ஆதவனின் 'புழுதியில் வீணை' நாடகம் 292 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தக வடிவில் இப்போது என் கையில் இருக்கிறது. இதில் முதல் 92 பக்கங்கள் முன்னுரை - இதை வாசித்த எவரும் "ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டிக் கொண்டு தொடங்குவோம்" என்ற இதன் துவக்கத்தை மறக்க முடியாது.
இந்த வாக்கியத்தில் துவங்கும் கட்டுரை, அடுத்த பத்தியில் விஷயத்தை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது:

"பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக," ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, "பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்," என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதிப்படுத்துபவை."
"ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா?"" என்று இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேட்கிறார் ஆதவன். பாரதியைக் குறித்து எழுப்பப்படக்கூடிய மிகவும் முக்கியமான கேள்வி இது.
"இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, 'வேதாந்தி' என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்சினை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்" என்று ஆதவன் வருந்துவது அண்மையில் நடந்த ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டுகிறது. மகாகவி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அந்த சிலம்பாட்டம் நடந்தது - அப்போது எரிச்சலாகவும் ஆத்திரப்படுத்துவதாகவும் இருந்தாலும், இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த விவாதத்தில்தான் பாரதியின் கூர்முனைகள் இணையத்தில் வெளிப்பட்டன.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆதவனின் கேள்வி இன்றும் உயிரோடிருக்கிறது. இந்தக் கேள்வியைக் கேட்டதால், இதற்கான விடை தேடப்பட்டதால், 'புழுதியில் வீணை" நாடகத்திற்கு ஆதவன் எழதிய "ஒரு முன்னுரை" முக்கியமானதாகிறது. இன்றும் எது தேச பக்தி, எது கலை, எது வேதாந்தத்தின் இயல்பு என்ற கேள்விகள் பிரச்சினைக்குரியனவாக இருக்கின்றன. இவை சம்பந்தமாக எதிரெதிர் நிலைப்பாட்டில் நிற்பவர்களும் பாரதியை நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல, இந்த தேசத்தையும் இதன் கலைகளையும், ஏன், வேதாந்தத்தையும்கூட நேசிக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன். ஆனால் பார்வையாளர்களின் கரவொலியால் இயக்கப்பட்ட ஒரு நாடகத்தின் தேவைகளுக்காக அரிய வாய்ப்பொன்றை இழந்தோம். இழந்தும் என்ன, இன்றும் திரும்பத் திரும்ப தேசம், கலை, வேதாந்தம் என்று நிழல் விவாதம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
புதர் மண்டி, மறக்கப்பட்ட பழம்பாதையைப் போன்ற முக்கியத்துவம் கொண்டது ஆதவனின் கேள்வியும், அதற்கான விடை தேட அவர் மேற்கொண்ட தேடல்களும். வாசக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளம்தான் ஆம்னிபஸ், இதில் விமரிசகர்கள் கிடையாது. ஆனால், ஒரு சிறு பொறியாகவாவது இந்த நினைவூட்டல் செயல்பட்டு, தேசமும் கலையும் வேதாந்தமும் இணையும் பாரதி என்ற அந்த தனிப்பெரும் புள்ளியில் துவங்கி இந்த மூன்றின் தன்மை குறித்தும் வெளிச்சம் ஏற்பட என்றாவது ஒரு நாள் வழி திறக்க வேண்டும்.
௦௦௦௦
இந்த முன்னுரை பாரதியின் வாழ்வு குறித்த ஐயங்களை நீக்குவதையும், அவரது பார்வை எப்படிப்பட்டது என்பதை விளக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, சுதேசமித்திரனின் ஆசிரியர் மிதவாதியான ஜி சுப்பிரமணிய ஐயருக்கும் தீவிரவாதியான பாரதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதுதான் சுதேசமித்திரனை விட்டு பாரதி விலகக் காரணமாக இருந்ததா என்பதை விரிவாகப் பேசுகிறார் ஆதவன். இதே போல் நிவேதிதா குறித்து பாரதிக்கு இருந்த அபிமானம் -

"சென்னையில் (திலகரின்) புதிய கட்சியின் ஒரே பிரதிநிதியாக விளங்கியவரும், அக்கட்சியின் சார்பின் 'இந்தியா'வின் பக்கங்களிலும் பொது மேடைகளிலும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தவருமான பாரதி, தனது 'தேசிய கீதங்களின்' முதல் இரு தொகுதிகளை திலகருக்கு அல்லவா (நியாயமாக) சமர்ப்பணம் செய்திருக்க வேண்டும்? இதை அவர் செய்யாதது, கலை, சமூகம், அரசியல், ஆன்மீகம் முதலிய பல தளங்களை அளாவிய அவருடைய பரந்த அக்கறைகளையும், இந்த அக்கறைகளின் சாதகமான எதிரொலியை அவர் நிவேதிதாவிடமே பெற்றதைக் காட்டுகின்றன".
அரசியலில் வன்முறைப் பாதையை பாரதி ஆதரித்தாரா, ஆஷ் துரை கொலையில் அவரது பங்கு என்ன?, பாரதியின் ஆங்கில எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பது போன்ற கேள்விகள் : "கிளாஸ்கோவில் பருத்திச் சாலையில் நெருப்பு பற்றி அது நஷ்டமடைந்து விட்டதால் திங்க்ரா உயிர்த்தெழுந்து விட்டாரா? நம் பாரதவாசிகளுக்கு அதனால் என்ன அனுகூலமாய் விட்டது? நாமேன் அதையோர் பழிவாங்குதலைப் போல் கொள்ள வேணும்?" என்பது போன்ற பாரதி மேற்கோள்கள் பாரதி ஆங்கில அரசையோ மக்களையோ வெறுக்கவில்லை, அந்த ஆட்சியின் அடக்குமுறையை மட்டுமே வெறுத்தான் என்று சொல்ல பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
ஆரம்ப காலம் முதலே பாரதி ஓர் ஆன்மிகவாதி இருந்தார் என்கிறார் ஆதவன் - "அவருடைய ஞான ரதத்தைப் படித்தாலே போதும், 1908ஆம் ஆண்டில், தமது 26வது வயதிலேயே அவர் வேதாந்தியாக (அல்லது ஞானியாக) இருந்தாரெனத் தெரிந்து கொள்வதற்கு". பாரதியின் ஆன்மிகம் தனிமனித விடுதலையை மையமாகக் கொள்ளாமல், சமூக விடுதலையை லட்சியமாகக் கொண்டிருந்தது என்கிறார் அவர் - "ஆன்மீகத் தேடலுக்கிடையிலும் தனது சமுதாய பொறுப்பை (Social Commitment) அவரால் திரஸ்கரிக்க முடியாமலிருந்ததே அவருடைய உள்மனப் போராட்டங்களின் ஒரு அம்சம். தனிமையில் யோகசித்தி பெறுவதைவிடவும் மக்களிடையே- அவர்களுடைய தளத்தில், அவர்களுடைய அலைவரிசையில்- குரலெழுப்பி அவர்களை உயர்த்துவதையே அவர் தம் பாணியாகக் கண்டார்". மிகவும் முக்கியமாக, பாரதியின் கலை குறித்து இந்தக் கருத்தைப் பதிவு செய்கிறார், ஆதவன் - "... அக உலகு (அகம்), புற உலகு (புறம்) இரண்டுமே கூடிக் குவிகின்ற அவரது இலக்கியப் பார்வை சங்க இலக்கிய மரபின் மறுபதிப்பாகவே அமைந்துள்ளதும்கூட கவனத்துக்குரியன".
"மண்ணில் தெரியுது வானம்" என்ற ஆன்மிகம், "ஊருக்குழைத்திடல் யோகம்" என்ற தேசபக்தி, இவை யாவும் அடிப்படையில் இந்தியாவின் தொன்மை மிகவும் மகோன்னதமானது என்ற நம்பிக்கையில் பிறந்தவை, இவற்றை திரும்பவும் மீட்க வேண்டும் என்ற லட்சியத்தின் வெளிப்பாடு. மிக இளம் வயதிலேயே இந்த உண்மையை உணர்ந்துவிடுகிற காரணத்தால், இந்த மகோன்னதத்தை இன்றே எட்ட வேண்டும் என்ற தவிப்பால், இவற்றுக்கு சிறுமை ஏற்படுத்தும் விஷயம் எதுவாக இருந்தாலும், அரசியல் லாபங்களுக்காகவோ, தன் சாதி, சமூக சார்பு நிலைகளைக் காப்பாற்றிக் கொள்ளவோ அதைத் தற்காலிகமாகவும்கூட பாரதியால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. "வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் தனது தொடக்க கால பாடலில் 'கொடுமத பாவிகளின் குறும்பை' இகழும் பாரதி அதன் பிறகு எந்தக் கட்டத்திலும் இந்த நிலையிலிருந்து பிறழுவதேயில்லை. 'தேசீய கீதங்கள்' பலவற்றில் 'பொய்ச் சாத்திரங்களை'க் கடுமையாக விமரிசிக்கவும் ஜாதி, மொழி பிரிவுகளைக் கடந்த சமத்துவ உணர்வுகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவும் அவர் தவறுவதில்லை" என்று பதிவு செய்கிறார் ஆதவன்.
பாரதியின் ஆன்மிகம் எத்தகையது, அவன் பார்க்க ஆசைப்பட்ட தேசம் எத்தகையது, அவனது கலையின் தன்மை என்ன என்பதை பாரதியின் எழுத்தைக் கொண்டு மட்டுமே செய்திருக்கலாம். ஆனால், இந்த முன்னுரையிலும், அதைத் தொடரும் நாடகத்திலும் ஆதவன் மிகத் துணிச்சலான முடிவெடுத்திருக்கிறார் - பாரதியின் தனி மனித வாழ்க்கைப் பிரச்சினைகளை எழுதாமல் பாரதி கவிதை மற்றும் கட்டுரைகளின் மேற்கோள்களைக் கொண்டே பாரதியின் சிந்தனையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நாடகம்.
முன்னுரையில் ஆதவன் பாரதி குறித்து இப்படி எழுதுகிறார் -

புழக்கத்திலுள்ள ஏதோ ஒரு சார்பினை அல்லது கருத்து பிரவாகத்தினை ஆதரிக்கும் வழியை பாரதி தேர்ந்தெடுக்காமல் உண்மையை அதன் முழுமையான பரிமாணங்களில் எதிர்கொள்கிற, மக்களை உள்ளும் புறமும் மேன்மைப்படுத்த முயல்கிற, கடினமான வழியைத் தேர்ந்தெடுத்தார்.
ஆதவனின் இந்த நாடக முயற்சியும் அப்படிதான்.
புழுதியில் வீணை (1988),
புழுதியில் வீணை (1988),
ஆதவன்,
விலை ரூ.23,
தாகம்,
சென்னை 5.
தாகம்,
சென்னை 5.
No comments:
Post a Comment