A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

21 Oct 2012

Swami and Friends - R.K.Narayan




"Narayan, with his glories and limitations, is the Gandhi of modern Indian literature" - வி.எஸ்.நைபால்

படைப்பை அளவிடும் முறையும், அளவிடும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சுமார் எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நாவல் எல்லாத வித மனிதர்களையும், எல்லா வித விமர்சனங்களையும் எதிர்கொண்டாயிற்று. முதலில் புறக்கணிப்பு; பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும், நாராயண் இதற்காக பல காலம் காத்திருந்தார் என்கிறார் நைபால். இன்றைக்கு இலக்கியம் என்பது காத்திரமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ’அறைவது போல் இருக்க வேண்டும்’ என்கிறார்கள். மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற விஷயங்களை விட, சோகம், இயலாமை, காமம் போன்றவையே முன் வைக்கப்படுகின்றன. மனிதனுடைய அடிப்படை தேடலான மகிழ்ச்சி பின்னால் போய்விட்டது. இலக்கியம் என்பது optimism அற்றதாக இருக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆனால், ‘சுவாமியும் நண்பர்களும்’ இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


.இந்த நாவல் முதன் முதலில் 1935ல் வெளியிடப்பட்டது. அதற்குமுன், ஏகப்பட்ட பதிப்பகங்கள் இந்நாவலை பதிப்பிக்க முடியாது என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு பதிப்பாளரிடம், ‘உங்களுக்கு பதிப்பிக்க விருப்பமில்லையென்றால், இந்த எழுத்துபிரதியை என்னுடைய நண்பர் கிட்டு புரானாவுக்கு அனுப்பிவிடவும்’ என்று எழுதுகிறார். பதிப்பாளரும் அப்படியே செய்கிறார்.   தன் நண்பர் கிட்டு புரானாவிடம், எழுத்துபிரதியை “கல்லில் கட்டி, தேம்ஸில் எறிந்துவிடு” என்று நாராயண் எழுதுகிறார். ஆனால், புரானா, அதை கிரஹாம் கிரீனிடம் கொண்டு சேர்க்கிறார். கிரஹாம் கிரீன், அதைப் படித்துவிட்டு ஆ.கே.நாராயணுக்கு எழுதிய கடிதம்…



அதற்குப் பின் அந்தப் புத்தகம் உயிர் கொண்டு சதாபிஷேகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. 



வளர்ந்த பருவங்களிலேயே உண்மையான பருவம் என்றால், அது ஆரம்ப காலப் பள்ளிப் பருவம் தான். பள்ளிக்குப் போவதில் பெரிய ஆர்வம் இல்லையென்றாலும், அங்கு போக வருத்தப்பட்டதும் இல்லை. நிகழ்காலத்தில் மட்டும் வாழும் தவம் என்பது அப்போது மட்டுமே சாத்தியப்பட்டது. கடந்து போனதைப் பற்றிய கவலை இல்லை; நமக்கான காலம் இன்னும் நிறைய இருக்கிறது என்கிற நம்பிக்கை எப்போதும் இருந்தது. எல்லாமே உண்மையாகப் பட்டது. எந்த நிமிஷமும் செய்வதற்கு ஏதாவது இருந்து கொண்டே இருந்தது. ‘போரடித்ததேயில்லை’. இந்த நாவல் பலருக்கு மேலோட்டமாக எழுதப்பட்டதாகத் தெரியலாம். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. 

இரண்டு உலகங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்று சிறுவர்களுடையது மற்றொன்று பெரியவர்களுடையது. சிறுவர்களுக்கு பெரியவர்களின் உலகம் புரியாது; அவர்களுடைய கோபம் புரியாது; பயம் புரியாது. அதே போல் பெரியவர்களுக்கு சிறுவர்களின் உலகத்தின் மேல் அலட்சியம் மட்டுமே உண்டு. பெரியவர்களாகிய நாம், சிறுவர்களின் உலகத்தைக் கடந்து வந்திருந்தாலும் கூட, சிறுவர்களுக்கு வேலைவெட்டி இல்லை என்று தான் தோன்றும். சிறுவர்களின் ஆசை, ஆர்வம் போன்றவை பெரியவர்களுக்கு அற்பமாகத் தெரியும். சிறுவனாகிவிட வேண்டும் என்று பெரியவர்கள் திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். அப்படித் திரும்பதிச் செல்வது சாத்தியப்பட்டாலும் கூட, பெரியவர்களுக்கு அங்கே இருப்புக் கொள்ளாது. எதற்கு இந்த வியாக்கியானம் என்றால், பெரியவர்கள் உலகில் இருந்து கொண்டு ஒரு சிறுவனுடைய கதையைப் படிப்பதால், அது அற்பமானதாகவே தோன்றும். 

‘இந்தியாவில் குளிர் காலத்தில் குளிரும், வெயிற்காலத்தில் வெக்கையாக இருக்கும்’ என்று பதில் சொல்வதும், பெஞ்சுக்கு மேல் ஏற்றிவிட்டால், மேலே நின்றுகொண்டு சக மாணவர்களை தொப்பிவாரியாக பிரிப்பதும் அந்த பருவத்தால் மட்டுமே முடியும். 

சுவாமி பரிட்சைக்கு படிக்கும் போது..



He sat at his table and took out his atlas. He opened the political map of Europe and sat gazing at it. It puzzled him how people managed to live in such a crooked country as Europe. He wondered what the shape of the people might be who lived in places where the outline narrowed as in a cape, and how they managed to escape being strangled by the contour of their land. And then another favourite problem began to tease him: how did those map-makers find out what the shape of a country was? How did they find out that Europe was like a camel’s head? Probably they stood on high towers and copied what they saw below. He wondered if he would be able to see India as it looked in the map, if he stood on the top of the town hall. He had never been there nor ever did he wish to go there. Though he was incredulous, tailor Ranga persistently informed him that there was a torture chamber in the top storey of the town hall to which Pathans decoyed young people. 
இது ஒரு உதாரணம் தான். ஒரு சிறுவனின் எண்ணத்தை எவ்வளவு அழகாகக் கொண்டுவந்திருக்கிறார். உங்களுடைய சிறுவயதில், உங்களுக்கிருந்த எண்ணங்களை மறுபடியும் ஓடவிட்டுப் பார்த்தால் இதில் இருக்கும் நுட்பம் புரியும். இன்றைக்கு நீங்கள் எவ்வளவு மாறிவிட்டிரீகள் என்பதும் தெரியும். நான் சினிமாவில் தற்கொலைக் காட்சிகளை எப்படி எடுக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். ‘யாராவது தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களை நடிக்க வைத்து காட்சிகளை எடுத்துவிடுவார்கள்’ என்பது தான் நான் எனக்கே சொல்லிக் கொண்ட பதில். யாரிடமும் கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றவேயில்லை.

சுவாமியைப் போலவே எனக்கான ஒரு சரியான டயருக்காக ஆசைப்பட்டிருக்கிறேன். சைக்கிள் டயர்கள் கிட்டத்தட்ட என்னுடைய உயரம் இருக்கும். அதை என்னால் நேராக ஓட்ட முடிந்ததேயில்லை. அப்புறம் பெரியப்பாவின் டிவிஎஸ் 50யின் டயர் கிடைத்தது. The Width of the tyre is directly proportional to its stability. எத்தனை டயர் ரேஸில் தோற்றிருக்கிறேன்? ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. ஜெயித்தவன் தான் தன்னுடைய பீடம் பறிபோய்விடுமோ என்று கவலைப்பட வேண்டும். எங்களுக்கென்ன கவலை. சிகரெட் அட்டை விளையாட்டு கூட உண்டு. சிகரெட் அட்டைக்காக ஏறாத குப்பைமேடு இல்லை.

சுவாமி, இரண்டு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. ஒன்று கதையின் பார்வையில் அல்லது எழுத்தாளரின் பார்வையில், சுவாமி ஒரு sissy. அவனுக்கு மணியோ ராஜமோ கூட இருக்க வேண்டும். அவர்களைப் போல் அவன் தைரியசாலி அல்ல. ஆனால், சுவாமிநாதனே சுவாமிநாதனைப் பார்க்கும் போது இந்த அதைரியம் எல்லாம் இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. மேலும் சுவாமி, தன்னை யாரும் தாழ்த்திவிடுவதை விரும்புவதில்லை; எல்லா சிறுவர்களையும் போல், பொங்கி எழுந்துவிடுகிறான். 

நாராயாணுடைய மொழி ரொம்பவே புதுமையானது. யாருக்காவது இந்த புத்தகத்தை தரும் போது, ஆங்கிலம் மாதிரியே இருக்காது தமிழ் மாதிரி தான் இருக்கும், என்று சொல்லியே கொடுத்திருக்கிறேன். ஏதற்காக அப்படிச் சொன்னேன் என்பதை என்னால் வார்த்தைகளால் கொண்டு வந்துவிட முடியாது. ஆனால், நைபால் அதைச் இப்படிச் சொல்கிறார், 
All languages have their own heritage, and English (forgetting American for the moment) cannot easily escape its associations with English history, English manners, Shakespeare, Dickens, the Bible. Narayan cleansed his English, so to speak, of all these associations, cleansed it of everything but irony, and applied it to his own little India. His people can eat off leaves on a floor in a slum tenement, hang their upper-cloths on a coat stand, do all that in correct English, and there is no strangeness, no false comedy, no distance. 
‘மால்குடி டேஸ்’ தொடரைப் பார்த்துவிட்டு இந்தப் புத்தகத்தை படிக்கும் போது, ஸ்ரீனிவாசன் (சுவாமிநாதனின் அப்பா) வரும் போது கிரீஷ் கர்னாட் வருவார்; டெல்லி கணேஷ் குரலில் பேசுவார். ஒரு வேளை, மால்குடி டேஸ் பார்க்கவில்லையென்றால், இந்தக் கதாபாத்திரங்களை எப்படி கற்பனை செய்திருப்பேன்? புத்தக அட்டையில் சுவாமி, ராஜம், மணி மூவருமே ஒரே உயரமாக காட்டப்பட்டிருக்கிறார்கள் (வரைந்தவர் ஆ.கே.லக்‌ஷ்மணாக இருக்கலாம்). ஆனால் மால்குடி டேஸில் சுவாமி ரொம்ப சின்னப்பையனாக இருப்பான்.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத அந்தப் பருவமும் தொலைந்து போகும். இங்கு, சுவாமி முதலில் வருத்தப்படுவது, பாட்டியின் வயிற்றுவலிக்கு எலுமிச்சம்பழம் வாங்கித் தராமல் கிரிக்கெட் விளையாடப் போனதற்குத் தான். He called himself a sneak, a thief, an ingrate, anda a hard-hearted villain. அதன் பிறகு, சுவாமிநாதனுக்கு சகல கவலைகளும் வந்துவிடுகின்றன. சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரியை, நான் எனக்கானதாகவே எடுத்துக் கொண்டேன், Swaminathan seemed to be an expert in thinking out difficulties. சில நேரங்களில், ஒரு குட்டிப்பையனுடைய உலகமென்பது பெரியவர்களின் உலகத்தைவிடவும் அதிக கவலைகளைக் கொண்டதாக மாறிவிடுகிறது. 

Swami and Friends | R K Narayan | India Thought Publications | 212 Pages | Rs. 100 | Flipkart.com


4 comments:

  1. Swamy and Friends நான் குடந்தை கலூரியில் சேர்ந்த வருடம் அங்குள்ள நூலகத்தில் எடுத்து படித்து பரவசம் அடைந்ததுண்டு.
    பள்ளி நாட்களில் பாடமாக இருந்த Tome Sawyer (Mark Twain ) பாவனைகள் அப்படியே அதில் காணலாம். ஒருவேளை மார்க் ட்வைன் போலவே தாமும் எழுத ஆர் கே. நாராயண் ஆசை பட்டாரோ என்னவோ. இந்திய இலக்கிய உலகில் ஆர் கே. நாராயணனுக்கு தனி இடம் உண்டுதான்.
    தூர்தர்ஷனில் மால்குடி டேஸ் தொடராக வந்த போதும் பார்த்ததுண்டு ஆனால் அது என்னை கவரவே இல்லை. முன்னரே அவைகளை படித்து அனுபவித்ததால் இருக்கலாம்.
    Swamy and Friends / Malkudi Days -------- Spirit of Child hood

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி...

      ஆர். கே. நாராயண் இந்திய ஆங்கில புனைவில் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டவர். அவரைப் போல் இன்னொருவர் வர முடியாது என்றே தோன்றுகிறது.

      Delete
  2. கதையின் கூடவே வரும் ஓவியங்களும் மிக அழகு. ஆர். கே. லஷ்மணன் தான் வழக்கமாக நாராயணனுக்கு வரைவார்.
    பாத்திரங்களின் உருவம், சுற்று சூழல் ,பெயர்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் அந்நாளைய கிராமிய சூழலையே நமக்கு உணர்த்தும் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மறக்க முடியாத ஓவியங்கள்...

      ஒரு நண்பரின் பகிர்தல் இது :

      R. K Narayan's "Malgudi Day's" Swami and Friends-End Music (1987)
      http://www.youtube.com/watch?v=50UKChFD1Jg

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...