A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

12 Jan 2013

The Citadel- A.J. Cronin


THE CITADEL
A. J. CRONIN
NOVEL

Photo Courtesy/To Buy: Amazon



க்ரோனின், “Two gentlemen of verona” என்ற சிறுகதை மூலம்தான் எனக்கு அறிமுகம் ஆனார். இளநிலை வகுப்பில் ஆங்கில துணைப்பாடமாக ஒரு சிறுகதை தொகுப்பு இருந்தது. அதில் சோமர்செட் மாம் (Somerset Maugham), ஆர்.கே. நாராயண் (Narayan), மாப்பசான் (Guy de Maupassant) முதலானவர்கள் எழுதிய சிறுகதைகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. மேற்சொன்ன இந்த  ரொம்ப அழகான சிறுகதையும் அதில் இருந்தது. இரு பதின்மவயது பாலகர்கள் பற்றியது. அதை படித்து முடிக்கும்போது ஒருவிதமான துக்கம் நெஞ்சை அடைக்கும். இவர் எழுதிய புத்தகம் ஏதாவது பிற்காலத்தில் வாசிக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். இந்த முறை வாடகை நூலகம் சென்று தேடும்போது, இந்த புத்தகம் கண்ணில் படவே எடுத்து வந்து விட்டேன்.


11 Jan 2013

மிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்



கன்னட- ஆங்கில சிந்தனையாளர் / எழுத்தாளர் டி.ஆர் நாகராஜ் “தகிக்கும் பாதங்கள்” (flaming feet) எனும் மிக முக்கியமான நூல் ஒன்றை எழுதியுள்ளார். தலித் இயக்கங்களை, தலித் செயல்பாடுகளை சார்புகளற்று மதிப்பிடும் மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு அது. அந்தத் தொகுப்பின் முதல் கட்டுரையை நான் இதுவரை இருபது முறைக்கு மேல் வாசித்திருப்பேன். அது ஒரு கிளாசிக். அம்பேத்கரும் காந்தியும் ஒரே பிரச்சனையை எவ்வாறு மாற்று கோணங்களில் அணுகி தத்தமது வழியில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல்கள் மூலம் தீர்வை நோக்கி முன்நகர்ந்தனர் என்பதை அழகாகச் சொல்லும் கட்டுரை. அதில் காந்தியையும் அம்பேத்கரையும் குறிப்பிடும்போது நாகராஜ் பயன்படுத்தும் சொற்கள், “creatively impatient”. மில்லி போலக் காந்தியைப் பற்றி எழுதிய இந்த சின்னஞ்சிறிய நினைவு குறிப்பு நூலை வாசிக்கும்போது இந்தப் பதம்தான் என் மனதில் நிழலாடியது. இவர்களின் படைப்பூக்கமும் பொறுமையின்மையும் வரலாற்றுடன் மோதி இவர்களைக் கலைத்து மீண்டும் கட்டி எழுப்புகிறது.    

மில்லி கிரகாம் போலக் 


10 Jan 2013

அ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.

தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களை எழுதச் சொல்லி ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என அ.முத்துலிங்கம் செய்த முயற்சியின் பயன் இத்தொகுப்பு. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் அவர்களது பரிந்துரைகளை கேட்டு வாங்கி்யதையே ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார். எழுத்தாளர்களைக் கவர்ந்த புத்தகம் எனக்கேட்டாதாலோ என்னவோ சமகாலப் படைப்புகளை அதிகம் பரிந்துரைத்துள்ளனர். அவர்களை பாதித்த புத்தகம் எனக் கேட்டிருந்தால் வேறு ஒரு லிஸ்ட் கிடைத்திருக்கலாம்.
அசோகமித்திரன் (சா.கந்தசாமி - மாயவலி), இந்திரா பார்த்தசாரதி (யோஸ் சரகமோ - இரட்டை), இரா.முருகன் ( மாதவன் குட்டி- ஓர்ம்மகளூடெ விருந்து), ஜெயமோகன் (எம்.கோபாலகிருஷ்ணன் - மணல்கடிகை), பொ.கருணாமூர்த்தி (My Days - R.K.Narayanan), மனுஷ்யபுத்திரன் (ஜெயமோகன் - ஏழாம் உலகம்), அ.முத்துலிங்கம் (Teacher Man - Franck McCourt), நாஞ்சில் நாடன் (ஆழி சூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்), பாவண்ணன் (காலபைரவன் - புலிப்பானி ஜோதிடர்), எஸ்.ராமகிருஷ்ணன் (எண்பெருங்குன்றம் - வேதாசலம்), வெங்கட் சாமிநாதன் (கூகை - சோ.தருமன்), வாஸந்தி (Embers - Sandor Marai) எனப் பல எழுத்தாளர்களது கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.
என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் - ஷோபாசக்தி எழுதிய `ஆடு, புலி, புல்லுக்கட்டு` (ஜெனே - Les Bonnes) மற்றும் `படிப்பின் பயணம்` எனும் தலைப்பில் சுஜாதா எழுதிய கட்டுரை, `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` ஜெயமோகனின் கட்டுரை.


9 Jan 2013

இன்றே! இங்கே! இப்பொழுதே! - சிபி.கே.சாலமன்



இன்றே! இங்கே! இப்பொழுதே!
ஆசிரியர்: சிபி.கே.சாலமன்
பக்கங்கள்: 159
விலை: ரூ.60
கிழக்கு பதிப்பகம்

வண்டியில் வேகமா போறோம். திடீர்னு ஒரு போக்குவரத்து சிக்னல். அதில் மஞ்சளைப் பார்த்தவுடன் வேகத்தைக் குறைக்கணும்றது விதி. ஆனா அப்போதான் பலரும் வேகத்தை கூட்டி, வண்டியை முடுக்கி சர்ர்ர்ர்ன்னு சிக்னலை கடந்து போயிடுவாங்க. இப்படி யோசிக்காம போய், அந்தப் பக்கம் இருக்கும் ‘மாமா’விடம் மாட்டியவர்களும் நிறைய உண்டு. ஆனா, வேறு சிலரும் இருக்காங்க. ரொம்ப உஷாரா முதலில் மாமா எங்கேயாவது இருக்காரா? மாட்டிப்போமான்னு பாத்துட்டு, அது மஞ்சளோ, சிகப்போ வண்டியை ஓட்டிக்கிட்டு போயிட்டேயிருப்பாங்க. ஏகப்பட்ட பேரால் எடுக்கப்படும் இந்த முடிவுகள் ஒருசில நொடிகளில் எடுக்கப்பட வேண்டியவை. போக்குவரத்து விதிக்கு மதிப்பு கொடுத்து வண்டியை நிறுத்துறவங்க, பின்னால் வர்றவங்ககிட்டே திட்டு வாங்குவதும் உண்டு. 

8 Jan 2013

எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி

முதலில் இரண்டு கேள்விகள்: 

1) எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய குறையொன்றுமில்லை பாடலை இயற்றியவர் யார்? “ராஜாஜி?” யூ ஆர் ரைட். ஆனால் கேள்வி அது இல்லை. தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தவர் யார்?

2) எம்.எஸ். என்றே பிரபலமாக அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் இருக்கு “எம்.எஸ்” என்பதன் விரிவாக்கம் என்ன?

பதில்களைக் கடைசியில் பார்க்கலாம்.

ம்.எஸ். என்ற மாபெரும் ஆளுமையின் இசைப் பயணம் ப்ளஸ் அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டையும் பேசும் ஒரு சுருக்கமான, சுவாரசியமான புத்தகம் வீயெஸ்வி எழுதியுள்ள “எம்.எஸ். வாழ்வே சங்கீதம்”. எம்.எஸ்’சின் அதி தீவிர அபிமானிகளை டார்கெட்டாக வைத்து வெளி வந்திருக்கும் புத்தகம். அழகான கதை நடையில் சம்பவங்கள் கோர்க்கப்பட்டதொரு 141 பக்கப் புத்தகம்.



7 Jan 2013

அடியாள் – ஜோதிநரசிம்மன்



2012ம் வருடம் இறுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. கைவசம் இருந்த எல்லாப் புனைவுகளையும் வாசித்து முடித்திருந்தேன். அந்த சமயம் நண்பர் ஒருவர் பரிசளித்த அடியாள் புத்தகம் கையில் கிடைத்தது. விறுவிறுவென ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். உண்மை பல நேரங்களில் புனைவை விட சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும். ஒரு புனைவு என்னுள் ஏற்படுத்திய சோகம், கோபம், பயம் இன்னபிற உணர்வுகள் அத்துனையையும் உணர்ந்தேன் இதன் வாசிப்பின் முடிவில்.

ஜோதி நரசிம்மன், ஐடிஐ முடித்தும் பல்வேறு காரணங்களாலும், வன்முறை மீதிருந்த காதலாலும் அரசியல் அடியாள் ஆனவர். இவர் சார்ந்த அடியாள் கூட்டத்தில் பத்து பதினைந்து பேர், தலைவனாக எழில். இவர் சார்ந்துள்ள கட்சி தொகுதியில் ஜெயித்த போதும், எதிரணி மேலிடத்தில் ஆட்சி அமைக்கிறது. இதனால் தொகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் தேடும் குற்றவாளி ஆகிறார். குழுவினரோடு ஓடி ஒளிந்து கொள்கிறார். ரவுடிகள் பிரச்சினையில் சிக்கும்போது அவர்களின் பாதுகாப்பு என்ன, அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற எப்படி பணம் கிடைக்கிறது போன்ற விஷயங்களை இவர் எவ்வாறு கையாண்டார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

என்னதான் ஊரை மிரட்டும் அடியாளாக இருந்தாலும், போலீசில் மாட்டினால் அடிப்பார்களோ, சித்திரவதை செய்வார்களோ, என்றெல்லாம் ஒவ்வொரு சாமனியனுக்கும் வரும் கேள்விகளும் பயமும் இவருக்குள்ளும் வருகிறது. புத்தகத்தை வாசிக்கும் தருணத்தில் அந்த பயம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. சரண்டர் ஆக வேண்டிய கட்டாயத்தில் “அடிக்கக் கூடாதுன்னு சொல்லுங்க”  என்று சொல்லி சரண்டர் ஆவதும், உடனிருப்பவர் அடிபடும்போது இவர் மிரள்வதும் நம்மை மிரட்சி அடையச் செய்கின்றன. எந்த சமயத்திலும், யார் சொல்லினும் சட்டம் தன் கடமையை “சரிவர” செய்கிறது.

சிறைக்குள் இருந்த மிக முக்கிய குற்றவாளிகள் சிலரை சந்தித்த இவர் அந்த அனுபவங்களையும், சிறைச்சாலை எனப்படும் வேறொரு உலகத்தைப் பற்றி உலகறியா பல உண்மைகளையும் எழுதியிருக்கிறார். சிறைக்குள் இருப்பவர்களை யார் பார்க்கலாம், அந்த சந்திப்பு எப்படி இருக்கும், பரோல் என்பது என்ன, சிறைக்குள் கிடைக்கும் உணவு எப்படி, கைதிகளின் தினசரி வேலை என்ன என பல ஆச்சர்யமூட்டும் இல்லை, உண்மையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு தெளிவடையும் இவர், தான் போகவேண்டிய பாதை இதுவல்ல என்று புரிந்துகொண்டு ஒரு போராளியாகிறார். இரண்டாவது முறையாக சிறை செல்கிறார். இம்முறை இலங்கைப் போராட்டத்திற்காக அரசியல் கைதியாக. இரண்டிற்குமான வித்தியாசத்தை இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் ஜோதி நரசிம்மன். புதிய பாதையை தேர்ந்தெடுத்த பின்னர் தனக்கு மிகவும் விருப்பப்பட்ட பத்திரிகைத் துறையில் வேலை செய்ய முடிவெடுக்கிறார்.

ஒருவன் சூழ்நிலை வசத்தால் கைது செய்யப்பட்டு சிறை செல்ல நேர்ந்தால் அவனை சமூகம் எப்படிப் பார்க்கிறது, வெளியில் வந்த பிறகு அவன் நிலைமை என்ன, சமூகம் அவனை எப்படி அணுகுகிறது, அவமானப் படுத்துகிறது போன்ற கேள்விகளுக்கு பதிலாகிறது இந்த புத்தகம். கைதிகளும் மனிதர்கள்தாம் அவர்களுக்கும் மனம் திருந்தி வாழ ஒரு அவகாசம் உண்டு. இருந்தாலும் சமூகம் அதை அனுமதிப்பதில்லை எனும் கசப்பூட்டும் உண்மையுடன், கைதிகளையும் சமூகம் மனிதர்களாக காண வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த புத்தகத்தை முடித்திருக்கிறார்.

கைதிகளை சிறையில் காண என்ன செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவரின் உரிமைகள் என்ன, முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது என்ன தகவல்களைக் கொண்டிருக்கும் எனும் தகவல்களைத் தரும் பின்னிணைப்புகளை நிச்சயம் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசிமாகிறது.

“அடியாள் கூட்டம், சிறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகள். இவர்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாக சிதறப் போகிறது. எச்சரிக்கை!” இந்த வாசகங்களைக் கொண்டு ஆரம்பிக்கும் புத்தகம் ஒவ்வொரு அத்தியாயங்களைக் கடக்கும்போதும் ஏதோ ஒரு திகிலை மனதில் பரப்பிச் செல்கிறது. “ஒருவேளை கைது செய்யப்பட்டால்” இப்படி நாம் சிந்திக்காத, சிந்திக்க விரும்பாத கேள்விகளின் பதிலாகவும், கேள்விகளுக்கு அப்பால் உள்ள நிதர்சனத்தையும் உணர்த்தும் ஒரு புத்தகம்.

ஜோதி நரசிம்மன் | அபுனைவு | கிழக்கு பதிப்பகம் | விலை. 70 | பக்கங்கள் 170
இணையத்தில் வாங்க: கிழக்கு

6 Jan 2013

அதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்

சிறப்பு  பதிவர் - அஜய்

டெபோரா ஐஸன்பெர்க் சிறுகதைகளின் நான்காம் தொகுப்பு "அதிநாயகர்களின் அந்திப்பொழுது" (Twilight of the Superheroes). இதில் ஏழு கதைகள் இருக்கின்றன. இவரது சிறுகதைகள் அனைத்தும் ஒரே தொகுப்பாகவும் கிடைக்கின்றன. டெபோரா ஐஸன்பெர்க்கின் எழுத்தை வாசிப்பதற்குமுன் இவரது கதை சொல்லும் முறை பற்றிய சில விஷயங்களை பார்த்து விடலாம். பொதுவாக இவரது கதைகளுக்கு கச்சிதமான முடிவு இருப்பதில்லை. ஏ என்ற இடத்தில் ஆரம்பித்து பி, சி என்று ஒழுங்கான அமைப்பில் கதை சொல்லப்படுவதில்லை. பல இழைகள் வாசகருக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

5 Jan 2013

சிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா

சிறப்புப் பதிவர்: மாதவ சோமன்

”சிறுகதை எழுதுவது எப்படி?” - இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களில் எத்துணை பேர் “சிறுகதை எழுதுவது எப்படி” என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே ஏதேனும் கிடைக்கும் என்று இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களோ நானறியேன்.  அப்படி யாரேனும் தடம்தவறி இதை வாசித்துக் கொண்டிருந்தால் முதலிலேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன்.

நானும் ஒரு காலத்தில் யாரேனும் எழுதும் ஏதேனும் குறிப்புகளைக் கொண்டு சிறுகதை எழுதிவிட முடியும் என்று நினைத்திருந்தவன்தான். ஸ்டெய்ட்டா ஹீரோ என்கிற கனவெல்லாம் இல்லை நமக்கு. முதலில் சிறுகதை, பிறகு குறுநாவல், அதற்கு அப்புறம் நாவல், பின்னர் மெகாசீரியலுக்கு வசனம், வாய்ப்பு அமைந்தால் சினிமாவுக்கு வசனம், கூடவே கதையும், அதிஷ்டம் கதைவைத் தட்ட டைரக்‌ஷன், பிறகு டைரக்டர் கம் ஹீரோ வேடம், அரசியல் நுழைவு, எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் இப்படிப் படிப்படியாக வளர்ச்சி காணவேண்டும் என்ற கனவில் இருந்தவன் நான். அப்படிப்பட்ட கனவுகாண வல்ல வயதில் நம் கையில் சுஜாதா எழுதிய இந்தப் புத்தகம் அகப்பட்டது.



4 Jan 2013

1984 - George Orwell

1984
George Orwell
Novel
Photo Courtesy/To Buy :Flipkart
 ஆம்னிபஸில் குழும விவாதத்தின் போது அவர்கள் படித்த புத்தகங்களில் மிகவும் விரும்பியவை குறித்து ஒரு பட்டியல் வந்தது. அதில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வேல் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இந்த தடவை வாடகை நூலகம் சென்று நிரம்ப நேரம் தேடிக்கொண்டிருந்தபோது, ஆர்வெல் பற்றிய நினைவு வந்தது, ஆர்வெல் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா, என்று கேட்டபோது இந்தப் புத்தகத்தை நூலகர் எடுத்துத் தந்தார். ஆர்வெல் / புத்தகத்தை பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

இந்த கருத்துகள் தற்காலத்துக்கு எப்படி பொருந்துகிறது?  எனக்கு புரிந்த வரையில் ஒப்பிட்டு எழுத முற்படுகிறேன். நாவல் எழுதப்பட்ட காலம் 1948.  நாவலில் சொல்லப்படும் காலம்- Dystopian Future. 1950-60களில் ஏற்பட்ட உலகப் போரில் உலகம் முழுவதும் மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. ஓஷியானியா (Oceania) நாட்டின் பிடியில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து வருகிறது. நாவல் முழுவதும் லண்டனில் வசிக்கும் வின்ஸ்டன் ஸ்மித்தைச் சுற்றி சொல்லப்படுகிறது. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையில் நாவல் விவரிக்கப்படுகிறது.

நாட்டின் தலைவராக “பிக் பிரதர்” இருக்கிறார். அவர்தான் இந்நாட்டை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகிறது. இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவரை பற்றி கேள்வி கேட்பதும் தவறாக நினைப்பதும் கடும் தண்டனைக்குரிய குற்றங்கள். மக்கள் எப்போதும் “Telescreen”என்ற டிவி மற்றும் உளவு பார்க்கும் கருவியோடு வாழ்கின்றனர். இங்க்சாக் (Ingsoc) என்பது கட்சியின் பெயர். இந்த கட்சி எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மினிஸ்ட்ரி ஆப் ட்ரூத் (Truth) கீழ் செய்தி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ். மினிஸ்ட்ரி ஆப் பீஸ் (Peace) போர் (War) பற்றியும், மினிஸ்ட்ரி ஆப் லவ் (love) சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றியும் மினிஸ்ட்ரி ஆப் ப்ளேன்டி (Plenty) நாட்டின் பொருளாதாரத்தை தத்தம் கட்டுபாட்டில் வைத்திருக்கின்றன.


3 Jan 2013

பேரழிவு - ஜேரட் டயமண்ட்

நாகரிகங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் ஒன்று. ஜாரட் டயமண்டை விமரிசிப்பவர்கள் அவரை environmental determinist என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவரது Collapse என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் இதில் துளியும் நியாயமில்லை என்று சொல்வார்கள். சூழியல் - நம் புறச்சூழல் நமக்கு எத்தகைய வளர்ச்சி சாத்தியப்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது என்று அவர் சொல்கிறார் என்பது உண்மைதான். புறச்சூழல் சீரழிவு மண்ணை வாழ்வதற்கில்லாததாக ஆக்கிவிடுகிறது, அதனால் அழிந்த சமூகங்கள்  ஏராளம் என்று சொல்பவர் அவர் மட்டுமல்ல. ஆனால், ஏறத்தாழ அனைத்து சமூகங்களும் அழியக் காரணம் சூழியல் பிரச்சினைகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாததுதான் என்று அவர் சொல்வது பிற துறையினரால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. வணிகம், தனி மனித விருப்பு வெறுப்பு, அரசியல் வியூகங்கள் என்று ஏராளமான காரணங்களைப் பலரும் முன்வைக்கிறார்கள். ஆனால் டயமண்ட் சூழியல் காரணிகளையே பிரதானப்படுத்துகிறார்.

கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்ஸ் மாதிரி எனக்கு ஜாரட் டயமண்ட். மார்க்ஸுக்கு ஒரு தாஸ் காபிடல் என்றால் டயமண்டுக்கு கொலாப்ஸ். அதை நான் விடாமல் புகழ்ந்ததை கேட்டு என் சகோதரர் ஒருவர் புத்தகத்தையே வாங்கிக் கொடுத்துவிட்டார். இது என் கைக்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆனபின்னும் இன்றும் படித்துக் கொண்டிருக்கிறேன். துப்பறியும் கதைகள் போல் சுவாரசியமானவை இதில் உள்ள கதைகள். இதில் உள்ள விஷயங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அந்த வகையில் எழுதப்பட்டதுதான் யாமாகிய திகோப்பியா. விரிவான பதிவு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், டயமண்ட் எத்தனை புதிய விஷயங்களைச் சொல்கிறார் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சான்று.


2 Jan 2013

புலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்வினோ

கடந்த மாதம் நண்பருடன் சாதாரணமாகத் தொடங்கிய பேச்சு, நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வந்ததும் அமளிதுமளியானது. படிமம், உருவகம் என்பதெல்லாம் மொழிப் பற்றாக்குறையின் பக்கவிளைவுகள் என்பது அவரது ஆணித்தரமான நம்பிக்கை. நேரடியாக ஒரு கதையைச் சொல்லத் தெரியாத எழுத்தாளரை ஆதரிக்கவும் பத்து விமர்சகர்கள் பிழைக்கவும் உருவான ஜல்லியடிப்புகள் சூழ்ந்தது தமிழ் இலக்கிய வெளி என்பதும் அன்னாரின் கருத்து. சூடாக விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, 'தமிழ் சிற்றிதழ்களில் காற்புள்ளி அறைப்புள்ளியின் எண்ணிக்கையைப் போல பலவிதமான தடித்தடி வார்த்தைகள் எதற்கு? நேரடியாகச் சொல்லத் தெரியாததை மறைக்கத்தானே?' எனும் அணுகுண்டை சமாளிக்க முடியாத நிலைமையில் நான் தவிக்கும்போது என் கையிலிருந்த 'புலப்படாத நகரங்கள் (Invisible Cities)' நாவலை சொல்லச் சொல்ல கேட்காமல் பிடுங்கிகொண்டார்.

சிறிது நேரம் புரட்டிப் பார்த்தவர், 'இது என்ன மேஜிக் கதையா?' என அலட்சியம் தொனித்த குரலில் கேட்டார். எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. 'இது ஒரு கிளாசிக்', எனச் சொல்லி முடிக்கும்போது என் குரல் கம்மிவிட்டது. ஒருவேளை நான் நம்புகிறேன் என்பதற்காக புரியாத புத்தகங்களை ஆணித்தரமாக நிறுவப் பார்க்கிறேனோ எனும் குழப்பம் உருவானது. புத்தகங்களை அல்ல என்னை நிறுவத்தான் இந்த வேடமோ எனும் எண்ணமும் முளைக்காமல் இல்லை. இந்த நாவலைப் பற்றி நண்பருக்கு நான் சொன்னவை கீழே உள்ளது.
 
 

1 Jan 2013

ஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்


ஆடிஸம் (Autism) குழந்தைகளிடையே தோன்றும் ஒருவகை மனவளர்ச்சிக் குறைபாடு. இது தீவிர மனநலக் குறைபாடு அல்ல. இந்தவகைக் குழந்தைகள் தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சற்றே “கற்றல்’ விஷயத்தில் பின் தங்கியிருப்பார்கள்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆனந்த விகடனில் ”ஆயிரம் ஜன்னல்கள்” தொடர் எழுதியபோது ‘கடவுளின் குழந்தைகள்: என்றொரு அத்தியாயம் எழுதினார். அவர் அந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது தீவிர மனவளர்ச்சிக் குறைவு கொண்ட குழந்தைகள் குறித்து. ஒருவரை ஒருவரோடு ஒப்பிடுதல் என்பதே ஒரு கிரிமினல் குற்றம் என்பதான தொனியில் இருந்தது அந்த அத்தியாயம். யாரோ இன்னொருவருடன் ஒப்பிட்டு ஒரு குழந்தையை சிறப்புக் குழந்தை, கடவுளின் குழந்தை என்று ப்ராண்ட் செய்யும் நீங்கள், உங்களை விட அறிவில் சிறந்தவரோடு உங்களை ஒப்பிட்டு நீங்களும் மனநலக் குறைபாடு உள்ளவர், ஊனமுற்றவர் என்று ஒப்புக் கொள்வீர்களா என்பது ஜக்கியின் கேள்வி.


Related Posts Plugin for WordPress, Blogger...