A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

29 Dec 2012

The Book of Tea - Okakura Kakuzo

தேநீரின் வரலாற்றையும் தேநீர் புத்தமதத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிய கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம். 1906ல் எழுதப்பட்டது இப்புத்தகம் சிறியது தான்; ஆனால் பல விஷயங்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். தேனீரைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் புத்தகம் முழுவதும் கிடைக்கின்றன.

இந்த புத்தகம் ஒரு ஜப்பானியரால் எழுதப்பட்டது. மேற்குலகத்திற்காக எழுதப்பட்டது. ஆசிரியர் மேற்குலகம் கிழக்குலகத்தை பார்க்கும் விதம் பற்றி கடுமையான கோபத்தில் இருக்கிறார். எப்போது மேற்குலகம் எங்களைப் புரிந்து கொள்ளும்? குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயலுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். ஒட்டுமொத்த கிழக்குலகத்தின் குரலாக தன்னுடைய குரலை நிறுவுகிறார்.

Indian spirituality has been derided as ignorance, Chinese sobriety as stupidity, Japanese patriotism as the result of fatalism. It has been said that we are less sensible to pain and wounds on account of the callousness of our nervous organisation!

இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கும் கூட மேற்கின் பார்வை கொண்டு நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே, மேற்குலகை இவர் சாடுவது படிக்க ஜாலியாக இருக்கிறது. முதல் பகுதி முழுக்க மேற்குலகிற்கான பதிலும், தேநீரின் வரலாறும் தான். தேநீர் குடித்தால் பெண்களுக்கு அழகு போய்விடும் என்று கூட எழுதியிருக்கிறார்களாம்.

அடுத்தது தேரீரும் கலையும். இதன் ஆரம்ப வரிகளைப் படித்தால் தேரீர் குடிப்பவர்களுக்கு உச்சி குளிரும், காப்பி பிரியர்களுக்கு வயிறு எரியும். Tea is a work of art and needs a master hand to bring out its noblest qualities… There is no single recipe for making the perfect tea, as there are no rules for producing a Titian or a Sesson. இது போதாதென்று லிச்சிலாய் என்ற கவிஞரை வேறு மேற்கொள் கொண்டு அழைக்கிறார் எழுத்தாளர். அந்த கவிஞர் சொல்கிறார், there were three most deplorable things in the world: the spoiling of fine youths through false education, the degradation of fine art through vulgar admiration, and the utter waste of fine tea through incompetent manipulation.

பின்னர், தேநீர் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னென்ன மாற்றங்களை அடைந்தது என்றும் அவ்வப்போதைய சீன அரசாட்சிகளின் தாக்கம் தேநீர் கலாச்சாரத்தை எப்படியெல்லாம் பாதித்தது என்பது பற்றியும் பேசுகிறார். இங்கே முக்கியமான விஷயம் தேநீர் எப்படி தயாரிப்பது என்பது. லூவூ (Luwuh) என்பவர் The Holy Scripture of Tea என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். லூவூ தரும் தேநீர் செய்முறையைப் பார்ப்போம்.

லூவூவைப் பொறுத்தவரை தேநீருக்கு மலை ஊற்றுகளிலிருந்து வரும் நீர் தான் சரி. ஆற்று நீரும் மற்ற ஊற்றுகளின் நீரும் அடுத்தடுத்த ஆப்ஷன்கள்.

நீரின் மூன்று கொதிநிலைகள்ச் சொல்கிறார்; முதலாவது நிலையில் நீரின் மேற்பரப்பில் நீந்தும் மீன்களின் கண்களைப் போல் நீர் குமிழிகள் இருக்க வேண்டும். அடுத்த கொதிநிலை, நீர் ஊற்றுகளில் உருளும் கிரிஸ்டல் உருளைகளின் வடிவத்தை நீர்க்குமிழிகள் அடைய வேண்டும். மூன்றாவது கொதியில், குமிழிகள் உக்கிரமாக நீர் பாத்திரத்தில் கொதிக்க வேண்டும்.
இனி தான் தேநீர் போடுவதன் முக்கியப் பகுதி. குழந்தையின் கை போல் மென்மையாகும்வரை  டீ-கேக்கை (cake tea or brick tea), தீயில் ரோஸ்ட் செய்ய வேண்டும். பின்னர்  அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும். நீரின் முதல் கொதியில் உப்பை போட வேண்டும். ஆம் உப்பே தான். (வடை, அல்லது முறுக்கு சாப்பிட்டுவிட்டு தேநீர் குடிக்கும் போது, அதன் சுவை இன்னும் அதிகமானதாகத் தெரியும். கவனித்ததுண்டா?) இரண்டாவது கொதியில் பொடி செய்த தேநீரைப் போட வேண்டும். மூன்றாவது கொதியில் குளிர்ந்த நீரை விட வேண்டும். இப்படிச் செய்வதால் நீரின் இளமை மீண்டும் வந்துவிடுமாம். அடுத்தது வடிகட்ட வேண்டும் என்று நினைத்து தான் நானும் படித்தேன். ஆனால், விஷயம் கவித்துவமாகப் போகிறது “O nectar! The filmy leaflet hung like scaly clouds in a serene sky or floated like waterlilies on emerald streams”. அமைதியான வானில் மிதக்கும் செதில் மேகங்களைப் போலும் மரகத ஓடைகளில் நீந்தும் தாமரைத் தடாகங்களைப் போன்றதுமான அமிழ்தே!"

தேநீரில் வெங்காயம் போடுவார்கள் என்று இந்த புத்தகத்தில் தான் அறிந்துகொண்டேன். தேநீரில் எலுமிச்சைப்பழம் போட்டது ரஷ்யர்களாம். தற்காலத்தில் திபத்திய மடாலயங்களில் தியானம் செய்யும் போது தூக்கம் வராமலிருக்க (எல்லா இடங்களிலும் புத்தமத்தவர்கள் தேநீர் குடிக்க இதுவும் ஒரு காரணம்) செய்யப்படும் தேநீரில் யாக்கின் வெண்ணையை சேர்ப்பார்களாம்.

தேநீர் செய்முறையோடு நிற்காமல் எந்த நிறக் கோப்பையில் தேநீர் அருந்த வேண்டுமென்பதும் முக்கியம். லூவூவைப் பொறுத்தவரை நீல நிறக் கோப்பை நல்லது. நீல நிறக் கோப்பையில் தேநீர் மேலும் பச்சை வண்ணம் கொண்டதாகத் தெரிவதால் அப்படி. தேயிலைப் பொடி மூலம் செய்யப்படும் தேநீருக்கு கருநீலக் கோப்பையும், தேயிலைகள் மூலம் செய்யப்படும் தேநீருக்கு வெள்ளை கோப்பையும் உகந்தது என்கிறார் ககுசோ ஒகுரா.

புத்த துறவிகள் கூட்டாக இணைந்து தேநீர் அருந்துவார்கள். அது தான் tea ceremony. ஒரு தேநீர் விருந்துக்கு அழைக்கும் துறவி (இவர் தான் டீ மாஸ்டர்) என்னென்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட விஷயங்கள் சொல்கிறார். தேநீர் விருந்து நடக்கும் இடம் பின்வரும் பகுதிகளைக் கொண்டது; காகோய் அல்லது சுகியா (இரண்டும் வேறு வேறு) – இங்கு தான் விருந்தினர்களுக்கு தேநீர் வழங்கப்படும். மிட்சுயா – தேநீர் கோப்பைகள் கழுவும் இடம்; மச்சியாய் – உள்ளே அழைக்கப்படும் வரை விருந்தினர்கள் இங்கே காத்திருப்பார்கள்; ரோஜி – நடை பாதை. இந்த நடை பாதையை எப்படிப் பராமரிக்க வேண்டுமென்பதற்கு ஒரு ஜென் கதை சொல்கிறார் எழுத்தாளர்.

ஒரு துறவியின் மகன் நடை பாதையை சுத்தம் செய்துகொண்டிருக்கிறான். அத்துறவி எல்லா அப்பாகளைப் போல மகனிடம் “என்ன சுத்தம் செய்திருக்கிறாய்?” என்கிறார். அவன் உடனே மேலும் சில குடம் தண்ணீர் விட்டு சுத்தம் செய்கிறான். அப்பாவோ மீண்டும் அதே பாட்டைப் பாடுகிறார். மகனுக்கு கோவம் வந்துவிடுகிறது. பிறகு அந்த தந்தை சுத்தம் செய்வது என்றால் எல்லாவற்றையும் கூட்டி எறிந்துவிடக்கூடாது, என்று ஒரு மரத்தை உலுக்கி சில இலைகளை உதிரச் செய்கிறார். இயற்கை அப்படியே இருக்க வேண்டுமாம். (நான் என்னுடைய மேஜைப் பார்க்கிறேன்; என் பின்னால் இருக்கும் சாப்பாட்டு மேஜையையும் பார்க்கிறேன். நானொரு ஜென் என்பது எனக்கே இப்போது தான் தெரிகிறது. அது எனக்கே தெரியாத வண்ணம் அடக்கமாய் இருந்திருக்கிறேன் என்பது என் ஜென்னியத்தின்  கூடுதல் சிறப்பு.)

புத்தகம் இதற்கு மேலும் நீள்கிறது; என்னென்ன நிறங்களில் விருந்து அறையை அலங்கரிக்க வேண்டும்?; ஒரு இடத்தில் பயன்படுத்திய நிறத்தை மற்ற இடங்களில் பயன்படுத்தக் கூடாது; விருந்து அறையில் பூக்களை எப்படி அலங்காரமாக வைக்க வேண்டும்? அங்கே வாடிப்போன பூக்களை எப்படி தூக்கியெறிய வேண்டும் (கிட்டத்தட்ட சமாதி செய்வது போல்) விருந்துக்கு வருபவர்கள் எப்படி உடையணிந்து வர வேண்டும் என்று நீள்கிறது. இந்த புத்தக்கத்தின் ஒவ்வொரு வரியிலும் தேநீர் குடிப்பது எப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலை என்பதை எழுத்தாளர் நிறுவிக் கொண்டேயிருக்கிறார்.

The tea began to be not a poetical pastime, but one of the methods of self-realization.

Teaism was Taoism in disguise.

மேலிருக்கும் இரண்டு வாசகங்களுமே இந்த புத்தகம் எதை நிரூபக்கிறது என்பது தெளிவுபடுத்தியிருக்கும். ஆனால் ஒன்று, என்ன தான் அப்படித் தான் தேநீர் குடித்தாலும், அதிகாலையில் ஃபில்டர் காப்பி குடிக்கும் போது ஒரு பரவசம் வருகிறதே, ச்சே! அதான்யா வாழ்க்கை. 
The Book of Tea | Okakura Kakuzo | 77 Pages | இணையத்தில் வாசிக்க [HTML], [PDF ~ 3MB]

4 comments:

  1. I luv only boost, maltova, bournvita :P

    ReplyDelete
  2. ஒன்லி பச்சாஸ் லவ் தெம்! :-))

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    டீயைப் பற்றிய இன்னொரு புத்தகம் இது:
    http://puththakam.blogspot.in/2011/09/76-tea-drink-that-changed-world.html

    - ஞானசேகர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி! உங்களுடைய புத்தக அறிமுகத்தை முன்னரே படித்திருக்கிறேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...