பெயர் : இரும்பு குதிரைகள்
ஆசிரியர் : பாலகுமாரன்
உள்ளடக்கம் : நாவல்
பதிப்பகம்/ To buy/Photo Courtesy : விசா பப்ளிகேஷன்ஸ்
பொறுப்பு துறப்பு : மிகத் தீவிர பாலகுமாரன் ரசிகர்கள் இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளை தவிர்க்கவும் :-)
இது நான் வாசிக்கும் முதல் பாலகுமாரன் நாவல். நான் எப்போதும் புத்தகம் வாடகை எடுக்கும் நூலகத்தில் பாலகுமாரன் நாவல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். ஏனோ அந்த புத்தகம் எல்லாம் எடுத்து படிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வந்ததே இல்லை. சின்ன வயசில் குமுதம், கல்கி, ஆ.வி படிச்சா வீட்டுல திட்டுவாங்க. ஆனா அதையும் தாண்டி பரீட்சை முடிஞ்சு, பரீட்சைக்கு காலைன்னு ,கதை புஸ்தகம் படிச்சே வளர்ந்த பலகீனமான உடம்பு இதுJ.
எதாவது நல்ல கதை மேற்குறிப்பட்ட புஸ்தகத்தில் வந்தால், அதை பத்தி சின்ன உரையாடல் ஓடும், ’இந்த கதை படிச்சியா ? இல்லைனா படிச்சுரு?’ ஆனா ஒரு தடவை கூட பாலகுமாரன் கதை படிச்சியான்னு என்னை யாரும் கேட்டது இல்லை, ஒரு சில சமயம் சில நாவல் நல்லா இருந்தா அம்மா கூடபடிக்கச் சொல்லுவாங்க. (ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சு இருப்பேன்), ஆனா பாலகுமாரன் பேச்சு எடுத்தா புடிக்காது. அவரு ரெண்டு கல்யாணம் பண்ணி இருந்தது தான் காரணமா இருக்கலாம்.
நான் வாடகை நூலகம் போயி படிக்க ஆரம்பிச்ச போது, சும்மா பாலகுமாரன் நாவல் எடுத்து புரட்டுவேன். முக்கால்வாசி நாவல்களில் அவரோட வாசகர் கடிதம், அவரை ஒரு குரு போல் புகழ்ந்து இருக்கும். இன்னொன்னு நான் புரட்டின அவரது நாவல்களில் தமிழ் பிராமண மொழி நடை இருக்கும் நான் சொன்னது தவறா கூட இருக்கலாம். ஏனோ இது எல்லாம் அவரது நாவல்களை படிக்க விடாம தடையா இருந்தது. ஆனா பாலகுமாரன் நாவல்னா இரும்பு குதிரைகள் நல்லா இருக்கும் ரொம்ப நாளா கேள்விப்பட்டு இருந்தேன். இந்த தடவை படிச்சாச்சு.
நாவலில் வரும் முக்கால்வாசிப் பேர் மத்தியதர வர்க்கம், இல்லை அதற்கு கொஞ்சம் கீழே. கதைமாந்தர்கள் ஒரு விதமாக வாழ்க்கையின் மேல் பற்று அற்ற மாதிரி தான் இருக்காங்க.
இராவுத்தரின் இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் விபத்தில் மாட்டுகிறது, ஒரு லாரி ஒரு பெண்ணைக் கொன்று விட, இன்னொன்று ஒரு கிணற்றை இடித்துவிடுகிறது. லாரியை அப்படியே நிற்க வைத்துவிட்டு டிரைவர் சென்று விடுகிறான். அதே சமயத்தில் கம்பெனிக்கு வரவேண்டிய சரக்கு லாரியை தேடி வரும் விசு (விஸ்வநாதன்), கிணற்றுக்கு அருகில் நிறுக்கும் லாரியை பார்த்து விட்டு இராவுத்தருக்கு தெரிவிக்கிறான்.
மன்னார்குடியில் ஆசிரியர் வேலையில் இருந்து ஒய்வுப் பெற்று கஷ்ட ஜீவனம் நடத்தும் நாராயணசுவாமி (நாணு), தன் மாணவன் வடிவேலுவின் கடிதம் கொண்டு சென்னை வருகிறார். வடிவேலுவிடம் வேலைக்கு சேர்கிறார். பக்கத்தில் இருக்கும் காந்திலால் சேட்டுக்கு உதவி செய்து அதன் மூலம் தன் மகளுக்கு காந்திலாலிடம் வேலை வாங்கி தருகிறார்.
விசு தேடி வந்த லாரி காந்திலால் உடையது. கம்பெனியின் அவசரத்திற்கு அதன் டிரைவர் ஒத்துழைக்கத்தால், வேறு ஒரு லாரியில் சரக்கை விசு ஏற்றி செல்கிறான். அதனால் காந்திலால் நஷ்டம் அடைய, அதனை சரி செய்ய நாணு உதவிக் கொண்டு விசுவை சந்தித்து சரி செய்கிறார்.
இந்த நாவலில் வாசகர் கடிதம் இல்லை, ஆனா பிராமண மொழி நடை உண்டு. லாரி - நாவலில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களின் வாழ்விலும் எதோ ஒரு விதத்தில் வந்துக் கொண்டே இருக்கிறது. நாவல் முழுவதும் குதிரை பற்றி புதுக் கவிதைகள். எனக்கு கவிதைன்னா கொஞ்சம் அலர்ஜி, அந்த கவிதை நயம் பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் வேகமாக போகும் கதையில் இந்தக் கவிதைகள் சின்ன தடைக் கற்கள். இந்த கவிதைகள் நாவலின் சுவாரசியம் அப்படின்னு நினைச்சா, ...(எனக்கு புரியலை, அவ்ளோதான்)
நாராயண சுவாமிக்கு பணக் கஷ்டம், மூன்று பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் அவரது இரண்டாவது பெண் காயத்ரி, வாழக்கையின் பால் மிகுந்த மாறுப்பட்ட (Advanced thinking)பெண். இந்த நாவல் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருஷம் முன்னாடி வந்து இருக்கும். அப்போதே இந்த மாதிரி யோசிக்கிற பெண்களும் அதற்கு ஆதரவு செய்யும் தந்தையும் கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் இப்படியும் பெண்களா ?(அப்படின்னு ஒரு யோசனை).
இராவுத்தரின் இரண்டு லாரிகளும் சேதம் அடைய அவர் இரண்டையும் விற்க முடிவு செய்கிறார். அதே சமயத்தில் வடிவேலு லாரியில் சரக்கு ஏற்றும் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய வைக்க, விசுவின் கம்பெனிக்கு அவசரமாக வரவேண்டிய சரக்கு, தடைப் படுகிறது. நாணு சார் வடிவேலுக்கு லஞ்சம் கொடுத்து அந்த சரக்கை விசுவின் கம்பனிக்கு ஏற்றி செல்ல வைக்கிறார். இந்த முயற்சி நடக்கும் போதே, விசு தாக்கப் படுகிறான். நாணு சார் தன்னால் தான் இது நடக்கிறது, என்று தெரிந்தால் தன்னை காந்திலால் வேலையை விட்டுத் தூக்கி விடுவான் என்று தெரிந்து, தன் மகளோடு விசு வீட்டில் சில காலம் தங்குகிறார்.
கடைசியில் இராவுத்தரின் லாரியை, அவரது கீளனர் வாங்குகிறான். காயத்ரி தன்னுடைய தேடலை துவங்குகிறாள். விசுவிற்கு பெட்ரோல் வாசனையுடன் குழந்தைப் பிறக்கிறது. நாவலின் சின்ன இழையா, டீஸலை திருடி எப்படி விற்கிறார்கள் என்பதையும், லாரி டிரைவர் மற்றும் கீளனர்கள் எப்படி விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செல்கிறார்கள் என்பதும் நாவலின் முக்கிய இழையோட அங்கங்கே சேர்ந்து வருகிறது.
நாவலின் ஆரம்பத்தில் பாலகுமாரன் லாரியை பற்றி தனக்கு தெரிந்த 40% தான் சொல்லி இருப்பதாக எழுதி இருக்கிறார். ஆனா இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ நாவல் படிக்கும் போது இருந்தது. முக்கியமா சில சம்பவங்கள் வரும் போது, ட்ராக் மாறி வேறு இழைக்கு நாவல் சென்று விடுகிறது.
நாவல் ரொம்ப வேகமாவே படிச்சு முடிச்சுட்டேன். ஆனா படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் கூட மனசுல நிக்கவே இல்லை. காயத்ரி அட்வான்ஸ்ட் திங்கிங் கேரக்டரா இருக்கலாம். இல்லை எந்த கதாப்பத்திரமும், முழுசா விவரிக்க படலைஎன்றொரு எண்ணமோ? பாலகுமாரன் வாசகர்களுக்கு இது கண்டிப்பா முக்கியமான நாவலா இருக்கும். ஆனா எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
கல்கியில் தொடராக வந்த இரும்புக் குதிரைகள் எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.
ReplyDeleteவிஸ்வநாதன் கேரக்டர் தான் பாலகுமாரன் என்பதை மிக எளிதாக உங்களால் யூகிக்க முடியும். அவர் டாஃபேயில் இருந்தபோது பெற்ற அனுபவங்கள் இந்த நாவல் எழுத அவருக்குப் பெரிதும் கை கொடுத்திருக்கும்.
இதில் வரும் காயத்ரி கேரக்டர் பாலசந்தரின் கல்கி பட கதாநாயகியை நினைவு படுத்தும். லாரி தொழிலின் தொழில்நுணுக்கங்களை மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் விளக்கியிருப்பார்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் குதிரைக் கவிதைகளை தவிர்த்தாலும் பெரிய இழப்பு ஏதுமில்லை என்று தான் தோன்றியது.
ஒரு கூடுதல் தகவல்...
ReplyDeleteபதினைந்து பதிப்புகளுக்கு மேல் அச்சாகி முப்பதாயிரம் நூல்களுக்கு மேல் விற்ற பாலகுமாரனின் சிறந்த படைப்புகளில் ஒன்று தான் இந்த 'இரும்புக் குதிரைகள்' நாவல்.
பாலகுமாரனின் படைப்புகளில் எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிடித்தமான நாவலும் இதுதான்...
Thanks for the Info and comments. Most of the space in the novel is devoted to the confusions/dilemma of the characters, but not to the lorry. The technical details about Lorry were good, but i felt the novel as plain, it doesn't hit me :-) Not a single time, i felt like keeping the book and will have a thought about the characters and Gayathri character had every right to think like that(or to be written like that), but i felt it's a type of eccentric.
ReplyDeleteOnce again thanks for your valuable comments