A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

1 Mar 2013

Complete Prose - Woody Allen

சிறப்புப் பதிவர்: பேயோன்

அமெரிக்கத் திரைப்பட இயக்குநராகப் புகழ்பெற்ற நகைச்சுவையரசர் வுடி ஆலனின் Complete Prose பற்றிப் பூரித்து எழுத நிறைய விஷயம் இருக்கிறது. கட்டுரைகள், சிறுகதைகள், குட்டிக் கதைகள், சில நாடகங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்தப் புத்தகம். பல படைப்புகள் நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்தவை.

வுடி திரையுலகில் கால்பதிக்கு முன்பு நகைச்சுவை மேடைப் பேச்சாளராக இருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் (தெரிந்திருக்காது என்ற ஊகத்தில்தான் இதைச் சொல்கிறேன்). இந்தப் படைப்புகளில் Annie Hall, Interiors, Manhattan, Crimes and Misdemeanors போன்ற படங்களை இயக்கிய சீரியஸ் ஆசாமியைவிட Love and Death, Take the Money and Run, The Curse of the Jade Scorpion போன்ற 'செரி காமெடி' வகைப் படங்களை இயக்கிய நிகழ்த்துகலைஞரைப் பார்க்கலாம்.

இந்த அறிமுகக் கட்டுரையை முடித்துக்கொள்வதற்கு முன்பு அதன் உள்ளடக்கம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

'கம்ப்ளீட் ப்ரோஸ்' ஆனது Getting Even (1971), Without Feathers (1975), Side Effects (1980) ஆகிய நூல்களின் 'கண்டு' என்று சொல்லலாம். மூன்றையும் வெளியிட்டது ராண்டம் ஹவுஸ் பதிப்பகம். இந்தத் தொகுப்பை 1991இல் விங்ஸ் புக்ஸ் வெளியிட்டது. முன்னுரையைச் சேர்க்காமல் 473 பக்கங்கள் (புத்தகத்தில் முன்னுரை இல்லை). இந்நூலில் 52 ஆக்கங்கள் இருக்கின்றன. நான் புரட்டிக்கொண்டிருப்பது இணையத்தில் வாங்கிய கச்சிதமான Picador "பேப்பர்பேக்" பதிப்பு.

கம்ப்ளீட் ப்ரோஸில் உள்ள எல்லா படைப்புகளுமே தவறவிடக் கூடாதவை. குறிப்பாகப் பேருந்து இருக்கையில். ஆனால் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம் என்று கூறத்தக்க சில படைப்புகளை இங்கு அறிமுகப்படுத்துகிறேன். வுடி ஆலனின் நகைச்சுவையின் வீச்சிற்கு இந்தக் கதைகள் நல்ல எடுத்துக்காட்டுகள். இதில் தரவரிசை எதுவும் இல்லை.

The Whore of Mensa

இந்தக் கதை noir வகை hard-boiled துப்பறியும் நிபுணர் கதைகளைப் பகடி செய்கிறது. ஒரு ரகசிய பிராத்தலகம் நடத்தும் பிளாக்மெயிலில் சிக்கிக்கொண்ட ஒரு நபர் கதாநாயகரான தனியார் துப்பறியும் நிபுணரிடம் உதவி கேட்கிறார். இந்த பிராத்தலகத்தில் நடப்பது உடலுறவு வியாபாரம் அல்ல... 

Seconds later, a silky voice answered, and I told her what was on my mind. "I understand you can help me set up an hour of good chat," I said.

"Sure, honey. What do you have in mind?"

"I'd like to discuss Melville."

"Moby Dick or shorter novels?"

"What's the difference?"

"The price. That's all. Symbolism's extra."

"What'll it run me?"

"Fifty, maybe a hundred for Moby Dick. You want a comparative discussion - Melville and Hawthorne? That could be arranged for a hundred." 

மூளை தினவெடுக்கத் துப்பு துலக்குவதில் இறங்கும் நாயகர் கெய்சர் லுபோவிச் பிராத்தலகத்தில் காணும் காட்சி...

A wall of books opened, and I walked like a lamb into that bustling pleasure palace known as Flossie's. Red flocked wallpaper and a Victorian decor set the tone. Pale, nervous girls with black-rimmed glasses and blunt-cut hair lolled around on sofas, riffling Penguin Classics provocatively. A blonde with a big smile winked at me, nodded toward a room upstairs, and said, "Wallace Stevens, eh?" But it wasn't just intellectual experiences. They were peddling emotional ones, too. For fifty bucks, I learned, you could "relate without getting close." For a hundred, a girl would lend you her Bartok records, have dinner, and then let you watch while she had an anxiety attack.

இந்தக் கதையின் நடை சிரிக்கவைப்பது மட்டுமின்றி ரேமண்ட் சாண்ட்லர், டாஷியல் ஹாமெட், ஏ.ஏ.ஃபேர் போன்றோரை நினைவூட்டும். மொத்தக் கதையும் அபத்தமான அடித்தளத்தைக் கொண்டது. வுடி ஆலனின் மேதைமை இதிலிருந்துதான் எழுகிறது. இங்கே எக்ஸ்போர்ட் குவாலிட்டி எழுத்தாளர்கள் இருந்தும் இப்படி ஒரு கதையை யோசித்து எழுத ஆளில்லை என்பதே உண்மை.

Match Wits With Inspector Ford

இது ஐந்து குறும் துப்பறியும் கதைகள் அடங்கியது. இங்கே கொஞ்சம் சொந்தக் கதை: என்னுடைய இன்ஸ்பெக்டர் குமார் கதைகளைப் படித்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஃபோர்டுக்கு அறிமுகம் தேவையில்லை. இன்ஸ்பெக்டர் ஃபோர்டைப் பார்த்துதான் இன்ஸ்பெக்டர் குமார் கதைகளை உருவாக்கினேன். நான்கு பத்திகளில் ஒரு வழக்கு விவரிக்கப்படும் அதையடுத்து இன்ஸ்பெக்டர் ஃபோர்டு துளி வியர்வைகூடச் சிந்தாமல் மர்மத்தைத் தீர்த்துவைத்து நிஜமான குற்றவாளியைக் கண்டுபிடிப்பார். இவர் நம் காலத்து நாயகர்.


அதே தொகுப்பு. சற்று ஓவியப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த அபரிமிதமான கதையை இன்னும் நன்றாக ரசிக்க இயலும். ஓவியர் வின்சென்ட் வான் கோக் (வான்கா) தன் சகோதரர் தியோ வான் கோகிற்கு எழுதிய கடிதங்களை (Letters to Theo) வுடி ஆலன் படித்துவிட்டார் போலும். அதன் முழுப் பலன் நமக்குக் கிடைக்கிறது. இந்தப் புனைவில் வான் கோக், மோனே, செசான், கோகேன் போன்ற மகத்தான ஓவியர்கள் இந்தக் கதையில் பல் மருத்துவர்களாகிறார்கள். வான் கோகின் உரத்த, ரகளையான ஓவிய பாணியை ஆலன் இதில் அநியாயத்திற்குக் கிண்டல் செய்கிறார்...

Mrs Sol Schwimmer is suing me because I made her bridge as I felt it and not to fit her ridiculous mouth. That's right! I can't work to order like a common tradesman. I decided her bridge should be enormous and billowing and wild, explosive teeth flaring up in every direction like fire! Now she is upset becuase it won't fit in her mouth! She is so bourgeois and stupid, I want to smash her. I tried forcing the false plate in but it sticks out like a star burst chandelier. Still, I find it beautiful. She claims she can't chew! What do I care whether she can chew or not! Theo, I can't go on like this much longer! I asked Cezanne if he would share an office with me but he is old and infirm and unable to hold the instruments and they must be tied to his wrists but then he lacks accuracy and once inside a mouth, he knocks out more teeth than he saves. What to do?

'அறிவுத்தள'த்தின் பிரதிமைகளைக் கேலி செய்வது வுடி ஆலனுக்குப் பிடித்த விஷயம். நகைச்சுவை எழுத்தாளர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு.

The Metterling Lists

ஒரு (கற்பனை) தத்துவ அறிஞரின் லாண்டரி லிஸ்ட்கள் குறித்த தீவிரமான அலசல் இந்தக் கட்டுரை.

6 prs. shorts
4 undershirts
6 prs. blue socks
4 blue shirts
2 white shirts
6 handkerchiefs
No starch

serves as a perfect, near-total introduction to this troubled genius, known to his contemporaries as the "Prague Weirdo."

ஒருவருடைய சலவைத் துணிப் பட்டியல்களை வைத்து அவரது உளவியல் சிக்கல்கள், வாழ்க்கைப் பார்வை, வரலாறு ஆகியவற்றை அலசுவது படைப்பூக்கத்தின் உச்சகட்டம். காஃப்கா, நீட்ஷே, ஹெகல், தாமஸ் மான், ஃப்ராய்ட் போன்ற பெயர்கள் ஆங்காங்கே தூவப்படுகின்றன. இத்தகைய பெரிய ஆளுமைகளை வைத்து நகைச்சுவை செய்கிறார் ஆலன். எ.கா., "Nietzsche ... was always jealous of Metterling's underwear and told close friends he found it "Hegelian in the extreme.""


நாஜிகளுக்கு முடிதிருத்துநராக இருந்த ஒருவரின் பார்வையில் ஹிட்லர், கப்பல்ஸ் (கோயபல்ஸ்), கரிங் போன்ற நாஜிமணிகளுக்கு இடையிலான அரசியல் உறவு பற்றி வேடிக்கையாக எழுதுகிறார் ஆலன். 1940களின் நிகழ்வுகள் சில, சவரம் சார்ந்தவையாக மாற்றப்படுகின்றன. காட்டாக, ஜனவரி 1945இல் ஹிட்லர் தூங்கும்போது அவரது மீசையை மழிக்க பல ஜெனரல்கள் சதித் தீட்டம் தீட்டித் தோல்வியடைகிறார்கள். வுடி ஆலன் ஒரு யூதர் என்பதை இங்கு நாம் மறந்துவிடக் கூடாது. சுமார் அறுபது லட்சம் யூதர்கள் தீர்த்துக்கட்டப்பட்ட இனப்படுகொலையின் கர்த்தாக்களில் ஒருவரான ரைன்ஹார்டு ஹெய்ட்ரிச்சும் இந்தக் கதையில் வரும் கேலிச் சித்திரங்களில் ஒருவர் என்பதைக் கொண்டே ஆலனுக்குத் தன் கலையின் மீதுள்ள ஆழ்ந்த விசுவாசத்தைப் புரிந்துகொள்ளலாம், மதித்துக்கொள்ளலாம். கொடூர விலங்குகளாக நாமறிந்த நாஜிகளைக் கோமாளிகளாக்கி சிரிப்பு மூட்டுகிறார் ஆசிரியர். இதுவும்தான் வுடி ஆலன்.

“The Fuhrer is all right,” I assured them. “He still has his mustache. Repeat. The Fuhrer still has his mustache. A plot to shave it has failed.”

Hassidic Tales

எனது சொந்த ஜென் கதைகளுக்கு 'இன்ஸ்பிரேஷன்' வுடி ஆலனின் இந்தக் கதைகள். யூத மரபில் புழங்கும் நாட்டார் கதைகளைப் பகடி செய்து ஆலன் எழுதியுள்ளார். இக்கதைகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஜென் கதைகளுக்குரியவை. ஜென் ஞானிகளுக்கு பதிலாக யூத குருமார்கள். எனவே இவர் ஜென் கதைகளையும் பகடி செய்வதாகக் கொள்ளலாம். ஆன்மீக ரீதியாக இவை இன்ஸ்பெக்டர் ஃபோர்டு கதைகளுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு கதைக்கும் "Noted Scholar"இன் விளக்கம் உண்டு. உதாரணமாக: Why pork was proscribed by Hebraic law is still unclear, and some scholars believe that the Torah merely suggested not eating pork at certain restaurants.


'த ஹோர் ஆஃப் மென்சா' போன்ற நடையில், தொனியில் எழுதப்பட்ட இன்னொரு துப்பறியும் கதை. இம்முறை வாடிக்கையாளர் ஓர் அழகிய இளம்பெண். கண்டுபிடிக்க வேண்டிய ஆள் கடவுள். இந்தக் கதையில் தனது தத்துவ வாசிப்பைக் கொண்டு பல நகைச்சுவைகளைப் புரிகிறார் வுடி ஆலன். ஒரு தத்துவ மாணவிக்காகக் கடவுளைத் தேடப் போய் கொலை கேஸ் ஆகிறது. யாரோ ஒரு இருத்தலியல்வாதிதான் கடவுளைக் கொன்றிருப்பார் என்று போலீஸ் ஊகிக்கிறது. நாயர் கதை மரபுப்படி கெய்சர் லுபோவிச் கடவுளின் கொலைக்காக பிரேம் செய்யப்படுகிறார். ஆனால் கடைசியில் ஒரு திருப்பம். மீதத்தை வெள்ளைத் தாளில் காண்க.

"No, baby. You posed as a pantheist and that gave you access to Him—if He existed, which he did. He went with you to Shelby's party and when Jason wasn't looking, you killed Him."

"Who the hell are Shelby and Jason?"

"What's the difference? Life's absurd now anyway."


வுடி ஆலனின் அதிகம் விவாதிக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று இந்தச் சிறுகதை. ஒரு நடுத்தர வயதுக் கல்லூரிப் பேராசிரியர் குகல்மாஸ் திருமண வாழ்க்கையில் அலுப்புற்று வேறு உறவைத் தேடுகிறார். ஒரு மந்திரவாதியைப் பிடிக்கிறார். இவர் ஒரு விசேட மந்திரவாதி. தன்னிடமுள்ள ஓர் அலமாரி முழுவதும் இருக்கும் புத்தகங்களில் ஒன்றினுள் பேராசிரியரை அனுப்ப முன்வருகிறார். பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் ஃப்ளோபேரின் 'மதாம் பொவாரி' நாவலின் 120ஆம் பக்கத்திற்கு முன்பு என்று குகல்மாஸ் வலியுறுத்துகிறார். மந்திரவாதி தமது மந்திரப் பெட்டிக்குள் பேராசிரியரை அனுப்பி, நாவலையும் பெட்டிக்குள் விட்டெறிகிறார். மறுகணம், பல காதலர்களைக் கண்ட எம்மா பொவாரியின் புதிய காதலர் ஆகிறார் குகல்மாஸ். அதே சமயத்தில் நாடெங்கும் இலக்கியப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் '100ஆம் பக்கத்தில் திருமதி பொவாரியை முத்தமிடும் இந்த வழுக்கைத் தலை யூதர் யார்?' என்று வியப்பதாக வர்ணிக்கிறார் ஆலன். எம்மாவிற்கு குகல்மாஸ் அமெரிக்கப் பண்பாட்டை அறிமுகப்படுத்துகிறார். இதற்கிடையே அவர் நிஜ உலகிற்கும் வந்து இரண்டாம் மனைவியுடன் மாரடிக்க வேண்டியுள்ளது. அடுத்து மதாம் பொவாரியை மந்திரவாதியின் உதவியுடன் நியூயார்க்கிற்குக் கொண்டுவருகிறார்...

"I cannot get my mind around this," a Stanford professor said. "First a strange character named Kugelmass, and now she's gone from the book. Well, I guess the mark of a classic is that you can reread it a thousand times and always find something new."

இதற்குப் பிறகு நடப்பவை stuff of the legends ரகம்.


More than at any other time in history, mankind faces a crossroads. One path leads to despair and utter hopelessness. The other, to total extinction. Let us pray we have the wisdom to choose correctly.

வுடி ஆலன் போன்ற ஒரு மேடை நகைச்சுவைப் பேச்சாளரைப் பட்டமளிப்பு விழா ஒன்றில் பேச விட்டால் என்ன ஆகும் என்பதற்குச் சான்று இந்தக் கட்டுரை.

The trouble is, our leaders have not adequately prepared us for a mechanized society. Unfortunately our politicians are either incompetent or corrupt. Sometimes both on the same day. The Government is unresponsive to the needs of the little man. Under five-seven, it is impossible to get your Congressman on the phone.


பெரிய மனிதர்களைப் பற்றிப் பத்திரிகைகளில் வரும் சம்பவத் துணுக்குகளை இந்த ஓரங்க நாடகத்தில் எள்ளி நகையாடுகிறார் ஆலன், எ.கா., கி.வா.ஜ. சிலேடைகள், கலைவாணர் சம்பவங்கள், பெர்னார்ட் ஷா, வின்ஸ்டன் சர்ச்சில் துணுக்குகள். ஆபிரஹாம் லிங்கன் பற்றிய அப்படியொரு துணுக்கை எடுத்துக்கொண்டு அதை உருக்கமான நாடகமாக நீட்டி அபத்த நகைச்சுவையின் உச்சத்தைத் தொடுகிறார் ஆலன். இந்தப் புத்தகத்திலேயே மிக அபத்தமான கதையிது எனலாம்.

பட்டியல் முற்றியது. ஆனால் ஒவ்வொரு படைப்பும் வாய்விட்டுச் சிரிக்கவைப்பது. Complete Proseக்குப் பின்பு Mere Anarchy, Insanity Defense: The Complete Prose ஆகிய நூல்கள் வந்திருக்கின்றன. இவையும் வுடி ஆலன் எழுதியவை.

வுடி ஆலன் தமது பல படைப்புகளைப் பின்னாளில் தம் திரைப்படங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார் (எழுதிவிட்டுப் பிறகொரு சமயம் அதைத் திரைக்கு எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை). உதாரணமாக, இதில் உள்ள Death Knocks என்ற நாடகம் 1991இல் வந்த Shadows and Fogக்குப் பயன்பட்டது. A Twenties Memory, 2011இல் வந்த Midnight in Paris படத்திற்காக எப்போதோ தூவப்பட்ட வித்து. தஸ்தயெவ்ஸ்கியின் Notes from the Underground நாவலைக் கிண்டலடிக்கும் Notes from the Overfed, Spring Bullettin, My Philosophy ஆகிய கட்டுரைகளில் Take the Money and Runக்கான தரைப்பணியைப் பார்க்கலாம்.

ஒரு குறிப்பு: ஆலனின் நகைச்சுவை மிகவும் அமெரிக்கத் தன்மை கொண்டது; யூதக் கலாச்சார அம்சங்களைப் பேசுவது. ஒரு கட்டத்திற்கு மேல் குத்துவரிகளுக்கான சில "pattern"கள் பழகிப்போய் அலுப்பூட்டலாம். ஆனால் அது இந்தப் புத்தகத்தின் மதிப்பைக் குறைக்காது. காரணம், புத்தகத்தை எழுதியவர் ஒரு நகைச்சுவை மேதை. ஐநூறு பக்க சிரிப்புத் திருவிழா இந்நூல்.

Complete Prose | Woody Allen | Picador | 480 Pages | Rs.399 | இணையத்தில் வாங்க

1 comment:

  1. பேயோன் குறிப்பிட்ட இந்த எழுத்தாளரின் புத்தகங்களைப் படித்து புரிந்துகொண்டு சிரிக்கவேண்டுமென்றால் பலவிதமான உலக விஷயங்களில் பரிச்சயம் இருந்திருக்கவேண்டும் போல் இருக்கே... அப்போதுதான் ஒப்பிட முடியும். புரிந்துகொண்டு சிரிக்கவும் முடியும். நீங்கள் கூட ஒரு துப்பறியும் தொடர் எழுதினீர்களே, உங்களின் ப்ளாக்கில் - இதனின் தாக்கம்தானோ..!!?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...