"ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் என்றுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை"
கண்ணதாசனின் பாடல் வரிகளும், ஒரு பெண் ஒரே சமயத்தில் இரு ஆண்களை விரும்பும் கதையின் புதுமை குறுகுறுப்புமே எப்போதோ படித்திருந்த தி. ஜானகிராமனின் "மலர்மஞ்சம்" நாவலின் அடியோட்டமாக மனதில் பதிந்திருந்தது. கூடவே, இனிப்பை உண்டபின்னும் நாவில் தங்கிவிட்ட தித்திப்பின் சுவையை எப்போதும் தரும் தி. ஜாவின் எழுத்தும். மேலதிக விஷயங்களும் பரிமாணங்களும் மறந்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை படிக்கக் கிடைத்தபோது வேறொரு புதிய நாவலையே படிக்கும் எண்ணம்.
மலர்மஞ்சம் நாவலின் கதையைச் சுருக்கமாக இப்படி கூறலாம். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை மணம் செய்துகொண்டு மூன்று மனைவியரையும் இழந்த ராமையா நான்காம் முறையாக திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கும் அவரது நான்காம் மனைவி அகிலத்துக்கும் பிறக்கிறாள் பாலாம்பாள் - பாலி. குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே இறப்பைத் தழுவுகிறாள் அகிலம். தான் சாகும் தருவாயில், சொர்ணக்காவின் மகன் தங்கராஜூக்குத்தான் குழந்தையை மணமுடிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை ராமையாவிடம் பெற்றுக் கொண்டு கண்மூடுகிறாள் அகிலம்.
தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் முற்றிலும் கனிந்த மனிதரான ராமையா எதிர்கொள்ளும் சவால்கள்தான் கதை. அதிலும் அவருக்குப் மிகப்பெரிய சவாலாக இருப்பது பாலி வளர்ந்தபின் தஞ்சை வக்கீல் நாகேச்வரய்யர் பேரன் ராஜா மீது அவளுக்கு ஏற்படும் ஈர்ப்புதான் - உண்மையில், ராஜா மீதும் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெண் இரு ஆண்களை விரும்புவது புதுமையாக இருந்தாலும், இரு ஆண்களில் ஒருவர் இன்னொருவருக்கு வழிவிட்டு மரபு மீறாத முடிவைக் கொண்டிருக்கும் சம்பிரதாய முக்கோணக் காதல் கதை.
ஆனால் அவ்வளவோடு நின்று விடுவதில்லை தி.ஜாவின் எழுத்து. இக்கதைக் கருவைத் தாண்டி அவர் படைக்கும் இணைப் பாத்திரங்களும், கதைக் கருவில் இணைகோடுகளாய் வளரும் அவர்களுடைய வாழ்க்கைக் கதைகளும், தி.ஜா.வின் தஞ்சை மண்ணுக்கே உரிய தனித்துவமிக்க மொழி நடையும் மலர்மஞ்சம் வாசிப்பை இம்முறை மறக்க முடியாத அனுபவமாக்கிவிட்டது.

இதில் முக்கியமாக ராமையாவின் தோழர் கோணவாய் நாயக்கரைச் சொல்ல வேண்டும் (ராஜங்காடு என்னும் குக்கிராமத்தில் வாழ நேரிட்டாலும் தன் வாழ்வைத் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் மனத்திட்பம் வாய்க்கப்பெற்ற தனப்பாக்கியமும் ஒரு குறிப்பிடத்தக்கப் படைப்பு). நாவலில் பாதிக்கு மேல்தான் பிரவேசிக்கும் கோணவாய் நாயக்கர் பாத்திரப்படைப்பு அவரே அடிக்கடி சொல்லுவதுபோல், "ட்டேயப்பா...." என்று பிரமிக்க வைக்கிறது. இந்த நாவலே ஒரு கட்டத்தில் ராமையா-பாலி இருவரின் கதையா அல்லது கோணவாய் நாயக்கர் கதையா என்றும்கூட தோன்றுமளவுக்கு அற்புதமான பாத்திரப்படைப்பு.
தங்கராஜன், பாலியின் நாட்டிய ஆசான் பெரியசாமி, தோழி செல்லம், ராஜங்காட்டு மனிதர்களான, ஜகது, சுப்பிரமணியன், வடிவேலு என்று ஒவ்வொருவருமே தனித்தன்மை கொண்ட பாத்திரப் படைப்புகள். நடனக் கலைஞராக இருக்கும் பாலி, பாலிக்கும் அவரது குரு பெரியசாமிக்கும் இடையேயான கலைஞர்கள் - சமூக நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட உரையாடல் நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
தி. ஜாவின் எழுத்து முழுக்க முழுக்கவே தஞ்சை மண்ணைத் தன் களமாகக் கொண்டிருந்தாலும் தஞ்சையின் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றிய பதிவுகள் அவற்றில் அநேகமாக இல்லவே இல்லை என்று கூறிவிடலாம். இதில் மலர்மஞ்சம் ஒரு விதிவிலக்கு.
தஞ்சை பெரிய கோவில், முக்கியமாக அதன் விமானம் ஒரு பிரதான பாத்திரமாகவே கதையில் இடம்பெறுகிறது. நாவலின் இரு உச்சகட்டங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயிலிலேயே நிகழ்கிறது. பாலியும் தங்கராஜனும் தங்கள் வாழ்வின் அதிமுக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ராஜராஜனின் பெருவுடையார் கோயில் விமானத்தின் தோற்றமே காரணமாகிறது. இருவருக்கும் இருவிதமாக அதன் இருப்பு பொருள்படுகிறது. ஆனால் இருவருமே ஒரே முடிவை - தங்கள் காதலைத் தியாகம் செய்யும் முடிவை - எடுக்கத் தூண்டுவது ஒரு அழகிய முரண். இப்பகுதி, தமிழ் நாவல்கள் தொட்ட மிக அழகிய உச்சங்களில் ஒன்று என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம்.
இதற்கு எந்த விதத்திலும் குறையாதது அனைத்தையும் துறந்து காசிக்கு வந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் கோணவாய் நாயக்கரின் சித்திரம். இம்முறை வாசித்ததில் மற்ற அனைவரையும் பின்னுக்குத் தள்ளி கோணவாய் நாயக்கரே என் மனதில் விசுவரூபம் எடுத்து நிற்கிறார்.
நாவலின் குறைகள் என்று சிலவற்றைச் சொல்லலாம். பாலியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு ஆண் பாத்திரம் ராஜாவின் பாத்திரப்படைப்பு முழுமை பெறாமல் உள்ளது. பாலி - செல்லம் உரையாடல்கள் மிகச் சுவாரசியமாக இருந்தாலும்,அவர்களுடைய வயதைக் கருத்தில் கொள்ளும்போது வயதுக்கு மீறிய பேச்சாகவே தோன்றுகிறது - இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து இண்டர் படிக்கும் மாணவிகள். மேலும், இந்த நாவலில் புறவுலகமே இல்லை என்றும் சொல்லலாம். எந்தக் காலகட்டத்தில் நடக்கும் நாவல் என்பதை அறியவே முடிவதில்லை. தி. ஜாவின் அனைத்து நாவல்களுக்கும் இது ஓரளவு பொருந்தும்.
எது எப்படியிருந்தாலும், கடைசியில், நாவலை வாசித்து முடிக்கும்போது ஒரு நடை தஞ்சாவூருக்குப் போய் பெருவுடையார் கோயிலில், கால இடப் பிரக்ஞையற்று விமானத்தைப்[ பார்த்தபடி அமர்ந்திருக்க வேண்டும் என்ற ஆசை பிடித்து உந்துகிறது.

மலர் மஞ்சம்
- தி. ஜானகிராமன்
வகை : புதினங்கள்
ஐந்திணைப் பதிப்பகம்
விலை Rs. 270.00
இணையத்தில் வாங்க : கிழக்கு, உடுமலை, பனுவல்

No comments:
Post a Comment