The Argumentative Indian
Amartya Sen
Penguin Books
To Buy/Image Courtesy :Flipkart
“நீ ஏன் இவ்ளோ ஆர்க்யு பண்ற?” என்று எத்தனை தடவை நீங்க உங்க குடும்பம், நட்புவட்டத்திடம் கேட்டிருப்பீங்களோ, எனக்கு தெரியாது. ஆனா நான் நிறைய கேட்டாச்சு.
ஆனா ’உன்னோட ஆர்க்யு பண்ண முடியாது’ன்னு யாரும் என்னிடம் சொன்னது கிடையாது. இவங்களோட
விவாதம் பண்ணி என்ன விட்ருவேன். ஆனா என்னோட மனசுக்குள்ள நிறைய ஆர்க்யு
பண்ணியிருக்கேன். ஆனா எல்லா விஷயத்துக்கும், ஒரு விதமான புகை மூட்டமான முடிவு தான்
கிடைக்கும்.
இந்த விவாதம் பண்ற விஷயம்
இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது ஆயிரம் ஆயிரம் வருஷமா இதையே தான் செய்கிறோம்;
அதில் தான் ஹிந்து என்ற (மதம்)வழிப்பாடு/வாழ்க்கை முறை(?) வளர்ந்தது என்ற விவாதத்தை ”The
Argumentative Indian”-வில் அமர்த்யா சென் முன்வைக்கிறார். 2005ஆம் ஆண்டு வெளிவந்த
இந்த புத்தகம் சக்கை போடு போட்டதா என்று தெரியாது; ஆனால் ஆ.வியில் “கற்றதும்
பெற்றதும்” பகுதியில் சுஜாதா இந்த புத்தகத்தை பற்றி சில வரிகள் எழுதி இருந்தார்.
புத்தகத்தின் அட்டையிலேயே
இந்தியாவின் வரலாறு, பண்பாடு, தனி அடையாளம் (Identity) பற்றிய கட்டுரைகளின்
தொகுப்புன்னு போட்டிருக்கும். ஆனா ஒரு சில இடங்களில் எனக்கு வேறொரு உணர்வு
ஏற்பட்டது. அதை பற்றி அப்புறம். இந்த புத்தகம் மொத்தம் நாலு பகுதியா பிரிச்சு எழுதப்பட்டு இருக்கு.
1.
Voice and Heterdoxy
2.
Culture and
Communication
3.
Politics and Protest
4.
Reason and Identity
புத்தகம் முழுக்க அமர்த்யா சென்
ஆற்றிய உரைகள், பல சர்வதேச பத்திரிகை+ ஜர்னல்(Journal)களில் அவர் எழுதிய
கட்டுரைகள். அதை தாண்டி இந்த புத்தகத்துக்காக தனியா எழுதப்பட்ட கட்டுரைகள்
தொகுப்பு.
முதல் பகுதி மகாபாரதம் தொட்டு
இந்தியாவில் விவாதத்தின் மூலம் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி பற்றி பேசுகிறது.
விவாதத்தின் மூலம் தான் காலம் காலமாக இந்தியாவின் தொன்று தொட்டு வரும் பழக்க
வழக்கங்களுக்கு எதிரான மாற்று கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று நிறைய எடுத்துக்காட்டுகிறார். முக்கியமா வேதங்களில் கூட கடவுள் இல்லா கருத்துக்களுக்கு கூட இடம்
கொடுக்கப்பட்டுள்ளது பற்றியும், அக்பர்
அசோகர் போன்ற மன்னர்கள் அனைத்து மதத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து, அவர்களை விவாதம்
செய்ய வைத்து அதன் மூலம் மதசார்பின்மையை வளர்த்தனர் என்கிறார். முன் சொல்லப்பட்ட
இந்த கருத்து கிட்ட தட்ட பத்து-பதினைந்து முறை மீண்டும் மீண்டும் சொல்லபடுவது ஒரு வித அலுப்பை ஏற்படுத்துகிறது.
முதல் பகுதி முதல் கடைசி பகுதி வரை
நிறைய இடங்களில் ஹிந்து என்பது ஒரு மதம்
கிடையாது, அது ஒரு வாழக்கை முறை என்று கூட சொல்லவில்லை, அது ஒரு விதமான அடையாளம்
(ஹிந்து மதம் இல்லை) என்பதை நிறுவுவதில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். ஹிந்துத்துவவாதிகள்
இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு சொல்கிறார். அதற்கு தேவையாக
பிஜேபி நடத்திய குஜராத் கலவரம் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு பற்றியும் பேசுகிறார். ஆனால்
காங்கிரஸ் சீக்கியர்களை கொன்றதை பற்றியோ, பாப்ரி மஜீத் இடிப்பின் போது மத்தியில்
ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாதது ஆச்சிரியம்.
இரண்டாவது பகுதி இந்தியாவின்
பண்பாடு மற்றும் செய்தி பரிமாற்றம்
குறித்து அலசுகிறார். இதில் பெரும் பகுதி தாகூர் மற்றும் சத்யஜித் ரே-வுக்கே சரியாகப் போய்விடுகிறது. அமர்த்யா சென் பிரிக்கப்படாத வங்காளத்தில் பிறந்து
இருக்கலாம், சாந்தி நிகேதனில் கல்வி பயின்று இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த
இந்தியாவையும் தாகூரின் பார்வையில் இருந்து சொல்வது கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஒரு
சமயத்தில் காந்தியின் நாட்டுப் பற்றின் மூலம் தேசிய உணர்வை கண்டிக்கும் தாகூரின்
செயலை நியாப்படுத்தும் சென், நிறைய
இடங்களில் இந்தியாவை ஒற்றுமை இப்போது ஹிந்துத்துவவாதிகளால் பறிபோகிறது என பேசுவது
நகைப்புக்குரியது.
புத்தகத்தின் பலம் எப்படி தனிமனித
சுதந்திரம், அறிவியல் வளர்ச்சி, கணிதம் போன்றவை மேற்கிலிருந்து தான் வந்தவை போன்ற மாயயை
உடைக்கிறார். பிரம்ம குப்தா கண்டுப்பிடித்த கணித சூத்திரங்கள் அரேபியா மொழியில்
அலேபுர்னியால் (Alberuni) மொழிப் பெயர்க்கப்பட்டு, மேற்கின் வழியாக
மீண்டும் இந்தியாவில் நுழைந்து உள்ளது. அக்பர், அசோகா போன்ற மன்னர்கள், தம் மக்கள்
எந்த மதத்தினையும் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கியதையும், நிறைய வரலாறு
எடுத்துக்காட்டுகளோடு எழுதி இருக்கிறார்.
மூன்றாவது பகுதியில் இந்தியாவின்
அரசியல் மற்றும் பாலினம், அதன் வரலாறு, வளர்ச்சி, பலவீனம் பற்றி பேசுகிறார்.
எப்படி பெண் கல்வி மூலம், நாட்டின் பிறப்பு வளர்ச்சி குறைகிறது என்பதையும், அதே
சமயம் படித்த பெண்கள் பல பேர் பெண் குழந்தையை
கருச்சிதைவு செய்வதின் முரண் பற்றியும் குறிப்பிடுகிறார். இப்பகுதியின்
கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி-மாறி அணுகுண்டு சோதனை செய்ததைப்
பற்றியும், அமைதியான, நிலையான
அரசு கொண்ட ஆட்சி பாகிஸ்தானில் அமைவது இந்தியாவுக்கு நல்லது. அது தான் இந்தியா
செய்ய வேண்டிய முதற் முயற்சி எனவும் குறிப்பிடுகிறார்.
கடைசி பகுதி “சிந்தனை மற்றும்
அடையாளம்” (reason and Identity) பற்றிப் பேசுகையில் முன்னர் பேசிய செய்திகளே
மீண்டும் மீண்டும் வருவது அலுப்புத் தருகிறது. அதே சமயத்தில் இந்த கருத்துகளுக்கும்
“The Argumentative Indian” என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்க
வைக்கிறது. இந்த பகுதியில் குறிப்பிட படவேண்டிய கட்டுரை, இந்தியாவில் புழங்கும் நாட்காட்டிகள்
பற்றியது. எப்படி பல்வேறு மதங்களின் நாட்காட்டியும் எதாவது ஒரு சமூகத்தின் ஒரு
அம்சத்தை தன்னுள் அடக்கி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
முக்கியமாக வங்காளத்தில் ஒரு
குறிப்பிட்ட சமூகம் உபயோகபடுத்தும் நாட்காட்டி அக்பர் தோற்றுவித்த நாட்காட்டியின்
ஒரு அம்சத்தை தத்து எடுத்துக் கொண்டுள்ளது போன்ற செய்தி, மிகப் புதிது. கடைசி வரை இந்தியாவின் இந்து மதம், ஒரு மதமே
அல்ல என்று சாதிப்பதில் குறியாக இருக்கிறார்.
பொருளாதாரத்தில் நோபெல் பரிசு
வாங்கி இருந்தாலும், உலகமயமாக்கலும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரே ஒரு கட்டுரை
எழுதி இருப்பது உறுத்தல். அதே சமயம் உலகமயமாக்கலுக்கு ஆதரவு செய்வதற்கு, கணிதம் முதல் சில்க் துணி உதாரணம் காட்டும் சென், அதன்
தாக்கத்தை ஒரே ஒரு வரியில் தந்து, தனது சோகத்தை எழுதி இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது.
மொத்தமாக பார்க்கும் போது நிறைய புதிய
விஷயங்களை இந்த கட்டுரை தொகுப்பின் மூலம் அறிந்து கொண்டாலும், இந்தியாவை
வடநாட்டு பார்வையில் இருந்தே சொல்லப்பட்ட மாதிரி புத்தகத்தை முடிக்கும் போது
தோன்றியது.
நான் இந்நூலை நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் வடநாட்டுத் தாக்கம் அதிகம் இருந்ததால் ஆழ்ந்து படிக்கவில்லை. இப்புத்தகம் படித்தபோது நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை இப்போது புரட்டிப் பார்த்தேன். சில,
ReplyDelete1. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவைப் பற்றிய அனைத்துப் புத்தகங்களும் மதங்கள் என்ற பிரிவில் வைக்கப் பட்டிருந்ததை ஆசிரியர் பார்த்தது.
2. ஐநாவில் கிருஷ்ண மேனனின் 9 மணிநேர இடைவிடா உரை.
3. இராஜா ராம் மோகன்ராயின் மரணம் பற்றிய கவிதை.
4. பீகார் பூகம்பம் பற்றி காந்தியும் தாகூரும் சொன்ன கருத்துகள்.
நல்ல பதிவு.
- ஞானசேகர்
Thanks for sharing your thoughts and glad you liked the post
ReplyDelete