பிறகு சட்டென்று சத்தம் நின்றது.
"அடுத்து இயல்பான சீறும் சத்தம் 'உஸ்'ஸென்று கேட்டது. கோபமடைந்த நாகப்பாம்பு தன் உடலிலிருந்து திடீரென்று காற்றை வெளிப்படுத்தும்போது எழும் சத்தத்தைப் போன்றிருந்தது அது. சிறுத்தை உறுமுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. விரைவிலேயே அதன் உரத்த சத்தம் கேட்கக்கூடும். பிறகு பாய்ந்து தாக்கலாம். எவ்வப்போது இத்தகைய சத்தம் கேட்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். அடுத்து எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் நான் அறிவேன். விரைவாகத் துப்பாக்கியைத் தோளுக்கருகில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு டார்ச் விளக்கின் விசையை அழுத்தினேன்.
"கொடூரமான, செவ்வரி படர்ந்த இரண்டு கண்கள் வெறித்துப் பார்த்தன"
எதிர்பாராத முடிவு கொண்ட இந்த அத்தியாயத்துக்காகவே புத்தகத்தைப் படிக்கலாம்.
'மகடிச் சிறுத்தை வேட்டை'யில் கிழ முனுசாமிதான் சுவாரசியமானவன். "பெங்களூரில் முனுசாமி என்றொருவன் வசித்துக் கொண்டிருக்கிறான். அவன் இன்னமும் இருப்பதாலேயே நிகழ் காலத்தில் குறிப்பிடுகிறேன். 'வேட்டையாட வரும் கனவான்களுக்கு' வழிகாட்டி என்று தன்னை அவன் சொல்லிக் கொள்கிறான். அவன் ஒரு போக்கிரியும்கூட. வேட்டைக்காரர்களுக்கு விருப்பமான செய்திகளை அவன் கொண்டு வருவான். "மாஸ்டர்! நாற்பது காட்டுப் பன்றிகள் வந்துள்ளன. ஓயிட் பீல்ட் அருகே வேட்டையாடலாம். பன்னிரெண்டு மைல் தூரம்தான்" என்பான்..." என்று இவனை விவரிக்கிறார் ஆண்டர்சன். தானே விலை கொடுத்து வாங்கிய கழுதையின் கழுத்தை வெட்டி சிறுத்தைத் தடயங்களை உருவாக்கி அங்கே சிறுத்தை நடமாட்டம் உண்டு, வேட்டையாடலாம் என்று அப்பாவிகளை அழைத்துச் சென்று பணம் பண்ணுகிறவன் இவன். "இத்தகைய ஒரு ஆள் உங்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஜாக் ஜான்சன் என்று சொன்னாலும்கூட அவனை அண்ட விடாதீர்கள்," என்று எச்சரிக்கிறார் ஆண்டர்சன் - ஆம், ஒயிட் பீல்டில் காட்டுப் பன்றிகள் கிடையாது.
ஏலகிரியில் சிறுத்தை வேட்டை,
கென்னத் ஆண்டர்சன், மொழியாக்கம் எஸ் சங்கரன்,
விலை ரூ. 80, புக் ஃபார் சில்ரன்,
விற்பனை உரிமை - பாரதி புத்தகாலயம் - 044 24332424
இணையத்தில் வாங்க - 600024.com
இங்கே ஒரு சுவையான நூல் அறிமுகம் இருக்கிறது : கனவுகளின் காதலன் (புகைப்பட உதவிக்கு நன்றி)
நன்றாக இருக்கிறது இந்தப் பதிவு. அறிமுகத்திற்கு நன்றி.பதிவை படிக்கும் போதே முன்னொரு சமயம் பார்த்த திரைப்படம் நினைவிற்கு வந்தது. The Ghost and the darkness
ReplyDeleteகென்யா காடுகளில் போன நூற்றாண்டில் சிங்க வேட்டையைப் பற்றின படம்.
http://en.wikipedia.org/wiki/The_Ghost_and_the_Darkness
//"அடுத்து இயல்பான சீறும் சத்தம் 'உஸ்'ஸென்று கேட்டது. கோபமடைந்த நாகப்பாம்பு தன் உடலிலிருந்து திடீரென்று காற்றை வெளிப்படுத்தும்போது எழும் சத்தத்தைப் போன்றிருந்தது அது. சிறுத்தை உறுமுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. விரைவிலேயே அதன் உரத்த சத்தம் கேட்கக்கூடும். பிறகு பாய்ந்து தாக்கலாம். எவ்வப்போது இத்தகைய சத்தம் கேட்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். அடுத்து எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் நான் அறிவேன். விரைவாகத் துப்பாக்கியைத் தோளுக்கருகில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு டார்ச் விளக்கின் விசையை அழுத்தினேன்.
"கொடூரமான, செவ்வரி படர்ந்த இரண்டு கண்கள் வெறித்துப் பார்த்தன"//
அந்தப் படத்திலும் இப்படி ஒரு காட்சி வரும். வால் கில்மர் விசையை அழுத்தும் போது துப்பாக்கி வேலை செய்யாது. "சொரேர் என்றது" என்ற உணர்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம்!
ஆன்டர்சனுக்கு என்ன எதிர்பாராத முடிவு (புத்தகம் வாங்கி படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறீர்களா?!
நன்றி சிவா, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.
ReplyDeleteசீவனப்பள்ளி கருஞ்சிறுத்தையை இரண்டு முறை இவர் சுட்டிடுவார் - ஒரு குண்டு சிறுத்தையின் திறந்திருந்த வாய்க்குள் புகுந்து தொண்டை வழியாக வெளியேறிடும். சிறுத்தை, சத்தம் வரக்கூடாதுன்னு தரையோட தரையா ஊர்ந்து வந்திருந்ததா, அதனால முகத்தைப் பார்த்து சுட்ட இன்னொரு குண்டு அதோட முதுகில் பயங்கரமான மேற்புறமா காயம் ஏற்படுத்திடும். சிறுத்தை ரத்தம் சொட்டச் சொட்ட அதன் குகைக்கு ஓடிடும்.
அடுத்த நாள் காலையில் இவர் இன்னும் மூவரையும் ஒரு நாயையும் கூட்டிக் கொண்டு, அதன் குகையைத் தேடி போவார்கள். குகை வாசலில் அடை அடையாகத் தென்கூடுகள். சத்தமில்லாமல் உள்ளே போவார்கள். கும்மிருட்டு. வேண்டுமென்றே கல்லைத் தூக்கி வீசி சத்தப்படுத்துவார்கள், உறுமல் - மூன்று கெஜ தூரத்திலிருந்து சிறுத்தை பாய்வது தெரியும். ரெண்டு தடவை சுட்டுவார். தோட்டாச் சத்தம் குகையில் பயங்கரமா எதிரொலிக்கும்.
அடுத்த நொடியே தேனீக்கள் அட்டாக். விழுந்தடித்துக் கொண்டு குகையைவிட்டு இவர் வெளியேறி புதரில் ஒளிந்து கொள்வார். இருந்தாலும் 19 தேனீக்கள் இவரைக் கொட்டிடும், இவரோட நாய் உடலில் 41 கொடுக்கு முட்கள் இருக்கும்.
அடுத்த நாள் காலை மறுபடியும் அந்த குகைக்குள் சத்தமில்லாமல் போவார்கள்.6 அடி 7 அங்குல உருவம் கொண்ட அந்தச் சிறுத்தை ஒரு பந்தைப் போல் சுருண்டு, செத்துக் கிடக்கும். அதன் உடலில் 273 தேனீ கொடுக்குகள்.
"சீவனப்பள்ளியைச் சுற்றியுள்ள காடுகளில் நிலவொளியுள்ள பல இரவுகளைச் சுற்றித் திரிந்து கழித்திருக்கிறேன். காட்டெருமையைத் தவிர இதர எல்லா விலங்குகளும் கணிசமான அளவில் அங்கு உள்ளன. யானைகளைச் சந்திக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கும். பெருமூச்சுவிடும் புலியின் லேசான உறுமல், சிறுத்தை எழுப்பும் மரம் அறுப்பது போன்ற சத்தம், பீதியடைந்து ஓடும் சாம்பர் மானின் காலடிச் சத்தம் ஆகியவற்றை நிலவொளி படர்ந்த காட்டில் அலைந்து திரியும்போது நீங்கள் கேட்க முடியும். ஒருவேளை யானையைத் தவிர இதர விலங்குகளை உங்களால் பார்க்கும் முடியாமல் இருக்கலாம். ஏனெனில் புலி, சிறுத்தை, சாம்பர் மான் ஆகியவை மிகவும் தந்திரமுள்ள விலங்குகள். நீங்கள் வருவதை அவைகள் முன்னமே பார்த்திருக்கும்; அல்லது உங்கள் காலடியோசையைக் கேட்டிருக்கும். எனவே உங்கள் கண்ணில் படாமல் தப்பித்துக் கொள்வதிலேயே அவை கருத்தாக இருக்கும்"
இப்படிப்பட்ட விலங்குகளில் ஒன்றான கருஞ்சிறுத்தையைதான், கென்னத் ஆண்டர்சன் இரவு வேளையில், இயற்கை வெளிச்சத்தில், சத்தப்படுத்தாமல், ஆற்றுப் படுகையில் நடந்து சென்று சுட்டுக் கொள்கிறார். காட்டிலிருந்த சில கிராமங்களில் உள்ள ஆடு மாடுகளை அடித்துச் சாப்பிட்டதுதான் அது செய்த பாவம்.
செம சுவாரசியமா இருக்கு நட்பாஸ் ஸார்.
ReplyDeleteஇவரைப் பற்றி தேடிப்பார்த்தேன். இந்த மொழியாக்கத்தின் மூலம் கீழே இருக்கும் இரு புத்தகங்களில் எது?
The Black Panther of Sivanipalli and Other Adventures of the Indian Jungle (1959)
The Call of the Man Eater (1961)
நன்றி சிவா ஸார் :)
ReplyDeleteஇது வெவ்வேறு புத்தகங்களில் வந்த ஐந்து கட்டுரைகளின் தொகுப்புன்னு நினைக்கறேன்.
நாம் பேசும் கதை ப்ளாக் பாந்தர் ஆஃப் சிவன்பள்ளி!
நன்றி ஸார். பையனிடம் சிபாரிசு செய்யத்தான்!
ReplyDeleteபுத்தகத்தைப் படித்துவிட்டேன். அதுபற்றி என் கருத்து அடுத்த கமெண்டில் தருகிறேன். இப்போது கென்னத் ஆண்டர்சனின் 'நைன் மேன் ஈட்டர்ஸ் அன்டு ஒன் ரோக்' என்ற புத்தகம் மின் புத்தகமாக (இபப், கிண்டில், பிடிஎப், டெக்ஸ்ட்) பின் வரும் லிங்கில் (சட்டபூர்வமாக) கிடைக்கிறது-
ReplyDeletehttp://archive.org/details/NineMan-eatersAndOneRogue1954&reCache=1
வேட்டைப் புத்தகப் பிரியர்களுக்கு நல்ல வேட்டை!
இன்னும் கமெண்ட் வரலை :)
Deleteபுத்தகத்தை பற்றி விரிவாக எழுதும் விருப்பம் இருந்தால் ஜிமெயில் அக்கவுண்ட்டில் natbas2012 என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள், விவரம் சொல்கிறேன்.
இயன்றவரை இங்கு புத்தகங்களை மட்டும் பேசினால் நன்றியுள்ளவனாக இருப்பேன். மற்றதைப் பேச நிறைய இடங்கள் இருக்கின்றன, இல்லையா? :)
மிக்க நன்றி.
பிகு - பின்னூட்டத்துக்கு நன்றி. நல்லதாகவோ மோசமாகவோ, இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கமெண்ட்டில் விமரிசித்தால் சரி செய்து கொள்ள பயன்படும். நன்றி.
கென்னத் ஆண்டர்ஸன் பிரபல வேட்டைக்காரர் மற்றும் வேட்டைப் புத்தகங்களின் ஆசிரியர். எழுத்தாற்றலில் (என்னைப் பொறுத்தவரை) ஜிம் கார்பெட்டுக்கு ஒரு மாற்று குறைச்சல் என்றாலும் 'ஏலகிரியில்...' மிக நல்ல புத்தகமே. குழந்நைகள் விரும்பக்கைடியதே என்றாலும் இதைக் குழந்தைகள் புத்தகமாக ஏன் புரமோட் செய்யவேண்டும் என்று புரியவில்லை. ஆங்கிலத்தில் இப்படிச் செய்யப் படவில்லை. நம் சூழலில் பெரியவர்கள் பலர் இதனாலேயே இப்புத்தகத்தைப் படிக்காமல் ஒதுக்கிவிடவும் கூடும்.
ReplyDeleteபுத்தகத்தின் சிறப்புகளை நட்பாஸ் அழகாக உதாரணங்களோடு விளக்கிவிட்டார். இப்போது இந்தத் தமிழ்ப்பதிப்பின் சிற்சில குறைகளைப் பார்ப்போம்.
முதலில் படு மோசமான அட்டை மற்றும் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.
மொழி பெயர்ப்பு ஓகே என்றாலும் கார்பெட்டின் புத்தகத்தை தி.ஜ.ரங்கனாதன் தமிழில் மொழிபெயர்த்திருப்பதில் இருக்கும் சரளம், ஈர்ப்பு சங்கரன் மொழிபெயர்ப்பில் இல்லை. ஆங்காங்கே சில வாக்கியங்கள் நெருடுகின்றன.
புத்தகம் மோசமாக எடிட் செய்யப்பட்டு /ப்ரூஃப் பார்க்கப்பட்டுள்ளது. தலைப்பில் 'ஏலகிரி' என்று இருப்பது உள்ளே 'எல்லகிரி' ஆகிவிட்டது! பல ஒற்றுமிகா இடங்களில் ஒற்று போட்டுப் படுத்துகிறார்கள் (விழுந்துக் கிடந்த, நிலவியக் காற்று).
ராஜ நாகம் (கிங் கோப்ரா) என்பதன் சரியான தமிழ்ப்பதமே கருநாகம் என்று தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளதோடு, ராஜ நாகம் என்ற மொழிபெயர்ப்புப் பதத்தை உபயோகிப்பதையும் கண்டித்துள்ளார். இங்கோ, இவை இரண்டுமே வெவ்வேறு உயிரினங்களாகக் குறிப்பிடப் படுகின்றன. ஆக, எந்தப் பெயரைத் தமிழில் கருநாகம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும், சாரைப்பாம்பு (rat snake) விஷமற்றது என்பதை ரோம் விடேகர் புத்தகங்களிலிருந்து அறியலாம். இங்கு சாரை ஒரு விஷப்பாம்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பெயர் சாரைப்பாம்பு என மொழியாக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
அடுத்து, விரியன் பாம்பு என்ற சொல். தமிழில் மூன்று விரியன்கள் உண்டு. கட்டுவிரியன் (common krait), கண்ணாடி விரியன் (Russel'd viper), சுருட்டை விரியன் (saw-scaled viper). பொத்தாம் பொதுவாக விரியன் என்று எழுதக் கூடாது. கானுயிர்கள் தொடர்பான மொழிபெயர்ப்பு மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியது. பின்னிணைப்பாக க்ளாசரி தந்திருக்கலாம்.
இதிலுள்ள கட்டுரைகளின் மூலத்தலைப்பு, இடம் பெற்ற புத்தகம் ('கென்னத் ஆண்டர்சன் ஆம்னிபஸ்' என்று போட்டுவிடாமல்) தந்திருக்கலாம். கென்னத் ஆண்டர்சனின் புகைப்படம் விக்கிமீடியா காமன்ஸில் கிடைப்பதால் அதைச் சேர்க்காதது பெரிய விடுபடல்.
கடைசியாக டூடூ என்று குறிப்பிடப்படும் பறவையை டோடோ என்றுதான் உச்சரிக்க வேண்டும். 'மகடி' என்று குறிப்பிடப்படும் (கன்னட) கிராமத்தின் பெயருக்கு 'மாகடி' என்பதே சரியான உச்சரிப்பு.
பெரும்பாலான தமிழ்ப் புத்தகங்கள் போதுமான அக்கரையின்றி, புரொபஷனல் டச் இன்றி வெளியிடப்படுவதற்கு இப்புத்தகமும் சான்றாக இருப்பது துரதிஷ்டவசமானதே.
(விற்பனை உரிமை பாரதி புத்தகாலயமாக இருந்தும், மதுரையில் அவர்களது சொந்தக் கிளையில் இப்புத்தகம் கிடைக்கவில்லை. புத்தகாலயத்தினரே... புத்தகத்தை வெளியிட்டால் மட்டும் போதாது... இது மக்களிடம் எப்படிப் போய்ச்சேரும் என்றும் யோசிக்கனும்!)
பிரமாதம். இனி உங்களை சரவணன் ஸார்ன்னுதான் கூப்பிடணும் :)
Deleteஎனக்கு மெயில் செய்திருந்தால் இந்த மாதிரியெல்லாம் எழுதக்கூடாது, இது வாசிப்பின் பரவசத்தைப் பகிர்ந்து கொள்ளும் தளம், விமரிசன தளம் அல்ல என்று சொல்லியிருப்பேன், நீங்கள் மெயில் செய்யவில்லை.
இருந்தாலும் நன்றி.
ஆனால், "புத்தகத்தின் சிறப்புகளை நட்பாஸ் அழகாக உதாரணங்களோடு விளக்கிவிட்டார்," என்று ஒற்றை வரியில் நீங்கள் கடந்து சென்று விட்டதுதான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது, நிச்சயம் நான் எழுதியதிலும் நிறைய குறைகள் சொல்ல முடியும் என்பதை நான் அறிவேன், அதுவும் உங்களுக்கு விமரிசனங்கள் இருந்திருக்கும். அவற்றைச் சொல்லவில்லை, இருந்தாலும் பரவாயில்லை.
உங்கள் credentialsஐ நீங்கள் நிருபித்து விட்டீர்கள், உங்களுக்கு விமரிசிக்கும் உரிமையுண்டு, அதை நியாயப்படுத்தும் ஆற்றலும் உண்டு, நன்றி.
ஆளுமை சார்த்த கருத்து வேறுபாடுகளில் நாம் ஒருவரையொருவர் எதிர்கொண்டாலும், அணுகலில் நமக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும், தனி மனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி சிறிதளவாவது உரையாட இயன்றிருக்கிறது.
மிக்க நன்றி.
அன்புடன்,
நட்பாஸ்
அன்புள்ள நட்பாஸ்,
Delete/// சரவணன் ஸார்ன்னுதான் கூப்பிடணும் :) ////
இது எதுக்கு :))
/// இந்த மாதிரியெல்லாம் எழுதக்கூடாது, ///
ஐயோ, உங்க தளத்துல கமெண்ட் போடறதுக்கு சில எழுத்தாளர்கள் இலக்கிய முகாமில் கலந்துகொள்ள விதிக்கும் கண்டிஷன்களை விட நிறைய நிபந்தனைகள் இருக்கும் போலிருக்கே!
/// இது வாசிப்பின் பரவசத்தைப் பகிர்ந்து கொள்ளும் தளம், ///
ஸாரி... பரவச உன்மத்த நிலையெல்லாம் எனக்கு வரலை :)
நீங்க பரவசங்களைப் பகிர்ந்துக்கங்க... நாங்க (வாசகர்கள்) எங்களுக்குத் தோன்றுகிற சாதக பாதகங்களைக் குறிப்பிடுகிறோம் என்பதே எனக்குத் தெரிந்தவரை சரியான நிலைபாடாக இருக்கும். புத்தகத்தைப் படிக்க முயற்சியே செய்யாமல் வெறுமனே மதிப்புரையை மட்டும் சிலாகித்து, பரவச ஆனந்த அனுபவ சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் மறுமொழிகளால் என்ன பயன்?!
(இந்தப் 'பரவசம்' என்பது பற்றி ஒரு சந்தேகம்! சில புத்தகங்கள் 'டிஸ்டர்பிங்' ஆக இருக்கும். [பாட்ரீஷியா ஹைஸ்மித் கதைகளைப் படித்துப் பாருங்கள்... அல்லது வறட்சி, தலித்துகளின் நிலை பற்றி பி.சாய்நாத் எழுதும் புத்தகம் என்று வைத்துக்கொள்ளுங்கள்] அவற்றையும் பரவசக் கணக்கில் சேர்க்க முடியுமா?)
நன்றி,
சரவணன்
:)
Deleteஇவ்வளவு படிச்சிருக்கீங்க, இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க, ஆனாலும் பரவசம் -> பக்தி -> ஆசான் -> சத்சங்கம்ன்னு லைட்டா ஒரு ஹின்ட் கிடைச்சதும் மனசு ஜெயமோகனிடம் போயிட்டுதே, இவ்வளவுதானா நாம?
ஜெயமோகன் மைய இணைய இலக்கியம்னு சொன்னா தப்பே இல்லை, இல்லையா - வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எல்லாருக்கும் எப்பவும் இலக்கியம் பற்றி பேசும்போதே எழுந்தருளி பாயிண்ட் எடுத்துக் கொடுத்து அருள் பாலிக்கும் பரம்பொருள் அவரே!
என்னை விமரிசனம் செய்திருந்தால் நியாயம், புத்தகத்தைப் பதிப்பித்ததில் சில விமரிசனங்கள் செய்தீர்கள், அதுல கொஞ்சம் நியாயம் இருக்கு, ஆனா தேவையே இல்லாம ஜெயமோகனை இங்கே இழுத்தீங்க பாத்தீங்களா, இதைப் பார்த்தால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்.
ஆனா எனக்குப் பிடிக்கல. இந்த மாதிரி ஒருத்தரை ஒருத்தர் ஸ்மைலி போட்டும் போடாமலும் aggressiveஆ insult செய்து கொள்வது அசிங்கமா மட்டுமில்லை, நேர விரயமாகவும் இருக்கு.
அதனால, உங்களுக்கு இருக்கும் ஜெயமோகன் fixationஐ சரி பண்ணிக்கிட்டு வாங்க, பிறகு பேசுவோம். அதுவரைக்கும் எதைப் பேசினாலும் மறுபடியும் மறுபடியும் ஒரே விஷயத்துக்குதான் வந்து நிப்போம். ஆனா அந்த விஷயம் எங்களுக்கு முக்கியமில்லை.
ஹெட்டர் பார்த்தீர்களா? அங்கு இருக்கும் பலரில் அவரும் ஒருவர் - கணிசமான அளவில் இருக்கும் அவரது வாசகர்களால் இன்று மிகவும் முக்கியமானவராக இருக்கிறார், ஆனால் அங்கிருக்கும் பலரும் ஒரு இன்று ஒரு சிலருக்கேனும் முக்கியமானவர்களாக இருந்தவர்கள், இனியும் இருக்கக் கூடியவர்கள். அவர்கள் அனைவரையும் பேச விரும்புகிறோம்.
ஜெயமோகனை idealise செய்பவர்கள் தங்களுக்கும் ஜெயமோகனுக்கும் அநீதி இழைத்துக் கொள்கிறார்கள் என்று வேண்டுமானாலும் சொல்லலாம், சமநிலை தவறுவதால் - ஆனால் ஜெயமோகனை demonise செய்பவர்கள் ஒட்டுமொத்த இலக்கியத்துக்கே அநீதி செய்கிறார்கள் - பிற எழுத்தாளர்கள் ஒரு பொருட்டே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதால்.
நன்றிங்க. இப்படியே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டிருந்தா ஜாலியா இருக்கும். ஆனா பாருங்க வெறுப்பு ஒரு மனநிலை, செயல் அல்ல. அது உலர்ந்து போனதும்தான் தெரியும், அங்கு ஒரு புல் பூண்டுகூட முளைத்திருக்கவில்லை என்று.
உரையாடலுக்கு நன்றி. ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்குங்க, aggressiveஆ பேசும்போது நாம எவ்வளவுதான் அமைதியா இருக்க விரும்பினாலும் கொஞ்சம் திருப்பிக் கொடுத்திடறோம். அகந்தை. தவிர்க்க முடியலை, மன்னிச்சுக்குங்க.
நன்றி.
ஸாரி பாஸ், நீங்க தப்பா புரிச்சுக்கிட்டிங்க... பரவசம் என்னும்போது ஜெயை நான் கனவிலும் நினைக்கவில்லை என்பதே உண்மை. கவனித்தீர்களா-- 'உன்மத்தம்' என்பது உண்மையில் எழுத்தாளர் சாரு அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அதை என் பதிலில் உபயோகித்திருக்கிறேன். அவர் கூடத் தன் நாவல் ஒன்றை வெளியிடும் முன் வீட்டில் தன் வாசகர்களை அழைத்து யந்திரம் வைத்து பூஜை நடத்தினார்.. ஐயப்ப பஜனைக் கூட்டங்களும் நடத்தி இணையத்தில் அழைப்பு விடுத்தார். ஆக நான் சாருவைக் குறிப்பிடுவதாகக் கூட யாராவது சொல்ல முடியம்! அப்படி இருக்க, ஏன் நீங்களாகக் கற்பனை செய்துகொள்கிறீர்கள்? சொல்லப்போனால் ஜெ தன்னளவில் சடங்குகள், வழிபாடுகள் செய்யாதவர், சத்சங்கம் என்றால் காத தூரம் ஓடக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
Deleteகண்டிஷன்ஸ் பத்தி எழுதும்போது ஜெ போடும் கண்டிஷன்களை (மறைமுகமாக) குறிப்பிட்டிருக்கிறேன் என்பது உண்மைதான் என்றாலும், அதை (அவர் நிபந்தனைகள் விதிப்பதை) நான் தவறு என்று சொல்லவில்லையே? சும்மா ஜாலிக்கு போகிற போக்கில் (அதுவும் குறை கூறாமல்) குறிப்பிட்டதற்கு இவ்வளவு நீநீ.....ளள உபன்யாசமா? அவ்வ்வ்வ்வ.....ரிலாக்ஸ் பாஸ் :) (ஸ்மைலி பிடிக்காட்டி அழிச்சுடறேன்!)
சரவணன்
இல்லீங்க, ஸ்மைலியை அழிக்க வேண்டாம்.
Deleteநமக்குள் ஸ்மைலி மட்டுமாவது மிஞ்சி இருக்கட்டும்...
:))
நன்றி.
;-)))))))))
Deleteசிரிப்பான்களுக்கு நன்றி :))
Delete