A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

6 Oct 2012

தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் - காந்தி


I do not write this book for merely writing it. Nor is it my object to place one phase of history of South Africa before the public. My object in writing the present volume is that the nation might know how Satyagraha, for which I live, for which I desire to live and for which I am equally prepared to die, originated and how it was practiced in a large scale – M.K.Gandhi

காந்தியின் மீது ஆச்சரியமும் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் காந்தி திரைப்படத்தைப் பார்த்த பின் தான் உருவானது. பலரும் இந்த திரைப்படமே தங்களை காந்தியின் பால் ஈர்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அத்திரைப்படம் ஒரு சாதனை; சில மணிநேரத்தில் காந்தியைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் வல்லமை அதற்கிருந்தது. அதற்காக அடுத்த நாளிலிருந்து நான் காந்தியவாதியாகிவிட்டேன் என்றில்லை; ஆனால், காந்தியை நோக்கித் திருப்பிவிட்டது அந்தப் படம் தான் என்பதை உறுதியாகச் சொல்வேன். சத்தியாகிரகம் என்றால் என்ன? அது எப்படித் தொடங்கியது என்ற அடிப்படை விஷயங்களை அதை உருவாக்கியவர் வழியாக புரிந்துகொள்வதே எளிதாக இருக்கும். மற்றவர்கள் எழுதும் போது அதன் மீதான தங்களுடைய கருத்துக்களையும் ஏற்றிவிடக்கூடும். காந்தி, முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார், “இதில் எதையும் கூட்டிச் சொல்லவில்லை”. அதே போல், படிக்கும் போது அதிகப்படுத்திச் சொல்லப்பட்டதாக ஒரு வாக்கியத்தைக் கூட உணரமுடியவில்லை.



தென்னாப்பிரிக்க காலனிகளின் கரும்புத் தோட்டத்திலும் சுரங்கங்களிலும் வேலைக்கு இந்தியர்கள் அனுப்பப்படுகிறார்கள். தொழிலாளர்கள் குடியேறியதோடு, வர்த்தகர்களும் குடியேறுகிறார்கள். இந்திய வர்த்தர்கள் மீது ஐரோப்பியர்களுக்கு தொழில் ரீதியிலான பயம் வந்துவிடுகிறது. இப்போது இந்தியர்களுக்கு எதிராக இரண்டு சட்டங்களை அந்த அரசு கொண்டுவருகிறது. ஒன்று, ஒப்பந்தம் முடிந்த தொழிலாளர்கள், தங்களது ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் 25 பவுண்டு வரி செலுத்த வேண்டும். இந்திய வணிகர்கள் வியாபாரம் செய்யக் கூடாது; அவர்களுக்கு நிலம் வாங்கும் உரிமையும் கிடையாது. பின்னர், இந்த 25 பவுண்டு என்பது 3 முன்று பவுண்டாகவும், வணிகர்கள் விற்பனைக்கு அனுமதி பெற 25 பவுண்டு செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்றும் மாற்றப்படுகிறது.

இந்த சமயத்தில் தென்னாபரிக்காவுக்கு வழக்கறிஞ்சராகச் செல்லும் காந்தியின் உதவியை நாடுகிறார்கள் அங்குள்ள வணிகர்கள். 1894 மே மாதத்தில் நாடால் இந்தியன் காங்கிரஸ் தொடங்கப்படுகிறது. 1896ல் காந்தி இந்தியாவுக்கு வருகிறார். இங்குள்ள தலைவர்களைச் சந்தித்து தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலைபற்றி விளக்குகிறார், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார். இதைப்பற்றியெல்லாம் ராய்ட்டர் தவறான பார்வையை இங்கிலாந்துக்கு அனுப்புகிறது.

இந்தியாவிலிருந்து காந்தி தன்னுடைய குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தென்னாப்பிரிக்கா திரும்புகிறார். அவர் வரும் கப்பலிலும் இன்னொரு கப்பலிலும் சுமார் 600 இந்தியர்கள் வருகிறார்கள். இவர்களை காந்தி தான் அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. ஐரோப்பியர்கள் இதை எதிர்த்து கூட்டம் நடத்துகிறார்கள். ப்ளேக் நோயால் பம்பாய் துறைமுகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காரணம் சொல்லி இரண்டு கப்பல்ககளுக்கும் தென்னாப்பிரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி யாராவது இறங்கினால், ஐரோப்பியர்களால் கடலில் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கை வேறு. இருபத்தி மூன்று நாட்களுக்குப் பிறகு கப்பலில் இருப்பவர்கள் உள்ளே வர அனுமதி வழங்கப்படுகிறது. இறங்கி வரும் காந்தி கடுமையாகத் தாக்கப்படுகிறார்.

பின் போர் யுத்தம் (Boer) வருகிறது. இந்தியர்கள், இந்த முறை அரசுக்கு ஆதரவாக வேலை செய்ய வேண்டும், அவர்களும் போரில் பங்கு பெற வேண்டும் என்று காந்தி அறிவுறுத்துகிறார். Indian Ambulance Corps உருவாக்கப்படுகிறது. போரில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேலை.

காந்தி இந்தியா திரும்பி, மார்ச் 1902ல் பம்பாயில் அலுவலகம் தொடங்குகிறார். ஆனால், மீண்டும் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவாகப் போராட அழைக்கப்படுகிறார். இப்போது ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். Asiatic Registration Act; இச்சட்டத்தின் படி, எட்டு வயதுக்கு மேற்பட்ட ஐரோப்பியர் அல்லாதவர் ஒவ்வொருவரும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சாதாரணமாக பெயர், ஊர் விபரங்கள் மட்டுமல்லாது, கை ரேகையையும் அளிக்க வேண்டும். மீறும் பட்சத்தில், தண்டிக்கப்படுவார்கள். அக்காலத்தில், குற்றவாளிகளிடமிருந்து மட்டுமே கை ரேகை பெறப்பட்டது. காந்தியின் தலைமையில் இந்தியர்கள், தங்களது தகவல்களைப் பதிந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுக்கிறார்கள்.

இதுவரை இந்தப் போராட்டத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. இது ஒரு ‘passive resistance’ என்று சொன்னாலும் இதற்கு ஒரு இந்தியப் பெயர் வேண்டுமே. இந்தப் போராட்டத்துக்கு நல்லதொரு பெயரை பரிந்துரைப்பவருக்கு பரிசு என்று இந்தியன் ஒப்பீனியன் இதழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மங்கள்லால் காந்தி என்பவர் ‘சதாகிரஹா’ என்ற பெயரை வழங்குகிறார். காந்தி அதைக் கொஞ்சம் மாற்றி சத்தியாகிரகா என்று தங்கள் போராட்டத்துக்கு பெயர் சூட்டுகிறார். சத்யா – உண்மை; கிரகா – உறுதி. பின் passive resistanceக்கும் சத்தியாகிரகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார் காந்தி, “While in passive resistance there is a scope for the use of arms when a suitable occasion arrives, in Sathyagraha physical force is forbidden even in the most favourable circumstances. […].. Sathyagraha may be offered to one’s nearest and dearest; passive resistacne can never be offered to them unless of course they have ceased to be dear and become in object of harted to us.”

இந்தியர்கள் இச்சட்டத்திற்கு உடன்படவில்லை. அனைத்து இந்தியர்களையும் பதிவு செய்வதிலிருந்து தடுக்க முயற்சி எடுக்கப்படுகிறது. சத்தியாகிரத்தில், பண்டிட் ராம சுந்தரா என்பவரைக் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இவர் கடுமையாக நடத்தப்படவில்லை. இவர் மேல், காந்திக்கு பெரிய மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை. பின் காந்தி உட்பட ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக 150 போராட்டக்காரர்கள் வரை சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இறுதியில், அரசு ஒரு உடன்படிக்கைக்கு வருகிறது. இந்தியர்கள் தாங்களாக முன்வந்து பதிவு செய்துகொண்டால், அரசு தன்னுடைய Asiatic Registration Actஐ திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. காந்தி இதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பதான்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். நாமும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் தான் வெற்றியை அடைய முடியும் என்பது காந்தியின் எண்ணம். தங்களை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள காந்தி தன் தொண்டர்களுடன் போகும் போது, பதான்களால் தாக்கப்படுகிறார். ஆனாலும், தன்னை பதிவு செய்துகொள்கிறார். ஆயிரக்கணக்கான இந்தியர்களும் பதிவு செய்துகொள்கிறார்கள்.

ஒப்பந்தம் போட்ட ஜெனரல் ஸ்மட்ஸ் இப்போது பின்வாங்குகிறார். காந்தி அடுத்த கட்டப் போராட்டத்துக்குத் தயாராகிறார். பதிவுச் சான்றிதழை எரிக்கும் போராட்டம். சுமார் 2000 சான்றிதழ்கள் எரிக்கப்படுகின்றன. காந்தி என்ன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் அதைப் பற்றிய முழுவிபரங்களையும் அதனால் தனிநபருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் கூட்டங்களில் விளக்குவார். அவரைப் பொறுத்தவரை சத்தியாகிரகம் என்பது ஒரு கூட்டத்தின் போராட்டம் அல்ல; அது ஒவ்வொரு தனிமனிதனின் போராட்டம். அதற்கு ஒவ்வொருவரும் தான் என்ன செய்யப்போகிறோம் என்பது புரிந்துகொண்டு, முழு மனவுறுதியுடன் களத்தில் இறங்குவது முக்கியம்.

இப்போது ஜெனர்ல் ஸ்மட்ஸ் இன்னொரு சட்டத்தைக் கொண்டுவருகிறார். அது Transvaal Immigration Restriction Bill. சுருக்கமாக புதிதாக வரும் இந்தியர்கள் டிராஸ்வாலுக்கு வர முடியாதபடி இச்சட்டம் தடுக்கும். இவர்கள் புதிது புதிதாய் சட்டம் போடப் போட சத்தியாகிரகிகளின் உறுதியும் அதிகரித்துக் கொண்டேபோகிறது. இந்தச் சட்டங்கள் அவர்களுக்கு போராட்டத்திற்கான புதிய காரணங்களை வழங்குகிறது.

இந்தச் சட்டத்தை சோதிக்க சோரப்ஜி என்பவரை டிரான்ஸ்வாலுக்குள் நுழையுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அவர் நுழையும் போது காவல்துறை ஒன்றும் செய்யவில்லை. அதனால், சோரப்ஜியே காவல்துறையிடம் தான் வந்திருப்பதாகவும், காவல்துறை தன்னை சோதிக்க விரும்பினால், அவர்கள் விருப்பப்படி செய்யலாம் என்று தெரிவிக்கிறார். மாறாக, கோர்ட்டிலிருந்து சம்மன் வருகிறது. ஜூலை 8, 1908ல் சோரப்ஜின் வழக்கு விசாரனைக்கு வருகிறது. அவர் சார்பில் காந்தி வாதாடுகிறார். அடுத்த நாள் கோர்ட் சோரப்ஜியின் மீது குற்றமில்லை என்று அறிவிக்கிறது. ஆனால் அதற்கடுத்த நாள், ஜூலை 10ம் தேதி மீண்டும் சோரப்ப்ஜிக்கு சம்மன் வருகிறது. அன்றிலிருந்து ஏழுநாட்களுக்குள் அவர் டிரான்ஸ்வாலைவிட்டுப் போக வேண்டும் என்று மேஜிஸ்டிரேட் உத்தரவிடுகிறார். வெளியேற சோரப்ஜி மறுத்துவிடுவதால் மீண்டும் இருபதாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு மாதம் சிறைத்தண்டனை பெறுகிறார். இது மாதிரி பலர் கைதுசெய்யப்பட்டு, கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் மறுபடிமறுபடி டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்து, மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள். கடைசியில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஜெயிலுக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தவர்கள், ஏதாவது பொருள் விற்பது போல் கிளம்பிவிடுவார்கள், விற்பனை செய்ய அனுமதிச் சான்றிதழ் இல்லாததால் அவர்கள் எளிதாக கைது செய்யப்பட்டுவிடுவார்கள். காந்தியும் கைது செய்யப்படுகிறார்.

இப்போது அரசாங்கத்தின் கோபம் அதிகரித்துவிட்டது. இந்தியர்களை டிராஸ்வாலின் எல்லையில் கொண்டு விட்டுக்கொண்டிருந்த அரசாங்கம், இப்போது அவர்களை திரும்ப இந்தியாவுக்கே அனுப்ப முடிவுசெய்துவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் எந்த நாதியும் கிடையாது. பலர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். அவர்கள் இந்தியாவை பார்த்ததேயில்லை. ஆனால், இந்தியாவில் அவர்கள் இறங்கியதும் அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்ய தன் நண்பர்களை நாடுகிறார் காந்தி. ஆனால், அரசின் இந்தத் திட்டம், மக்களிடம் பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது.

காந்தி, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் முன்னேற்றங்களை அவ்வப்போது கோகலேக்குத் தெரியப்படுத்திவருகிறார். கோகலேயும் அவருக்குவேண்டிய அறிவுரைகளைக் கூறுவதோடு, இந்தியர்களிடம் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலைமை பற்றிய தகவல்களை பரப்புகிறார். அக்டோபர் 1912ல் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார். அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு அளிக்கப்படுகிறது. பல இடங்களில் அவர் பேசுகிறார். கோகலேயின் வருகை தென்னாப்பிரிக்க இந்தியர்களிடம் புதிய எழுச்சியை ஏற்படுத்துகிறது. கோகலே தென்னாப்பிரிக்க அதிகாரிகளைச் சந்திக்கிறார். பின் காந்தியிடம், “You must retun to India in a year. Everything has been setteled. The Black Act will be repealed. The racial bar will be removed from the immigration law. The £3 tax will be abolished.” என்று சொல்லிவிட்டு, தென்னாப்பிரிக்காவில் இருந்து நவம்பர் 12, 1912ல் கிளம்புகிறார். ஆனால், ஒப்புக்கொண்டதைச் செய்து முடிக்கும் வழக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாதே.

இங்கே கவனிக்க வேண்டியது. கோகலே வருவதற்கு முன், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று பவுண்ட் வரியைப் பற்றி யாரும் அதிகம் கவலைப்படவில்லை. சத்தியாகிரத்திலும் அது இடம்பெறவில்லை. ஆனால் இனி அதற்காகவும் போராட வேண்டும் என்று சத்தியாகிரகிகள் முடிவு செய்கிறார்கள். அரசாங்கமும் சும்மாயில்லாமல், இன்னுமொரு சட்டத்தை அமல்படுத்துகிறது. அச்சட்டத்தின்படி, கிறுஸ்தவ முறைப்படி நடத்தப்படும் திருமணங்களும் திருமண பதிவாளரிடம் பதிவு செய்யப்படும் திருமணங்களுமே செல்லும். மறைமுகமாக, இந்திய இந்து, முஸ்லீம் திருமணங்கள் செல்லாது. திருமணங்கள் செல்லாத போது, இவருக்கு இவர் மனைவி என்று சொல்லமுடியாது, இது அவருடைய குழந்தைகள் என்று சொல்லமுடியாது; கடைசியில் சொத்தும் கிடைக்காது. இதுவரை பெண்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபடவில்லை. ஆனால், இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படப்போவது பெண்கள் தான். பெரும் யோசனைக்குப் பிறகு, காந்தி பெண்களையும் போராட்டத்தில் பங்கு கொள்ள அழைக்கிறார். இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இவர்களை கைது செய்வதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது. இவர்கள் சுரங்கத் தொழிலாளர்களையும் சந்தித்து, அவர்களிடம் மூன்று பவுண்டு வரிக்கு எதிராகப் போராட அழைக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இப்போது ஏராளமான இந்தியர்கள் போராட்டக் களத்திற்கு வந்தாயிற்று.

நியூகாஸ்டில் என்ற இடத்திலிருந்து இவர்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டு காந்தி, டிரான்ஸ்வால் நோக்கி வருகிறார். டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்து, கைதாக வேண்டும் என்பது தான் திட்டம். அனைவரையும் ரயிலில் அழைத்துச் செல்ல பணமும் இல்லை. அதனால் பல மயில் தூரம் கால்நடையாகவே தொழிலாளர்களை அழைத்துவருகிறார். இடையிடையே காந்தி கைது செய்யப்படுகிறார். இதை The Great March என்று அழைக்கிறார் காந்தி. போராட்டத்துக்கு வந்துவிட்டாலும், சமரச முயற்சிகளை காந்தி கைவிட்டுவிடவில்லை. சுரங்க அதிபர்கள் மூலம் மூன்று பவுண்ட் வரி நீக்க அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். ஜெனரல் ஸ்மட்ஸுக்கு தாங்களுடைய போராட்டத்தைப் பற்றித் தெரிவித்துவிட்டு, மூன்று பவுண்ட் வரியை நீக்கினால், போராட்டத்தைக் கைவிட்டு விடுவதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், ஜெனரல் ஸ்மட்ஸ், காந்தியிடம், ‘நீங்கள் உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று சொல்லிவிடுகிறார். பயணம் தொடர்கிறது. அரசாங்கம் சத்தியாகிரகிகளை கைது செய்து, அவர்களை சுரங்கத்தில் வேலை செய்யப் பணிக்கிறது.

சத்தியாகிரத்தின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். காந்திக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆறு வாரங்கள் கழித்து காந்தியும் மற்ற முக்கிய இரண்டு தலைவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். இந்தியர்களின் கோரிக்கையை விசாரிக்க ஓரு கமிஷன் அமைக்கப்படுகிறது. அதில் இந்தியர் யாரும் இல்லை என்பதால், அக்கமிஷன் அரசாங்கத்துக்கு சாதகமானதாகவேயிருக்கும், எனவே தாங்கள் அதன் முன் சாட்சி சொல்லப்போவதில்லை என்று காந்தி முடிவெடுக்கிறார். இந்தியர் ஒருவரை நியமிக்கவில்லையென்றால் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், இதில் கோகலேவுக்கு உடன்பாடில்லை. கோகலே, கமிஷன் அதன் வேலையைச் செய்ய இந்தியர்கள் உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.

கமிஷனின் அறிக்கையில், இந்தியர்களுக்கு எதிராக காவல்துறையின் அத்துமீறல்கள் இல்லையென்று சொல்வதோடு,  இந்தியர்களின் கோரிக்கையான மூன்று பவுண்டு வரி ரத்து, இந்தியத் திருமணங்களை செல்லுபடியாக்குதல் போன்றவற்றை தாமதமின்று நிறைவேற்றுமாறு அறிவுறுத்துகிறது.

இந்தக் கோரிக்கைகள் எல்லாம் Indian Relief Bill என்ற சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 தென்னாப்பிரிக்காவில் இப்படியொரு போராட்டம் நடந்து இன்னும் இரண்டு வருடங்களில் நூறாண்டுகள் முடியப்போகின்றன.. ஆனால், நாம் எந்த அளவிற்கு காந்தியைப் புரிந்து கொண்டிருக்கிறோம்? எல்லோரும் அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் இன்னுமும் பேசப்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன?  எதிர்மறையாகவும் அவருக்கு இணக்கமாகவும் இன்னும் நிறைய பேசுவோம், பேச வேண்டியதுதான்.

காந்தியை தெய்வமாக்கி, தேசப்பிதாவாக்கி, கட்சித் தலைவராக்கி, சுதந்திரப் போராட்ட தியாகி ஆக்கி, அரசாங்கச் சுவர்களிலும் ரூபாய் நோட்டுகளிலும் அவருக்கு இடம் கொடுத்து அவரை உயர்த்திவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் காந்தியைப் படிப்பவர்கள், தங்களுடைய கொள்கைக் கண் வழியாகவே காந்தியை அணுகுகிறார்கள். அதெல்லாம் காந்திக்கு தேவையே இல்லை..

உண்மையில்  எல்லாக் கொள்கைகளையும் கழற்றி வைத்துவிட்டுப் படிக்கும்போது, காந்தி ஒரு சாதாரண மனிதராகத்தான் தெரிகிறார். காந்தியம் என்பது மனிதத்தன்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

இணையத்தில் படிக்க: archive.org [PDF] Other Formats


1 comment:

  1. படிப்பவர்கள், தாம் சாதாரண மனிதராக நினைத்து படித்தால் உண்மை என்னவென்று தெரியும்-நீங்கள் முடிவில் சொன்னது போல்...

    நன்றி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...