பாரதி வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடும் வேளையில் பாரதிக்கு வந்த சோதனையாக, ‘குயில் பாட்டு’ பற்றி எழுதுகிறேன் என இறுமாப்போடு சொல்லிவிட்டேனே தவிர என்ன எழுதுவதென்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. என் முன்னே ‘பாரதியார் கவிதைகள்’ நூலின் 385 ஆம் பக்கம் விரிந்து கிடக்கிறது. மறுபக்கம் பாரதி கருவூலம் நூல். கணினித் திரையின் ஓரத்தில் ஹரிமொழி. இவர்கள் எல்லாரும் எழுதியதைத் தவிர பாரதி பற்றி யார் என்ன எழுதிவிட முடியும்? ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம் - குயில் பாட்டு கவிதையை தமிழ் அறிந்த எல்லாரும் படித்துப் புரிந்துவிட முடியும் - அப்படித்தான் நானும் படித்துப் புரிந்துகொண்டேன். ஆனால், வருடக்கணக்காகப் படித்தால் மட்டுமே பாரதியின் கவிதைகளை நாம் உண்மையாக ரசிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதாவது, ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒருசேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஒரு ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கியப் பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துகள் எனப் பலதரப்பட்ட வகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்ய முடியும். அப்படி செய்யும் பயணங்களில் நமக்குப் பிடித்த கரைகளில் ஒதுங்கி இளைப்பாறி கற்பனையை விரித்து வளர்க்கும்போதே உண்மையான ரசனை கைகூடும்.
பாரதியைப் பற்றி எப்போது என்ன சந்தேகம் வந்தாலும் நான் உடனடியாக ஹரி கிருஷ்ணன் அவர்களது கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன். கண்டிப்பாக நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்விதமான விளக்கத்தை எழுதியிருப்பார். தென்றல் இதழிலும், தமிழோவியத்திலும் அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் பாரதியை ரசிக்க/ புரிந்துகொள்ள நமக்கிருக்கும் சாதனங்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. சங்கக் கவிதைகளைப் போல், பாரதியின் கவிதைகளுக்கும் நமக்கும் கூட கால அளவில் இருப்பதை விட கருத்தளவில் அதிக இடைவெளி வந்துவிட்டதே இதற்குக் காரணம். பல பிரயோகங்களுக்குப் புது அர்த்தத்தை அவர் விளக்கியிருப்பார் (காணி நிலம் என்றால் எவ்வளவு? உண்மையை அறிந்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்)
கவிஞர்களுக்கு எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குரல்கள் இருக்குமெனத் தோன்றும். அவர்களது கனவுகளும் கற்பனைகளும் பீடமேறும் தளத்தில் ஒரு குரலும், தமக்குள் இருக்கும் சஞ்சலங்களுக்கும் தேடல்களுக்கும் மற்றொரு குரலும் அமைந்திருக்கும். பாரதி கருவூலம், புழுதியில் வீணை பதிவுகளில் இதைப் பற்றி நாம் படித்தோம். இந்திரா பார்த்தசாரதி தனது ‘மீண்டும் பாரதி’ எனும் பதிவில் இதைப் பற்றித் தொட்டுப் பேசுகிறார். புனைவாசிரியராக இல்லாமல், சங்கப்பாடல்களின் ரசிகனாக நின்று அவர் பேசும் கட்டுரைகள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத் தெரியும் இடத்தில் கூட திடுமென அவரால் நாம் யோசிக்காத கோணத்தை முன்வைக்கமுடியும். இந்த கட்டுரையில், அகம்/புறம் என்பவற்றுக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறார். அகம் என்பது அந்தரங்கக் குரல் என்றும், புறம் என்பது பகிரங்கக் குரல் என்றும் புது விளக்கம் கொடுக்கிறார். இப்படி யோசிக்கும்போது நமக்குத் தெரிந்த எல்லா படைப்பாளிகளின் படைப்புகளையும் இப்படிப் பிரித்துப் பார்த்துவிட முடியும் எனத் தோன்றியது.
பாரதிக்கும் இதைப் போட்டுப் பார்த்து குயில் பாட்டு பாரதியின் அந்தரங்கக் குரல் எனும் முடிவை எட்டுகிறார்.
திட்டமிட்ட கதை வடிவத்தில் குயில் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் கதை நடக்கும் இடம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் தக்க புறச்சூழலோடு எழுதப்பட்டிருக்கு.
‘செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை’
இன்னமுதைக் காற்றிலே பரவவிடுதல் போல நமது குயில் இனிமையாகப் பாடிக்கொண்டிருக்க, அந்த இனிமையில் தமக்கும் குயிலுருவம் வந்துவிடாதோ என ஏங்குகிறார் பாரதி. அப்படிப்பட்ட குயிலின் பாடல் எதுவெனப் பார்க்கும்போது,
இன்பம், இன்பம், இன்பம்,
இன்பத்திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம்
பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்
மண்ணே,மண்ணே,மண்ணே
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்
மண்ணே,மண்ணே,மண்ணே
காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்
எனச் சோகச் சித்திரமாக குயில் பாடுகிறது.
இதைக் கேட்டு இரங்கும் நமது கவிஞர், குயிலுடன் ஒரு நேர்காணல் நடத்துகிறார். என்ன காரணத்தினால் இப்படியொரு சோகப் பாட்டு பாடுகிறாய் எனும்போது, குயில் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறது.
இப்பகுதியை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். மானுடர் மேல் தனக்கிருந்த காதலை பாடுவதற்கு ஏற்ற பின்னணி இசையை குருவி தேர்ந்தெடுத்துக்கொள்கிறது,
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி மிடைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்..
எனப் பாடியபடி மானுடர் மீது காதலை எதிர்பார்த்து கரையும் உயிராக இருப்பதைப் பார்த்த நமது கவிஞர் - புதியதோர் இன்பச் சுரங்கம் திறந்தது போல பெருமகிழ்ச்சி கொள்கிறார். குயிலோடு காதல் நிறைவேறா காதல், பொருந்தாக்காதல் எனத் தெரிந்தாலும், கவிஞருக்கு புரிந்துவிடுமோ? நான்கு நாட்களுக்குப் பிறகு வரச்சொன்ன சந்தோஷத்திலும், கண்டது கனவா நினைவா எனப் புரியாமல் களியேறிய காமனார் போல் தனது வீட்டுக்குப் போகிறார். அதுவும் சும்மா போகவில்லை, கவிஞன் தத்துவ ஞானியாகிப் போகிறான். எப்படி?
ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தன் தனதின்றி
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம்படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
சென்றே மனைபோந்து சித்தன் தனதின்றி
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம்படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
எப்படி இருக்கிறது கதை? குயிலின் காதல் அப்ளிகேஷனில் மனம் கவிழ்ந்த நமது கவிஞர் எப்படியெல்லாம் திண்டாடி நாளைக் கடத்துகிறார். உலகமே காதலாய் மாறிவிட்டதாம் அவருக்கு - ஒன்றே யதுவாய் - காதலாய் மாறிய உலகம், காதலாகவே மாறிவிட்ட மனம். நான்கு நாட்களுக்குப் பிறகு வரச் சொன்ன காதலியைக் காணத் துடித்து, இரவொன்று யுகமாகக் கழிந்ததில், வைகரைக் காலை ‘பச்சை மரமெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை உணர்ந்தனபோல ஈண்டும் பறவைகள் எல்லா எங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல் புரிந்த குயிலைக் காண நான்..கரை கடந்த வேட்கையோடு’, தாங்க முடியாத காதலில் கிளம்பி மாஞ்சோலைக்குச் செல்கிறார் .(இப்பாடல் பாடப்பட்டதாலேயே அந்தத் தோப்பு இப்போது குயில் தோப்பு என அழைக்கப்படுகிறது)
கவிஞரின் மனம் அறிந்த மரங்கள் பச்சை பசேலென பளபளவென இருந்ததாக தனது அகக்குறிப்பை இயற்கை மீதேற்றி விடுகிறார் கவிஞர்.
குயிலைத் தேடிப் போன கவிஞருக்கு, விதி குரங்கு ரூபத்தில் வந்தது. வஞ்சனையே பெண்மையே என்றும், பொய்த்தேவே மன்மதன் என்றும் வஞ்சிக்கும் பெண் குயிலை நேரில் கண்டு அரற்றுகிறார். மரத்தில் கிளையில் வீற்றீருந்த குயில் அருகில் இருந்த குரங்கிடம் காதல் வசனத்தைக் கூறக் கேட்ட எந்த காதலனுக்குத் தான் கோபம் வராது? அதுவும்,
வானரர்தஞ் சாதிக்கும் மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்
- இதை விட மனிதனுக்கு என்ன இழுக்கு வந்துவிடமுடியும்? வானரரைப் போல பட்டுமயிர் வளர்க்கத்தான் மனிதர்கள் மீசையும் தாடியும் வளர்க்கிறார்களாம். வானரர் போல அழகாக மாற மனிதர் செய்யும் மாய்மாலங்கள் தான் என்னென்ன என குயில் வியக்க, மறைந்திருந்து கேட்கும் நமது கவிஞருக்கு ரத்த அழுத்தம் ஏன் அதிகமாகாது?
உடைவாளிற் கைசேர்த்தேன்
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
என மனிதனாக குயில் முடிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்கிறார்.
குயில் எல்லாவற்றையும் பேசி முடித்ததும் தனது குறுவாளை வீசியக் கவிஞன் கண்டதென்னவோ கனவோ? மாயமாக குயிலும் குரங்கும் மறைந்துவிட்டனவாம். கவிஞருக்கு இருந்த ஏமாற்றத்தை எப்படி சொல்கிறார்? - குட்டிப் பிசாசக் குயிலெங்கும் காணவில்லை.
காதல் தோல்வியிலும் கனவின் மாயத்திலும் மதி மயங்கிய நமது கவிஞன் தள்ளாடியபடி வீடு சேர்க்கிறான். நான்கு நண்பர்கள் அவனது நிலை கண்டு விசாரிக்க, மாலை சொல்கிறேன் இப்போது தனிமை என்னை சூழற்றும் என வேண்டுகோள்விடுக்கிறான். துன்பத்தில் மனதினைத் தொலைப்பதும், வாழ்வை வெறுப்பதும் சகஜம் தான் என்றாலும், கவிஞனின் விரக்தி கவிதை உலகுக்குப் பெரும் கொடை அல்லவா? இரவெல்லாம் மனதில் புழுங்கி,
காதல் தோல்வியிலும் கனவின் மாயத்திலும் மதி மயங்கிய நமது கவிஞன் தள்ளாடியபடி வீடு சேர்க்கிறான். நான்கு நண்பர்கள் அவனது நிலை கண்டு விசாரிக்க, மாலை சொல்கிறேன் இப்போது தனிமை என்னை சூழற்றும் என வேண்டுகோள்விடுக்கிறான். துன்பத்தில் மனதினைத் தொலைப்பதும், வாழ்வை வெறுப்பதும் சகஜம் தான் என்றாலும், கவிஞனின் விரக்தி கவிதை உலகுக்குப் பெரும் கொடை அல்லவா? இரவெல்லாம் மனதில் புழுங்கி,
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துய்ரெனது மார்பையெலாங் கவ்வுவதே!
ஓடித் தவறி உடையனவாம் சொற்களெல்லாம்
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்
கவிஞனின் சோகம் சொற்களையெல்லாம் உடைக்கவல்லது, மதியிழக்கச் செய்யும் வஞ்சகம் பெண்மையின் ரூபமாகவே ஆடவரை சூழ்ந்துகொள்ளும் காரணமென்ன? ஆழம் தெரியா கிணறின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா? இந்த பகுதியில் பாரதியின் கவிதை கூர்மை பெறுகிறது. மிகவும் அற்புதமான கற்பனை கொண்ட இதில், கவிஞனின் காதல் கனிந்து பெரிய தரிசனமாக வரும் நிகழ்வைக் காண்கிறோம். தூக்கமில்லாத சிவந்த கண்கள், காதல் தோல்வியினால் தலையில் பாரம், மனம் முழுவதும் வெறுமை - அச்சமயத்தில் கைமாறு எதிர்பாராமல் யுகம் தோறும் அதிகாலையில் நடக்கும் ஒருவிஷயம் நடக்கிறது. இரவெல்லாம் மனதின் ஆற்றாமையோடு போராடிய கவிஞன் காலை முதல் சூரியஒளியைக் காண்கிறான்.
விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்
இதே போன்ற ஒரு நிகழ்வினை எழுத்தாளர் ஜெயமோகன் விவரித்துள்ளார். ஒரு முறை காசர்கோடு ரோட்டில் தற்கொலை செய்யுநிமித்தம் சென்றுகொண்டிருந்தபோது, மரக்கிளையின் நுனியில் சிறு புழுவொன்றைக் கண்டிருக்கிறார். இது போன்ற சமயங்களில், உலகமே நம்மை சுற்றி கவலைப்படாமல் எதற்கோ இயங்கும்போது, நம்மிலும் சிறியது என நினைக்கும் உயிர்கள் மீது சுய இரக்கம் சார்ந்த கூட்டாளிப் பந்தம் ஒன்று உருவாகும். அப்படியான ஒரு நொடியில், சூரிய ஒளிபட்டு புழுவே ஒளியின் துளியாக மாறியதில் தனது திட்டம் தடைபட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஒரு நொடியைக் கடந்த பின்னர் தனது வாழ்வில் இனி துன்பமில்லை எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
அப்படிபட்ட ஒரு மேன்மையான ஒரு கணம் நம் கவிஞரை செலுத்தியுள்ளது. வெளிப்படும் சூரிய ஒளி, மண்ணை தெளிவாக்குகிறது, பூவையே வியப்பானதொன்றாக மாற்றுகிறது, நீரில் மலர்ச்சியைத் தருகிறதாம் - இப்படிபட்ட விந்தயெல்லாம் தனக்கானது, பிரதியுபகாரம் இல்லாமல் செய்யப்படும் இச்செயல்கள் ஒரு பெரும் இன்பக் களியாட்டம் இல்லையா?
அந்த ஒரு நொடியில் இக்காட்சியெல்லாம் கண்டவன் தனித்தனியாக ஒவ்வொன்றையும் எழுதுவான். நமது கவிஞரும் அதைச் செய்கிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி, இன்பக் களியில் இயங்கும் புவியைக் காண்கிறார். இங்கு எங்கய்யா புவி வந்தது? மேற்சொன்ன ஒவ்வொரு அசைவிலும் புவியின் இன்ப ஆட்டத்தைக் கண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட கவிஞன்! மலரை வியப்பாக்கி! வியப்பதற்கு விஷயமா இல்லை இவ்வுலகில்? ஆனால் கவிஞருக்கு, காலை புலர்ந்ததும் கடமையே கருத்தாக பூத்து நிற்கும் பூவைப் பார்த்ததை ‘புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி’ என முடித்துவிட்டார்.
அந்த ஒரு நொடியில் இக்காட்சியெல்லாம் கண்டவன் தனித்தனியாக ஒவ்வொன்றையும் எழுதுவான். நமது கவிஞரும் அதைச் செய்கிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி, இன்பக் களியில் இயங்கும் புவியைக் காண்கிறார். இங்கு எங்கய்யா புவி வந்தது? மேற்சொன்ன ஒவ்வொரு அசைவிலும் புவியின் இன்ப ஆட்டத்தைக் கண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட கவிஞன்! மலரை வியப்பாக்கி! வியப்பதற்கு விஷயமா இல்லை இவ்வுலகில்? ஆனால் கவிஞருக்கு, காலை புலர்ந்ததும் கடமையே கருத்தாக பூத்து நிற்கும் பூவைப் பார்த்ததை ‘புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி’ என முடித்துவிட்டார்.
எத்தனை ஆனாலும் என்ன, கவிப்பித்தும் காதல்பித்தும் மனிதனை இயல்போடு வாழ விடுகிறதா என்ன? அதாவது உலக இயல்போடு! அவனுக்கென்று ஒரு உலகம். புவியைப் பார்த்து வியந்த மனதோடு குயிலிருக்கும் தோப்புக்கு விரைகிறார் கவிஞர்.
காலை எழுந்தவுடன் காதல் என ஏதோ ஒரு குயில் கவிஞன் தப்பாக எழுதிவைத்துவிட்டான் போலிருக்கு. அங்கே ஒரு காளையிடம் நமது காசனோவா குயில் காதலை உரைத்துக்கொண்டிருக்கிறது.
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
- சாதிப் பிறப்புச் சிக்கல்களையெல்லாம் இப்படியாக குயில் அவிழ்த்துக்கொண்டிருக்க, நமது கவிஞனை எங்கும் ஃபோகஸ்ஸில் காணோம். விம்மும் நெஞ்சோடு, இமை துடிக்கது எங்காவது அமர்ந்து இக்காட்சியினை கண்டிருப்பான்.
பேடைக் குயிலுக்கு இன்னும் என்னவெல்லாம் குழப்பம் பாருங்கள் -
காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்
..ஆசைதான் வெட்கம் அறியுமோ?
..ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்
..ஆசைதான் வெட்கம் அறியுமோ?
..ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
உவமையிலா இன்பம் எனத் தனி ரசனைக்கே வழிவகுத்துவிட்டது நமது குயில். காளையிடம் தனது காதலை நெஞ்சுருக பாடிக்கொண்டிருந்ததை மறைந்திருந்த கேட்ட நமது கவிஞன் வழக்கம்போல வாள் எடுத்து வீச, காளையோடு குயிலும் மறந்துவிட்டது. எதற்காக என்னை தேர்ந்தெடுத்து தனது காதலை குயில் கூறவேண்டும் என அறியமுடியாமல் கவிஞன் பித்தம் பிடித்தவனைப் போல பிதற்றியபடி வீடு சேர்ந்தான்.கண்ணிரண்டையும் மூடி கடுந்துகிலில் ஆழ்ந்துவிட்டான்.
- தொடரும்.
No comments:
Post a Comment