A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

8 Dec 2012

சுப்புடு தர்பார்

கர்நாடக சங்கீதம் எத்தனை எத்தனை மேதைகளையோ கண்டிருக்கிறது (கண்டிருக்கும். நான் கண்டதில்லை). ஆனால் நாங்களும்கூட சுப்புடுவைத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

எந்த விமரிசனத்திலும், அதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ காட்டம் இருந்தால், அந்த விமரிசனம், "இதோ இங்கே இருக்கு பொழுதுபோக்கு" என்று நம்மை அழைக்கிறது. நம் தெருக்களில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டால்கூட கூட்டம் கூடி அங்கே ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடுகிறது - அப்புறம் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நம் எல்லோரையும் வம்புச் சண்டைகள் வசீகரிக்கின்றன. விஷயம் இல்லாமல் இதைச் செய்கிறவன் சீக்கிரமே கோமாளியாகி விடுகிறான், ஆனால் விஷயம் தெரிந்தவனுக்கு பரவலான மக்களைச் சென்று சேர நகைச்சுவையும் கற்பனையும் காட்டமான குரலும் கருவிகள். சுப்புடுவுக்கு விஷயம் தெரியுமா என்ன, எந்த அளவுக்குத் தெரியும் என்ற விஷயம் எனக்குத் தெரியாது, ஆனால் அவரிடம் காட்டம், கற்பனை, நகைச்சுவை என்ற இந்த மூன்றும் முழுமையாக இருந்தன என்பது அவரது "சுப்புடு தர்பார் - பகுதி -1" வாசிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.


தன் இசை விமரிசனத்தை இப்படிச் சொல்லிக் கொள்கிறார் சுப்புடு -
நான் எழுதுவது கொச்சைத் தமிழ். என் குறிக்கோள் இசை இலக்கணத்தைப் பற்றி எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை எளிய நடையில் நகைச்சுவை கலந்து ஊட்டினால்தான் புரியும் என்று புரிந்து கொண்டு செயல்பட்டேன். அமோக வெற்றி பெற்றுள்ளேன்.

நான் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.

நானும் என் வலதுகை, கந்தசாமியும் உட்லண்ட்ஸில் இருந்து வெளியேறி டாக்ஸி ஸ்டாண்டை நெருங்குகிறோம்.

அங்கு உட்கார்ந்திருந்த டாக்ஸி டிரைவர் ஒரு தயக்கத்துடன் என்னை அணுகி...

"சாமி, தினமணி பேப்பர்ல அந்த கடைசி பக்க போட்டோ நீங்கதானே? நீங்க பெரியவங்க. உங்க பெயரைச் சொல்ல கூச்சமாயிருக்கு. எனக்கு பாட்டெல்லாம் ஒன்றும் தெரியாது. ஆனா நீங்க சாதாரண தமிழில் ருசியா எழுதறதை தினமும் படிக்கிறோம். நீங்க நல்லாயிருக்கணும்," என்றார்.

எனக்கு பாரத ரத்னா கிடைத்தால்கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டேன். எனக்கு கண்ணீர் மல்கிவிட்டது (ரிங் மாஸ்டர் குன்னக்குடி!)

இவரது விமரிசனங்கள் பாமரர்களாலும் ரசித்து வாசிக்கப்பட அவற்றின் வசீகர தலைப்புகளும் ஒரு காரணம் - சில:

மேடையில் ஸ்ரீதேவி, பனங்காட்டு நரி, ஹைதரும் யாக்கூப்பும், விடு ஏப்பம், பந்தாடிய பந்துவராளி, ஊர்மிளாவின் ஊர்த்வதாண்டவம், ஏன் இந்த இரட்டை நாக்கு, பிளேட்டைத் திருப்பு, சாஸ்திரிகள் பைஜாமா போடலாமா, எடு AK 47, வாயைத் திறந்தால் வண்ணான் வருவார், அத்தான் முகத்திலே புன்சிரிப்பு, மரணக் கிணற்றில் மோட்டார் சைக்கிள், நிஷாதங்கள் ஆடிய பால்ரூம் டான்ஸ், பேங்காக் மஸாஜ்.

சுப்புடு என்றாலே நக்கல்தானே? சென்னை தொலைக்காட்சி நிலைய இசை நிகழ்ச்சிகள் - "எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தீப்பெட்டி மாதிரி ஒரே செட்"(ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை?)

'அந்த தில்லி கிழத்தை உள்ளே விடாதே' என்ற கட்டுரை முழுக்க முழுக்க நாம் ரசிக்கும் சுப்புடு:
"அண்ணாமலையில் நல்ல விஞ்ஞான பக்குவமான ஒலிபெருக்கி இயந்திரம் இருக்கிறது. அதை யாரோ வாட்ச்மேன் ஆபரேட் செய்கிறார் போலிருக்கிறது. இவ்வளவு செலவு செய்பவர்கள் அங்கே இசை பிரக்ஞை உடைய ஒரு தொழில் தெரிந்த ஆசாமியைப் போட வேண்டாமோ? காலை 9.30க்கு மின்சார பித்தானைத் தட்டிவிட்டு, இரவு 9.15க்கு அதை அணைப்பதற்கு ஒரு வாட்ச்மேன்கூட வேண்டாம்.

ஒரு நல்ல ஜாதி நாய் போதும்"

டாக்டர் வி.வி. ஸ்வர்ண வெங்கடேச தீட்சிதரின் கிருதிகளை செம்மங்குடி சீனிவாச ஐயர் பாடிப் பிரபலப்படுத்த வேண்டும் என்று விழா மேடையில் கோரிக்கை வைக்கப்படுகிறது. சுப்புடுவின் பதிலடி இது : "கே.வி.என்.னுக்கு என்ன, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லிவிட்டார். செம்மங்குடியும் ஒரு பல்செட் கேஸ் என்று அவருக்குத் தெரியாதா? காரிகை செப்படையை அவர் எந்த ஜன்மத்தில் பாடுவது?"

பிரபலங்களை அடிக்க அவர் அஞ்சுவதில்லை என்பது சுப்புடுவின் பிரபலத்துக்கு முக்கியமான காரணம்:

"இந்த வருஷம் கலாநிதி பெற போகும் நேதநூரி கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு ரசனையான கச்சேரியை எதிர்பார்த்தேன்," என்று துவங்கும் கட்டுரையில், -
"தன் சக்திக்கு மீறி பாடாமல் செயல்பட வேண்டும்.

இந்த மக்கர் சாரீரத்தை வைத்துக் கொண்டு 'கன்னட கௌளை' போன்ற ஒரு பச்சோந்தி ராகத்தை அளவுக்கு மீறி ஆலாபனை செய்யலாமா?

ஒரு பழைய கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு குதிரை திருட்டு போய் விட்டது. சாட்சி கோமுட்டிச் செட்டியார். வாதி பிரதிவாதி இருவருக்கும் வேண்டியவர். சாட்சி சொன்னார், சாமர்த்தியமாக.

"முந்திரி சூஸ்தே ஆளவந்தார் குர்ரம். வெனக்காயலு சூஸ்தே பாபு செட்டி குர்ரம்"

அதாவது முன்னால் பார்த்தால் ஆளவந்தார் குதிரை.

பின்னாலே பார்த்தால் பப்பு செட்டி குதிரை என்றாராம்.

எப்படி சாட்சி!

இந்த கன்னட கௌளை அந்த வகை.

ஒரு பக்கம் பார்த்தால் பீம்ப்ளாஸ். மற்றொரு பக்கம் பார்த்தால் சுத்த தன்யாசி அல்லது மேலே கரஹரப்பிரியா அவரோகணம்.

வளமில்லாத சாரீரத்தை வைத்துக் கொண்டு இந்த ராகத்தை ஆலாபனை செய்து என்ன பயன்?

விழலுக்கு இறைத்த நீர்!" (வைஜயந்தி மாலாவின் வசீகர நடனம்)

இங்கு மாட்டிக் கொண்டவர் பீம்சென் ஜோஷி:

"அவர் வழங்கிய ராகத்திற்கு 'புரியா' கல்யாண் என்று பெயர். 'புரியா' என்று பெயர் இருந்தாலும் நம்ம ரசிகர்களுக்கு அது பூர்வ கல்யாண் என்று புரியும். அதாவது கல்யாணியில் கோமள ரிஷபம். அங்குதான் ஜங்ஷன் மாறுகிறது. பீமசேனன் அருமையான குரல் வளம் படைத்தவர். சுருதி சுத்தம். ஸ்வர சுத்தம். இந்த ராகத்தில் எடுத்த எடுப்பிலேயே மேல் ஸ்தாயியில் கோமள ரிஷபத்தை அழுத்தாமல் சதுஸ்ருதி ரிஷபத்தை மென்னியில் பிடித்தார். ரசிகர்களுக்கு லேசாக ஷாக் அடித்தது.

சரி, ஏதோ சென்னை கழுத்தறுப்பு குளிர் காலமாக இருக்கலாம் என்று விட்டுவிட்டார்கள். அது மறுபடியும் வந்தது. ஓகோ, ஸ்ருதி சேர்த்துக்கொண்டு வந்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டார்கள். மூன்றாவது முறையும் வந்தது ஸ்வாமி. "இது என்ன கூத்து?" என்று அவையோர் அங்கலாய்த்தார்கள்.

ஒன்று அகம்பாவமாகவோ அல்லது அலட்சியமாகவோ இருக்க வேண்டும். அல்லது ஹிந்துஸ்தானி ராகங்களைப் பற்றி தமிழனுக்கு என்ன தெரியும் என்று இருக்க வேண்டும்.

அவர்தான் அப்படி செய்தார் என்றால் அந்த ஹார்மோனியக்காரனும்கூட. அந்த சதுஸ்ருதி இனிமையை ப்ளாட்டிங் பேப்பர் போல் ஒற்றி எடுத்தான்.

சீ என்றாகிவிட்டது" (பைஜாமா சங்கீதம்)

கட்டுரைகளில் ஏராளமான பொதுமைப்படுத்தல்கள். பொதுமைப்படுத்தி எழுதுவதில் ஒரு நுட்பமான இலக்கிய உத்தி அரசியல் இருக்கிறது. அதைப் பிற்பாடு ஒரு தடவை எழுத வேண்டும். இப்போதைக்கு சுப்புடுவின் பொதுமைப்படுத்தல்:
"நானும் ஒரு தமிழன்தான். ஆகவே என் சமூகத்தைச் சாடுவதற்கு எனக்கு உரிமை உண்டு. நாம் ஒட்டுமொத்தமாகச் செவிடர்கள். எங்கு போனாலும் சத்தம்தான். அரை விநாடி நிம்மதியாய் யாரையும் இருக்க விடமாட்டோம். எங்கு போனாலும் ஒலிப்பெருக்கி, கோபுரத்திலிருந்து குஞ்சன் நாயர் டீக்கடை வரை காசெட்டுகள் அலறுகின்றன. இவ்வளவு ரசனையாகப் பாடுகிறார்களே நம் வித்வான்கள், அவர்களுக்கு நாத பரிமாணம் என்றால் என்னவென்றே தெரியாது. வாய்ப்பாட்டுக்காரர்கள் எல்லோருமே மைக்கேல் ஜாக்சன்கள். அதாவது, மைக்கைக் காதலிப்பவர்கள். இரண்டு நிமிஷத்துக்கு ஒரு தரம் மைக்கைப் பார்த்து 'தூக்கு தூக்கு' என்று கையை ஆட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்களைத் தூக்கிலிட வேண்டும். அதிலும் சில பிடில்காரர்கள் பிடிவாதக்காரர்கள். அவர்கள் சொற்களைக் கேட்காவிட்டால் சீறி கச்சேரியையே கெடுத்து விடுவார்கள். அவர்களுக்கு, அவையோர் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பற்றி அக்கறையே இல்லை" (என்னை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்).

சுப்புடு இளம் கலைஞர்களையும் நடன மங்கையரையும் மனமார புகழ்கிறார். ஆனால் நம்மைத் தவிர வேறொருத்தரைப் பாராட்டுகிறார்கள் என்றால் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதில் நமக்கு என்ன சந்தோஷம் இருக்கிறது? எனவே ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று சுப்புடுவின் ஒரே ஒரு புகழ்ச்சி மட்டும்:
நானும் கிட்டத்தட்ட 65 வருஷங்களாக இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாண்டலின் சீனிவாசைப் போல் ஒரு அவதார புருஷனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. என்னால் அவனது இசை மேதாவிலாசத்தை ஆய்வு செய்யவோ, எடை போடவோ இயலவில்லை (மாண்புமிகு மாண்டலின் மன்னன்)
இதில் குறிப்பாக நடன மங்கையரை அநியாயத்துக்கு புகழ்கிறார் சுப்புடு என்பதைப் பதிவு செய்வது மிகவும் முக்கியம். வைஜயந்தி மாலா 44 வயது குறைந்து +2 பெண் மாதிரி ஆகிவிட்டார் என்று ஒரு கட்டுரையில் எழுதுகிறார் - என்ன கொடுமை ஸார் இது, லாலுவுக்கு சரியான போட்டிதான் போல இவர்.

சுப்புடு தர்பார் - பகுதி 1,
விலை ரூ.100,
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்,
92/66, டி.எஸ்.வி. கோயில் தெரு,
மயிலாப்பூர்,
சென்னை 600 004.
இணையத்தில் வாங்க : Tamil Books Online
புத்தகப் புகைப்பட உதவி : இட்லிவடை


பிற்சேர்க்கையாக ஒரு விண்ணப்பம் :

"Mediocrity is an unbeatable force," என்று அவதானித்துவிட்டு, "The mediocre shall inherit the earth," என்று சபித்துமிருக்கிறார் அருமை நண்பர் லலிதா ராம். "V. Naidyajathan on the computer played the role of a teaching assistant in such a way that a knowledgeable listener could weigh the general trend of emptiness of stridency of black board against his power point persuasion. Like vocal lecture, computer too can evoke sleep." என்று பிளந்து கட்டுகிறவர் அருண் நரசிம்மன்.  இரண்டு பேரும் சேர்ந்துவிட்டால் கேட்க வேண்டுமா?

இயல்பான நக்கல், விஷய ஞானம், பொதுமைப்படுத்தி எழுதத் தயங்காத பரந்த மனம் - என்று விமரிசகர்களுக்கு இருக்க வேண்டிய கல்யாண குணங்களில் முதன்மையான மூன்றும் அமையப்பெற்றவர் லலிதா ராம். மற்றவர்கள் நம்மை எக்சென்ட்ரிக் என்று நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் பொது புத்தியை அனுசரித்துப் போவது விமரிசகர்களுக்கு இருக்கக்கூடாத குணம். "பொது புத்தி என்பது மடமையடா" என்று பாடுபவர் அருண் நரசிம்மன்.

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல பட்டு வேட்டி அங்கவஸ்திர செட்டைக் கழட்டிவிட்டு, ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டுக் கொண்டு லலிதா ராம் அருண் நரசிம்மனுடன் சேர்ந்து அதகளம் பண்ணக் கிளம்பிவிட்டார். இந்த டிசம்பர் சீசனுக்கு ஒரு அட்டகாசமான துவக்கத்தைத் தந்திருக்கின்றனர் இவர்கள் - இரட்டையரின் முதல் அட்டாக்குக்கு ஆளான அந்த அநாமதேய பாடகருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
"தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தவருக்கு, மறந்தது தன்னை மட்டுமல்ல பாட நினைத்த ராகத்தையும்தான் என்று நினைவுக்கு வந்தது போலும். ஆலாபனையின் நடு சஞ்சாரத்தில் பளாரென்று கன்னத்தில் அறைவதுபோல ‘வாகதீஸ்வரி’ என்று மைக்கில் அதிர்ந்தார். அவர் தனக்கே சொல்லிக் கொண்டது போலத்தான் தோன்றியது. அப்பாடா அதான் ஞாபகம் வந்துவிட்டதே என்று நம்மை நிம்மதியடைய விடவில்லை. கமாஸிலிருந்து, ஹரிகாம்போஜி வழியாக வாகதீஸ்வரியை அடைந்துவிட்டேனாக்கம் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டாலும், ஆலாபனையில் தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருந்தார்.

முந்தைய ராகத்தின் தாக்கத்திலிருந்து வெளி வந்து வாகதீஸ்வரியை அவர் ஒரு முறையாவது நேற்று பாடியிருக்கக் கூடும். கேட்பதற்குள் நமக்குப் பொறுமை போய்விட்டது. தனியில் எழுந்து சென்றால்தானே பாடகருக்கு கோபம் வரும், பாடும் போது எழுந்து சென்றால் பரவாயில்லை என்று அரங்கை நீங்கினோம்." - சொல்வனம்

சுப்புடுவின் சரவெடிகள் ஓய்ந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும்  அமைதியைக் குலைக்க யாரும் வரமாட்டார்களா என்று அவலுடன் ஆவலுடன் இத்தனை காலம் காத்திருந்த வாசகர்கள் சார்பாக சீசனை இந்த இரட்டையர்கள் கலகலக்க வைக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

1 comment:

 1. சரியான புத்தகம், சிரிக்காமல் கிண்டலடிக்கும் பிரிட் வகை நச் குசும்புகள்...
  அறிமுகத்திற்கு நன்றி.
  சுப்புடு அவர்களின் ஒரு கட்டுரை - சங்கீதத்தைப் பற்றி அல்ல - படித்த நினைவு இருக்கிறது.
  அவர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரங்கூன் (அல்லது பர்மாவின் ஒரு பகுதியிலிருந்து) கால்நடையாகவே இந்தியா வந்து சேர்ந்ததை எழுதியிருப்பார். கடும் பசியில் மலையின் நடுவில் ஒரு சர்ச்சில் பாதிரியார் கொடுத்த டீ மிக ருசியாக இருந்தது என்றெல்லாம்...
  நல்ல காலம், இவர் இலக்கியத்திற்குள் வரவில்லை, வந்திருந்தால் யப்பா!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...