On Writing புத்தகத்தின் முன்னுரையிலிருந்து
This is a short book because most books
about writing are filled with bullshit...Rule 17 of The Element of Style says
'Omit needless words'. I will try to do that here.
என ஒரு பத்தியில் முன்னுரையை முடித்துவிடுகிறார் கிங், ஸ்டீபன் கிங். நமக்கெல்லாம் முன்னுரையே விளக்க உரை போலப் பத்து பக்கத்துக்கும் குறைவில்லாமல் எழுதினால் தான் திருப்தி. முன்னுரையே இல்லாமல் ஒரு புத்தகம் எழுத ரொம்பவும் தைரியம் வேண்டும் - பலருக்கு அது கிடையாது.
*
சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஆம்னிபஸ் நண்பர் பாஸ்கர் மற்றும் ஸஸரிரி கிரியும் ஆம்னிபஸ்ஸில் இணைய முடியுமா எனக் கேட்டனர். துபாய்னா ஈரோட்டு பக்கம் தூத்துகுடி பக்கம் இருக்கிறது எனும் நினைப்பில் நானும் வாரத்துக்கு ஒரு பத்தகம் பற்றி எழுதிடலாம் என தெகிரியமாக ஒத்துக்கொண்டேன். வாரத்துக்கு ஒரு புத்தகம் படித்திடலாம் எனும் முன் அனுபவம் இருந்ததாலும், ஐநூறு வார்த்தைகள் எழுதினால் போதும் என நண்பர்கள் சொன்னதாலும் ஒத்துக்கொண்டேன்.
நான் ஸ்கூட்டராக இருந்தால் - நான் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பு என நினைக்கிறேன். ஸ்கூட்டரில் ஐஸ்க்ரீம் கடைக்குப் போவேன், பக்கத்து வீட்டு வித்யாவுக்கு டூ விட்டு நான் மட்டும் கமர்கட்டு கடைக்கு போவேன் என விகல்பமில்லாமல் ஏதேதோ எழுதியிருந்த ஞாபகம். இன்றும் இப்படியான உளறல்களைக் கட்டுரைகளாகவும், கதைகளாகவும் மாற்றி வருபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றாலும், எட்டு வயதில் ஸ்கூட்டராக என்னை கற்பனை செய்து பார்த்த நினைப்பு இன்றும் எனக்கு அதிக குதூகலத்தைக் கொடுக்கிறது.
ஸ்டீவன் கிங்கின் சிறுவயது எல்லாரைப் போலவே சாதாரணமாக இருந்திருக்கிறது. ஐஸ்க்ரீமுக்காக ஏங்கிய பருவங்கள், தந்தையைத் துரத்திச் சென்ற தாயைக் காணாமல் தவித்த அண்ணன் - தம்பிகள், மீசில்ஸ் வந்து தவித்த இரவுகள், என்னவென்று புரியாத வயதில் மரணம் எனும் வஸ்துவைக் கண்டு பயந்தது, முதல் கதை, முதல் கலவி, நான்காவது காதல் - என புத்தகத்தின் முதல் பகுதி முழுவதும் அவரது சிறு வயதுப் புராணங்கள். இதென்னடா வம்பாயிருக்கு - எழுதுவதற்கு டிப்ஸ் கொடுப்பாரென பார்த்தால் நீயா நானா ஸ்டைலில் சுத்தி சுத்தி கதை அடிக்கிறார்!
அனுபவங்கள் கதையாகின்றன. கதையை நிஜமாக்குகிறது கற்பனை . முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா எனும் கேள்விக்கு அடுத்து குழப்பம் தரக்கூடிய கேள்வி இதுதான். ஒரு நிஜமான அனுபவத்தை கற்பனை கலந்து கதையாக்கும்போது அது வேறொரு அனுபவமாக மாறுகிறது. இந்த லாஜிக்கை ஸ்டீவன் கிங் சொல்லாமல் சொல்கிறார். நமது பக்கத்துவீட்டு ரமேஷைப் போலவே சாதாரணமாக வளர்ந்த ஸ்டீவன் எப்படி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியவரானார்?
ஆம்னிபஸ் எனும் அனுபவம் நிகழ்ந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு வாரமும் இந்த கேள்வியைக் கேட்டுக்கொண்டேன். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல். என்னால் ஒரு புத்தகத்தைப் படித்ததும் அதைப் பற்றி எழுதிவிட முடியாது. அப்படி எழுதிய பதிவுகள் இல்லை எனப் பொய் சொல்ல மாட்டேன். ஆனாலும், அவை அப்பட்டமாக பல் இளித்துவிடும். படித்த புத்தகம் எனக்குள் இறங்க வேண்டும். புத்தக ஆசிரியர் சொல்லியதைத் தாண்டி வேறொன்றை வாசகர்களிடையே கடத்த நினைத்துதான் பல இலக்கிய புத்தகங்கள் எழுதப்படுகின்றன - On Writing போல. அப்படி நமக்குக் கடத்த நினைப்பை உடனடியாக நமக்கு விளங்கிவிடுகிறதா என்ன?
இதெல்லாம் எனக்கு உடனடியாகப் புரியவில்லை. ஆம்னிபஸ் பதிவுகள் எனக்குக் கற்றுக்கொடுத்தன. ஏற்கனவே பல முறை படித்த புத்தகங்கள், என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள்/ஆசிரியர்கள் பற்றி எழுதும்போது என்னருகே புத்தகம் இருக்க வேண்டுமென்ற அவசியம் கூட இருந்ததில்லை. எழுதப்போகும் புத்தகத்தைப் பற்றி மிகத் தெளிவான அபிப்ராயங்கள் இயல்பாக வந்து விழுந்தன. ஆனால், எழுத வேண்டுமே என அவசரகதியில் எழுதப்படும் பதிவுகள் மிக மேம்போக்காக அமைந்திருந்தன. பதிவு மேம்போக்காக அமைவதோடு மட்டுமல்லாது, அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்துப் படிக்கும் ஆசையையும் அவை விலக்கி விடுகின்றன. அதான் பதிவு எழுதியாச்சே என அடுத்த வாரத்துக்கு தயாராக ஆரம்பிக்கும் மிக மோசமான வியாதியை உண்டாக்கின.
கேள்வி - படிக்கும் பழக்கம் மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
ஸ்டீபன் - எப்படி பல விதங்களில் தனிமையை அனுபவிப்பது என கற்றுக்கொண்டேன்.
உண்மையில் புத்தகம்
வாசிப்பது என்பது மிகவும் தனிமையான அனுபவம். புது உலகினுள் நீங்கள் தனியாக பயணம் செய்யும்
விதமாக உங்களை ஒரு ஜாய் ரைடுக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுனர் தான் எழுத்தாளர். பல
சமயங்களில் எழுதுவதும் அப்படி ஒரு தனியான பயணமாக இருக்கும். ஆனால் உடன் பயணம் செய்த
ஆம்னிபஸ் நண்பர்களோடான பயணம் அப்படிப்பட்ட உணர்வைத் தரவில்லை. பற்பல விவாதங்கள், பல்
உடைப்புகள், கேலி, கிண்டல்களுக்கு நடுவே எழுதுவதும் படிப்பதும் நல்லதொரு அனுபவமாக இருந்தது.
ஒரே புத்தகத்தை வெவ்வேறு நபர்கள் எப்படி படித்திருக்கிறார்கள் என்பதை அறிவது நல்ல பயிற்சியாக
அமைந்தது.
கிங்கின் சொந்த
அனுபவங்கள் எந்தளவு படைப்புலகை பாதித்ததோ அதைவிட பன்மடங்கு அமெரிக்காவின் சமூக நடப்புகள்
பாதித்தன. அவரது பதின்ம வயதில் பார்த்திராத படங்களே இல்லை எனச் சொல்கிறார் - பேய் படங்கள்,
எதிர்காலத்தைப் பற்றிய விஞ்ஞானப் திரைப்படங்கள்,
நவீனப் படங்கள், கீழ்னிலை மனிதர்கள் பற்றிய படங்கள் என ஹாலிவுட் திரைப்படங்கள்
அவரை அதிகமாக பாதித்துள்ளன. கிங்கின் படைப்புலை கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் இவற்றின்
பாதிப்பு புரியும்.
- திரைக்கதை
போல கதைக்கு தேவையான சம்பவங்கள்.
- கத்திமுனை
போல கூர்தீட்டப்பட்ட வசனங்கள்.
- மிகத் துல்லியமாக
வரையறை செய்யப்பட்ட பாத்திரங்கள்
இவையனைத்தும்
கிங்கின் பாணி. இதனாலேயே அவரது கதைகளை அப்படியே திரைக்கதைகளாக மாற்றிவிட முடிந்திருக்கிறது.
Shawshank Redemption, Dolores Clairbone, Misery, Carrie என வாசக பரப்பில் மிகுந்த
கவனம் பெற்ற படைப்புகள் பலவும் திரைப்படங்களாக வந்துள்ளன. பதின்ம வயதில் அவரது ஆர்வங்கள்
ஹாலிவுட்டிலும் நல்ல திரைக்கதைகளைப் படிப்பதிலும் இருந்ததால் மட்டுமே இது சாத்தியம்
என்கிறார்.
இதைப் பற்றி
ஆம்னிபஸ்ஸில் பேசியபோது, நாம் ஏன் மானுடத் துயரங்களை மட்டுமே இலக்கியம் என்கிறோம் என
நண்பர்கள் விசனப்பட்டார்கள். இக்கேள்வி பெரிய விவாதமாகவும் ஆனது. P.G.Wodehouse,
Woody Allen, James Durbar என ஹாஸ்யங்களையும், பகடிகளையும் பிரதானமாக எழுதியவர்களான
தேவன், சுஜாதா போன்றோரது இவ்வகை எழுத்துகளை நாம் ஏன் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது?
மற்ற மொழிகளில் இருப்பது போல தீவிர இலக்கியத்துக்கும், அறிவியல் புனைவுகளுக்கும், பகடி
நாவல்களுக்கும் இருக்கும் ஒரே பீடம் ஏன் இங்கு இல்லை எனும் கேள்வியையும் விவாதித்தோம்.
முடிவில் சில அறிவியல் புனைவுகள், கிராஃபிக் நாவல்களை ஆம்னிபஸ்ஸில் அறிமுகப்படுத்தவேண்டும்
என முடிந்தவரை செய்து வந்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது.
`பேனாவும் கையுமாக
என் காலத்து ஆட்கள் பாரிசுக்குச் சென்று கலை உலகில் பெரிதாக சாதிக்கலாம் என கனவு கண்ட
நேரத்தில் நான் எனது மேஜையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்.`
இது ஸ்டீவன்
கிங் ஒரு நேர்காணலில் சொன்னது. இதையே சற்று விவரமாக, பெரியதாக ஒரு கதை போல இந்த புத்தகத்தில்
எழுதியுள்ளார். மிகவும் சுவாரஸ்யமானப் பகுதி. அவர் கல்லூரியில் படித்தபோது ஒரு எழுத்தாளர்
தன்னார்வக் குழுவில் இணைந்தார். அங்கு வாரயிறுதிகளில் படிக்கப்படும் கவிதைகளும், கதைகளும்
அவரை குமட்டல் எடுக்கச் செய்தன என்கிறார். ஆனால் எப்படியாவது கொஞ்சம் துட்டு சேர்த்து
பாரிசுக்குச் சென்றால் எழுத்தாளர் ஆகிவிடலாம் எனும் எண்ணம் மட்டும் மூட்டை மூட்டையாக
பைண்டு செய்து வைத்திருப்பார்களாம்.
எழுதுவது எத்தனை
கடின உழைப்பை கோரும் செயல் என்பதை இந்த ஒரு வருடம் காட்டியது. ஒரு இடத்தில் சவுகரியமாக
அமர்ந்துகொண்டு, கணிணியில் தட்டிக்கொண்டிருப்பது மட்டும் எழுதுவதல்ல. என்ன எழுதப்போகிறோம்,
அதை எப்படி ப்ரெசண்ட் செய்ய வேண்டும், கட்டுரையின் குறிக்கோள் என்ன (பிடித்த புத்தகங்களை
பற்றி மட்டுமே எழுத வேண்டும் என முன்னரே முடிவு எடுத்திருந்ததால், ஆம்னிபஸ்ஸில் காட்டமான
விமர்சனங்கள் வரவில்லை. குறிக்கோள் ரொம்ப சிம்பிள்:) என முடிவு செய்துகொண்டு படித்த
புத்தகத்திலிருந்து பிடித்த விஷயங்களை எழுதுவதற்கு குறைந்தது மூன்று மணிநேரங்கள் ஆகும்.
அதற்கு முன்னர் குறைந்தபட்சம் ஐந்து மணிநேரங்கள் செலவு செய்து புத்தகத்தைப் படித்திருக்க
வேண்டும் (பைராகி புத்தக பின்னட்டையை மட்டும் படித்து எழுதிவிடுகிறார் எனும் வதந்தியும்
இருக்கிறது என்றாலும்). கலாபூஷணமாக இருந்தாலும் இந்த எட்டு மணிநேரங்களை ஒதுக்கினால்
மட்டுமே எழுத்து சாத்தியமாகிறது. ஒரு வருடமாக
பல வாரங்கள் டிமிக்கு கொடுக்க முயற்சித்தாலும், சிறப்புப் பதிவர்களது பதிவைப் போட்டு
நாம் தப்பிக்கப் பார்த்தாலும், ரெண்டு வாரத்துக்கு ஒருமுறையேனும் ஒரு பதிவு எழுதிவிடும்
நிர்ப்பந்தம் வந்துவிடும். வாசிப்பு என்பது தனிமை பழகல் என்றால் எழுத்து என்பது கடின
உழைப்பு என்பதை தலையில் தட்டிச் சொன்னது ஆம்னிபஸ். நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிய
(அதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவை ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகம்) ஸ்டீவன் கிங்கின் உழைப்பை
என்னவென்று சொல்வது!
`நான் வழக்கமாக
நிற்கும் இடத்தில் வழக்கமான நிழல் தரையில் வழக்கமாக விழுந்து கிடந்தது. ஆனால் ஒரே ஒரு
வித்தியாசம். என் கையில் நாலு லட்சம் டாலருக்கான காசோலை. என் நாவல் Carrie விற்றிருந்தது`
கிங் மிகவும்
லக்கியான ஆளுதான். அவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் பல ஜனரஞ்சக எழுத்தாளர்களும் ஆங்கிலத்தில்
சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தனர். கடுமையான குடும்ப கஷ்டங்களுக்கு நடுவே விடாது முயற்சி
செய்து அவர் வென்றிருந்தார். வெற்றிக் களிப்பினூடாக குடிக்கும் அடிமையானார். பல நாவல்களை
எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை என்கிறார். மெல்ல அதன் பிடியில் சிக்கியவர் ஒரு
விபத்துக்குப் பிறகு ஒழுங்குக்கு வந்துவிட்டார். ஆனால் அவரது எழுத்து இயந்திரம் நிற்காமல்
ஓடிக்கொண்டிருக்கிருந்தது.
புத்தகத்தின்
பிற்பகுதி முழுவதும் ஆரம்ப எழுத்தாளர்களுக்கான
அடிப்படை யுத்திகளை மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். இவற்றை ஃபேஸ்புக், ட்விட்டர் வடிவில் தினமும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்
என்றாலும், ஆம்னிபஸ்ஸில் இன்னொரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Writing isn’t about making money, getting famous,
getting dates, getting laid, or making friends.
முடிவாக - ஆம்னிபஸ்ஸில்
எழுதி என்ன கிடைத்தது எனக் கேட்பவர்களுக்கு - ஆம்னிபஸ் நண்பர்களிடையே உலகப் புகழ் பெற்றிருக்கிறேன் - நண்பர்களாகவும்
ஆகியுள்ளேன். என்ன! getting laid நடக்கவில்லை. அதனால் என்ன? நஷ்டம் நமக்கில்லை.
எழுத்தாளர்
- ஸ்டீபன் கிங்
தலைப்பு -
On Writing
இணையத்தில்
வாங்க - On Writing
பின்குறிப்புகள்:-
கிங்கின் பொன்மொழிகள்
(http://azevedosreviews.wordpress.com/2013/05/30/stephen-kings-20-quotes-on-writing/)
1. “Any word you
have to hunt for in a thesaurus is the wrong word. There are no exceptions to
this rule.”
2. “Writing isn’t
about making money, getting famous, getting dates, getting laid, or making
friends. In the end, it’s about enriching the lives of those who will read your
work, and enriching your own life, as well. It’s about getting up, getting
well, and getting over. Getting happy, okay? Getting happy.”
3. “Write with the
door closed, rewrite with the door open.”
4. “Amateurs sit
and wait for inspiration, the rest of us just get up and go to work.”
5.
“In
many cases when a reader puts a story aside because it ‘got boring,’ the
boredom arose because the writer grew enchanted with his powers of description
and lost sight of his priority, which is to keep the ball rolling.”
6.
“Life
isn’t a support system for art. It’s the other way around.”
7. “So okay –
there you are in your room with the shade down and the door shut and the plug
pulled out of the base of the telephone. You’ve blown up your TV and committed
yourself to a thousand words a day, come hell or high water. Now comes the big
question: What are you going to write about? And the equally big answer:
Anything you damn well want. ”
8.
“When
asked, “How do you write?” I invariably answer, “One word at a time,” and the
answer is invariably dismissed. But that is all it is. It sounds too simple to
be true, but consider the Great Wall of China, if you will: one stone at a
time, man. That’s all. One stone at a time. But I’ve read you can see that
motherfucker from space without a telescope.”
9. “Running a
close second [as a writing lesson] was the realization that stopping a piece of
work just because it’s hard, either emotionally or imaginatively, is a bad
idea. Sometimes you have to go on when you don’t feel like it, and sometimes
you’re doing good work when it feels like all you’re managing is to shovel shit
from a sitting position.”
10. “You cannot
hope to sweep someone else away by the force of your writing until it has been
done to you.”
11. “if you expect
to succeed as a writer, rudeness should be the second-to-least of your
concerns. The least of all should be polite society and what it expects. If you
intend to write as truthfully as you can, your days as a member of polite
society are numbered, anyway.”
12. “Good
description is a learned skill, one of the prime reasons why you cannot succeed
unless you read a lot and write a lot. It’s not just a question of how-to, you
see; it’s also a question of how much to. Reading will help you answer how
much, and only reams of writing will help you with the how. You can learn only
by doing.”
13.
“Let’s
get one thing clear right now, shall we? There is no Idea Dump, no Story
Central, no Island of the Buried Bestsellers; good story ideas seem to come
quite literally from nowhere, sailing at you right out of the empty sky: two
previously unrelated ideas come together and make something new under the sun.
Your job isn’t to find these ideas but to recognize them when they show up.”
14.
“If
you want to be a writer, you must do two things above all others: read a lot
and write a lot. There’s no way around these two things that I’m aware of, no
shortcut.”
15. “I’m a slow
reader, but I usually get through seventy or eighty books a year, most fiction.
I don’t read in order to study the craft; I read because I like to read”
16. “if you’re just
starting out as a writer, you could do worse than strip your television’s
electric plug-wire, wrap a spike around it, and then stick it back into the
wall. See what blows, and how far. Just an idea.”
17.
“kill
your darlings, kill your darlings, even when it breaks your egocentric little
scribbler’s heart, kill your darlings”
18.
“I
have spent a good many years since–too many, I think–being ashamed about what I
write. I think I was forty before I realized that almost every writer of
fiction or poetry who has ever published a line has been accused by someone of
wasting his or her God-given talent. If you write (or paint or dance or sculpt or
sing, I suppose), someone will try to make you feel lousy about it, that’s
all.”
19. “I am always
chilled and astonished by the would-be writers who ask me for advice and admit,
quite blithely, that they “don’t have time to read.” This is like a guy starting
up Mount Everest saying that he didn’t have time to buy any rope or pitons.”
20. “The most
important things to remember about back story are that (a) everyone has a
history and (b) most of it isn’t very interesting.”
No comments:
Post a Comment